Showing posts with label ஆசிரியர்களுக்கு. Show all posts
Showing posts with label ஆசிரியர்களுக்கு. Show all posts

Sunday, September 22, 2024

கத்தி மேல் நடக்கும் ஆசிரியர்கள்...

இன்றைய சூழலில் ஆசிரியர் பணி என்பது கத்தி மேல் நடப்பது போலாகிவிட்டது. ஆகிவிட்டது என்பதை விட ஆக்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

வீட்டில் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான சுதந்திரமும் செல்லமும் தான் வெளி இடங்களிலும் பள்ளியிலும் தொடர்கிறது. இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு நல்லதை விட தீயதே எளிதில் கிடைக்கின்றது.

உதாரணமாக சமூக வலைதளங்களில் பாடம் சார்ந்த வீடியோக்களை விட ரீல்ஸ் என்ற பெயரில் சில தருதலைகள் செய்யும் மோசமான செயல்தான் குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. அப்படி அதை பார்க்கும் மாணவர்கள் தாமும் அதைப்போல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இது இந்த பருவத்தின் இயல்பு தான். 

அதை நல்வழியில் மடைமாற்றும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். எது சரி எது தவறு என்று மாணவர்களுக்கு புரியவைப்பதே இன்றைய சூழலில் ஆசிரியர்களின் முதன்மை பணியாக உள்ளது. ஆனால் வகுப்பறை சூழலோ ஆன்லைன் பதிவேடுகளுடனே கடந்து போகவைக்கின்றது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் மாணவர்களால் நாளை எந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள முடியும். சிறு தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை, கண்டிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆசிரியர்களும் கேட்கமுடியவில்லை, ஏன் பெற்றோர்களாலே முடியவில்லை. அப்படி எனில் அவர்களுக்கு யார்தான் எடுத்துக்கூறுவது.

தற்போது அரசுப்பள்ளிகள் அனைத்தும் அளப்பரிய அளவில் உயர்ந்த இடத்தை நோக்கிச்சென்றுகொண்டு இருக்கின்றன. வண்ணம் பார்த்து ஆண்டுகள் பல ஆன பள்ளிகள் அனைத்தும் இன்று வண்ணமயமாக ஜொலித்துக்கொண்டு இருக்கின்றன.

செல்போன் சிக்னலே வராத ஊரில் உள்ள பள்ளிகளில் கூட 24-மணி நேர இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. வாசிப்பை ஊக்குவிக்க அட்டகாசமான நூலகங்கள் உள்ளன. வறுமையால் கல்வி தடைபடாமல் இருக்க அரசின் எண்ணற்ற நலத்திட்டங்கள் இருக்கின்றன.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியையும் பெருமையையும். இப்படியான சூழலில் தான் இப்போது தொடர்ச்சியாக இதுபோன்று அரசுப்பள்ளிகளை பற்றியும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பற்றியும் எதிர்மறையான செய்திகள் வந்துகொண்டு மக்கள் மனதில் கலக்கத்தை உண்டாக்கிக்கொண்டு இருக்கின்றன.

ஆசிரியர் மாணவர் உறவு எங்கு வலுவாக சிறப்பாக உள்ளதோ அங்கு கற்றல் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். ஆனால் இன்று அந்த உறவோ ஏதோ எதிரியை பார்ப்பது போல் ஆக்கிவிட்டது இன்றைய காலச்சூழல். ஒரு பள்ளியில் தான் எத்தனை பிரச்சனைகள், சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சனை, ஏற்றத்தாழ்வு, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனையையும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டும் மாற்ற முடியும் என்று எண்ணினால் அதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் எதுவும் இல்லை.

ஆசிரியர்களும் கற்பித்தல் என்பது வகுப்பறையோடு முடிந்துவிட்டது என்று எண்ணுகிறோம். அது தவறு. கற்பித்தல் என்பது வகுப்பறையை தாண்டி அந்த மாணவனை பற்றி முழுமையாக கற்றுக்கொள்வதில் தொடங்குகின்றது. எத்தனை ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் பெற்றோர்களுடன் உரையாடுகிறோம். மிக மிக குறைவே. 

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இந்த மூன்றும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். ஆனால் இன்று அனைத்தும் ஆசிரியர்கள் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது. 

இதுபோல பிரச்சனைகளை நாம் அனைவரும் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அரசுப்பள்ளிகளையே நம்பி இருக்கும் பெற்றோர்களின் மனநிலையில் இருந்தும், எப்படியாவது தன்னிடம் படிக்கும் மாணவன் உயர்ந்த இடத்திற்கு வந்துவிட மாட்டானா என நினைக்கும் ஆசிரியர்கள் இடத்தில் இருந்தும் பார்த்தால் தான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

தயவு செய்து அரசும் சமூகமும் மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த செயல்களையும் ஆசிரியகள் மேல்மட்டும் சுமத்தி தற்காலிக தீர்வை தருவதை விட்டு இதற்கு நிரத்தர முற்றுப்புள்ளியை வைத்து மீண்டும் இதுபோல் எங்கும் நடக்காதவாறு மிகச்சிறந்த செயல்திட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

ஞா.செல்வகுமார் இ.நி.ஆசிரியர் 
அரசுப்பள்ளி மாணவன். அரசுப்பள்ளி ஆசிரியர்.
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.

நன்றி
பகிர்வு பதிவு

Tuesday, September 03, 2024

மனிதரில் மாணிக்கம்..

ஒரு உண்மைக்கதை..!!

ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது அவர் எதிரில் உடுத்த உடை 
கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க..

சுற்றுமுற்றும் பார்க்கிறார்..
உடனே அவர் தன் இடுப்பில் கட்டி 
இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு 
வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம் 
ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்..

இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்..

அங்கே பழைய ஜரிகை வியாபாரம் 
செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்.. 

வணிகரும்.. ஆஹா.. 
இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே.. 
சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்... ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்..

அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அருகில் சென்று பார்க்கிறான்..

அவர் தன் வேட்டியை பக்கத்தில் 
கழட்டி வைத்து விட்டு தியானம் 
செய்து கொண்டிருக்க.. 

இதை வாய்ப்பாக பயன்படுத்தி 
மெல்ல அதை எடுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கிறான்.. அந்த சமயம் பார்த்து 
கீழே கிடந்த முள் ஒன்று அவன் காலில் குத்த.. ஆ.. அம்மா என்று அலறுகிறான்..

அந்நேரம் பார்த்து தியானத்தில் 
இருந்து கண் விழித்து பார்த்தவர்.. 

அங்கே நிகழ்ந்ததை நினைத்து அடடா.. 
நாம் அந்த வேட்டி மீது வைத்திருந்த ஆசை அவனை திருடனாக மாற்றிவிட்டதே என மனதிற்குள் வருந்தினாராம்.. 

ஆஹா.. இது எப்பேர்ப்பட்ட மனநிலை.?

தான் ஒரு பொருள் மீது வைத்த பற்று 
அது இன்னொருவரை திருடனாக மாற்றி விட்டதே என அவர் நினைத்து வேதனை படுகிறார். 

அப்படி நினைத்தவர் தான்
துறவி 'மகாவீரர்'..

அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பாருங்கள்...

ஆனால்.. இன்றைய உலகில் எத்தனை பேர் இத்தகைய மனநிலையில் வாழ்கிறார்கள்..?

அவரவர்..
மனநிலைக்கே...
விட்டுவிடுவோம்...

நன்றி 
பகிர்வு பதிவு..

Friday, August 19, 2022

கணிதம் புதிய மதிப்பீடு முறை அறிவோமா..?

*மாணவர்களை மதிப்பீடு செய்யும் புதிய முறை ரிபஸ்  ( Rebus) படப்புதிர்கள்...உங்கள் பார்வைக்கு...காணொளியை கண்டு மகிழ்ந்து மறக்காமல் Subscribe செய்யவும்.*

*இவண்
என்றும் கல்விப்பணியில்
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா*

Video வை காண கீழே உள்ள லிங்கை தொடவும்.

https://youtu.be/Ie43WbAlBE8

Friday, August 12, 2022

கற்றலின் இனிமை...



🍂துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். 

🍂அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என 
 நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

🍂அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, "இது என்ன உனது இடது கையில் கயிறு?" என்று கேட்டான்....

🍂"தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’" என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே....

🍂அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. "இந்தக் குச்சி எதற்கு?" எனக் கேட்டான் அரசன். "வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது" என்றான்.

🍂அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். "இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?" எனக் கேட்டான் அரசன்.

🍂"வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!" என்று பதில் சொன்னான்.

🍂அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து "அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டான் அரசன்.

🍂"நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!"  என்றான்.

🍂"அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம்தானே" எனக் கேட்டான் அரசன்.

🍂அதற்கு நெசவாளி சொன்னான்: "அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான்.

🍂ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

🍂நெசவாளி சொன்னான்... 
"இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்".

🍂ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

🍂நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.

நன்றி ..! பகிர்வு பதிவு...

Thursday, June 09, 2022

கணிதம். இனிக்கும்....

மீன் விற்பவரிடம் 120 பெரிய இறால் மீன்களும் 180 நெத்தலி மீன்களும் 150 கணவாய் மீன்களும் இருந்தது. அவரிடமிருந்த எல்லா மீன்களையும் வாங்கிய ஒருவர் அந்த மீன்களை ஒவ்வொரு பைகளிலும் மூன்று வகை மீன்களும் சம எண்ணிக்கையில் இருக்குமாறு மீன்கள் பிரித்து சிறு பைகளில் போட்டுத் தரும்படி கேட்கிறார். மீன் விற்பவரிடம் சிறிய பைகள் இல்லாததால் பக்கத்து கடையில் இருந்து வாங்கி வருமாறு சொல்கிறார். எத்தனை பைகள் தேவைப்படும் என்ற கேள்விக்கு மீன் விற்பனை செய்தவரால் பதில் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொரு பையிலும் எத்தனை மீன்கள் போடவேண்டும் என்பதும் அவருக்கு தெரியவில்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீன் விற்பவரின் ஆறாவது படிக்கும் மகன் தன் தந்தைக்கு உதவி செய்ய முயற்சி செய்தான். அருகிலிருந்த ஒரு தாளை எடுத்து 120, 180, 150 என மூன்று மீன்களின் எண்ணிக்கையையும் எழுதினான். படத்தில் காட்டியது போல அவற்றின் மிப்பெரு பொது வகுத்தியை (மீபொவ) கண்டு பிடித்தான். 120, 180,150 ஆகிய எண்களின் மீபொவ 30 என கண்டுபிடித்தான் (படம் பார்க்க). மீன் வாங்க வந்தவரிடம் 30 பைகளை வாங்கி வரச் சொல்கிறான்.

தந்தையிடம் ஒரு பையில் 4 இறால் மீன்கள், 6 நெத்தலி மீன்கள், 5 கணவாய் மீன்கள் வைத்து 30 பைகளில் போட்டால் ஒவ்வொரு பையிலும் சமமான அளவு மீன்கள்  இருக்கும் என்று கூறுகிறான். தந்தை தனது மகனின் அறிவைப் பார்த்து ஆச்சரியமடைகிறார்.

Greatest Common Divisor (GCD) என்று நாம் படித்த மிப்பெரு பொது வகுத்தியின் வாழ்க்கை கணக்கு இது.  LCM , GCD போன்ற கணக்குகளை வாழ்க்கையில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படிக்கும் போது இரண்டு அல்லது மூன்று எண்களை கொடுத்து அதற்கான GCD அல்லது LCM கண்டுபிடி என்ற கேள்வியோடு முடிந்துவிடுகிறது. இப்படி படிக்கும் கணக்குகளை வாழ்க்கையில் பயன்படுத்த முடியால் இருக்கும் போது தான் கணிதம் கசக்கிறது.

தேசிய பாடத்திட்டத்தில் இந்த இடத்தில் தான் வேறுபடுகிறோம். 
தமிழ்நாடு பாடத்திட்டத்திலும் தேசிய பாடத்திட்டத்திலும் GCD என்ற பாடம் இருக்கிறது. 
State board கேள்வித்தாளில் 48 மற்றும் 32 க்கும் மான மிபொவ கண்டுபிடி என கேள்வி இருக்கும். அதே கேள்வி தேசிய பாடதிட்டத்தில் கேள்வியாக கேட்கும் போது 
ஒரு நிகழ்ச்சியில் 48 பெரியவர்களும் 32 சிறியவர்களும் கலந்து கொண்டனர். இவர்களை அங்கு போடப்பட்டிருந்த மேஜையில் உட்காரவைக்க வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் சம எண்ணிக்கையிலான பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அமர வைக்க எத்தனை மேஜை தேவைப்படும்?

இரண்டு கேள்விகளின் விடை 16 தான். இரண்டு கேள்விகளின் தீர்வுக்கான படிநிலையும் ஒன்று தான். முதல் முறையில் கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்தவனுக்கு இரண்டாவது முறையில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சிரமப்படுகிறான். ஏன்?. புரிந்து படிக்காததால் தான்.

தனக்கு  புரிந்த concept ஐ வாழ்க்கை கணக்குகளில் பயன்படுத்த தெரிந்திருக்கிறதா என்பதையே இன்றைய போட்டித் தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படுகிறது. அதில் ஜெயிப்பவர்களுக்கே இன்றைய அவசர உலகில் வெற்றி கிடைக்கிறது.

நம் பாடங்கள் அனைத்துக்கும் பயன்பாடு இருக்கிறது. வாழ்க்கையில் பயன்படுத்துகிற சூழல் இருக்கும். நாம் அதை படிப்பதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான சூழலே இங்கு இருக்கிறது. கணக்குப் பாடம் ஆரம்பிக்கும் போது அந்த கணக்கின் பயன்பாடு தெரிந்துவிட்டு கணக்கைப் படிப்பது அந்த கணக்கின் மேலுள்ள ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

எல்லா கணக்குகளுடனும் அதன் பயன்பாடு பற்றி ஒவ்வொரு பாடத்தின்  கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு நாம் குறைவான முக்கியத்துவமே கொடுக்கிறோம். 
கணக்கு நடத்தும் ஆசிரியர் எல்லா கணக்குகளுக்கும் சம்மந்தப்பட்ட வாழ்க்கை கணக்குகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் செய்முறை செய்வது போல கணக்குப் பாடத்திலும் ஒவ்வொரு கணக்கு concept க்கு முன்னரும் இந்த செய்முறை செயல்பாடுகளை மாணவர்களை செய்யச் சொல்ல வேண்டும். பின்பு அது சம்மந்தமான கணக்குகளை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் 
கணக்கு வேப்பங்காயாக கசக்காது. நெல்லிக்காய் மாதிரி சாப்பிட்ட பின்னரும் இனிக்கும்.

Sunday, April 10, 2022

அப்பா பாசம் பொய்யாகலாமா...?

அப்பா பாசம்பொய்க்கலாமா..?*

அன்புப் பிள்ளையே !

கைப்பேசிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு

காது கொடுத்து கேள்

" அப்பா நான் படிக்கணும்பா
கைப்பேசி வேணும்பா 

 வெல கம்மியில
வாங்கித் தாப்பா "

இப்படி நீ கேட்டப்போ
நெஞ்சுருகிப் போனேன்

சக்திக்கும் மீறி
கடன வாங்கி

தரமான கைப்பேசியை

உன் கையில கொடுத்துப்புட்டு 

"படிக்குது என் புள்ளன்னு"

நம்பித்தானே நான் கிடந்தேன்

"வரவுக்கு மீறிய செலவு
வேண்டாம்" னு 

அம்மா தடுத்த  போது...

" புள்ளப் படிப்புக்கு இது முக்கியமாக்கும்

உனக்கு ஒரு எழவும் தெரியாது " ன்னு

முரட்டு பிடவாதமா

வாங்கித் தந்த கைப்பேசி அது

கவனிச்சு பாத்தியா நீ...

கறிச்சோறு குறைஞ்சு போச்சு

மூனு வேள சாப்பாடு

இரண்டு வேளையா
மாறிப் போச்சு....

 சக்தி இல்லா
உடம்பினால

சம்பாதினையும்
பாதியாச்சி !

மானம் காத்த
துணியெல்லாம்

நஞ்சும் கூட போயாச்சு

உன் கவனமோ 
கைப்பேசியில் நிலையாச்சு

நான் படுற 
பாடெல்லாம்

நீ பட வேணாம் னு

இராப்பகலா உழைக்கிறேனே

தூக்கமின்றி கிடக்கிறேனே

சம்பந்தமே இல்லாதது போல
கைப்பேசியில் வாழறியே !

என்னப் படிக்கிறேன்னு

எதேச்சையா பார்த்தப்போ

படிப்புக்குச் சம்பந்தமில்லா

விளையாட்டில் நீ மூழ்கி

எட்டிப்பார்ப்பது *அப்பா* ங்கிறதையும் மறந்து

ஆனந்தக் களிப்பில்

ஆடித் திளைக்கிறியே !

அன்றொரு நாள் வாத்தியார்

"கொஞ்ச நாளா
உம் புள்ள  போற போக்கு சரியில்லை"ன்னு

குறையா 
சொன்னப்போ
ஏத்துக்காத எம் மனசு

கண்ணெதிரே கண்ட பின்பு

கலங்கித்தான் தவிக்கிறதே !

உனக்காக நான் சுமந்த
வலிகளெல்லாம்

எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து

ஏளனமாய்ச் 
சிரிக்கிறதே

"உன்னைக் கெடுத்தது
நான்தான்" என

அம்மா ஏசுகிறாளே !

கொஞ்சம் யோசி என் உசுரே !

கைப்பேசி இல்லாதப்போ

கலகலப்பா இருந்த வீடு

இப்படி வெளவெளத்து கிடக்கிறதே !

இனி ஒரு முடிவெடு

உனக்கான சிகரத்தை

உனக்கான விலாசத்தை

உலகினில் பதிக்க

எந்திரக் கருவியை

மந்திரக் கருவியாக மாற்று

இனியும் இதனுள் மூழ்காதே

அறிவியல் சாதனம்

ஆற்றலை வளர்க்கும்

மூலமாக மாறட்டும்

"எம் புள்ள
ஜெயிக்கும்"

என்ற  நம்பிக்கை மட்டும்

எப்போதும்
பொய்த்துப் போகாது இருக்கட்டும்

 பாசத்துடன் அப்பா

நன்றி!
பகிர்வு பதிவு...

Thursday, January 27, 2022

நான் வாழை அல்ல...! சவுக்கு....

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

அவர்களின், 

தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

வானொலி: 

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்:

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது, 

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, 

குறுக்குப் பலகைகள் போட்டு, 

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, 

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, 

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, 

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

கிரஹப் பிரவேசத்தன்று

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், 

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, 

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? 

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். 

ஆடுமாடுகள் மேயும். 

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். 

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. 

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

*Always think positive

Wednesday, January 05, 2022

விலக்காதீர்கள்...விலகாதீர்கள்..

அன்பையும்_பாசத்தையும்_விலக்காதீர்கள்...*



*அந்த தோட்ட வீட்டின் அருகில் ஒரு பெரிய ஆலமரம் கிளைத்து தழைத்திருந்தது. விடுமுறைக் காலங்களில் அந்த தோட்டத்து உரிமையாளரின் நண்பர்களும் சுற்றத்தினரும் வந்து அந்த ஆலமரத் தடியில் கூடி குலவி பொழுதை இனிமையாக கழிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.*

*எந்த விடுமுறையாக இருந்தாலும் யாராவது வந்த வண்ணம் இருந்து ஆனந்தித்து செல்வர்.*

*அங்கு வருபவர்கள் பலவிதமான பறவைகளின் கூடாரமாக இருந்த அந்த இடத்தில் பறவைகளின் ஒலியைக் கேட்டு இன்புறுவர்.*

*ஒரு விடுமுறை நாளில் அந்த உரிமையாளரின் பேரன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.*

*ஒரு பறவையின் எச்சம் அவன் மேல் விழுந்தது. அதனால் கோபம் கொண்ட உரிமையாளர் அந்த பறவைகளையெல்லாம் விரட்டச் சொன்னார்.*

 *வேலையாட்கள் விரட்ட பறவைகள் தோட்டத்தில் உள்ள மற்ற இடத்தில் தங்கின. அங்கிருந்தும் விரட்டப்பட்ட பறைவைகள் புதிய இடம் தேடித் தங்கின.*

*அடுத்த சில நாட்களில் பறவைகளின் ஒலியின்றி அமைதியாக இருந்தது அந்த தோட்டத்தில். உள்ள ஆலமரம் பழுத்து இலைகளை உதிர்த்தது.* 

*நாளடைவில் அந்த தோட்டத்தில் மாயன அமைதி தென்பட்டது.*

*நண்பர்களே சுற்றத்தினரோ அங்கு வருவதில்லை. ஒர் ஒதுக்கப் பட்ட இடமாக மாறியிருந்தது அந்த தோட்டம்.*

*பசுமையாக அழகாக, ஆரவாரமாக ஆனந்தமாக இருந்த நம் தோட்டம் இப்படி ஆனதற்கான காரணத்தை யோசித்த உரிமையாளர், பறவைகளை விரட்டச் செய்தற்கு வருந்தினார்.* 

*கூண்டுகள் செய்து அணில் ,முயல் ஆகியவற்றை வாங்கி வந்து வளர்த்தார். அவைகளத் தொடர்ந்து சிட்டுக் குருவிகளுக்கு தீனி அளித்தார்.*

 *கொஞ்சம் கொஞ்சமாய் அங்கு பறவைகளின் ஒலி அதிகரிக்க சோகமாய் இருந்த மரங்கள் எல்லாம் துளிர்விட்டு மீண்டும் பசுமையை பரப்ப அந்த தோட்டம் மீண்டும் ஆனந்தத்திற்கு திரும்பியது.*

*வாழ்வில் பறவை எச்சத்தை போன்ற நிகழ்வுகள் தொல்லையாய் தோல்வியாய் வரக்கூடும்.*

 *அவற்றைத் துடைத்துவிட்டு எதிர்மறையாக சிந்திக்கமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற ஆக்க பூர்வமாக எண்ண வேண்டும்.*

*ஆனந்தமாக இருக்க வழி!*

*அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்!*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*  

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*  

வாழ்த்துக்கள்.

நன்றி
பகிர்வு பதிவு


Tuesday, November 23, 2021

மெல்ல...கொல்லும்...உணவுமுறை...

#மெல்லஅழிந்த_இயற்கைஉணவுகள்..!!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன் 
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்...

 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

 புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், 
வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினை திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த 
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டு பரதேசிகள்...

நோய் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான். கேரட் , பீட்ரூட் 
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொணர்ந்தான், அது அவனுக்கு சரி..

ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின.

 விளைவு..?

தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு 
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்து கொண்டிருக்கின்றான்..

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைதனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெய்யும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம்,  அவற்றுக்கு உண்மையான 
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

 ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் 
நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று 
எதையோ குடித்து, 
எதையோ புகைத்து, எதையோ மென்று 
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும் 
அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 

 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.

 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 

விஷம் அவை..

இவை பெருக பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை இந்துமத ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 
காணலாம்..

இந்து தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு 
வீசபடும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் இந்துக்களின் உணவினை பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 
நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல் 
சிசேரியன் என மறுபுறம்.

 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இங்கு உருவான 
இந்து எதிர்ப்பு கோஷ்டிகள்..

இந்துமதம் ஒழிய ஒழிய இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை 
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... அந்த பாரம்பரியம் இந்து ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது..

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம். 

மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 
ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...


நன்றி
பகிர்வு பதிவு

Thursday, November 11, 2021

நன்றியுள்ள விக்கி.... காணொளி சிறு கதை

பள்ளிக்கு வருகை தரும் மாணவச் செல்வங்களை மகிழ்விக்கும் நிகழ்வில் இன்றைய பண்பு நல கதை ஒன்று உங்கள் பார்வைக்கும் மாணவர்களின் மகிழ்வுக்கும் பகிர்வது..
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா...

காணொளியை கண்டு மகிழ்ந்து மறக்காமல் எங்கள் Channel யை Subscribe செய்து Bell பட்டனை அழுத்தி all என தர அன்போடு வேண்டுகிறோம்..

காணொளியை காண நீல நிற லிங்கை சொடுக்கவும்.
https://youtu.be/jnuclmLm6D8

Monday, October 11, 2021

பெண்( குழந்தை) களை போற்றுவோம்...

*இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். | இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.* 
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
*இது ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை. 
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
 மனமுவந்து வாழ்கிறாள். 
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். 
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
  தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*. 

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. 
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
 தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - 
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
 அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, 
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
 அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். 
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். 
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

 மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று. 
யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், 
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. 
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, 
சுற்றுகிறாள்.
 முதல் சுற்று, 
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். 
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள். 

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
*அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு* என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். 

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது. 

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். 

*சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. 
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. 

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது. 

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்.

படித்ததில் பிடித்தது...

நன்றி
பகிர்வு பதிவு

Saturday, October 09, 2021

முதுகெழும்பாய் தந்தை...

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி
யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 

4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..

5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை. 
இருந்தாலும்  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?

அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. 
இருந்தாலும் அப்பா 
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை...,...

தந்தையைப் போற்றுங்கள்.

படித்ததில் வலித்தது.

நன்றி..
பகிர்வு பதிவு...

Friday, October 08, 2021

வாழ்வில் வெற்றிப்பெற....

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட
ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம்
செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த
ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று
சந்தித்து தனது நிலைமையை சொல்லி
புலம்பினான்.
"நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று
முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம்
செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில்
தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம்
தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க
தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம்
செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். நான்
வடக்கே யாத்திரை செல்கிறேன்.
இரண்டொரு மாதங்களில் திரும்ப
வருவேன். அப்போது வந்து என்னை
மீண்டும் பார்" என்று ஆசி கூறிவிட்டு
சென்றார்.

*༺♦༻*
இவனுக்கு அப்போது தான் உண்மை
புரிந்தது. மக்களின் தேவையை
அறிந்துகொள்ளாமல் நமக்கு சுலபமாக
இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து
இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி
ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான்.
தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம்
விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில்
ஒரு காய்கறி கடையை திறந்தான். பக்கத்து
ஊர்களுக்கு சென்று காய், கனி வகைகளை
வாங்கி வந்து தனது கடையில் நியாயமான
விலைக்கு விற்றான்.

*༺♦༻*
இதைத் தொடர்ந்து
வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர்.
துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி
அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக
நன்றி சொன்னான்.
இந்நிலையில், இவனது வியாபாரத்தை
பற்றி கேள்விப்பட்ட பக்கத்து ஊர்
செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு
எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி
அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம்
ஒன்றை கட்ட ஆரம்பித்தார். தனது கடைக்கு
எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதை
பார்த்த இவன் என்ன ஏது என்று
விசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்கு
கடை ஒன்று அங்கு வரப்போவதாகவும்,
அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள்,
வீட்டு உபயோக வரை அனைத்தும்
கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு
கலக்கியது. இத்தனை ஆண்டுகள்
நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம்.
இப்போது தான் ஓரளவு வியாபாரம்
ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு
போட்டியா? இந்த கடை கட்டி
முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள்... என் கடையை
யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது
என்ன சோதனை என்று கலங்கித்
தவித்தான்.

*༺♦༻*
இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது
யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம்
சென்று நடந்ததை விளக்கி, "நான்
இப்போது என்ன செய்யவேண்டும்?"
என்றான்.
"ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப்
போல செய். தினமும் காலை உன் கடையை
திறக்கும்போது, *'இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்'* என்று கடவுளை
பிரார்த்தனை செய். அப்படியே எதிர்புறமும்
திரும்பி *அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்'* என்று
பிரார்த்தனை செய். ஒப்புக்காக
பிரார்த்திக்காமல் மானசீகமாக அதை
விரும்பு. நல்லதே நடக்கும்" என்றார்.
"என்னது எனது போட்டியாளரும் நன்றாக
இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு
வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று
பிரார்த்திப்பதா?"

*༺♦༻*
"ஆமாம்... நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு
வாழ்த்தும் நல்லெண்ணமும் உனக்கே
பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அதே
போல அவருக்கு தீமை நினைத்தால்
அதுவும் உனக்கே திரும்ப வரும்" என்றார்.
"அதே போல அவரை எங்கேனும் சந்திக்க
நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பது
போல பார்க்காது, ஒரு நண்பரை நலம்-
விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு
புன்னகை செய்." என்றார்.
அந்த சந்நியாசி மீதும் அவரது
வார்த்தைகள் மீதும் இவனுக்கு பெரு மதிப்பு
உண்டு என்பதால் அவர் கூறியதைப்
போலவே தினமும் முழு மனதுடன்
தனக்காகவும் அந்த எதிர்
கடைக்காரருக்காகவும் பிரார்த்தனை
செய்து வந்தான். அந்த எதிர்கடைக்காரரை
பார்க்கும்போதெல்லாம் புன்னகை செய்தும்
வந்தான்.

இதன் பயனாக நாளடைவில் இருவரிடமும்
ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு
காய்கறிகளை கொள்முதல் செய்யும்
பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர்.
விளைவு இவனுக்கு பன்மடங்கு பிஸ்னஸ்
கிடைத்தது.
நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு
மிகப் பெரிய காய்கறி சந்தையாக
மாறிவிட்டது. மெல்ல மெல்ல அந்த பகுதி
முழுக்க வளர்ந்து அந்த பகுதியே ஒரு மிகப்
பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது.
ஒரு நேர்மறையான அணுகுமுறை,
மனோபாவம் எந்தளவு அவரது
வாழ்க்கையை மாற்றியிருக்கிறது
பார்த்தீர்களா?

*༺♦༻*
*நாம் இந்த உலகத்தில் தனியாக இல்லை .*
*ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.* நமது
எண்ணங்கள் தான் நமது எதிர்காலத்தை
தீர்மானிப்பதில் மிகப் பெரிய பணியை
செய்கின்றன. *ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை நம்மையே தீர்மானிக்கின்றன.* எனவே
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்
என்றும் எப்போது நல்ல நேர்மறையான
சிந்தனையையே
வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இனிய முகநூல் நண்பர்களே வணக்கம்.

நன்றி..
பகிர்வு பதிவு...

Wednesday, October 06, 2021

ஆசிரியர் என்றும் ஆசிரியரே...

ஆசிரியர் சமுதாயத்திற்கு மனநிம்மதியை தரக்கூடிய ஒரு தீர்ப்பு.

Supreme Court says reprimanding students for indiscipline not tantamount to provocation for suicide

ஒரு மாணவர் தனது ஒழுக்கமின்மைக்காக கண்டிக்கப்படுவது என்பது  மாணவரை தற்கொலைக்கு தூண்டப்படுவதற்கு ஒப்பானதல்ல, என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது ஆசிரியரின் தலையாய கடமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மற்றும் ஒரு மாணவர் கவனத்துடன் இருக்காததற்காக அல்லது படிப்பில் மதிப்பெண் பெறாததற்காக அல்லது வகுப்புகளில் கவனமில்லாமல் இருப்பதற்காகவோ  அல்லது பள்ளிக்கு வராததற்கோ கண்டிப்பது அசாதாரணமானது அல்ல.

ஒரு மாணவரை சமுதாயத்தில் நல்ல மனிதராக்க, நல்ல குணங்களைப் புகட்டுவது ஒரு ஆசிரியரின் தார்மீகக் கடமை. ஒழுக்கமின்மைக்காக ஒரு மாணவரை கண்டிக்கும் ஒரு எளிய செயல்  தற்கொலைக்கு தூண்டுதலுக்காகவோ  இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.  

மாணவரின்  வருகை பதிவு, கற்றல் திறன், கற்றலில் முன்னேற்றம் மற்றும் மாணவரை பற்றிய வேறு எந்த செயலும் அல்லது தொடர்புடைய தகவல்களும். பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் குறிப்பிட்ட காலங்களில்  கூட்டங்களை நடத்தி அவர்களுக்குத் தெரிவிப்பது. 
"ஒரு ஆசிரியரின் தார்மீகக் கடமை மட்டுமல்ல, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பிரிவு 24 (இ) இன் கீழ் சட்டரீதியாக ஒதுக்கப்பட்ட கடமைகளில் ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது 

 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 ஆம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யும் போது உச்சநீதிமன்றத்தால் இந்த அவதானிப்புகள் செய்யப்பட்டன.

The top court said it is a solemn duty of a teacher to instill discipline in the students and reprimanding a student for not being attentive or not being up to the mark in studies or for bunking classes or not attending the school is not uncommon.

“It is not only a moral duty of a teacher but one of the legally assigned duties under Section 24 (e) of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 to hold regular meetings with the parents and guardians and apprise them about the regularity in attendance, ability to learn, progress made in learning and any other act or relevant information about the child,” the bench said.

பகிர்வு பதிவு

Saturday, October 02, 2021

கொரோனாவுக்கு பின் கற்பித்தல்...

நவம்பரில் நடக்க வேண்டியது... 2

முறையான கற்பித்தலுக்குப் போகும்போது நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படைக் கருத்துகள். 

1. குழந்தைகள் ஒன்றரை வருடம் சற்று சுதந்திரத்துடன் இருந்திருக்கிறார்கள். 
2. விரும்பியதை மட்டும் செய்திருக்கிறார்கள். 
3. தாங்களே முடிவெடுத்து அதற்கேற்ப நாட்களைக் கழித்திருக்கிறார்கள். 
4. குழந்தைகளோடு செலவிட நேரம் உள்ள, படித்த பெற்றோர்கள் அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் குழந்தைளுக்குக் கற்பித்திருப்பார்கள்.  
5. இணைய வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் அதற்கு வாய்ப்பில்லாத குழந்தைகளைவிட சற்று மேம்பட்டு இருக்கலாம். 
6. இது குழந்தைகளுக்கு இடையே இருக்கும் கற்றல் இடைவெளியை அதிகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. 
7. தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்திருப்பவர்கள் கொஞ்சம் சந்தேகத்தோடு நம் வகுப்பறைகளைக் கவனிக்க முதிர்வார்கள். 
8. முதல் வகுப்பு கற்றல் இலக்குகளை முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டியிருக்கும். 
9. இரண்டு, மூன்று வகுப்புக் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தும்போது, அவர்களுக்குத் தாழ்வுணர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
10. அந்தத் தாழ்வுணர்வுகொண்டவர்களிடம் “நான் சொல்லித்தருகிறேன். நீ தெரிந்துகொள்” என்ற நம் முந்தைய முறை பொருந்தாமல் போகலாம். 
11. நடத்தி முடிப்பது என் வேலை என்று எல்லா பாடப்பொருளையும் சிவனே என்று நாம் கற்பிக்கத் தலைப்படுவோமா இல்லை தேர்ந்தெடுத்த பாடப்பொருள்களை அவசரமின்றி பொறுமையாகக் கற்பிப்போமா? 

குழப்பம்தான்.  நிச்சயமான, தெளிவான, உறுதியான முடிவுகள் எடுக்க முடியாது. பல கருத்துகளின் அடிப்படையில் சில செயல்பாடுகள் வடிவமைத்து, நடைமுறைப்படுத்திப் பார்த்து, குழந்தைகளின் ஈடுபாட்டைக் கவனித்து அதிலிருந்து பாடம் கற்பதுதான் ஒருவழி. 

எடுத்துக்காட்டாக ஒரு செயல்பாட்டை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.  (வயது முதிர்ந்த குழந்தைகளுக்கு அடிப்படைக் கருத்துகளை அவர்கள் மனம் கோணாமல் கற்பிப்பதற்கான உத்தியாக இச்செயல்பாட்டை நான் காண்கிறேன்.) 

1. வகுப்புக் குழந்தைகளின் பெயர்களை சார்ட்டுத் துண்டுகளில் எழுதுக்கொள்ளுங்கள். இனிஷ்யல் உட்பட எழுதுவது நல்லது. (பெயரட்டைகள்) கூடவே குண்டூசிகளையும் வைத்துக்கொள்ளுங்கள். 
2. ஒவ்வொருவரின் பெயரை வாசித்து அவருடைய சட்டையில் பெயரட்டையைக் குத்தி விடுங்கள். ஒருவாரம் இது தொடருங்கள். 
3. அடுத்த வாரம் பெயரட்டைகளை மேசைமேல் பரப்பி வையுஙகள். குழந்தைகளிடம் அவரவர் பெயரட்டைகளை எடுக்கச் சொல்லுங்கள். 
4. அடுத்த வாரம் சார்ட்டில் குழந்தைகளின் பெயர்களை எழுதுங்கள். அதை வாசித்து வருகையைப் பதிவு செய்யுங்கள். 
5. சார்ட்டில் குழந்தைகள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடித்துக் காட்டட்டும். 
6. மேசைமேல் பரப்பி வைத்த பெயரட்டைகளிலிருந்து தன் பெயரட்டையையும் தங்கள் நண்பர்களுள் சிலரின் பெயரட்டையையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளியுங்கள். 
7. அதற்கும் அடுத்த வாரம் நீங்கள் குறிப்பிடும் பெயரைச் சார்ட்டிலிருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கேளுங்கள். 
8. பெயரட்டைகளைக் குழந்தையிடம் கொடுத்து எத்தனை பேருக்கு பெயரட்டைகளைக் கொடுக்க முடியும் என்று கேளுங்கள். 
9. இதற்கிடையே ஐந்தோ ஆறோ குழந்தைகளின் பெயர்களைக் கரும்பலகையில் எழுதுங்கள். (அதில் இரண்டு பெயர்கள் இருப்பது நல்லது) எடுத்துக்காட்டு விஜயகுமார், சந்திரசேகர்  போன்றவை
10. விஜயகுமார் என்ற பெயரை வாசித்துக் காட்டிவிட்டு அதன் கீழே குமார் என்பதற்குக்கீழே குமார் என்று எழுதி இது என்ன என்று கேளுங்கள். 
11. பிறகு புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டை நடத்துங்கள். அதாவது விஜயகுமார், சந்திரசேகர்  என்றிருப்பதிலிருந்து விஜயசேகர், சந்திரகுமார் போன்ற புதுப்பெயர்களை உருவாக்க வேண்டும். 
சில சொற்களை வாசிக்கக் குழந்தைகள் சிரமப்படும்போது இந்தச்சொல்லில் வரும் எழுத்துகள் .................................... இந்தப் பெயரில் வந்துள்ளன. அதை வாசித்தால் இந்தச் சொல்லையும் வாசிக்கலாம் என்று சொல்லுங்கள். அதுபோல் சில எழுத்துகளை வாசிக்கத் தெரியாமல் இருக்கும்போது ..................... இவருடைய பெயரின் இனிஷ்யல் இந்த எழுத்துதான் என்று சொல்லுங்கள். 

புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டில் குழந்தைகள் விருப்பம் காட்டினால் புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும் செயல்பாட்டை நடத்தலாம். குழந்தைகளுக்குத் தெரிந்த ஊர்ப்பெயர்களை எழுதுதல், வாசித்துக் காட்டுதல், வாசிக்க வாய்ப்பளித்தல், பிறகு புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும்படி சொல்லுதல், அவற்றை எழுதுதல், வாசிக்க வாய்ப்பளித்தல் என்னும் படிகளைப் பின்பற்றலாம். 

காட்டாயப்படுத்தாமல், அவர்களுக்குத் தெரியாமலே அவர்களின் கவனத்தை எழுத்துகளின் மேல் பதிய வைக்க இச்செயல்பாடு உதவும் என்று நினைக்கிறேன். மட்டுமல்ல விரைந்து கற்கும் மாணவர்களுக்கு கடினத்தன்மை கூடிய அடுத்த செயல்பாட்டைக் கொடுக்கவும் அவர்களைச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடச் செய்யவும் இச்செயல்பாடு உதவும். 

மேலும் சில செயல்பாடுகளுக்காக காத்திருங்கள். 

மீள்பதிவு

நன்றி
PC; Puthiathalaimurai

ஜி. ராஜேந்திரன் 
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore 
Blog:qriuslearning.wordpress.com

Saturday, September 18, 2021

தலைக்குள் ஓர் உலகம்- சுஜாதா ( நிலை.8 விரிவானம்)

சுஜாதா எழுதிய கட்டுரை தலைக்குள் ஓர் உலகம். வலையொலி ஓசை உங்கள் காதருகில் பேசுவது சேலம்.ஆ.சிவா...
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/20-----8------e17i84i
கேட்டு மகிழுங்கள்...


Friday, September 17, 2021

பள்ளிக்கு செல்லாமல்...CBSC க்கு இணையான படிப்பு...

NIOS ஓர் அறிமுகம் 

என்னுடைய மூத்த மகன் மதி, 2018 - ல் பத்தாம் வகுப்பு தேர்வு பெற்றான். சில காரணங்களினால் அவனால் 11 - ம் வகுப்பை  பள்ளியில் தொடர முடியவில்லை. மாற்று வழி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்த சமயம். நம் வீட்டுத் தலைவர் தான் "Alternative education, Home schooling" அப்படின்னு நிறைய படிக்கிறார் இல்லையா, அதனால், "Home schooling பண்ண சொன்னால் என்ன!" என்ற ஒரு சிறு யோசனை தான் இன்று மதி யை NIOS - ல் பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்க செய்திருக்கிறது.

NIOS என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அதைப்பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். NIOS - National Institute of Open Schooling, என்பது CBSE, ISC, State Syllabus போன்றதொரு அமைப்பு. இது இந்திய மத்திய அரசால் நடத்தப் படுகிறது. இதன் பாடத்திட்டம் CBSE யோடு  ஒப்பிட முடியும்.  இதில் படிக்கும் மாணவர்கள் பல பயன்களை பெற முடியும். உதாரணமாக, மதி க்கு அறிவியல் என்றாலே ஒத்து வராது. மேலும் அவனுக்கு சட்டம் படிக்க வேண்டுமென்பது இப்போதைய குறிக்கோள். கணக்கு மற்றும் வரலாறு ஆகியவை மிகவும் பிடித்த பாடங்கள். இவை எல்லாம் சேர்ந்த ஓர் பிரிவு எந்தவொரு பள்ளியிலும் கிடைக்கவில்லை. இப்பொழுதிருக்கும் பள்ளியில் ஏதாவது ஓர் பிரிவை தேர்ந்தெடுத்தால், அதில் அவனுக்கு பிடித்த பாடங்களை விட பிடிக்காத பாடங்களே அதிகம். NIOS யை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை, NIOS - ன் பாடப்பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களின் பாடப்பட்டியலை இங்கு சென்று காணலாம். https://www.nios.ac.in/departmentsunits/academic/senior-secondary-course-equivalent-to-class-xii.aspx

எப்படியும் பன்னிரெண்டாவது படிக்கும் நம் பிள்ளைகளை டியூஷன் ல் சேர்ப்போம். பள்ளிக்கும் சென்று வந்து பின்பு டியூசன் க்கும் சென்று வர நம் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். NIOS - ல் சேர்த்தால் டியூசன் மட்டும் போய் வந்தால் போதும், பள்ளிக்கு போக தேவை இல்லையே என்ற சந்தோஷம் பெற்றோர்களாகிய எங்களுக்கு இல்லாமல் இல்லை. மேலும் NIOS, நம் நகரங்களிலேயே சில பள்ளிகளின் பட்டியலை, வார கடைசி நாட்களில் சென்று நம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, நமக்கு அளிக்கிறது. அதிலிருந்து நமக்கு வசதியான பள்ளியை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சென்று practical classes ஐயும் attend செய்து கொள்ளலாம். 

மதி இம்முறையை தேர்ந்தெடுத்ததினால், பள்ளியில் படிக்கும் பாடங்கள் அல்லாமல் அவனுக்கு பிடித்தமான பாடங்களில் சில "Certification" ஐயும் முடிக்க முடிந்தது. அது கல்லூரியில் சேர்வதற்கான நேர்க்காணலில் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. 

இம்முறையில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், NIOS குழுமம் வருடத்திற்கு அக்டோபர், ஏப்ரல் என இரண்டு முறை பரீட்சையை நடத்துகிறது. ஆகையால், நாம் நம் பாடங்களை பிரித்தும் எழுதிக் கொள்ளலாம். மதி, 3 பாடங்களை அக்டோபரிலும், 2 பாடங்களை ஏப்ரலிலும் எழுதி 80% உடன் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 

எல்லா மாற்று முறைக்கும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் இருக்கும். அதை போலத்தான் இம்முறைக்கும் சில எதிர்மறைகளும் இருக்கின்றன. பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களுடனான நேரத்தை அதிகம் இழக்கிறார்கள். மேலும் மதி, அவனுடைய vocabulary ஐ இழந்து வருவதாக மிகவும் வருத்தமடைந்தான். சில கல்லூரிகள் NIOS ல் படித்திருந்தால் admission கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு ஏன் இந்த தயக்கம் என்று தான் புரியவில்லை. ஆனால் பயன்களுடன் ஒப்பிடும் பொழுது, இது பரவாயில்லை என்றே தோன்றியது. ஒன்றை பெற மற்றொன்றை சில நேரங்களில் இழந்து தானே ஆகவேண்டும். 

இன்று மதி, இந்தியாவின் top 10 ன் ஒன்றான, புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் சட்டம் படிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறான். இப்பொழுதிருக்கும் பள்ளிக் கல்விக்கு மாற்றுமுறையில் செல்கிறோமோ என முதலில் மனதில் பயம் இருந்தது. ஆனால் எங்களின் ஊக்கமும் மதியின் உழைப்பும், இம்முறையை தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெற செய்திருக்கிறது. 

இப்பதிவு கண்டிப்பாக எங்களை போன்ற சில பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன். 

NIOS - ன் link https://www.nios.ac.in/default.aspx 
தேவை எனில் மேற்கூறிய சுட்டியை பயன்படுத்தி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

பி. கு. : சொல்ல மறந்துவிட்டேன். மதி பன்னிரெண்டாவது படிக்க ஆன செலவு 1700/- ரூபாய் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் தலா 250 ரூபாய். இந்த 1700 ரூபாயில் புத்தக செலவும் அடக்கம். 

படத்தில் - மதி.

Wednesday, September 08, 2021

ஆசிரியர் இன்றைய நிலை...?

*தினமணியின் தலையங்கம்...*

*ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?*

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

*நன்றி : தினமணி*

படித்ததில் பிடித்தது...

Wednesday, August 25, 2021

அன்பு( பை)...விதை...

#எங்கே_நாணயம்?

எங்கள் வீட்டுக்கு ஒரு மீன்காரர் வந்து வாரம் ஒருமுறை மீன் கொடுத்துவிட்டு போவார். அவரிடம் பேரம் பேசமாட்டேன் என்பதால் அவரும் பெரிதாக ஆசைப்படமாட்டார். நியமான விலைக்கு கொடுப்பார். எனக்கு என்ன மீன் பிடிக்கும் என்று அவருக்கு தெரியும்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் மீன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். 

நல்ல மீன்களை விற்கும் முன் எங்க வீட்டுக்கு வந்துவிட்டு பிறகுதான் வேறு இடங்களுக்கு செல்வார். திடீரென்று ஒருநாள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார்.
ஏன் தயங்குறீங்க சும்மா சொல்லுங்கன்னு சொன்னேன். ரெண்டு மூணு நாளா வியாவரமே இல்ல கொஞ்சம் நெருக்கடி கொஞ்சம் பணம் வேணும் உங்களுக்கு ஒரு வாரத்துல திருப்பி தாரேன்னு கேட்டார். 

இப்படியான எளிய மனிதர்களின் உறவுகள் கெட்டு இருக்கிறது இப்படி பணம் கொடுத்து.
அவர்களை குற்றம் சொல்லவில்லை அவர்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் இடையவே நிறைய வாழ்கை போராட்டம் இதில் வாங்கும் கடனை திருப்பி கொடுக்க வாய்ப்பே இருக்காது. பிறகு நம் முகத்தில் எப்படி முழிப்பது என்று அச்சத்தில் நம்மை பார்க்கவே வர மாட்டார்கள்.

இப்படி ஏற்கனவே நிறைய பேரை இழந்து இருக்கிறேன். அதற்காக அவர்கள் மீது வருத்தமெல்லாம் இல்லை. அப்படியான எளிய மனிதர்களுக்கு கடன் கொடுத்து அவர்களை கடனாளி ஆக்கி விட்டோமே என்ற கவலை எனக்கு.

நான் அவரிடம் சொன்னேன் எனக்கு நீங்க கேட்ட பணம் தருவதில் ஆட்சேபனை இல்லை ஆனால் ஒரு கண்டிசன் இந்த பணம் உங்களுக்கு தீபாவளிக்கு நான் கொடுக்கும் பரிசா வச்சுக்கோங்க. அதை திருப்பி எல்லாம் தர வேண்டாம்னு சொன்னேன். அன்று அவருக்கு இருந்த பிரச்சினை அவ்வளவு போல சரி என்று சற்று தயக்கத்துடனேயே வாங்கிகிட்டு போனார்.

பிறகு ஒருவாரம் கழித்து அண்ணே நல்ல வஞ்சிரம் மீன் இருக்கு சும்மா ஸ்லைஸ் போட்டா பட்டாசா இருக்கும் வெட்டவான்னு கேட்டார். வஞ்சிரம் பொரிக்க கொஞ்சம் சாளை மீன் குழம்புக்கு என்று வாங்கி எவ்வளவு என்று கேட்டேன் 650 ரூவா ஆச்சுண்ணே. என்ன வஞ்சிரம் இவ்வளவு குறைவா இருக்குன்னு கேட்டதுக்கு கேரளாவுல ஈஸ்டர் அதுனால அங்கே போனா தான் வில கூடும் இல்லன்னா பொதுவா இந்த விலைதான் என்று சொல்லிட்டு போனார்.

இது போக அவர் மீனை சுத்தம் செய்து வெட்டி முடிப்பதற்குள் நிறைய விஷயங்கள் பேசி விடுவோம். அவர் மகன் ஒரு மரைன் எஞ்சினியர். ஆறுமாதம் கப்பலில் பணி மீதம் ஆறுமாதம் வீட்டில் இருப்பார். அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கேன் இந்த வேலை செட்டாவாது நீ வரும் போது வேலையை விட்டுட்டு வந்துடுன்னு சொல்லிட்டேன் அப்படின்னு நிறைய பகிர்ந்துக்குவார். அவனை படிக்க வைக்க நிறைய கடன் பட்டிருக்கார்.

அண்ணன் வீடு பக்கத்து தெருதான் அங்கேயும் மறக்காம கொண்டு போய் குடுத்துட்டு போங்கன்னு சொன்னேன் சரி என்று சென்று விட்டார். அபீஸ் கிளம்பும் போது எங்க வீட்டில் கேட்டாங்க வஞ்சிரம் என்ன விலை கொடுத்து வாங்கினீங்கன்னு. கிலோ ஐநூறு ரூபாய்னு வாங்கினேன்னு சொன்னேன். அண்ணன் வீட்டில் 850 ரூபாய்க்கு கொடுத்துட்டு போயிருக்கார் ஏன் இப்படி செஞ்சார்னு அடுத்த வாரம் வந்தா கேளுங்கன்னு சொன்னாங்க.

அப்போது தான் எனக்கு உரைத்தது. மனிதர் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கிறார் என்று. அவசரத்துக்கு என்னிடம் வாங்கிய காசை எனக்கே தெரியாமல் திருப்பி கொடுத்துட்டு போயிருக்கார். இப்படியான எளிய மனிதர்களிடம் தான் வாங்கிய காசை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற அந்த உன்னதமான எண்ணம் இருக்கிறது.
இது ஒருமுறை இரண்டு முறை அல்ல பலமுறை நடந்திருக்கு பல்வேறு மனிதர்களால். 

ஒருமுறை சென்னைக்கு பகல் பயணம் செல்லும் போது சேலத்தில் ஒரு வயதான பாட்டி எங்கள் ரயில் பெட்டியில் ஏறிச்சு. மாம்பழம் ஒவ்வொன்றும் மெகா சைசில் இருந்தது. என்ன விலை என்று கேட்ட போது ஒரு பழம் 80 ரூவா கண்ணு என்று சொன்னது குறைந்தது ஒன்றரை கிலோவாவது இருக்க வேண்டும் ஒரு பழம். சரி பாட்டி ரெண்டு பழம் கொடுங்கன்னு காசு கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

என்னிடம் வியாபாரத்தை முடித்து கொண்டு பாட்டி பக்கத்து பெட்டிக்கு போய் விட்டது.வண்டி ஜோலார்பேட்டை நெருங்கும் போது அந்த பாட்டியை பார்த்தேன் எல்லா பழங்களும் விற்று தீர்ந்திருந்தது. மெல்ல நடந்து வந்து என் அருகில் வந்தவுடன் பாட்டி மடியில் ஒரு பெரிய மாம்பழத்தை கட்டி வச்சிருந்தாங்க. எடுத்து என்கிட்டே கொடுத்தாங்க.

“பாட்டி ஏற்கனவே ரெண்டு பழம் வாங்கிட்டோம்ல போதும் எங்களுக்கு எங்க வீட்டில் மொத்தமே நாலு பேர்தான் இதுவே ரொம்ப அதிகம்” னு சொன்னதுக்கு அந்த பாட்டி
“இல்ல கண்ணு அந்த கோச்சுல எல்லாம் அம்பது ரூவாய்க்கு கொடு கொடுன்னு கேட்டு வாங்கிட்டாங்க. நீ என்கிட்டே பேரம் பேசல எனக்கு மனசே கேக்கல ராத்திரி தொண்ட குழில சோறு இறங்காது இந்த பழத்துக்கு நீ ஏற்கனவே காசு கொடுத்தாச்சு வாங்கிக்க கண்ணுன்னு சொல்லிச்சி”
அந்த பாட்டியின் நேர்மையை பார்த்து கண்களில் மெல்லிய நீர் படலம் படர்ந்து கண் ஓரங்களில் கண்ணீர் ஒதுங்கியது.

இப்படியான நேர்மையான மனிதர்களால் எளிமையானவர்களால் அழகான இந்த உலகம் பேரழகாகி விடுகிறது. காசு பணம் எல்லாம் மதிப்பில்லை இப்படியான மனிதர்களுக்கு அன்பை விதைப்போம் எல்லோரிடத்தும் என்ற வாழ்வியல் தத்துவங்களை நமக்கு எளிமையாக உணர்த்திவிட்டு போய் விடுகிறார்கள்.

மனிதர்கள் எவ்வளவு அன்பை விதைக்கிறார்கள் சக மனிதர்களிடத்தில் என்று நினைத்த போது எனது வாழ்வில் நான் சந்தித்த அன்பான மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

பதிவில் பிடித்தது!
படித்தேன்!! பகிர்ந்தேன்!!! 🙏

Friday, August 13, 2021

நிலம் பொது..உரைநடை உலகம்..8

[13/08, 7:23 am] Sivaramakrishnan.Salem: https://anchor.fm/sivaramakrishnan7/episodes/13-----8-e15r2vl
[13/08, 7:24 am] Sivaramakrishnan.Salem: 8 ஆம் வகுப்பு. தமிழ் பருவம்.1. இயல்.2. உரைநடை உலகம். நிலம் பொது வலையொலி வழங்குவது. கனவு ஆசிரியர் சேலம்.ஆ.சிவராமகிருஷ்ணன்.