Wednesday, December 31, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் ( 2015 )

என் வலையை  வாசிக்கும்
என் நண்பர்பகளுக்கும்
எங்கள் வாழ்விலும் 
வளர்ச்சிலும் அக்கறைக்கொண்ட
என் நண்பர்களும்
உறவினர்களுக்கும்
இந்த புத்தாண்டு முதல்
வாழ்வில் அமைதியும்
ஆனந்தமும் செல்வமும்
பொங்க வாழ்த்துகிறேன்...


என்றும்  அன்புடனும்
நட்புடனும்..............
சிவா....

Tuesday, December 23, 2014

எக்ஸ்சல் பார்முலா ஒரு பார்வை..

அடிக்கோடு : எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. 

இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும். 

இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும்.

COMBIN பார்முலா : எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.

இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக் காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. 10 எண்கள் உள்ளன.

(0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும்? நாம் பேப்பர் பேனா எடுத்துப் போட்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.

இந்த பங்சன் செயல்பட பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா. இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும். sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : = =COMBIN(26+10,4) எத்தனை இணைப்பு இதில் உருவாகும் என்று அறிய பலர் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா? 58,905 இணைப்பு கேரக்டர்களை உருவாக்கலாம்.

ஒரே டேட்டா - பல செல்கள் : எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம்.

எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.

சேலம் .....

சேலம் (ஆங்கிலம்:Salem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இந்த சைலம் என்பதே திரிந்து, சேலம் ஆனது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும். சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.

பொருளடக்கம்

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.65°N 78.17°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் இருக்கின்றது. சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் நகரின் ஊடாக செல்கிறது. சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள்.
ஏற்காட்டிலிருந்து தெரியும் இரவில் ஒளிரும் சேலம்
சேலம்

மக்கள் வகைப்பாடு

"இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 693,236 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேலத்தின் மக்கள் தொகையில் குறிப்பிடத் தக்க அளவு கன்னடம் பேசும் மாத்வா மற்றும் தேவாங்கர் இன மக்களும், சௌராஷ்டிர மொழி பேசுவோரும் உள்ளனர்."
இம்மாவட்டத்தில் பெருமளவு வன்னியர்களும், வேளாள கவுண்டர்களும, மற்றும் வேட்டுவ கவுண்டர்களும் வாழ்கின்றனர். தாரமங்கலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், சேலம் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் நெசவுத் தொழில் செய்யும் செங்குந்த முதலியார்கள் அதிகளவில் உள்ளனர். எத்தாப்பூர், புத்திரகவுண்டன் பாளையம், பெத்த நாயகன் பாளையம் ஆகிய பகுதிகளில் தெலுங்கு நாயக்கர்களும், சேலத்தின் தென்பகுதி, எளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் கன்னட சாதியினரும் வாழ்கின்றனர். மாவட்டத்தின் ஆதி குடிகளான மக்கள் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.

வரலாறு

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.
இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.
சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.
சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு 'பாரமஹால் மற்றும் சேலம்' மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பார மஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

நகரச் சிறப்புகள்

 • சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு.
 • கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர்.
 • சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் 'லீபஜார்' என்னும் கடைவீதியிலுள்ள மொத்த வியாபார நிலையங்களாகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுகின்ற வாரச் சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு இம்மாவட்த்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள்.
 • இந்தியாவிலேயே மிகவும் நீளமான - பெரிய இரயில்வே பிளாட்பாரம் சேலம் சந்திப்பு நிலையப் பிளாட்பாரமே ஆகும்.
 • சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது. வெள்ளி விடுமுறை.
 • சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்: இராமகிருஷ்ணமடம், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா - இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

 • சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது, இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
 • இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.
சேலம் உருக்காலை
 • அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
 • இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
 • இந்த மாவத்த்தில் கோழிப் பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன.
 • இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது.
 • விரைவில் இங்கு ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமையவிருக்கிறது.
 • சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஏற்காட்டிலிருந்து தெரியும் டான்மாங் மாக்னசைட் சுரங்கம்

பொது விபரம்

வங்கிகள்: 749 (கூட்டுறவு வங்கிகளையும் சேர்த்து); காவல் நிலையம்: 31; அஞ்சல் நிலையங்கள்: தலைமை அஞ்சலகம் - 394; திரையரங்குகள்: 136; தொலைபேசிகள்: 96,564; மழையளவு: சராசரி 841 மி.மீ.; சில சமயம் 1,056 மி.மீ.; முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, வசிஷ்ட நதி; அணைகள்: மேட்டூர் (ஸ்டான்லி நீர்த்தேக்கம்) ஆனை மடுவு, கரிய கோவில்;

உள்ளாட்சி நிர்வாகம்

மாநகராட்சி - 1; நகரசபைகள் - 3; ஊராட்சி ஒன்றியங்கள் - 20; பேரூராட்சிகள் - 34; பஞ்சாயத்துகள் - 376; கிராமங்கள் - 3,100;

வருவாய் நிர்வாகம்

கோட்டங்கள் - 4; வட்டங்கள் - 9;

சட்ட சபை தொகுதிகள்

12: மேட்டூர், தாரமங்கலம், பனைமரத்துப்பட்டி, ஓமலூர், ஏற்காடு, சேலம்-1, சேலம்-2, வீரபாண்டி, ஆத்தூர், தலைவாசல், சங்ககிரி, எடப்பாடி.

பாராளுமன்றத் தொகுதிகள் 4

ராசிபுரம் (நாமக்கல்), சேலம், திருச்செங்கோடு, தர்மபுரி (சேலம் மட்டும் முழுத்தொகுதி, மற்றவை வேறு மாவட்ட பகுதி)

ஆன்மீக தலங்கள்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில,
ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும், சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும்.
 • கந்தாஸ்ரமம்
 • சித்தர் கோவில்- இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்து உள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.இங்கு ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை உட் கொண்டால் பல நோய்கள் குணமாவதாக மக்கள் நம்புகின்றனர்
 • ஊத்துமலை - சேலத்தில் உள்ள ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இது சேலம் மாநகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் புகழ் பெற்றது. மேலும் இங்கு சிவபெருமான், பெருமாள் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. இங்குள்ள கிணறுகள் எவ்வளவு நீர் இறைத்தாலும் வற்றாதவை.
 • குமரகிரி

கல்வி

கடந்த சில ஆண்டுகளாக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் கல்வி நிறுவனங்கள் வளர்ந்து உள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் இப் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. 2 மருத்துவ கல்லூரிகள் இங்கு உள்ளன. அரசு பொறியியல் கல்லூரி இங்குள்ளது. அனைத்து துறை சார்ந்த கல்லூரிகளும் இந்த பகுதியில் பெருமளவு அமைந்துள்ளது. தரமான பள்ளிகளும் பெருமளவில் உள்ளன. [[படிமம்:Admingce.JPG|right|thump|250px|அரசினர் பொறியியல் கல்லூரி]valappady

கல்வி

பல்கலைக்கழகம் 1, பெரியார் பல்கலைக்கழகம் பள்ளிகள்: தொடக்க நிலை - 1,254 நடுநிலை - 120 உயர்நிலை - 103 மேநிலை - 33

கல்லூரிகள்

மருத்துவம் - 2 பல் மருத்துவம் - 1 பொறியியல் - 4, பாலிடெக்னிக் - 5 சட்டம் - 1 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 11

தொழிற்சாலைகள்

விவசாயம் சார்ந்தவை - 125 காடு சார்ந்தவை - 31 கனிமப் பொருள் - 38 துணியாலைகள் - 393 பொறியியல் - 20 வேதிப்பொருள் - 95 ஸ்டார்ச் - 726 ஏனையவை - 410

சுற்றுலா இடங்கள்

ஏற்காடு (மலைவாழிடம் - கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்), மேட்டூர் அணை, தாரமங்கலம் கோயில், சேலம் உருக்காலை, சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர்

டாக்டர் சுப்பராயன் - முன்னாள் அமைச்சர்; மோகன் குமாரமங்கலம் - அமைச்சர்; சுதந்திரப் போராட்ட வீரர் மாம்பலக்கவிராயர்; டாக்டர். குருபாதம் (ராஜாஜி அமைச்சரவை உறுப்பினர்); எஸ்.பி.ராமசாமி - (சுதந்திரத்திற்கு முன் மத்தியமைச்சர்) இசையுலகில் புகழடைந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்; இசையரசி சேலம் ஜெயலட்சுமி; முன்னாள் அமைச்சர் இராசாராம்; புலவர் வரதநஞ்சப்ப பிள்ளை; இராமசாமி கவுண்டர்; சேலம் வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார்; 'கலைமகள்' இதழ் கி.வா.ஜகன்னாதன், கவிஞர்கள் சி.மணி, உமாபதி, முருகுசுந்தரம், சேலம் தமிழ்நாடன் முதலியோர்.
சேலம் மாவட்ட SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்புகளாவன:- S - Steel - எஃகு A - Aluminium - அலுமினியம் L - Limestone - சுண்ணாம்புக் கல் E - Electricity - மின்சாரம் M - Mangoes - மாம்பலம்

இயற்கை வளம்

இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண், மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்டா நதியும் ஓடுகிறது. இம்மாவட்டம் குறிஞ்சி திணையைச் சார்ந்தது. கல்ராயன், சேர்வராயன், கஞ்சமலை, தீர்த்தலை, நைனாமலை, கபிலமலை முதலியவை முக்கியமானவை.

கனிவளம்

கஞ்சமலை, தீர்த்தலை முதலிய மலையில் இரும்புத் தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில் வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது. இம்மாவட்டத்தில் கிடைக்கும் மாக்னசைட் தாது இந்தியாவிலேயே முதல் தரமானதாகக் கருதப்படுகிறது.

வேளாண்மை

ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பலமும் இதைத் தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, பழவகைகள் ஆகியவை பணப்பயிராகவும் விளைவிக்கப்படுகின்றன.
வசிட்டா நதியின் குறுக்கே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களின் மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் நீர்பாசனம் வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கால்வாய் மூலம் ஓமலூர், சங்ககிரி வட்டங்கள் பயனடைகின்றன. சேலம் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் மொத்தம் 258 உள்ளன. இவ்வேரிகளால் மொத்தம் 23500 ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன. இவ்விவசாயப் பிரிவில் சுமார் 45095 கிணறுகள் உள்ளன. இக் கிணறுகளால் சுமார் 11.2 இலட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதிகள் பெறுகின்றன. இப்பிரிவில் 22,500 கிணறுகளில், மின்சாரப் பம்பு செட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நெசவுத்தொழில்

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெருந்தொழிலாக நெசவுத்தொழில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும். சேலம் நகரிலும், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஊர்களிலும் பருத்தி ஆடைகள் மிகுதியாக நெய்யப்படுகின்றன. சேலம், வெண்ணந்தூர் ஆகிய இடங்களிலும், ஜலகண்டபுரத்தில் இப்போது பவர்லும் தறிகள் மிகுதியாக உள்ளன. சேலம் நகரத்தில் அம்மாப்பேட்டைப் பருத்தி ஆடை நெய்வதில் சிறந்து விளங்குகின்றன. அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது. சேலம் நகரிலும், சேலம் நகரத்தைச் சார்ந்த கொண்டலாம்பட்டிப் பகுதியிலும் பட்டாடைகள் நெய்யப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளில் 7 சதவீதம் கால்நடைகள் சேலம் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. ஓமலூர் வட்டத்திலுள்ள மேச்சேரியில் நல்ல தரமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாடுகளின் மாமிசமும், தோலும் தரத்தில் உயர்ந்ததவை. இவ்வாடுகளின் தரத்தை உயர்த்த கோயமுத்தூரிலுள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், அரசாங்க நிதி உதவியோடு செயல்படுகிறது. சேலம் மாவட்டத்தில் காங்கேயம் மாடுகள், நெல்லூர் பசுக்கள், ஓசூர் பசுக்கள், சிந்திப் பசுக்கள் ஆகியவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. மேச்சேரியில் வாரந்தோறும் மாட்டுச் சந்தை கூடுகின்றது.
'தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்' சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது.

சேலம் மாவட்ட தொழில் வளம்

சேலம் மாவட்டத்து மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை நடைபெற்று வருகிறது. பள்ளிப் பாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. சேலம் (உடையாபட்டி), சேலம், ஆத்தூர், (செல்லியம் பாளையம்), குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நுற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டத்து சங்ககிரி துர்க்கத்தில் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, மூலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்த்தில்தான் உற்பத்தியாகின்றது.

முக்கிய விளைபொருள்கள்

நெல், பருப்புவகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, நிலக்கடலை, மாம்பழம் மற்றும் ரோஜா, மல்லிகை. 521 ஹெக்டேர் பரப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

சுகவனேசுவரர் கோயில்

கல்வெட்டுக்களில் கிளிவண்ணமுடைய நாயனார், கிளிவனக் கோயில் பெருமான் அடிகள், கிளி வண்ணத் தேவர் என்னும் திருப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனலாம். இத்திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராளம், நிருத்த மண்டபம் என ஐந்து அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இக்கோயிலின் தென்பால் அறுபத்து மூவர் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி விநாயகர் தனித் திருச்சந்நிதி கொண்டு விளங்குகின்றார். வடமேற்குப் பிராகாரத்தில் முருகப்பெருமான் தனி திருச்சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார். திருக்கோயிலின் மேற்கு மதிற் சுவரையொட்டித் தென்பால் பஞ்சமுக லிங்கங்களையும், வடபால் சரசுவதி, கஜலட்சுமி ஆகியோரையும் கண்டு வழிபடலாம். இக்கோயிலின் கருவறையின் மேற்குக் கோட்டத்தில் அண்ணாமலையாரையும், வடக்குத் தேவகோட்டத்தில் காளியும், தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபால் கோமுகத்தை ஒட்டி சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளன. பிற கோயில்களில் சேலம் கோட்டை மாரியம்மனும், தேரடி இராஜகணபதியும் சிறந்த வரப்பிரசாதிகள்.

மேட்டூர்

சேலத்திலிருந்து 52 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வணையைக் கட்டியவர் ஜார்ஜ் என்னும் ஆங்கிலேயர். மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து - குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இந்நகரையொட்டி தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இரசாயனப் பொருள் உற்பத்தி சாலையும், அலுமினியத் தொழிற்சாலையும் உள்ளன.

ஏற்காடு

'ஏழைகளின் ஊட்டி' என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் குறிப்பிடத்தக்க மலைவாழிடத்தில் இவ்வூரும் ஒன்று. சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. 383 சதுர கி.மீ. இவ்வூர் அமைந்துள்ளது. நில மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி 36,863 பேர் இங்கு வாழ்கின்றனர். ஏற்காட்டின் தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயராமலும் 13 டிகிரி செல்சியசுக்கு குறையாமலும் இருப்பது இதன் சிறப்பு. சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் வந்தடையக் கூடிய தொலைவுதான் உள்ளது. ஏற்காட்டில் முதலில் நம்மை கவரும் இடம் 'ஏரி'தான். அமைதியான, குளிர்ச்சியான, மரங்களடர்ந்த சூழலில் படகுச் சவாரி செய்வது மனதுக்கு இன்பமளிக்கும். இதையடுத்து அண்ணா பூங்கா வண்ணமயமாக அமைந்துள்ளது. 'லேடிசீட்' பகுதியிலிருந்து தொலைநோக்கியின் மூலம் அற்புதமான காட்சிகளைக் கண்டு களிக்கலாம். இரவில் சேலத்தின் ஒளிவண்ணமான காட்சியை காணலாம். 'பகோடா' முனை என்ற முகட்டிலிருந்தும் மலையின் இயற்கையழகைக் கண்டுகளிக்கலாம். 'கிள்ளியூர் அருவி' 3000 அடியிலிருந்து விழும் அழகைக் காணலாம். கோட்டை போன்ற பண்ணை வீட்டை சேலம் மாவட்ட ஆட்சியராக எம்.டி.காக்பர்ன் இருந்தபோது கட்டினார். இவருடைய ஆட்சி காலமான கி.பி. 1820-1829இல் அரேபியா, தென்னாப்பிரிகா முதலிய இடங்களிலிருந்து காபி, பூ, பழம் வகைகளைக் கொண்டு வந்து பயிரிட்டார். சேர்வராயன் கோயில் போகும் வழியில் உள்ள நார்டன் பங்களா அருகில் 'கரடிக்குகை' இருக்கிறது. இதுவும் காண வேண்டிய இடமாகும். சேர்வராயன் கோயில் திருவிழாவை ஒவ்வோராண்டும் 'மே' மாதம், இங்குள்ள பழங்குடிகள் கொண்டாடுகின்றன. கோடைவிழா சித்திரை மாதத்தில் இங்கு ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. கோடை விழாவில் மலர்க்காட்சி முக்கியமானது. அதுசமயம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.

தாரமங்கலம்

சேலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குள்ள 'கைலாசநாதர் கோயில்' கெட்டி முதலியார்கள் என்று கூறப்படும் சிற்றரசரால் கட்டப்பட்டது. ஊரின் நடுவே கோயில் மேற்கு நோக்கி, ஐந்து நிலைகள் கொண்ட இராசகோபுரத்தின் ஏழு கலசங்களும், சுமார் 375 சுதைச் சிற்பங்களும் அமைந்து விளங்குகின்றன. திருக்கோயிலினுள்ளே முன் மண்டபத்து எட்டுத் தூண்கள் சிற்பக்கலை வடிவங்களாகவே திகழ்கின்றன. முதல் தூணும், கடைசித் தூணும் தளர்ந்து வளைந்துள்ளவை போன்று அமைக்கப்பெற்றுள்ளன.
தூண்களில் யாழி மீதும், இரு குதிரைகள் மீதும் வீரர்கள் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. யாழியின் வாயில் கல் உருண்டை உள்ளது. ஆனால் அதனுள் கை நுழையாது; விரல்கள் செல்லும் இடைவெளி உண்டு. அதன் மூலம் சிற்பி கல்லுருண்டையைக் கடைந்திருக்கிறான்.

கல்சங்கிலிகள்

மகா மண்டபத்தின் மேல் தளத்திலும், தூண்களின் போதிகைகளினின்றும் சிறிதும் பெரிதுமான நீண்ட கல்லாலாகிய வளையங்கள் மேல்தளக் கல்லினின்றும் வெட்டப்பட்டுத் தொங்குகின்றன.
மண்டப சுவர்களில் மீன், ஆமை, முதலையின் வடிவங்கள் கல்லோவியங்கள் போல வடிக்கப்பட்டுள்ளன. இதுபோலவே சூழலும் கல் தாமரை மலர், ரதி-மன்மதன் போன்ற சிற்பங்களை வேறெங்கும் காண முடியாது. இங்குள்ள இரண்டு தூண்களில் வாலி வதத்தை உருவாக்கி இருக்கிறான் சிற்பி. இராமன் ஒரு தூண் பக்கத்திலிருந்து வாலியை நோக்கி அம்பு விடுகிறான். வாலி ஒளிகிறான். ஆனால் வாலி நிற்கும் இடமிருந்து இராமனை நோக்கினால் அவன் தெரிவதில்லை.

பேளூர்

சேலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வசிஷ்ட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிதில மடைந்த இந்த சிவன் கோயிலுக்குப் பெயர் தான்தோன்றிநாதர் கோயில். இக் கோயிலிலுள்ள நிருத்த மண்டபம் உன்னதச் சிற்பக்கலையரங்கமாகத் திகழ்கின்றது. இம்மண்டபத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும், தாரமங்கலத் தூண் சிற்பங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இங்கும் யாழியின் வாயில் கற்குண்டு உண்டு.
இக்கோயிலின் வடபால் சிங்கத்தின் வாயில் புகுந்து கிணற்றுக்குச் செல்லும் அமைப்பு வியப்புக்குரியது. தென்பாலுள்ள புனிதமரமான - தலவிருச்சமான பலாமரம் இலுப்பை மரமாகக் காட்சி தருவது வியப்புக்குரியது. இத்திருக்கோயிலிலுள்ள எட்டுத் திருக்கரங்களோடும், ஐம்படை ஆயுதங்களோடும் விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் அறுமுகங்களோடு விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் ஆறுமுகங்களோடு விளங்ளுவதும் ஒரு வியக்கத்தக்கது.

ஆத்தூர்

சேலத்திலிருந்து 51 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு பெரும் கோட்டை ஒன்று நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வசிட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. அதனால் ஆற்றுர் - தற்போது ஆத்தூராக உள்ளது. இந்நகரம் நெல் வணிகத்தால் சிறப்புபெற்று - 'ஆத்தூர்க் கிச்சிடி' புகழ்பெற்றது. இந்நகரத்தில் ஜவ்வரிசி உற்பத்திக் கூடங்கள் பல உள்ளன. கி.பி. 1559-1585 காலத்தில் இருந்த கெட்டி முதலியார் வம்ச சிற்றரசர்களால் இக்கோட்டைக் கட்டப்பட்டது. இக் கோட்டையிலுள்ள பெருமாள் கோயிலும் இவர்களாலே கட்டப்பட்டது. முதலியாரின் சிலை இக்கோயிலில் உள்ளது. இக்கோட்டையில் அகன்ற அகழியும், உயர்ந்த நெடுமதிலும், பீரங்கி அமைக்க மதிற்குமிழிகளும், ஓய்வு மண்டபக் குமிழிகளும், பகைவர் எளிதில் நுழைய முடியாத குறுவாயில்களும் அமைந்துள்ளன. நான்கு நெற்களஞ்சியங்களும், பாழடைந்த மண்டபங்களும், இராணியின் அந்தப்புரமும், இரண்டு நீச்சல் குளங்களும், இடிந்த மதிலும் காணப்படுகின்றன. இக் கோட்டையினுள் உள்ள சிவன் கோயிலுக்கு காயநிர்மலேசுவரன் கோயில் இருக்கிறது. அக்கோயில் ஆதித்தசோழன் பாணியில் காணப்படுகிறது.

ஆறகளூர்

சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைவாசலில் இருந்து தென்கிழக்கில் 4.கி.மீ. தொலைவில் உள்ளது. வசிட்டா நதியின் வலதுபக்கக் கரையில் அமைந்துள்ளது. மாவலிவாண வமிசத்தவரான 'வாணர்' என்போர், சோழர்களின் கீழிந்து இப்பகுதியை ஆண்டு வந்தனர். 'ஆறு அகழிகள்' இருந்தவூர் என்று சொல்லப்படுகிறது. ஏகாம்பரமுதலியார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஸ்ரீகாமேஸ்வரர் கோயில், கரிவரதபெருமாள் கோயிலும் உள்ளன. தியாகனுர் கிராமத்திலும், இவ்வூரிலும் புத்தர் சிலைகள் உள்ளன. காமேஸ்வரர் பேரில் 'காமநாத கோவை' என்ற இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.

சங்ககிரி

சேலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. பிற்காலத்தில் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இக்கோட்டையை பயன்படுத்தினர்.

தம்மம்பட்டி

சேலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதலி நரசிம்மப்பெருமாள் கோயில் உள்ளது.

பொய்மான் கரடு

சேலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்த்தபடி உள்ள மலைத்தொடரில் குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம்.

போக்குவரத்து

சாலை

சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன.
ஆகையால் சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி, கொச்சி, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு இடையே ஆன போக்குவரத்துக்கு இது ஒரு முக்கிய சந்திப்பாகும்.

தொடருந்து

சேலத்தில் மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவை சேலம் டவுன், சேலம் மார்க்கெட், சேலம்சந்திப்பு ஆகும். சேலம் டவுன் என்ற தொடருந்து நிறுத்தம், சேலம் மாவட்டத்தின் கிழக்கு வட்ட மக்களுக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் மார்க்கெட் என்ற தொடருந்து நிறுத்தம், இந்தியாவின் வெளிமாநில சரக்குப் போக்குவரத்துக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள் இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

விமானம் நிலையம்

சேலம் கமலாபுரத்தில் ஒரு விமானநிலையம் 1993 இல் அமைக்கபட்டது.

காட்சியகம்

thanks  to   wikeepedia....


எக்ஸ்சல் பார்முலா ஒரு பார்வை..

அடிக்கோடு : எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. 

இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும். 

இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும்.

COMBIN பார்முலா : எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.

இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக் காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. 10 எண்கள் உள்ளன.

(0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும்? நாம் பேப்பர் பேனா எடுத்துப் போட்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.

இந்த பங்சன் செயல்பட பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா. இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும். sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : = =COMBIN(26+10,4) எத்தனை இணைப்பு இதில் உருவாகும் என்று அறிய பலர் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா? 58,905 இணைப்பு கேரக்டர்களை உருவாக்கலாம்.

ஒரே டேட்டா - பல செல்கள் : எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம்.

எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
 
நன்றி நன்றி ..
கௌரிசங்கர் ...

Saturday, December 20, 2014

சுயசிந்தனையை வளர்க்கும் படைப்பாற்றல் கல்வி


தமிழக அரசு கல்வித்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறைகளில் புதிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது.விஜயகுமார் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது ஆந்திர மாநிலத்தில் ரிசிவேலி பகுதியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய பள்ளியில் ஏ.பி.எல். எனப்படும் செயல் வழிக் கற்றல் என்ற இக்கற்பித்தல் முறை பின்பற்றப் படுவதையறிந்து சென்னை மாநகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் சில பள்ளிகளில் நடைமுறைப் படுத்திப்பார்த்து எல்லா பள்ளிகளுக்கும் இக் கற்பித்தல் முறை பரவலாக்கப்பட்டது.ஒன்று முதல் நான்கு வகுப்புகள் வரை மட்டுமே இம்முறையில் கற்பிக்கப்படும். அதன் பிறகு தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் படிப் படியாக இம் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.ஏ.பி.எல். வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு போதிக்க மாட்டார் மாறாக மாணவர்கள் கற்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பார்.பாடங்கள் புத்தக வடிவில் இருக்காது குழந்தைகள் கையாள்வதற்கு வசதியாகத் தனித் தனி அட்டைகளில் அமைந்திருக்கும். அவரவர் திறமைக்கேற்ப படிப்படியாகக் கற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் நான்கு வகுப்புகள் வரை பயிலும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரும்போது மீண்டும் பழைய முறையில் கற்கவேண்டியுள்ளதே என யோசித்த அரசு மேல் வகுப்புகளிலும் புதிய முறையைப் புகுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அதன் விளைவாகத்தான் ஏ.எல்.எம். எனப்படும் படைப்பாற்றல் கல்வி முறையை ஆறு முதல் எட்டு வகுப்பு வரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் படுத்தியது. இந்த முறையிலும் மாணவர்கள் குழுவாகப் பிரிந்து பாடத்தைத் தாங்களே கற்க வேண்டும். கடினமான சொற்களை பென்சிலால் அடிக்கோடிட்டு அச்சொற்களுக்கான அர்த்தத்தைத் தங்கள் குழுவிலோ பிற குழுக்களிடமோ ஆசிரியரிடமோ தெரிந்து கொள்வார்கள்.அதன் பிறகு பாடக் கருத்துகளைச் சுருக்கி மன வரைபடமாகத் தங்களுக்கு புரியும்படி வரைந்துகொண்டு முக்கிய கருத்துகளைத் தொகுத்து வகுப்பில் வழங்குவார்கள். தொகுத்தலில் விடுபட்ட கருத்துகளைப் பிற குழுவினர் சுட்டிக் காட்ட வேண்டும். இப்படி பாடக்கருத்துகளை மாணவர்கள் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு இம்முறை நிச்சயம் துணை செய்கிறது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இக்கற்பித்தல் முறையை ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த மாணவர்களுக்கு சுய கற்றல் முறை ஏற்றதுதான். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை அதற்கு உகந்ததாக இல்லை என்பது அவர்கள் வாதம் அதில் ஓரளவு நியாயம் இருந்தாலும் அவற்றையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் இம்முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள எருமனூர் நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியை கலைச்செல்வி. எப்படி இவருக்கு இது சாத்தியமானது என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதற்காக அப்பள்ளிக்குச் சென்றோம் இவரது வகுப்பறை மட்டுமல்ல அப்பள்ளியின் அனைத்து வகுப்புகளுமே முன்மாதிரியாக உள்ளன.மாணவர்கள் குழுவாக வட்ட வடிவில் அமர்ந்து படிக்க வேண்டும் என்பதால் வகுப்பறைக்குள் ஐந்து வட்டங்கள் வரையப்பட்டுள்ளன அது குறித்து கலைச்செல்வி கூறும்போது," அந்த வட்டத்தில் மாணவர்கள் அமர்ந்துவிடுகின்றனர் இதனால் அவர்களை வட்டவடிவில் அமரச்செய்யும் நேரத்தை மிச்சப் படுத்தமுடிகிறது.ஆரம்பத்துல ரொம்ப கஸ்டமாத்தான் இருந்துது. இதுக்காக நம்மள தயார் படுத்தி இந்தமுறை எப்படித்தான் இருக்குண்ணு சோதிச்சுப் பாத்துடனும்குற உத்வேகத்துல இந்தமுறையில கற்பிக்கறதுல என்னென்ன இடர்பாடுகள் இருக்குன்னு கண்டுபிடுச்சு ஒவ்வொண்ணா களைய ஆரம்பிச்சு இன்னைக்கு எனக்கு ரொம்ப ஈசியா ஆயிட்டுது. இன்னைக்கு எங்கிட்ட எட்டாம் வகுப்பு படிக்கிற பசங்க ஆறாவதுல கடினச் சொற்களை அடிக்கோடிடச் சொன்னா ஒரு சொல் விடாமாட்டாங்க. இன்னைக்கு சொற்களோட எண்ணிக்கை கொறஞ்சிருக்கு அவங்க படிக் ஆரமிச்சிட்டாங்க அவங்க எப்படி படிச்சு புரிஞ்சுக்கிறதுன்னு தெளிவாயிட்டாங்க. அவங்களுக்குள்ள விவாதம் பண்ணிக்கிறாங்க புதுப் புது சிந்தனைகளுக்கு வழி வகுக்கறதா இருக்கு அவங்க விவாதம். நமக்கே ஆச்சரியமா இருக்கு" என்று கூறும்போது அவர் முகத்தில் பரவசத்தைக்காண முடிந்தது. நாம் வகுப்புக்குள் சென்றபோது உயிரியல் பாடம் நடந்துகொண்டிருந்து. மாணவர்கள் பாடக்கருத்துகளைத் தொகுத்து வழங்கியதைக் காண நேர்ந்தது. செல் ஸ்லைடுகளை மைக்ராஸ் கோப்பில் வைத்து ஆசிரியர் விளக்க மாணவர்கள் எதிர்பாராத கோணங்களில் கேள்விக் கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தனர் ஆசிரியையும் சலிக்காமல் விடையளித்துக்கொண்டிருந்தார்.வகுப்பு உயிரோட்டமாக இருந்தது." இதுதான் சார் பழைய மெத்தேடுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம். பழய மெத்தேடுல சில பகுதிகள நாம விட்டுட்டு கூட நடத்தலாம். இதுல அது மாதிரி செய்ய முடியாது. ஒவ்வொரு வார்த்தையையும் பசங்க படிக்கிறதுனால பாடத்துல இருக்குற ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம அர்த்தம் தெரிஞ்சு வச்சிருக்கணும். இல்லண்ணா இவங்கள சமாளிக்க முடியாது". என்று கூறியபடி பாடக் கருத்துகளைத் தொகுத்தளிக்க மாணவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு குழுவினரும் தங்களால் தொகுக்கப் பட்ட கருத்துகளை அக்குழுவின் தலைவர் வழியாக வழங்கினர். அப்போது அவர்கள் விட்ட கருத்துகளை பிற குழுவினர் எடுத்துரைக்க சூடு பிடிக்கத் தொடங்கியது வகுப்பறை முதல் குழுவின் தலைவி அனுசுயா தாவர செல்களிலுள்ள பாகங்களைப்பற்றிக் கூற இன்னொரு குழுவின் தலைவி காயத்ரி எதிர் வினா எழுப்ப ஆசிரியர் உதவிக்கு வர ஒரு ஜனநாயகமான வகுப்பறைச்சூழல் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. கல்வியாளர்கள் விரும்பிய மாணவர் சுதந்திரத்தை ஏ.எல்.எம். வகுப்பறையில் கண்கூடாகக் காண நேர்ந்தது. மாணவி அனுசுயாவிடம் பேசிய போது," இந்த முறையில நாங்களே படிக்கிறதனால வரி வரியா படிச்சி பாடத்தப் புரிஞ்சிக்கிறோம். தெரியாத வார்த்தைக்கு எங்க டீச்சர் அர்த்தம் சொல்லுவாங்க. நாங்க குழுவுல கலந்து பேசும்போது ஒருத்தருக்கு தெரியாத கருத்த இன்னொருத்தர்கிட்டயிருந்து தெரிஞ்சிக்குவோம். நாங்க ஏ.எல்.எம். முறையில பாடம் படிக்கிறதுனால கேள்வி - பதில் படிக்கணுங்கிற அவசியம் இல்ல. தொகுத்து எழுதும்போது நாங்களே கேள்விய தயாரிக்கிறோம். அதுக்கான பதில் நாங்க தொகுத்ததுலயே இருக்கறதனால இன்னொரு வாட்டி படிக்கணுங்கிற அவசியமில்ல" என்றாள் அழகாக. எங்க வகுப்புல பொம்பள புள்ளைங்கதான் அதிகம். அவங்க கூட பேச கூச்சமா இருக்கும். இப்ப ஒரே குழுவுல இருக்குறதனால கூச்சமில்லாம பேசுறோம். யாரு அதிக மார்க் வாங்குறதுன்னு போட்டி போட்டு படிக்கிறோம்." என்று இந்தக் கல்வி முறையின் இன்னொரு அத்தியாயத்தை எடுத்து வைத்தான் மாணவன் பன்னீர்செல்வம். அனைவருக்கும் கல்வி இயக்க விருத்தாசலம் ஒன்றிய மேற்பார்வையாளர் அந்தோணிசாமி எருமனூர் பள்ளி பற்றி கூறும்போது, "நான் ஒவ்வொரு முறை விசிட் போகும்போதும் இந்த பள்ளியில நிறைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடந்திருக்கும் .தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கிடையில ஒற்றுமையான செயல்பாடுகள் இருக்கும். குறிப்பா கலைச்செல்வியோட வகுப்பு திருப்திகரமா இருக்கும். எருமனூர் பள்ளிய மாதிரி பள்ளியா தேர்ந்தெடுத்துருக்கோம்னா அது ஆசிரியர்களின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி." என்று மனப்பூர்வமாகப் பாராட்டினார். நன்றி: அவள்விகடன்

நன்றி  டாக்டர் .இரத்தின  பு கேழேந்தி .......

குழந்தைகளுக்கான வலைத்தளங்கள்


தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சென்னையில் (18,19.12.2014) நடத்திய மாநில கருத்தரங்கில் அளித்த கட்டுரை இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்னுரை
            தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த நூற்றாண்டில் தகவல்கள் உள்ளங்கையில் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பள்ளிக் குழந்தைகளை மின்னணு சாதனங்கள் அளவிற்கு பாட நூல்கள் கவர்வதில்லை. இதனால் பாட நூல்களை மட்டும் நம்பியுள்ள ஆசிரியர்கள் கற்பித்தலில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களையும் அவற்றின் வாயிலாகக் கிடைக்கும் வளங்களையும் தெரிந்துகொள்வது இருபத்தொன்றாம் நூற்றாண்டு  ஆசிரியரின் கட்டாயத்தேவையாகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியாகக் கருதப்படுகின்ற  இணையதளங்கள் வாயிலாக மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் வளங்களை ஒரு சின்னஞ்சிறு கைபேசியின் வாயிலாக அமர்ந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடிகிறது. கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் எனப் பல துறை சார்ந்த தகவல்களை இணையதளங்கள் வாயிலாகப் பெறமுடிகிறது. மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்துகொளவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
  குழந்தைகளுக்கான வலைத்தளங்கள்
          குழந்தைகளுக்கான வலைத்தளங்களை கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் என வகைப்படுத்தலாம்.

கலைகளுக்கான வலைத்தளங்கள்:
            குழந்தைகளைக் கவரும் கலைகளில் முதன்மையானது ஓவியக்கலை. ஓவியக்கலையை ஒரு ஓவியர் கற்றுத்தருவதைப்போல் ஒவ்வொரு கோடாக யாருடைய துணையுமின்றி கணினியின் முன் அமர்ந்து கற்றுக்கொள்ள வகை செய்கிறது http://www.unclefred.com என்ற இணையதளம். இந்த தளத்தில் பன்னிரண்டு வகை கார்ட்டூன் ஓவியங்களை வரையக்கற்றுக்கொள்ளலாம்.மேலும் ஓவியங்கள் வரையும் காணொளிக் காட்சிகளாகவும்  யூ ட்யூபில் கிடைக்கின்றன.
            http://www.drawingnow.com  இந்த தளம் ஒவ்வொரு படியாக ஓவியம் வரைய கற்றுத்தருகிறது.ஒரு எளிமையான வீடு படம் வரைய 12 படிநிலைகள் உள்ளன. நம் கண்முன்னே வரைந்து காட்டுகிறது.அதனைப்பார்த்து தனியாக தாளிலோ அல்லது கணினியிலோ வரைந்துகொள்ளலாம்.
            http://www.my-how-to-draw.com  இந்த தளத்தில் படிப்படியாக முன்னரே வரைந்து வைத்துள்ளனர் ஒவ்வொரு படியாகப் பார்த்து வரைய வசதி செய்யப்பட்டுள்ளது.
            http://www.cartooncritters.com  இந்த தளத்தில் ஓவியங்களை பல வகையில் அச்சு நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி வண்ணம் தீட்டிட பயிற்சி அளிக்கலாம். புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைவதற்கும் பயிற்சிகள் இங்கே நிறைய உள்ளன.
            http://dev.neechalkaran.com கோல சுரபி என்னும் இத்தளம் தமிழ் ஆங்கிலம்,இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஆக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் எண்ணிக்கை அடிப்படையிலும் சதுரம், சாய் சதுரம் என்று வடிவங்களின் அடிப்படையிலும், வளைவுகள் கோடுகள் என கோடுகள் அடிப்படையிலும் கோலங்களைக் கற்றுத்தருகிறது இந்த தளம்.


கைவினைக் கலைகளுக்கான வலைத்தளங்கள்:
            http://www.kinderart.com இந்த தளத்தில் இரண்டரை வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கைவினைக் கலைகள் பல உள்ளன. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பல வகையான பொருள்களை மறுசுழற்சி முறையில் கலைப்பொருளாக செய்வதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தாள் முதல் காலணி வரை எல்லாம் இங்கே கலைப்பொருள்களாக மாறுகின்றன. நம் குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய தளம் இது.
             http://www.enchantedlearning.com  இந்த தளம் பல நூறு வகை கலைப்பொருள்கள் செய்யக் கற்றுக்கொடுக்கிறது. உறிஞ்சுகுழல், பலூன், களிமண், தாள் என எளிதில் கிடைக்கும் பொருள்களில் கலைப்பொருள்கள் செய்வதற்கான முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

இலக்கிய வலைத்தளங்கள்
            சிறுவர் பூங்கா:  http://siruvarpoonga.blogspot.in/  இது பரஞ்சோதி என்பவரால் பதியப்படும் வலைப்பூ. குழந்தைகளுக்கான கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.
            தினம் ஒரு சென்: http://zendaily.blogspot.in/ கங்கா அவர்களின் இந்த வலைப்பூவில் சென்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பதிவுசெய்யப்படுகிறது.
            குட்டிக்கதைகள் : http://tamil-kutti-kathaikal.blogspot.in
உதயகுமார் வெளியிடும் இந்த வலைப்பூ பல்வேறு மொழிகளில் வெளிவந்த நீதிக்கதைகளை மொழிபெயர்த்து பதிவுசெய்யப்படுகிறது.         http://tamilcomicsulagam.blogspot.in 200 க்கும் மேற்பட்ட (காமிக்ஸ்) படக்கதைகள் இந்தத் தளத்தில் உள்ளன.
          http://www.thamizham.net  பல அரிய நூல்கள், இதழ்களை ஒருங்கே தொகுத்துவைத்துள்ளார் பொள்ளாச்சி நசன். சிற்றிதழ் செய்தி என்ற இதழை நடத்தியவர். இதுவரை 30600 கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். இது தமிழில் தனிநபர் செய்துள்ள மிகப்பெரிய ஆவணம் எனலாம். மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன.
          http://www.tamilsirukathaigal.comஈசாப் நீதிக்கதைகள்,பஞ்ச தந்திரக் கதைகள்,தெனாலிராமன் கதைகள், நீதிக்கதைகள் என பல வகைக் கதைகள் இந்த தளத்தில் உள்ளன.
            http://tamilarivukadhaikal.blogspot.inஅறிவுக்கதைகள், புதிய நீதிக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், சிந்தனைக்கதைகள் என பல்வகைகதைகள் 300க்கும் மேல் உள்ளன.

அறிவியல் வலைத்தளங்கள்
            http://www.ariviyal.in  இதன் ஆசிரியர் ராமதுரை தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். 2009-ல் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.இவர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
            http://arivialnambi.blogspot.in அணு, அண்டம், கடவுள் துகள் என பல் சுவையான அறிவியல் செய்திகள் இத்தளத்தில் உள்ளன.
            http://www.tnkanitham.in சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் செந்தில் செல்வன் அவர்களின் கணினி வழி கணிதம் என்னும் இத்தளத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடத்தலைப்புகளும் பவர் பாயிண்ட்டுகளாகவும் காணொளிக்காட்சிகளாகவும் காணக்கிடைக்கின்றன.
            http://sweatmaths.edublogs.org கணக்கும் இனிக்கும் என்னும் இந்த வலைத்தளம் இக்கட்டுரை ஆசிரியரால் உருவாக்கப்பட்டதாகும். வளரறி மதிப்பீடுகளுக்கான செய்ல்பாடுகள், கணித ஆய்வகம், கணிதவியலாளர்களின் வரலாறு,புதிர்கள், செயல்திட்டங்கள் ஆகியன இந்த தளத்தில் உள்ளன.விளையாட்டுக்கான வலைத்தளங்கள்
            ஆடுபுலி ஆட்டம், http://dev.neechalkaran.com/p/aadu-puli.html  இந்த தளத்தில் உள்ளது. தமிழில் சொல் புதிர்கள் http://dev.neechalkaran.com/p/tamil-puzzle.html  இந்த இணைப்பில் உள்ளன.
            http://www.kidsgames.org  கல்வி, வேடிக்கை,நாடுகளும் கொடிகளும் போன்ற பலவகை விளையாட்டுகள் இந்த தளத்தில் உள்ளன.
            http://www.kidspsych.org  1 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பல் வகை விளையாட்டுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.

தொழில் நுட்ப இணையதளங்கள்
            http://www.tamilinfotech.com/ கணினி, மென்பொருள்கள், சமூக ஊடகங்கள் போன்றவை பற்றி அறிந்துகொள்ள புதிய செய்திகள் பல உள்ளன.
            http://www.bloggernanban.com  தொழில் நுட்பம் சார்ந்து ஆயிரக்கணக்கான தகவல்கள் உள்ளன.
            http://arjunmathu.blogspot.in  மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்கள், பென் டிரைவ் சில பயனுள்ள தகவல்கள், பாய்ச்சல் கோட்டுப்படங்கள் ,ஹார்டு வேர்டு பிரச்சனைகளும் தீர்வுகளும்  போன்ற தொழில் நுட்பச்செய்திகள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

            http://www.mytamilpeople.in/   தகவல் தொழில் நுட்பம் தமிழர்களுக்காக தமிழில் என்ற முழக்கத்தோடு பல தகவல்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்பது, மிகச்சிறந்த மென்பொருள்கள் , கணினி அகராதி போன்ற பயனுள்ள தகவல்கள் உண்டு.

முடிவுரை
            பாட நூல்களுக்கு வெளியே தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் படைப்பாற்றலுக்கும் வழிவகுக்கும் தளங்களை இக்கட்டுரை அறிமுகம் செய்திருக்கிறது.
            இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் வகுப்பறை என்பது பாடநூல்களைத் தாண்டியும் விரிந்த தளத்தில் செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை இந்த ஆய்வுக்கட்டுரை வலியுறுத்துகிறது.  அதற்கான தொடக்கமாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
            நூற்றுக்கணக்கான இணைய தளங்களை ஆய்வு செய்து அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது இணையதளங்கள் மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுளன.
            விரிவஞ்சி சில இணைய தளங்களைக் குறிப்பிட இயலவில்லை. இதில் குறிப்பிட்டுள்ள இணையதளங்களைப் பார்வையிடும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு  பயனுள்ள இணையதளங்களை  தேடுவதற்குத் தூண்டுகோலாக இக்கட்டுரை அமையும்.
            இக்கட்டுரைக்காக இணையதளங்களை தேடியபோது இக்கட்டுரை ஆசிரியர் பெற்ற பட்டறிவின் விளைவாக கணக்கும் இனிக்கும் என்றொரு கல்விச் செயல்பாடுகளுக்கான வலைப்பூவை உருவாக்கியுள்ளார். இக்கரு
த்தரங்கின் நல் விளைவாக இதனைக் கருதலாம்.
  

  
          தேங்க்ஸ்   டாக்டர் .   இரத்தின பூகழேந்தி .....