Thursday, December 31, 2020

Tuesday, December 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...



ஒரு
கதை

ஒரு
கவிதை

ஒரு
கருத்து

ஒருவன்
குருவை தேடி
அடர்ந்த வனத்திற்கு
உள்ளே சென்றான்.

குருவை
கண்டான்
பேசினான்
பேசிக்கொண்டே
இருந்தான்.

நேரம் 
போனதே
தெரியவில்லை.

மாலை
மங்கியது

இருள் சூழ
தொடங்கியது.

" இரவு
  இங்கேயே
  தங்கி விட்டு செல் "

என்றார் 
குரு.

" இல்லை குருவே. 
  முக்கிய வேலை 
  நான் போயாக 
  வேண்டும் "

என்றான் 
இவன்.

இருள் 
இதற்குள்
அடர்த்தியாக
ஆனது.

இவன்
இருட்டில் செல்ல
அச்சம் அடைந்து
அதே நேரத்தில்
போகவும் 
எத்தனித்தான்.

இவன் மனதை 
அறிந்த குரு 
கைவிளக்கு
ஒன்றினை
ஏற்றி கொடுத்து...

" இதன் 
  ஒளியால்
  நீ நடந்து செல் "

என்று 
கூறினார்.

விளக்கை 
பெற்று நடக்க 
தொடங்கியவனை
பின் தொடர்ந்து 
வந்த குரு... 

அவன்
கையிலிருந்த 
விளக்கினை
வாங்கி ஊதி
அணைத்து விட்டு...

" இரவல் வெளிச்சம்
  துணைக்கு வராது
  உன் விளக்கு
  உன் இதயத்தில்.

  நெஞ்சில்
  துணிவிருந்தால்
  விளக்கு உனக்கு
  தேவையில்லை

  உள்ளத்தில்
  பயமிருந்தால்
  உயர்வு 
  உனக்கில்லை

  ஒளியும்
  இருளும்
  பாதையும்
  பயணமும்
  மாறி மாறி
  வரும் போகும்.

  தைரியமாக நீ 
  தொடர்ந்து செல்
  பயம் நீங்கும்
  பயணம் தொடரும்
  பாதையும் முடியும் "

என்று 
வாழ்த்தி
அனுப்பினார் 
குரு.

அவரின்
வாழ்த்துகளில்
வார்த்தைகளில்
நம்பிக்கையும்
மகிழ்ச்சியும்
அடைந்த
நம்மவர்...

தொடர்ந்து
சென்றார்
பயணத்தை
முடித்தார்.

அவரின்
வார்த்தைகளை
சிரமேற்
கொண்டார்
வாழ்விலும்
வென்றார்.

ஒரு
கவிதை :::

'  ஒளி
  குறைந்த 
  வீதியில்
  நடக்கும் 
  போதும்...

  உன் 
  விழிகளுக்கு
  வழி தெரியும்.

  உன்
  இதயத்தில்
  தீபம்
  எரிந்து
  கொண்டிருந்தால் '

புது 
கவிதை
நாயகன்

கவிஞர்
மு.மேத்தா

ஒரு
கருத்து :::

விதைக்கான
வெற்றி
அதன்
வீர்யத்தில்

நம்
வாழ்விற்கான
வெற்றி
நம்
நெஞ்சுறுதியில்

வாங்க.

நாம்
நம்மை
நம்புவோம்

நம் 
வாழ்வில்
ஜெயித்து
காட்டுவோம்.

_*அச்சம்*_
_*என்பது*_
_*மடமையடா*_

_*அஞ்சாமை*_
_*திராவிடர்*_
_*உடமையடா*_

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி.

Monday, December 21, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



அவரின்
கருப்பு கோட்
உலகம் அறிந்தது.

அங்கங்கே
கிழிசல்கள்.

அதன் மேல்
வெள்ளை
நூலில் 
தையல்கள்.

அதை
மறைக்க
கருப்பு மையில்
சாயம் வேறு.

இவ்வளவு
ஏழ்மை
நிலையிலும்

அவர்
பாடிய
ஒரு பாட்டு

' எத்தனை 
  கோடி 
  இன்பம்
  வைத்தாய்
  இறைவா '

அதனால் தான்
அவர்

மகா கவி
தேசிய கவி
தெய்வ கவி

என
போற்றப்பட்டார்.

எளிமையிலும்
மிக வலிமை

ஏழ்மையிலும்
மன செழுமை

கண்களில்
ஒரு காந்தம்

வார்த்தைகளில்
ஒரு ஜாலம்.

பாரதி
நமக்கெல்லாம்
ஒரு பாடமல்ல

அவர் ஒரு
வாழும் வரலாறு.

அவரின் புதிய 
ஆத்திசூடியின்
தெறிக்கும் சில
முத்துக்கள் :::

  அச்சம் 
  தவிர்

  ஆண்மை 
  தவறேல்

  உடலினை 
  உறுதி செய்

  எண்ணுவது 
  உயர்வு

  ஏறுபோல் 
  நட

  கற்றது 
  ஒழுகு

  குன்றென 
  நிமிர்ந்து நில்

  கூடி 
  தொழில் செய்

  சீறுவோர் 
  சீறு

  சூரரை 
  போற்று

  தூற்றுதல் 
  ஒழி

  தெய்வம் நீ 
  என்றுணர்

  நீதி நூல் 
  பயில்

  நேர்பட 
  பேசு

  புதியன 
  விரும்பு

  மூப்பினுக்கு
  இடம் கொடேல்

  யாரையும் 
  மதித்து வாழ்

  ரௌத்திரம் 
  பழகு

  வையத் 
  தலைமை கொள்

பாட்டுக்கு
மட்டுமல்ல
நாட்டுக்கே
நல்ல 
தலைவன்
அவன்.

அவன்
காட்டிய
பாதையில்
பயணம் 
செல்லின்...

விளைய 
போவது...

புதுமை !
வளமை !!
செழுமை !!!
இனிமை !!!!

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

புதிய 
நம்பிக்கைகளுடன்

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்


நன்றி. முனை.சுந்தரமூர்த்தி

Tuesday, December 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

உங்களால்
சிரிக்க 
முடிந்தால் 
நீங்கள் 
ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் 
என்று 
அர்த்தம் 
உடல் 
ரீதியாகவும் 
மட்டுமன்றி 
மன ரீதியாகவும் 
இறுக்கமான 
மன 
உணர்வுகளை 
லேசாக்குவது
சிரிப்பு ...

சிரிக்க 
வேண்டிய 
தருணத்தில் 
உங்களால் 
சிரிக்க 
முடியவில்லை 
என்றால் 
உங்களுக்குள் 
நிச்சயம் 
ஏதோ 
ஒரு 
கோளாறு 
இருக்கிறது 
என்பதை
உணருங்கள்..

சிரிக்கக் 
கூடாத 
சந்தர்ப்பத்தில் 
சிரித்து 
வைத்தால்
அடுத்தவர்கள் 
வேறுமாதிரி 
சந்தேகப்பட்டு 
பேசுவார்கள் 
நீங்கள் 
நோயிலிருந்து 
விரைவில் 
குணமடைய 
நகைச்சுவை 
உணர்வு 
உதவும் 
என்பார்கள்..
மருத்துவமும் 
இந்த 
உண்மையை 
ஒப்புக் 
கொண்டுள்ளது 
கார்ட்டூன் 
படங்களையும் 
காமெடி 
புத்தகங்களையும் மருத்துவர்கள் 
பரிந்துரை 
செய்கிறார்கள் 
சிரிப்பு 
சிறந்த 
மருந்தாகிறது 
நகைச்சுவை 
ஒரு 
சிகிச்சை 
ஆகிவிட்டது ...

வாங்க 
சிரித்து வாழ
வேண்டும்
பிறர்
சிரிக்க
வாழ்திடாதே
வரியை
நினைவு
கூர்ந்து
மகிழ்வாய்
வாழ்வோம்...

%%%%%%%%
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்
&&&&&&&&&

Monday, December 14, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

ஒரு
மீனவன் 
தன்னுடைய
பையில் 
தான் 
பிடித்த 
பெரிய 
மீனை 
வைக்க 
முடியாமல் 
தண்ணீரில் 
மீண்டும்
விட்டு
விட்டான்...

ஆனால்
அவன்
சிறிய 
மீன்களுக்காக 
மணி
கணக்கில்
காத்துக் 
கிடக்கிறான் 
அவன் 
பெரிய 
மீனை 
சிறு
துண்டுகளாக்கி 
அதே 
பையில் 
அடைத்துக் 
கொண்டிருக்க 
முடியும் 
ஆனால் ...
அவன்
செய்யவில்லை
ஆம்
அவனை 
போன்றவர்களுக்கு 
பார்வை
மற்றும்
அறிவும் 
சற்று
குறைவுதான்..
கொஞ்சம் 
சிந்தனையை 
பயன்படுத்தி
சூழ்நிலையை 
தனதாக்கிக் 
கொண்டால் 
வெற்றி 
நிச்சயம் 
என்பதை 
நம்மில்
பல
பேர்
உணராமல் 
வெற்றிக்கு
விடுமுறை
விட்டு 
வருந்துகிறோம்...

வாங்க
விழிப்பா
இருந்து
வாழ்வில்
வெற்றி
கொள்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...

Sunday, December 13, 2020

உவமை கவிஞர் சுரதா விருது..

2020-ஆம் ஆண்டின் உவமைக் கவிஞர் சுரதா விருதினை தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்  மற்றும் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதிற்கு எனைத் தேர்வு செய்த சான்றோர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்!

Saturday, December 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  HBD RAJINI SIR  🍁

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

1975
'அபூர்வ ராகங்கள்'
திரைப்படம் 
வெளியானது.

கருப்பு - வெள்ளை
கலரில் அமைந்த
இத்திரைப்படம்

அந்த 
காலத்திலேயே
மெகா ஹிட்.

சிறந்த
திரைப்படம்

சிறந்த
ஒளிப்பதிவு

சிறந்த
பாடல்

என
மூன்று
தேசிய விருதுகள்
கிடைத்தது.

படம்
முழுக்க
ஸ்ரீ வித்யாவும்
கமலஹாசனும்
மேஜர் சுந்தரராஜனும்
ஜெயசுதாவும்
நாகேசும்

போட்டி போட்டு
நடித்தனர்.

மிக
சிறிய
பாத்திரத்தில்

கருப்பு
கலரில் இருந்த
ஒரு நடிகர் நடித்தார்.

அந்த
கருப்பு 
மனிதனை

பட்டை 
தீட்டினார்கள்
பால சந்தரும்
பாரதி ராஜாவும்.

காலம்
மாற மாற 
தன்னை மேலும்
பட்டை தீட்டிக்கொண்ட
அந்த மனிதர்

இதோ இன்று
கருப்பு வைரமாக
ஜொலித்து கொண்டு
இருக்கிறார்.

தொடக்கத்திலும்
தொடர்ந்து வளர்ந்து
வரும் நேரத்திலும்

எம்.ஜி. ஆர்.
சிவாஜி
ஜெய்சங்கர்
சிவகுமார்
என

மிக 
பெரிய
நடிகர்கள்
கோலோச்சிய
நேரமது.

அந்த
நேரத்திலேயே
தன் தனிப்பட்ட
நடிப்பால்
ஸ்டைலால்

அந்த கால
இளைஞர்களின்
மனதில் ஆதர்ஸ
நாயகனாக உயர்ந்தார்.

அவரை
அழிக்க
ஒழிக்க
திரை மறைவு
வேலைகள்
அரங்கேற்றம்
செய்யப்பட்டது.

அவருக்கு
பித்து பிடித்து
விட்டது என 
பத்திரிக்கைகளும்
தம் பங்குக்கு 
விளாசி
தள்ளின.

பாதகமாக
கருதப்படும்
கருப்பு நிறத்தை
கொண்டே

தன்
திரை வாழ்வை
சாதகமாக எப்படி
மாற்றி கொண்டாரோ
அதைப்போலவே

அத்தனை
எதிர்ப்புகளையும்

தன் சிரிப்பால்
தன் நடத்தையால்
தன் பொறுமையால்
வெற்றி கொண்டார் 
அவர்.

பெரியவர்கள்
ஆனாலும்
சிறியவர்கள்
ஆனாலும்
அவர்களை
மதித்து பாராட்டி

அவர்கள் மேல்
தன் அன்பாலும்
உயர்ந்த பண்பாலும்

பகைவரையும்
தன் பக்கம்
திரும்ப வைத்தவர்
இன்று...

தமிழக
வரலாற்றில்
தவிர்க்க முடியாத
ஒரு தலைவராக
மாறியிருக்கிறார்.

அவர்
நல்லவரா
கெட்டவரா

தேர்தலில்
நிற்பாரா
மாட்டாரா

ஜெயிப்பாரா
தோற்பாரா

என்னும்
(பக்க)வாதம்
மனிதர்களுக்கு
இடையே நடந்து
வருகிறது.

அவரை பற்றி 
பலர் தூற்றலாம்
கேலி செய்யலாம்
கேவல படுத்தலாம்

ஆனால்...

இதோ
இன்று வரை
யாரையும் எந்த 
சமூகத்தையும்
எந்த ஒரு 
இயக்கத்தையும்
பற்றி

ஒரு 
வார்த்தை கூட 
கண்ணிய 
குறைவாக அவர் 
பேசியதில்லை.

இதுவே அவரது 
பலமாக பலரால்
கருதப்படுகிறது.

சின்ன சின்ன
பிரச்சனைகளை
கூட
பெரிதாக 
ஊதிவிட்டு
குளிர் காயும் 
இந்த சமூகத்தில்

தன்னை 
பற்றிய
எதிர்மறை
விமர்சனங்களுக்கு

எதிர்வினை 
ஆற்றாமல் 
இருப்பது
 
அவருடைய 
மிக பெரிய 
பண்பை
பிரதிபலிக்கிறது
என்பதே உண்மை.

இது...

மதிப்பிற்குரியது
பாராட்டுக்குரியது
போற்றுதலுக்குரியது.

இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
ரஜினி சார் !!!

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

🎉🥁🎊🎉🥁🎊🎉

பகிர்வு பதிவு

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

" மனித மனம் 
  எதை கற்பனையில் 
  உருவாக்குகிறதோ, 
  நம்புகிறதோ அதை 
  அதனால் அடைய 
  முடியும் "

- எம்.எஸ்.உதயமூர்த்தி -

ஆம். 

நம் மன
எண்ணங்களின் 
வெளிப்பாடுதான்...
 
நாம் 
செய்யும் 
செயலில் 
அரங்கேற்றம்
செய்யப்படுகிறது.

நம் 
முதல் 
குடிமகனும் 
நம்மை கனவுகாண 
சொன்னது இதனால் 
தான்.

ஆனால்...

கால
வரையறை 
இல்லாத 
கனவுகளும்
திட்டங்களும்
வெறும் 
கற்பனைகளே. 

நாம் 
காணும் 
கனவுகளை 
செயல்படுத்த 
நாம் முயற்சிக்க 
வேண்டும்.

' முடியாது
  என்னும் ஒரு 
  வார்த்தை என்
  அகராதியில்
  இல்லை '

என்று
கூறியவர்
நெப்போலியன்.

' IMPOSSIBLE '
  என்னும்
  வார்த்தையில்...

  I'M POSSIBLE 
  என்னும் பொருள்
  அடங்கியுள்ளது 
  கண்கூடு.
   
யாரோ
ஒருவரால்
முடியும் போது...

நம்மால்
முடியாதா
என்ன ???

முடியாததற்கு 
காரணம், 
முயலாததே. 

நமக்கும்
ஆயிரம்
கனவுகள்
கற்பனைகள்.

அவைகளை
நனவாக்க
முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

  நேற்று
  என்பது
  உடைந்த
  பானை...

  நாளை
  என்பது
  மதில் மேல்
  பூனை...

  இன்று
  என்பதே
  நம் கையில்
  உள்ள
  வீணை.

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
காலை
வணக்கம்.

🎉🎉🎉🎉🎉🎉🎉

Sunday, December 06, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

சிரித்து
வாழ வேண்டும் :::

மூன்று
புத்த துறவிகள்
சிரிப்பது கூட ஒரு
தியானமே என்னும்
கொள்கையை...

தாங்களும்
கடைபிடித்து
மற்றவர்களையும்
கடைபிடித்து
வருமாறு உலகம்
முழுவதும் பயணம்
செய்து வந்தார்கள்.

இதற்கு...

' Laughing
  Therapy '

என
பெயரும்
வைத்தனர்.

ஒருநாள்
மூவரில் ஒருவர்
இறந்து போனார்.

அவர் உடல்
அருகே அமர்ந்த
மற்ற இருவரும்
சிரித்து கொண்டே 
இருந்தனர்.

இதனை கண்ட 
ஊர்மக்கள்
ஆத்திரம் அடைந்து
இருவரையும்
திட்டினர்.

துறவிகள்...

" வாழ்க்கையை
  மகிழ்ச்சியாக
  வைத்து கொள்ள
  ஒரே வழி...

  எப்போதும்
  எதற்கும்
  சிரித்து
  கொண்டே
  இருப்பதுதான்...

  இதை தான் தன்
  வாழ்நாள் முழுவதும்
  இவர் கடைபிடித்தார் "

என்றும்
கூறினர்.

ஊர்மக்கள் சற்று
பொறுமை அடைந்தனர்.

இறுதி சடங்குகளும்
செய்ய தொடங்கினர்.

இறந்த துறவி
கேட்டு கொண்டதின்
பெயரில் அவரின்
உடலை குளிப்பாட்டாமல்
சுடுகாட்டிற்கு எடுத்து 
சென்றனர்.

சற்று நேரத்தில்
நெருப்பு வைக்க
பட்டது.

உடனே...

துறவியின் உடலை
சுற்றி பட்டாசுகள்
வெடித்தன..

ஆம்...

அவர்
இறந்த பிறகும்
மக்கள் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலுடன்
பட்டாசுகளை கட்டிய
நிலையிலேயே
இறந்துள்ளார்.

அந்த
துறவியின் 
பெயர்தான்...

' Laughing
  Buddha '.

இன்று பல  
வீடுகளில்
வாஸ்து 
பிரச்சனை
நீங்குவதற்காக
வைக்கப்பட்டு
இருக்கும்...

தொந்தியுள்ள
சிரிக்கும் புத்தர் 
சிலை...

இவர்
நினைவில் 
வைக்கப்படுவது
தான் என்பது 
நினைவு 
கூறத்தக்கது.

" வாய்விட்டு
  சிரித்தால்
  நோய்விட்டு
  போகும் "

என்னும் 
சொலவடை 
நிஜமே.

வாங்க...

இனிவரும்
காலங்களில்
யாராவது
நகைச்சுவை
துணுக்குகள்
நம்மிடம்
உதிர்க்கும் 
போது...

அது 
நன்றாக 
இருந்தாலும்
இல்லாவிட்டாலும் 
கூட...

அவரையும் ஒரு
பொருட்டாக மதித்து
நாம் சிரிக்க
தொடங்குவோம்.

நம்மை சுற்றி
இருப்பவர்களையும்
சிரிக்க வைத்து
கொண்டே இருக்க 
முயற்சிகள் செய்வோம்.

  சிரிப்பில் 
  உண்டாகும் 
  ராகத்திலே

  பிறக்கும் 
  சங்கீதமே 

  அது 
  வடிக்கும் 
  கவிதை ஆயிரம்

  அவை 
  எல்லாம் 
  நம் எண்ணமே

  நம்
  மகிழ்ச்சி நம் 
  கை வண்ணமே.

அன்புடன்
காலை
வணக்கம்.

பகிர்வு

Friday, December 04, 2020

புதிய பார்வை..புதிய கோணம்....



சிறு 
ஆலம் 
விதைக்குள்...

அற்புத 
விருட்சம்
மறைந்திருப்பது
போல...

நம்
ஒவ்வொரு
மனிதருக்குள்ளும்...

அபார சக்தி
மறைந்திருப்பது
உண்மை.

அதை
சரியான
நேரத்தில் நாம் 
வெளிப்படுத்தும்
போது...

மாபெரும்
முடிவுகள்
மலர்ந்தே தீரும்.

இதற்கு
மிக சரியான
எடுத்துக்காட்டு.

மதிப்பிற்குரிய
நடராஜன்.

தமிழ்நாட்டின்
சேலம் மாவட்டம்
தாரமங்கலம் 
அடுத்த...

சின்னப்பம்பட்டி 
கிராமத்தை
சார்ந்த...

சாதாரண 
குடும்பத்தை 
சேர்ந்தவர் இவர்.

தந்தை 
தங்கராஜ் 
ஒரு நெசவு
தொழிலாளி.

தாய் 
சாந்தா 
சாலையோர 
கோழிக்கடை 
நடத்துபவர்.

12 ஆம் 
வகுப்பு வரை 
தன் சொந்த ஊரில்
அரசு மேல்நிலை 
பள்ளியில் படித்தார்.

வட்ட
மாவட்ட
மாநில 
அளவில்...

தன் 
கிரிக்கெட்
விளையாட்டில்
பரிமளித்தவர்...

TNPL 
மற்றும் ரஞ்சி 
போட்டிகளில் மிளிர 
தொடங்கினார்.

அதன்
தொடர் நிகழ்வாக
I P L போட்டிகளில்
மேலும் தன்னை
பட்டை தீட்டி
கொண்டார்.

இதன்
விளைவு...

இதோ 
இன்று 
சர்வதேச 
போட்டியில்
இடம் பெற்று...

இவர் மீது 
வெற்றி வெளிச்சம்
ஒளி வீச தொடங்கி
உள்ளது.

ஒட்டுமொத்த
தமிழர்களின்
இதய பூர்வ
வாழ்த்துக்கள்
நட்ராஜ்.

வாருங்கள்...

மென்மேலும்
புகழ் ஏணியில்
ஏறுங்கள்.

உங்களால்
நாங்கள் 
மகிழ்ச்சி
அடைகிறோம்.

தமிழ்நாடு
மட்டுமல்ல...

இந்தியாவே
உங்களால்
பெருமை 
கொள்கிறது.

இவரின்
வெற்றி பயணம்...

இன்றைய
இளைஞர்களுக்கு
மட்டுமல்ல...

நம்பிக்கையுடன்
செயல்பட்டு
வரும்...

ஒவ்வொரு
மனிதருக்கும்
ஒரு பாடமே.

புதிய
நம்பிக்கைகளுடன்...

Wednesday, December 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

ஒவ்வொரு 
நிமிடமும் 
புதிதாக 
ஒன்றை
கற்று
கொள்ளுங்கள் 
புதிய 
சிந்தனைகளை 
விதைத்து
ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் 
உரிய 
நேரம் 
வந்து
விட்டால் 
புலரும் 
சூரியனை
போல் 
இதழை
விரிக்கும் 
பூக்களை
போல் 
எண்ணமும்
வடிவம்
கொள்ளும்..

 நீங்கள் 
எதைத் 
தேடுகிறீர்களே
அது 
உங்களுக்கு 
கிடைக்கும் 
என்று 
நீங்கள் 
உறுதியாக
நம்ப 
வேண்டும் 
அதுவே
விரும்பத்தக்க 
பண்பு ....
அதுதான்
விடை
காணா
பல
செயல்களுக்கு
விடை
காண
செய்கிறது....
அதுவரை 
சாத்தியமற்றது
என்று
எண்ணியதை
சாத்தியப் படுத்துகிறது ...

வாங்க
புதிய
சிந்தனைகளை
விதைத்து
பல
அறியப்படாத
வினாக்களுக்கு
விடை
தேடுவோம்...
&&&&&&&&

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்.

₹₹₹₹₹₹₹₹₹₹

Tuesday, December 01, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



Niagara 
Syndrome.

ஒரு
பெரிய ஆறு.

ஒரு 
மனிதன் 
படகில் சென்று 
கொண்டு இருந்தான்.

காற்று 
தென்றலை போல 
வீசிக்கொண்டு
இருந்தது.

ரம்மியமான
சூழல்.

அதை
ரசித்து
கொண்டே,
துடுப்புகளை
பயன்படுத்தாமல்,
அதன்போக்கிலேயே
படகை போக விட்டான்.

காற்று 
சற்று வேகமாக 
வீச தொடங்கியது.

படகு 
ஆட்டம் போட 
தொடங்கியது.

இயற்கை
நம்மை இதமாக
தாலாட்டுகிறது

என்று 
மகிழ்ந்த இவன் 
இதனையும்
ரசிக்கலானான்.

நேரம்
ஆக ஆக
காற்று மிகவும்
பலமாக வீச
ஆரம்பித்தது.

அப்போது தான்
அவனுக்கு விழிப்பு 
நிலை வந்தது.

துடுப்புகளை 
எடுத்து கரையை
நோக்கி போட்டான்.

அவை அவன்
கட்டுபாட்டிற்கு
வரவில்லை.

அருகில்...

'ஹோ' என்ற
இரைச்சல் கேட்டது.

சில
நொடிகளில்...

படகு
மிக பெரிய
நீர்வீழ்ச்சியில்
விழ தொடங்கியது.

அதே
போலத்தான்.

'  நம்
  வாழ்வில்
  அதன் போக்கினை
  அதன் வழியில்
  போக விடாமல்...

  நம்
  போக்கிற்கு
  ஏற்ப திருப்பி
  கொள்ளாவிடில்...

  ஏற்படும்
  அபாயகர
  விளைவே...

  '  Niagara
     Syndrome '

எனப்படும்.

Anthony 
Robbins  
என்பவர் 
தன்னுடைய...

Awaken the Giant 
Within என்னும் 
நூலில்...

இதனை விரிவாக
விளக்கியுள்ளார்.

நம்
வாழ்க்கையும்
அமைதியான
ஓடம் தான்.

அதுவே
அளவில்லாத
வெள்ளம் வந்தால்
ஆடும் தான்.

' தென்னம் 
  இளங்கீற்றினிலே 
  தாலாட்டும் 
  தென்றலது...

  தென்னை தனை 
  சாய்த்துவிடும் 
  புயலாக 
  வரும்பொழுது '

என்னும்
வரிகளும்
உண்மையே.

இதைப்போன்ற
நேரங்களில்...

' வருமுன்னர் 
  காவாதான் 
  வாழ்க்கை 
  எரிமுன்னர் 
  வைத்தூறு 
  போலக் கெடும் '

என்னும்
வள்ளுவரின்
எச்சரிக்கையின் படி 
வாழ்ந்தோம் எனில்...

எந்த வகை
காற்றடித்தாலும்
நம் வாழ்வு வீழாது.

நம்
கனிந்த மனம்
எந்த காலத்திலும்
கலங்காது.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.


Sunday, November 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

கடவுளுக்குத் தெரியும் யாருக்கு எதை 
எப்போது கொடுக்க 
வேண்டும் என்று 
உங்களுக்கு பிரச்சினையை கொடுப்பதன் மூலம் 
உங்கள் மதிநுட்பம் 
அதிகரிக்க செய்கிறார் துன்பத்தை கொடுப்பதன் மூலம் உங்களுடைய 
சகிப்புத் தன்மையும் 
மன உறுதியையும் 
வளரச் செய்கிறார் 
எது நிகழ்ந்தாலும் 
ஏதோ ஒரு காரணத்தால் 
தான் நிகழ்கிறது 
இதனை புரிந்து 
கொண்டால் வருத்தப்பட எதுவுமில்லை ..

ஏமாற்றம் 
ஒரு உணர்வு 
அந்த உணர்வை 
நாம் தான்
அதனை ஏற்படுத்திக கொள்கிறோம் வெற்றியை போலவே தோல்வியையும் ஆதாயத்தை போலவே இழப்பையும் 
துன்பத்தைப் போலவே இன்பத்தையும் 
உறவை போலவே
 பிரிவையும் 
முன்கூட்டியே எதிர்பார்க்க வேண்டும் அதற்கு ஏற்ப மனதை தயார் செய்து கொள்ள வேண்டும் 
அப்போது ஏமாற்றம்
அளிக்கிற பாதிப்பு கடுமையாக இருக்காது..

வாங்க
வாழ்க்கையை
ஏமாற்றம்
இல்லாம
வாழ
பழகுவோம்...

₹₹₹₹₹₹%
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்
&&&&&&&&

Friday, November 27, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



நன்றி 
என்றொரு
மந்திர சொல் :::

ஒரு
காடு.

ஞானி தன் 
சீடர்களுடன்
நடந்து சென்று
கொண்டு இருந்தார்.

கடும்
வெயில்.

உண்பதற்கு
கனிகள்
குடிக்க நீர் கூட
கிடைக்க வில்லை.

மிதியடி
இல்லாத
கால்களை
முட்களும் பதம்
பார்த்து கொண்டு
இருந்தன.

இரவு நேரம்
வந்து விட்டது.

சீடர்கள்
பாழடைந்த ஒரு
கோவிலில் தங்க
ஏற்பாடுகள் செய்து
கொண்டு இருந்தனர்.

ஞானி
சற்று சத்தமாக...

" இறைவனே !
  இன்றய 
  நாளை
  இனிமை
  ஆக்கியமைக்கு
  நன்றி "

என்று கூறி
இரவு வழிபாட்டை
தொடங்கினார்.

அன்றய
நிலைகளில்
பாதிக்க பட்டு
இருந்த சீடர்கள்
ஞானியிடம்
சற்று ஆவேசமாக...

" இன்று காலை
  முதல் நாம்
  அனைவரும்
  கொலைபட்டினி...

  குடிப்பதற்கு நீர்
  கூட இல்லாமல்
  துன்ப பட்டு 
  கொண்டு
  இருக்கிறோம்...

  இதில்...

  ஒன்றுமே தராத
  இறைவனுக்கு
  நன்றியா "...

என்று
வினவினர்.

அதற்கு
ஞானி...

" எதை 
  எப்படி 
  யாருக்கு 
  என்ன நேரத்தில் 
  தர வேண்டுமோ...

  அதை
  அவரவர்க்கு
  உரிய நேரத்தில்
  நிச்சயம்
  வழங்குவார்.

  இன்று...

  பசியை
  வலியை
  வேதனையை
  தந்துள்ளார்.

  நாளையே இந்த
  நிலை மாறலாம் "

என்றார்.

சீடர்கள் 
ஞானியிடம்
மன்னிப்பு கேட்டனர்.

வாங்க...

இறைவனுக்கு
மட்டுமல்ல...

தினமும்
நாம் சந்திக்கும்
அனைத்து
மனிதர்களுக்கும்...

எந்த
சூழ்நிலையிலும்
நாம் நன்றியை
தெரிவிக்கும் போது...

விளையும் 
நன்மைகள் ஏராளம்.

இதனை
புரிந்து கொண்டு...

இன்று 
இந்த நொடிமுதல்...

இறை 
சக்திக்கும்
நாம் சந்திக்கும்
அனைவருக்கும்
நன்றிகளை சொல்ல
தொடங்குவோம்.

நம்
வாழ்வின்
நிலையினை
மாற்றி அமைத்து
கொள்ள முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

*பகிர்வு....*

Sunday, November 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

மரத்தின் 
எதிர்காலம் 
வளர்ச்சி
திறன்
அதன் 
விதையில் 
இருக்கிறது ...

மனிதனின் 
எதிர்காலம் 
வளர்ச்சி
திறமை
அவனுடைய 
மனதில் 
இருக்கிறது ...

நீங்கள் 
ஆப்பிள் 
பழத்தை 
சரி 
பாதியாக 
வெட்டினால் 
அதன் 
உள்ளே 
சில 
விதைகள் 
இருப்பதை 
காண்பீர்கள் 
அந்த 
விதைகளை
நீங்கள் 
எண்ணி 
விட 
முடியும் 
ஆனால் 
ஒவ்வொரு 
விதையிலும்
எத்தனை 
ஆப்பிள்கள் 
நமக்கு
கிடைக்க
போகின்றன
என்பதை 
எண்ணி 
விட
முடியாது...

வாங்க
நம்ம
மனசுல
நல்ல
விதையை
விதைப்போம்
வீட்டையும்
நாட்டையும்
மகிழ்விப்போம்....

&&&&&&&&&&&
அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்..
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

Thursday, November 19, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

தூக்கத்தை 
தூக்கி
எறி
கடலில் 
முகம் 
கழுவு
ஞாயிறு
வெப்பத்தில் 
சோம்பல் 
முறி..

ஆற்றில் 
மீன்களை
தேடு
அங்கு
பஞ்சமெனில்
கடலில் 
தேடு 
அங்கேயும் 
மீன்கள்
இல்லையா 
விண்ணுக்கு
வலை
வீசு
அங்கு
விண்மீன்கள்
ஏராளமாய்
உனக்கு
காத்திருக்கும்....

விண்மீனுக்கு 
வலை 
வீசும்
வரைதான் 
வானம்
 தூரம் ...

உன்னை 
மறந்து 
கடந்து
சென்ற
நேற்றய
பொழுதை
மறந்து
விடு .....
உனக்காக 
காத்திருக்கும் 
நாளைய
பொழுதை
நோக்கி
நடை
போடு.....

புதைந்திருக்கும் 
விதையை
மிதித்து
சென்றவர்கள்
வளர்ந்த 
பின்பு 
மரத்திற்கு 
மரியாதை 
செலுத்து
வருவார்கள்..

உன்
விடாமுயற்சி 
உன் 
நம்பிக்கை 
உன் 
திறமை 
மூன்றையும் 
முடித்துவிட்டு 
பார் 
வெற்றி 
உன்
காலடியில்...

######
அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்
₹₹₹₹₹₹₹₹

Wednesday, November 18, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



அடர்ந்த
ஒரு காடு.

ஒரு ஜோடி
காதல் கிளிகள்
அங்கும் இங்கும்
பறந்து மகிழ்ந்து
வாழ்ந்து கொண்டு
இருந்தன.

ஒரு
கெட்ட நாளில்
கெட்ட நேரத்தில்

ஒரு
ஜோசியக்காரன்
கூட்டில் தனியாக
இருந்த பெண் 
கிளியை அபகரித்து
கொண்டு சென்று
விட்டான்.

மேலும் அந்த 
பெண்கிளியின்
சிறகுகளை
ஒவ்வொன்றாக...

வலிக்க வலிக்க
பிய்த்து அதனை
பறக்க விடாமல்
செய்து விட்டான்.

கொஞ்ச நாள்
சென்றது.

சிறகுகள்
மீண்டும்
முளைக்க
ஆரம்பித்தது.

பெண் கிளி
பறக்க முயற்சி
செய்தது.

இதை பார்த்த
ஜோசியக்காரன்
மீண்டும் சிறகுகளை
பிய்த்து எறிந்தான்.

சிறகுகள்
முளைப்பதும்
பெண் கிளி
பறக்க முயற்சி
செய்வதும்
ஜோசியக்காரன்
இறகுகளை
பிய்ப்பதும்
தொடர்கதை
ஆனது.

ஒரு 
கட்டத்தில்
பெண் கிளி
இனி தன்னால்
பறக்கவே முடியாது
என நினைக்க
தொடங்கிவிட்டது.

இந்த
நேரத்தில்
அந்த பக்கமாக
வந்த ஆண் கிளி 
இதனை கண்டு
பெண் கிளியை
காப்பாற்றி கூட்டி
செல்ல திட்டமிட்டது.

ஜோசியக்காரன்
இல்லாத நேரம் 
பார்த்து அங்கு 
வந்த ஆண் கிளி...

' பறந்து வா
  நாம் தப்பித்து
  செல்லலாம் "

என்று
கூறியது.

" என்னால்
  பறக்க 
  முடியாது...

  நான்
  எத்தனையோ
  முறை முயற்சி
  செய்து தோற்று
  விட்டேன்...

  நான் 
  இறக்க
  தயாராகி 
  விட்டேன்...

  என்னை
  இங்கேயே
  விட்டு விடு "...

என்று 
கூறியது.

இதனை கேட்ட
ஆண் கிளி...

" முட்டாள்
  கிளியே...

  உனக்கு
  சிறகுகள்
  நன்றாக
  வளர்ந்துள்ளது...

  உன்னால்
  பறக்க முடியும்...

  எத்தனை முறை 
  நீ தப்பிக்க 
  முயற்சி செய்தாய்
  என்பது முக்கியம்
  இல்லை...

  இப்போது
  முயற்சி செய்...

  உன்னால்
  பறக்க முடியும்...

  உடன் நான்
  இருக்கிறேன்
  பறந்து வா "...

என 
உற்சாக
வார்த்தைகளை
கூறியது.

இதனை கேட்ட 
பெண் கிளி...

தன்
சிறகுகளை
அசைத்து பார்த்தது.

சிறகடிக்க 
முயற்சி செய்தது.

இறுதியில்
பறந்து சென்றது.

இக்கதை
கூறும் கருத்து
என்ன ???

' எத்தனை முறை
  தோற்றாலும்
  உன் முயற்சியை
  கை விடாதே '

என்பதே
அது.

ஆயிரம் 
முறை
தோற்று...

இறுதியில்
கண்டுபிடிக்க
பட்டது தான்
மின்சார பல்பு.

பலமுறை
இறக்கை கட்டி
பறந்து விழுந்து
அடிபட்டு...
 
இறுதியில்
கண்டுபிடிக்க
பட்டதுதான்
விமானம்.

ஒவ்வொரு
வெற்றிக்கும்
பின்னாக...

ஓராயிரம்
வலிகள்
வேதனைகள்
தோல்விகள்
மறைந்து தான்
இருக்கின்றன.

' முயற்சி
  உடையோன்
  இகழ்ச்சி
  அடையான் '

வாங்க...

நமக்கும்
ஓராயிரம்
கனவுகள்
உண்டு.

முயற்சிகள்
செய்வோம்.

வெற்றி
பெறுவோம்.

' நம்மால்
 முடியாதது
 வேறு யாரால்
 முடியும் ??? '

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

பகிர்வு


Tuesday, November 17, 2020

நேரம்...வாழ்வின் அர்த்தம்...

ஒருவர் முதலில் சிறியதாக 
*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.

பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.
*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*

வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.
*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*

*ஏன் என்னாச்சு.?*

பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*

எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.
 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 
*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.

அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 
*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.
*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*

அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 
*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*

சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*

*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியால் கேட்டான்.*

வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 
*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.

பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 
*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 
இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*

அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 
*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*

யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.

அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.

*அவர் திடுக்கிட்டுப் போனார்.*

*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*

அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.

மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 
*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*
*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*

அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 
அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 
*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*

மரண தேவதை ஒப்புக்கொண்டது.
*அவர் இப்படி எழுதினார்.*

உங்களுக்கான நேரத்தை. 
*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*

என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.
 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*

இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*

அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 
*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*

விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*

*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*

அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 
*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன.*

*நேற்று* என்பது போய் விட்டது. *நாளை* இனிமேல்தான் வரவேண்டும். நமக்கு இருப்பது *இன்று மட்டும்தான். நாம் அதை வாழ்ந்துதான் பார்ப்போம்.*

ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் ஒரு வருடம் மூப்படைந்து விட்டான் என்பதை உணர்த்தும் நாள். *காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.*

                 * படித்ததில் பிடித்தது...* பகிர்வு

புதிய பார்வை...புதிய கோணம்..



நேற்றைய
பொழுதில்
மொட்டாகி...

இன்றைய
பொழுதில்
மலராகி...

நாளைய
பொழுதில்
சருகாகி
போவது...

புற
அழகு.

ஆனால்...

கருணை
ததும்பும்
கண்கள்...

உண்மை
மட்டும்
பேசும்
நாக்கு...

கெட்டதை
கேட்காத
செவி...

புன்னகை
சிந்தும்
முகம்...

பெரியோரை
கண்டால்
குனியும்
தலை...

அள்ளி 
தரும்
கைகள்...

நல்லவரை
நாடி 
செல்லும்
கால்கள்.

துக்கத்தில்
சோராத
குணம்...

ஒழுக்கத்தில்
மாறாத
மனம்...

இவைதான்
காலம்
கடந்தும்
அழியாத
அழகு.

அண்ணல்
காந்தி
அன்னை
தெரசா
அறிஞர்
கலாம்
இவர்கள்
எல்லாம்...

புற
அழகை விட
அக
அழகால்...

தம்
எண்ணங்களால்
செயல்களால்
அன்பால்...

உலக
மக்கள்
மனங்களை
வென்றார்கள்.

வரலாறு
கூறும்
உண்மை 
இது.

வாங்க...

புற
அழகை 
தாண்டி
அக 
அழகால்
உலகை
வெல்ல...

நாமும்
முயற்சிகள்
செய்வோம்.

அன்பான
உலகம்
அமைக்க
தொடங்கவும்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

பகிர்வு


Friday, November 13, 2020

தீப ஒளி வாழ்த்துகள்..

உறவுகளுக்கும் 
நட்புகளுக்கும் 
உள்ளம் 
கனிந்த 
வாழ்த்துகள்..

மிக்க அன்போடு
ஆ.சிவராமகிருஷ்ணன்
ஆண்டாள்
ரேஷ்மா
சேலம்.

Thursday, November 12, 2020

ஞாமகம் வருதே....

30 வருடங்களுக்கு முன்பு 🎉🎇 தீபாவளி எப்படி இருந்தது..??🤔🤔🤔
.
.
👉 ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி  வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔

👉 💣வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து 👩 அம்மாவிடம் அடி வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பேப்பரில் 💣 வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி வாங்கி வரும் 👴 அப்பாவின் வருகைக்காக வாசலில்  வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிகளை கையில் பிடித்து எரிந்து 👥 பெரியவர்களிடம் 
திட்டு வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👦 அண்ணே 💣 வெடி இருக்கு, 👧 அக்கா 💣 வெடி இருக்கு என்று 
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது -  நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பிடித்த 👕👖 ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான 👚👖ஆடைகளை வாங்கி, 👴 அப்பா 👩 அம்மாவிடம் கோபித்துக் கொண்டது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது 
என 🎇🎉 தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா 👴 அப்பா 🎅 தாத்தா 👸 பாட்டி 👳 மாமா என அனைவரிடம் சேகரித்த 🎇 🎉 தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎉 🎇 தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது 👖👕👚புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் தின்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 ♨ ஊதுபத்தி"க்கு பதிலாக 🎆 கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎇 ஒரு பத்தி அணையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு 🎇 பத்தியை அதிலேயே ஒட்டி வைத்து ஊதி ஊதி எரிய வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🐍 பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல 💥 கொளுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி  பில்டப் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 சகதிக்குள் 💣 வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும்  வாணவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டெண்ட்டை வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
.
👉 முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய 👦 சிறுவர்களும் 👦 இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!🤔
.
👉 இப்போதைய 🎆🎇 தீபாவளி 🍻 குடிப்பதற்கும், 📺 டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், 🎦 🎬 புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!! 🤔
.
👉 ஆனால் எங்களுடைய நாட்கள் (அப்போதைய 80,90,களின் தீபாவளி ) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை...!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...


நன்றி..
மீள்பதிவு

Tuesday, November 10, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

கடல்
ஒதுக்குவதால்
அலைகள் 
வராமல்
இருப்பதில்லை ...

மலர்ந்த
உடன்
வாடி
விடுவோம் 
என்றெண்ணி
எந்த 
பூவும்
மலராமல் 
இருப்பதில்லை...

போராடு 
உன் 
உடம்பில் 
கடைசி 
சொட்டு 
இரத்தம் 
இருக்கும் 
வரை 
போராடு 
தோல்விகள் 
உனக்கு 
தொண்டு 
செய்யும் 
அவமானம் 
உனக்கு 
அடிபணியும் ....

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

&&&&&&

Monday, November 09, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

வறுமை 
கல்லாத 
பாடங்களை 
கற்றுத்தரும் 
இல்லாத 
திறமைகளை 
கற்றுத்தரும் ...

வழக்கத்துக்கு 
மாறான 
வாய்ப்புகளோ
சகல 
செல்வங்களோ
சொகுசுகளோ
தரமுடியாதவற்றை
வறுமை
நமக்கு
கற்று
தருகிறது...

அது 
ஒரு 
பல்கலைக்கழகம் 
அந்த
பல்கலைக்கழகத்தில் 
பல 
அரசியல்வாதிகளும் மேதைகளும் 
பேச்சாளர்களும் 
அறிஞர்களும்
இசை  
வல்லுனர்களும் மனிதநேயமிக்கவர்களும்
புனிதர்களும்
படித்து 
பட்டம் 
பெற்று 
இருக்கிறார்கள் ...

வலுவான 
நோக்கம்
உள்ள 
மனிதனை 
விதியாலும்
தடுத்து 
நிறுத்த 
முடியாது ...

நம்மிடம் 
உள்ள 
பெரிய
குறை
எதுவெனில்
நாம்
மிக
உயரத்தில் 
அல்ல 
அதிக
தூரத்தில் 
நம்முடைய 
வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம்..


வாய்ப்புகள்
நம்மருகில்
உள்ளதை
பற்றிக்கொண்டு
வாழ்வின்
வெற்றி
பாதையில்
வீருநடை
போடுவோம்
வாங்க...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


புதிய பார்வை...புதிய கோணம்...

துறவி ஒருவரிடம் 
ஒருவன் வந்தான் 
ஐயா நான் 
கடுமையாக உழைத்து பொருள் ஈட்டுகிறேன் 
வீண் செலவு 
எதுவும் செய்யாமல் 
என் தாயிடம் 
தருகிறேன் என் 
தம்பிகளும் சரியான சோம்பேறிகள் எந்த வேலைக்கும் செல்ல மாட்டார்கள் ..

ஆனால் 
என் குடும்பத்தில் 
உள்ள எல்லோரும் 
என்னை குறை சொல்கிறார்கள் எல்லோருடைய தேவைகளையும் என் தலையில் சுமத்துகிறார்கள் அவர்கள் என்னை 
பற்றி குறை 
சொல்வதை கேட்கும் 
போது வாழ்க்கையே
வெறுத்து போகிறது..

 நான் என்ன 
செய்வது சொல்லுங்கள் என்றார் 
அன்பானவனே 
என்னுடன் வா 
என்று அவனை 
அழைத்துச் சென்றார் 
அங்கிருக்கும் மரங்களை
காட்டினார்..
அதில் ஒரு மரத்தடியில்
கற்களும் குச்சிகளும் 
நிரம்ப கிடந்தன
அவற்றை காட்டிய
குரு கேட்டார்
 ஏன் மற்ற 
மரங்களின் 
அடியில் அப்படி 
எதுவும் கற்கள் 
குச்சிகள் ஏதும்
கிடக்கவில்லை 
ஏன் இந்த 
மரத்தை மட்டும் 
இப்படி கிடைக்கின்றன 
என கேட்டார் ..

எனக்கு தெரியவில்லை என்றான் ..
அன்பானவனே இங்கு 
உள்ள மரங்களில் 
இந்த மரம் 
மட்டும் தான் 
கனிகளைத் தருகின்ற 
அதைப் பெறுவதற்காக 
கல்லடியும் குச்சியடியும்
பெற்று வாழ்ந்து
கொண்டிருக்கிறது..

யார் எப்போதும் 
செயல்பட்டுக் கொண்டே பயனுள்ள வாழ்வை வாழ்கிறார்களோ அவர்களை மற்றவர்கள் குறை 
சொல்வது  புறக்கணிப்பு
செய்வார்கள் 
அதை 
பொருட்படுத்தாமல் 
நீங்கள் உங்கள் 
வாழ்க்கையை பாதையில்
பயணிங்கள்..
ஒருநாள் நீங்கள்
மற்றவர்களால்
போற்றப்படுவீர்கள்...
என்றார் குரு.. 


வாங்க 
நாம்
நம்ம
கடமைய
செய்வோம்
மகிழ்வாய்
வாழ்வோம்..

இனிய 
வணக்கம்.

Saturday, November 07, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...



" அரவக்குறிச்சி   
  பள்ளியில்  
  பள்ளிப்படிப்பை 
  முடித்துவிட்டு
  சான்றிதழ் 
  வாங்க
  பள்ளிக்கு
  சென்றேன்.

தலைமை
ஆசிரியர்...

" தொடர்ந்து 
  என்ன செய்ய
  போகிறாய் ? "

என்று 
கேட்டார். 

" நான் 
  மாடு மேய்க்க  
  போகிறேன் " 

என்று 
கூறினேன். 

அவருக்கு 
அதிர்ச்சி. 

" மேலே
  படிக்கலாம் 
  அல்லவா ? "

என்று 
கேட்டார்.

" அதற்கு 
  எல்லாம் 
  எங்கள் வீட்டில் 
  வசதி இல்லை "

என்று 
கூறினேன்.

அருகில் 
இருந்த கணித 
ஆசிரியர்...

" கணித 
  பாடத்தில் 98 
  மதிப்பெண்  
  பெற்றிருக்கிறாய். 

  எனவே நீ 
  பொறியியல் 
  படிப்பு படிக்கலாம் "

என்று 
கூறினார்.

அந்த 
ஒரு வார்த்தை 
என் வாழ்க்கையை 
புரட்டிப் போட்டது.

என் 
பெற்றோருக்கு 
தெரியாமல் என் 
சைக்கிளை விற்று
அந்த பணத்தில்...

கோவை பிஎஸ்ஜி 
கல்லூரியில் 
பொறியியல் படிப்பு
படித்தேன்.

அந்த ஆசிரியர்
கூறிய அந்த ஒரு 
வார்த்தை தான் 
என்னை 
பொறியாளராக 
மாற்றியது "

இந்த
வார்த்தைகளுக்கு
சொந்தக்காரர்.

பல்லாயிரம் 
பொறியாளர்களை 
உருவாக்கிய... 

அண்ணா 
பல்கலைக்கழக
முன்னாள்
துணைவேந்தர்...

மதிப்பிற்குரிய
டாக்டர் பாலகுருசாமி
அவர்கள்.

ஆசிரியர்
மட்டுமல்ல
யாரோ 
ஒருவர்
கூறும் 
ஒரு
வார்த்தை...

நம்மை 
நம் 
எதிர்காலத்தை
மாற்றத்தை
ஏற்படுத்த
வல்லது.

அதை
உணர்ந்தவர்கள்
உபயோக
படுத்தியவர்கள்
வெற்றி 
பெறுகிறார்கள்.
வரலாறு
படைக்கிறார்கள்.

வாங்க...

அடுத்தவர்
கூறும்
நல்
வார்த்தைகளை
நாமும்...

செவி மடுப்போம்
செயல் படுத்துவோம்
சாதித்து காட்டுவோம்.

அன்புடன்
இனிய
வணக்கம்

Wednesday, November 04, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

உங்கள் கையில் 
திட்டம் இருந்தால் 
நீங்கள் எடுத்துக்கொண்ட வேலையில் பாதி 
முடிந்த மாதிரி ..

திட்டம் என்பது 
என்ன ..?
தான் கொண்ட 
குறிக்கோளை
அடைவதற்கான வழிமுறைகளை 
வரைவு செய்து 
கொள்வது ...


திட்டத்தை வரைவு செய்யும்போதே செயல்பாட்டின் பல நிலைகளையும் மனக்கண்ணில் காட்சியாக்கி பார்க்க வேண்டும் அப்போதுதான் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை 
காண முடியும் 
உங்கள் செயலில் 
எந்த கட்டத்தில் 
யார் தேவைப்படுவார்கள் என்பதையும் அறிய 
முடியும் ....

திட்டம் வெற்றி 
வாய்ப்புகளை 
உறுதிசெய்யும் தோல்விக்கான சந்தர்ப்பங்களை 
குறைக்கும்..


திட்டம் இடுதல் 
முக்கியம் ...
திட்டமிட்டபடி 
செயல்படுவது 
அதை விட முக்கியம் ...
உங்கள் திட்டம் முழுமையானதா இல்லையா என்பதை பொறுத்தே 
நீங்கள் முதல் 
இடம் பெறுவதும் உங்களுடைய முகவரி நிலைப்பதும் 
உங்கள் கையில்..

உங்களுடைய அன்றாட பணியை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் இன்று 
எந்த நேரத்தில் 
யாரை சந்திப்பது 
இன்று எந்த 
நேரத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டும் 
என்று திட்டமிட்டுக் கொண்டால் 
நாம் மனஉளச்சலுக்கு உள்ளாக வேண்டி 
இருக்காது ...

திட்டமிட்டுக் கொண்டால் 
ஒரு தெளிவு 
கிடைக்கும் ...
திட்டமிட்டு செய்கிற 
வேலை நிச்சயம் 
நடக்கும் 
திட்டமிட்டு 
வாழ்கிற 
வாழ்க்கையில் 
நிம்மதி 
கிடைக்கும் ...


வாங்க 
நாமும் 
திட்டமிடுவோம்
நிம்மதியாக 
வாழ்வோம் 

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்..

Monday, November 02, 2020

பரதநாட்டிய அரங்கேற்றம்...மகிழ்வான தருணம்

ரேஷ்மாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு  நிறைவடைந்த முதலாம் ஆண்டு  மகிழ்வான தினம்  இன்று... ( இனிய நினைவுகளோடு மகிழ்வோடு பகிர்ந்து மகிழ்கறோம்)

கலைமகளுக்கும்,தமிழுக்கும், அன்னை நாட்டியாலயா குருவுக்கும், இந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வுக்கு துணை நின்ற அனைத்து கலைஞர்களுக்கும் ,உறவுகளுக்கும் மற்றும் நட்புகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்...

இது எங்கள் வாழ்வின் மகத்தான நாள்....

ரேஷ்மாவின் கலைப்பயணத்தில் மேலும் பல உச்சம் தொட அனைவரும் ஆசி வழங்க அன்போடு வேண்டுகிறோம்.

மிக்க அன்புடன்
ஆ.சி.ரேஷ்மா
ஆண்டாள்
சிவா
சேலம்...

Video காண கீழே உள்ள  linkயை கிளிக் செய்க....

https://youtu.be/R9iKmksqU-w


Sunday, November 01, 2020

வகுப்பறை தொழில் நுட்பம்-2

*கற்றல் கற்பித்தலில் TELEGRAM APP ஐ பயன்படுத்துவது எவ்வாறு ?*

📌 ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்...

வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்கவும் அவர்களை மதிப்பீடு செய்ய உதவும் Social Media வான Telegram ( டெலிகிராம் ) பயன்படுத்தி மாணவர்களுக்கு Multiple choice question and quize  உருவாக்குவது எப்படி  என்பதன் செயல் விளக்கம் video எனது Siva Mindmoulders Channel பதிவேற்றம் செய்து அதன்    Link அனுப்பி உள்ளேன். காணொளியை பார்த்து மறக்காமல் Subscription செய்ய அன்போடு வேண்டுகிறேன்..

என்றும் கல்விப் பணியில்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.

காணொளி காண இதை கிளிக் செய்க....

https://youtu.be/6UthlwPLlkQ

Saturday, October 31, 2020

வகுப்பறை தொழில்நுட்பம்-1

ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்...
வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்க மன வரைபடம் வரை பயன்படும் ஆண்ராய்டு செயலி செயல் விளக்கம் (   Mindmap Tutorial ) video எனது Siva Mindmoulders Channel பதிவேற்றம் செய்து அதன்    Link அனுப்பி உள்ளேன். காணொளியை பார்த்து மறக்காமல் Subscription செய்ய அன்போடு வேண்டுகிறேன்..

என்றும் கல்விப் பணியில்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.
https://youtu.be/SXEWFPvaYqo


Friday, October 30, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

ஒன்றைத் தொடங்கி 
விட்டாலே பாதி 
வேலை முடிந்த 
மாதிரி எதை 
செய்தாலும் 
உடனே செய் 
வெற்றியாளரின் தாரக... மந்திரம் இது 
காரியத்தை தள்ளிப் போடுவதை விட 
மோசமான செயல் 
வேறு எதுவும் 
இல்லை..

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள்
வேலையை கடினமாகி 
விடும் 
வேலையை தள்ளிப் 
போட்டு  சோம்பேறியாக இருப்பதுஉங்கள் 
கவலையை அதிகமாகிவிடும் பிறகு எந்த 
வேலைக்கும் நீங்கள் 
தகுதியற்றவர் என்று மற்றவர்கள் கூறும் 
நிலைக்கு ஆளாவீர்கள்..! இவற்றால் உங்களுடைய ஆற்றல்  பாலாகும்
நேரம் வீணாகும் ....

சிரமமான வேலை 
என்ற உணர்வுதான்
வேலையை தள்ளிப்போட செய்கிறது எளிதான வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் முதலில் கடினமான வேலையை 
செய்து முடியுங்கள்... வேலையை தள்ளிப்போடுவது  உங்கள் நற்பெயரை கெடுத்துவிடும் ...
நல்ல சந்தர்ப்பத்தை நாசமாக்கிவிடும் ...

இன்றைய பொழுதையும்
நாளைய பொழுதையும்
அடகு வைப்பவர்கள் ஒருபோதும் முன்னேற முடியாது 
அடுத்து என்ன.?
அடுத்து என்ன..?
என்று துடிப்போடு 
ஒடுபவர்களே முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள்...


வாங்க 
நாமும்
உடனே 
வேலை
செய்து 
முடிப்போம் ...
வாழ்வில்
வெற்றி 
பெறுவோம்...

அன்புடன்
 
இனிய 
காலை 
வணக்கம்

Tuesday, October 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



மிக
உயர்ந்த
எண்ணம்
கொண்டவர்கள்...

எந்த 
சூழ்நிலையிலும்
அடக்கமாக
இருப்பர்.

அவதூறு 
சொற்களை
அள்ளி வீசுவது
கடுகு மனம்
கொண்டவர்கள்
இயல்பு.

ரூபாய்
நோட்டுகள்
சத்தம்
போடுவது
இல்லை.

சில்லறைகள்
சத்தம்
போடுவது
இயற்கைதானே.

'  இனிய உளவாக
   இன்னாத கூறல்
   கனியிருப்ப காய்
   கவர்ந்தற்று  '

இது
வள்ளுவனின்
வார்த்தைகள்.

வாங்க.

அன்பான
பண்பான
இனிப்பான
வார்த்தைகளை
பயன்படுத்த
முயற்சிகள்
செய்வோம்.

Monday, October 26, 2020

கலாம் விருது...

அப்துல்கலாம் ஐயாவின் பிறந்த நாளில் கவித்துறையில் சாதித்து வரும் ஆசிரிய பெருந்தகைகளுக்கு  தாய் உள்ளம் அறக்கட்டளை,கலாம் யுவி அறக்கட்டளை,ஓசூர் ரீச் மீடியா மற்றும் JCI சிப்காட் அமைப்பினரால் கலாம் அறிவு மாமணி விருது    வழங்கி  ஆசிரிய சமூகத்தை பெருமை படுத்தியமைக்கு
நன்றி...மிக்க மகிழ்ச்சி....

நன்றியுடன்
ஆ.சிவா...சேலம்.

Friday, October 23, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

வறுமையில் அடிபட்டவர்களுக்கு 
அதுவே
புகலிடம் 
மனம்
வாடியவர்களுக்கு 
அதுவே 
இளைப்பாறும் 
பூஞ்சோலை
அதன்
பெயர்
கனவுகள் ....

உங்கள் 
உடம்புக்கும் 
மனசுக்கும் 
வலிமை 
அளிக்கவல்லது... சுறுசுறுப்பைத் 
தரும் 
கனவுலகில் 
உங்களை 
நீங்களே 
புதுப்பித்துக் 
கொள்வீர்கள் 
கண்கவர் 
வண்ண 
ஓவியங்கள் 
காதுக்கு 
இனிய 
இசை 
வடிவங்கள் 
மனதில் 
பதியும் 
சிற்பங்கள்
உணர்வைத் 
தட்டியெழுப்பும்
கவிதைகள் ..
இவற்றுக்காக 
சில 
மணித்துளிகள்
உங்கள் 
வாழ்வில் 
ஒதுக்கியிருக்க 
மாட்டீர்களா ?...
இவையெல்லாம் 
கலைஞர்கள் 
கண்ட 
முதற்கனவு 
கனவின் 
படைப்பு 
என்பதை 
நீங்கள் 
அறிவீர்கள்..

வாங்க
கனவு
காணுவோம்
புதியவற்றை
படைத்து
சாதனை
நோக்கி
பயணிப்போம்


மிக்க அன்புடன்
இனிய
காலை
வணக்கம்....

Sunday, October 18, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

சிலர் மொட்டை 
மாடியில் மல்லாந்து 
படுத்தபடி ஆகாயக் 
கோட்டை கட்டி கொண்டிருப்பார்கள் 
நகரின் மையப்பகுதியில் மூன்று அடுக்கு 
மாளிகையில் வசிப்பது போலவும் எடுபிடிகள் 
இருப்பது போலவும் 
பல லட்சம் ரூபாய் 
காரில் பயணம் 
செய்வது போலவும் 
கனவுகள் ...

ஆகாயக் கோட்டைகள் உருவாக்கினால் அது பாட்டுக்கு மேலும் 
மேலும் எழுப்பிக் 
கொண்டே இருக்கும் 
கனவுக்கு கால்கள் 
இல்லை அதனால்
அது ஓடிகிட்டே
இருக்கும் ...

கனவு காண்பது
தவறா ...கண்டிப்பாக 
இல்லை அது 
ப்ளூ பிரிண்ட் 
மாதிரி காகிதத்தில்
வரை படித்திருந்தால் 
தானே கட்டடங்கள் உருவாகின்றன... அதனால்
கனவு காண்பது
என்றும் குற்றமான 
காரியம் அல்ல 
கனவோடு உழைப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆகாயக் கோட்டை 
அசல் கோட்டையாக மாறிவிடும் ...

வாங்க
நாமும் 
நமது 
கனவை 
நினைவாக்க 
தினம்
உழைக்க
தொடங்குவோம்
வாழ்வில்
வெற்றியை
சுவைப்போம்
&&&&&&&&
 அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..
&&&&&&&&&

Thursday, October 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

சாக்ரடீஸ் 
ஒருமுறை தனது 
வீட்டுக்குக் கீழே
தனது நண்பருடன் 
பேசிக் கொண்டிருந்தார் 
அந்த வேளையில் 
அவரது மனைவி 
கீழே சாக்ரடீஸ்
நிற்பதை கவனிக்காது மாடியிலிருந்து குப்பையை கீழே கொட்டினார் 
அது சரியாக 
சாக்ரடீஸ் மீது 
விழுந்தது அப்புறம்
மாடியில் இருந்து 
தண்ணீரை கொட்டினாள் 
அது சாக்ரடீசை 
முழுமையாக நனைத்துவிட்டது இதைப் பார்த்து 
அதிர்ந்து போன 
நண்பர் என்ன 
இது உங்கள் 
மீது குப்பை 
மற்றும் தண்ணீரை 
கொட்டி விட்டு 
செல்கிறார் கோபமே இல்லாமல் பேசாமல் இருக்கிறீர்கள்.. என்று ஆத்திரத்துடன் கேட்டார் முதலில் இடி 
இடித்தது இப்போது 
மழை பெய்கிறது ..
இதற்கு போய் 
கோபப்பட்டு  என்ன ஆகப்போகுது என்று சமாதானமாக சொன்னார்..

 இந்த விஷயம்
சாக்ரடீசை எள்ளளவும் பாதிக்கவில்லை 
இப்படித்தான் நாமும் 
துன்பம் நம்மை 
எள்ளளவும் பாதிக்காத 
வாறு நடந்து 
கொள்ள வேண்டும் ...

வாங்க 
முயற்சி 
செய்வோம்
வாழ்வில் 
வெற்றி
பெறுவோம்.
&&&&&&
அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்..
&&&&&&

Sunday, October 11, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

முயல் ஒன்று 
தற்கொலை செய்து கொள்ளும் முடிவை 
எடுத்தது ...

என்ன பிரச்சனை 
அதற்கு பிரச்சனை 
மற்ற உயிரினங்களால்
தான் அது 
அழகாக  வேறு
இருக்கிறது துள்ளித் 
துள்ளி  குதிக்கிறது.. எல்லாவற்றையும் விட 
அதன் கறி 
ருசி மிக்கவாறு
இறைவன் படைத்துவிட்டான் 
முயல் கறி 
என்றால் அசைவ பிரியர்களுக்கு தனி சுவைதான் போங்க 
இதனால் முயலைப் 
பிடித்து கொடுத்தால் 
நல்ல காசு 
என்று வேடர் 
காட்டில் ஒருபக்கம்...

மற்றொரு திசையில் நாய்களின் தொந்தரவு ..

மூன்றாவது திசையை நோக்கினால் அங்கே 
புலி ஒன்று உரிமி கொண்டிருந்தது  
கடைசியாக நான்காவது 
திசை 
நோக்கி சென்றது  
அது 
தண்ணீர் நிரம்பிய 
ஏரி வெறுத்துப் 
போய் விட்டது
முயல்....

பயந்து பயந்து
வாழ வேண்டிய 
கட்டாயம் இந்த 
வாழ்க்கை தேவையா? தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஏரிக்கரைக்கு சென்றது ஏரிக்கரையில் உணவு தேடிக்கொண்டிருந்த தவளைகள் முயலை
கண்டு பயந்து
விசுக் விசுக்கென்று 
தண்ணீர் குதித்தன ...

 நம்மை பார்த்து 
கூட சில 
விலங்கினங்கள் பயப்படுகிறது என்ற 
எண்ணம் முயலுக்கு 
சிறிது தன்னம்பிக்கை 
துளிர்க்க வைத்ததால்
தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டது...


நாமும் இப்படித்தான் வலிமையானவர்களை
பார்த்து பயந்து
நம்பிக்கை இழக்கிறோம்...

நமக்கு சமமானவர்களையும்
வலிமையில் குறைந்தவர்களை பார்த்து நம்முடைய நம்பிக்கையை வளர்த்து வளமாக வாழலாம்
வாங்க....
அன்புடன்
ணண்ண
இனிய
காலை 
வணக்கம்...