Thursday, December 28, 2023

மனித நேயமிக்க கருப்பு எம.ஜி.ஆர்.

திரு: விஜயகாந்த்.

நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி..!!
இது என்ன புதுப் பெயர்..யார் இவர்?, என்று திகைக்காதீர்கள்.

திரு: விஜயகாந்த் அவர்களின் இயற்பெயர் இது தான்.
சினிமா அவரை விஜயகாந்த் ஆக்கி பின்னாளில் கேப்டனாக மாற்றியது.
இவை எல்லாம் ஏதோ ஒரே நாளிலோ, அரசியல் பின்புலத்தினாலோ,
எவருடைய
 சிபாரிசு னாலோ 
கிடைத்து விடவில்லை.

உழைப்பு... உழைப்பு... அயராத உழைப்பு..!!

சினிமா ஆசையில் மதுரையில் இருந்து சென்னை வந்து, 
ஏறாத படிகள் எல்லாம் ஏறி
 வாய்ப்பு கேட்டு.....
இறுதியில்
திரு எம்.ஏ.காஜா அவர்கள் இயக்கத்தில் " இனிக்கும் இளமை" என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார்.  அந்தப் படமும் சுமாராகத் தான் போனது.
பிறகு " தூரத்து இடி முழக்கம் " என்ற ஒரு படம்.
இந்தப் படம் தான் விஜயகாந்த் அவர்களை நல்லதொரு நடிகராக தமிழ்த் திரையுலகில் அறிமுகப் படுத்தியது.

தொடக்க காலத்தில்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரும் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயக்கம் காட்டியதாகவும், மறுத்து விட்டதாகவும் செய்திகள் உண்டு.
( பின்னாளில் அவர்களே இவரோடு ஜோடி சேரப் போட்டி போட்டது தனிக்கதை. )

காரணம்... இவர் கறுப்பு.. அதுவும் கூடுதல் கறுப்பு.
தனது நிறமே தடையாக இருந்தபோதும் அதையும் தனது தளராத தன்னம்பிக்கை கொண்டு வெற்றி கண்டவர் தான்
திரு: விஜயகாந்த் அவர்கள்.
தொழிலாளர் வர்க்கத் தோழனாக
 பல படங்களில் இவர் நடித்த போதும்,
பொதுவுடைமை இயக்கப் போராளியாக,
தொழிற்சங்கத் தலைவனாக
 திரு: இராம நாராயணன் அவர்களின் இயக்கத்தில் இவர் நடித்த " சிவப்பு மல்லி " திரைப்படம் விஜயகாந்த் அவர்களை பலபடிகள் உயர்த்தியது என்றால் அஃது மிகையல்ல.
பிறகு
 திரு: எஸ் ஏ.சந்திரசேகர்
இயக்கத்தில் நாயகனாக இவர் நடித்த
 " சட்டம் ஒரு இருட்டறை" 
திரைப்படம் இவர் வாழ்வில் மிகப்பெரிய 
திருப்புமுனையாக அமைந்தது.
அதற்கு நன்றிக்கடனாக
அந்த இயக்குனரின் மகன் விஜய்யை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்து வளர்த்து விட்டவர் விஜயகாந்த் தான்.
# உச்ச நட்சத்திரங்கள் ஒரு சிலர் ( குறிப்பாக ஒருவர்) இதோ! அரசியலுக்கு
 வரப் போகிறேன்...
இப்ப வருவேன்...அப்ப வருவேன்.. என்றெல்லாம் போங்கு காட்டிக்கொண்டு இருந்த போது,துணிந்து
அரசியலில் கால் பதித்தவர் திரு: விஜயகாந்த் அவர்கள்.
துணிந்தவனுக்கு தோல்வி இல்லை என்பது போல் வெற்றி தேவதையும் இவரை அரவணைத்துக் கொண்டாள்.
எதிர்க்கட்சி தலைவரும் ஆனார்.
ஆனால்
 விரைவான வளர்ச்சி, 
விரைவான வீழ்ச்சியும் தரும் என்று எச்சரித்து வழிநடத்த எவரும் இல்லாது போனதால் அரசியல் சறுக்கலும் ஆரம்பமானது.

# அரசியலில் எப்படியோ.... ஆனால்
திரையுலகில்
 புதிய இயக்குனர்கள் பலரையும் அறிமுகப்படுத்திய பெருமையும்,
திரையுலக பிரமுகர்கள், சக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், உள்ளிட்ட பலருக்கும் உற்ற தோழனாக, உதவும் கரமாக, பாசமுள்ள பாதுகாவலனாக 
திரு: விஜயகாந்த் அவர்கள் திகழ்ந்தார் என்பது தான் எவராலும் மறுக்க இயலாத உண்மை., அவரின் புகழ்பாடும் பெருமை.

# அன்னார் ஆன்மா அமைதியுற ஆண்டவனைப் பிராத்திக்கின்றோம்.#
நன்றி
பகிர்வு பதிவு

Thursday, December 21, 2023

தேசிய கணித தினம்....

இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி தமிழ்நாட்டின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே கணிதத்தில் தனித்துவமான திறமை கொண்டவராக திகழ்ந்தார். தன்னுடைய சொந்த ஆராய்ச்சி மூலம் பல முக்கியமான கணிதக் கோட்பாடுகளை உருவாக்கினார். இவரது பணிகள் கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ராமானுஜனின் பிறந்த நாளை தேசிய கணித தினமாக கொண்டாடுவதன் நோக்கம், கணிதத்தின் முக்கியத்துவத்தைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்புவதும், கணிதத்தில் ஆர்வத்தை ஊக்குவிப்பதும் ஆகும். தேசிய கணித தினத்தில், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு கணித நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் கணித விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கணித போட்டிகள், கணித கண்காட்சிகள் போன்றவை அடங்கும்.

2023 ஆம் ஆண்டு தேசிய கணித தினம் டிசம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

தேசிய கணித தினத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கணிதத்தின் முக்கியத்துவத்தைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்புதல்
கணிதத்தில் ஆர்வத்தை ஊக்குவித்தல்
கணித ஆராய்ச்சியை ஊக்குவித்தல்
தேசிய கணித தினம் இந்தியாவில் கணிதத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

Tan Q

மாதங்களில் ஒரு வசந்தம்...மார்கழி...பாகம் 1


      🍒 மார்கழி மாதத்தின் சிறப்புகள்!! 🍒

     🍁 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்'  என   ஶ்ரீகிருஷ்ணர் கீதையில்  கூறியிருக்கிறார். 

🍁மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும்.  (பீடு=பெருமை)

🍁இம் மாதம்  தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.  

🍁  ஒரு வருடம் என்பது  தேவர்களுக்கு ஒரு நாள் என்பர். 

🍁 தை மாதத்திலிருந்து  ஆனி மாதம் வரை  உத்ராயண புண்ணிய காலமாகும்.  

🍁அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம்.   

🍁எனவே  மார்கழி என்பது தேவர்களுக்கு  வைகறை  பொழுதைப் போன்றது. 

🍁மிகவும்  சிறப்புடைய மாதம் மார்கழி.  எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு  உகந்தது. 

    🍁  தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத்  'தனுர் மாதம்" எனவும்  அழைப்பர்.

🍁 இம்மாதத்தில்  அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது  மக்களின் வழக்கம். 

🍁 ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. 

🍁எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப்  பக்தர்கள்  இம்மாதத்தில்   மேற்கொள்ளுகின்றனர். 

🍁இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

நன்றி...!
பகிர்வு பதிவு

Wednesday, December 06, 2023

வாழ்க்கை...சிறு கதை

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.  அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....

மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. 

அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.

அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்அதுதான்.....

நன்றி....

பகிர்வு பதிவு....