Thursday, July 30, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁  புதிய பார்வை  🍁

ஹீரா வஸ்தி
வட இந்தியாவில் 
ஒரு கிராமம்.

புத்தர் 
ஒரு முறை 
இங்கு தங்கி 
இருந்தார்.

அப்போது 
அந்த 
கிராமத்தில்
மிகப்பெரிய 
பஞ்சம் ஏற்பட்டது.

ஊரிலிருந்த 
செல்வந்தர்களிடம் 
ஏழைகளுக்கு
உதவி செய்யுமாறு 
வேண்டினார் 
புத்தர்.

இவரது 
வேண்டுகோளை 
யாரும் 
ஏற்கவில்லை. 

அப்போது 
அந்த ஊரிலேயே 
மிகப்பெரிய 
பணக்காரரின்
மகள்...

" நான் வீடு வீடாக 
  சென்று பிச்சை 
  எடுத்து ஏழை 
  மக்களுக்கு உதவி 
  செய்கிறேன் "

என 
கையில் பிச்சை 
பாத்திரத்துடன் 
வீடு வீடாக செல்ல 
தொடங்கினாள்.

இதைப்பார்த்த 
சிறுமியின் தந்தை 
மட்டுமல்ல...

மற்ற 
செல்வந்தர்களும் 
ஏழை மக்களுக்கு 
உதவி செய்ய 
தொடங்கினர்.

ஒரு 
சிறுமியின் 
சீர்மிகு சிந்தனை...
 
மிகப் பெரிய 
மாற்றத்துக்கு 
வழிகோலியது.

இது 
வரலாற்று 
உண்மை.

வாங்க...

கொடுத்து 
பழகலாம்.

நம்மை 
சுற்றியுள்ள
ஏழை மக்களை
வாழ வைக்க
தொடங்கலாம்.

சிறு துளி
பெரு 
வெள்ளம்
ஆகட்டும்.

சிறப்பான
சமுதாயம்
உருவாக
தொடங்கட்டும்.

முதல்
மாற்றம்
நம்மிடமிருந்து.

அன்புடன்
காலை
வணக்கம்.

Wednesday, July 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁  புதிய பார்வை  🍁

சிலரிடம்
வேலையை
கொடுத்தால்...

எப்படி 
எதிர்கொள்வர்.

ஓர் - சிந்தனை.

......................................

நான்
மாட்டேன்...

மகா
சோம்பேறி

......................................

என்னால்
முடியாது...

நம்பிக்கை
இல்லாதவன்.

......................................

எனக்கு
தெரியாது...

முயற்சி
செய்யாதவன்.

......................................

என்னால்
முடியுமா ???

எழுந்திருக்க
முயல்பவன்.

......................................

சரி
செய்கிறேன்...

எழுந்து
விட்டவன்.

......................................

செய்துகொண்டு
இருக்கிறேன்...

உழைக்கும்
மனிதன்.

......................................

முடித்து
விட்டேன்...

ஒப்பற்ற
தலைவன்.

......................................

இதில்
நாம் - யார் ???

......................................

எந்த
நிலையில்
நாம் 
இருந்தாலும்...

நாம்
நினைத்தால்...

நினைத்து
செயல்பட
தொடங்கினால்...

எந்த
செயலையும்
செய்து முடிக்க
முடியும்.

நல்ல
தலைவன்
ஆகவும் முடியும்.

இதுவே
மாபெரும்
உண்மை.

......................................

பூமியில்
இருப்பதும்
வானத்தில்
பறப்பதும்
அவரவர்
எண்ணங்களே.

......................................

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

முடி சூட
தொடங்கலாம்.

......................................

அன்புடன்
காலை
வணக்கம்.

Monday, July 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

அது ஒரு
மருத்துவ 
கல்லூரி
மாணவர்
விடுதி.

அங்கு
படிக்கும்
மாணவர்களின்
அறைகளில்...

அடிக்கடி 
திருட்டு 
நடந்து 
கொண்டு
இருந்தது.

சில நாட்கள்
கண் விழித்து
விடுதி 
மாணவ
தலைவர்...
 
திருடனை 
ஒரு வழியாக
கண்டு பிடித்தார்.

அந்த 
திருடன்
வேறு யாருமல்ல
அவனும் ஒரு
மாணவனே.

விஷயம்
விடுதி 
காப்பாளரும்
பேராசிரியருமான
தலைமை
மருத்துவருக்கு
தெரிவிக்கப்பட்டது.

மற்ற 
மாணவர்கள்
இதை 
போலீசுக்கு
தெரிவிக்க 
வற்புறுத்தினர்.

ஆனால்
விடுதி 
காப்பாளர்...

'யார் யாருக்கு
 எவ்வளவு பணம்
 திருடு போயிற்று'

என 
விபரங்கள்
கேட்டு...

மொத்த
பணத்தையும்
தான் வழங்கி
விஷயத்தை
முடித்து வைத்தார்.

திருடிய
மாணவரை
ஒரு விளக்கம் கூட 
கேட்க வில்லை.

இது நடந்து 
சில ஆண்டுகள் 
கழிந்தன.

இப்போது...
 
அந்த
திருட்டை 
வெளிச்சத்துக்கு
கொண்டு வந்த
விடுதி மாணவ
தலைவர்...

அதே 
கல்லூரியில்
பேராசிரியராக
பணிபுரிகிறார்.

அந்த  
கல்லூரிக்கு
விடுதி 
காப்பாளராக
இருந்த 
பேராசிரியர்...

முதல்வராக
இருக்கிறார்.

இந்நிலையில்
முதல்வர்
ஒருநாள்...

தனக்கு வந்த
ஒரு கடிதத்தை 
எடுத்து வந்து...

அந்த 
பேராசிரியரிடம்
கொடுத்து படிக்க 
கூறினார்.

அந்த கடிதம்
அன்று திருடன்
என முத்திரை
குத்தப்பட்ட
மாணவனால்
எழுதப்பட்டிருந்தது.

அதில் 
எழுதப்பட்டிருந்த
வாசகம் இதுதான்.

"நான் இன்று
 சமூகத்தில் 
 ஒரு தேர்ந்த 
 மருத்துவராக
 இருப்பதின்
 காரணம்
 தாங்கள் தான்.

 தனி 
 மருத்துவராக
 இருந்த நான்
 தற்போது அரசு
 மருத்துவராக
 பணியில் 
 சேர்ந்துள்ளேன்.

 நான் 
 வாங்கிய
 முதல் 
 சம்பளத்தை 
 இத்துடன்
 காசோலையாக
 அனுப்பியுள்ளேன்.

 நான் செய்த
 தவறை
 திருத்தியது...

 என்னை
 மனிதனாக
 மாற்றியது...

 என்
 வாழ்க்கை
 பாதையை
 சீராக்கியது
 தாங்களே...

 என்
 வாழ்க்கையில்
 மறக்க முடியாத
 நபர் தாங்கள்.

 தங்களுக்கு 
 என் சிரம் தாழ்ந்த
 வணக்கங்கள்
 மற்றும் நன்றிகள்.

என 
குறிப்பிட
பட்டிருந்தது.

' மன்னிப்பை
  விட மாபெரும்
  தண்டனை
  ஒன்றில்லை '

என்பதும்...

' எந்த
  நிலையிலும்
  மாணவர் மீது
  வைக்கும் 
  நம்பிக்கை
  வீண்    
  போவதில்லை '

என்பதும்
உண்மைதானே.

வாங்க...

மன்னிக்க  
தெரிந்த 
மனிதனின் 
உள்ளம் 
மாணிக்க
கோயிலப்பா...

என்னும்
ஆலங்குடி
சோமுவின்
வார்த்தைகளை
உண்மையாக்க...

முயற்சிகள்
செய்வோம்.

அன்பான
உலகம்
படைக்கவும்
தொடங்குவோம்.

அன்புடன்
காலை
வணக்கம்..

Friday, July 24, 2020

இணையம் என்ற ஏணி...

ஊரடங்கு காலத்தில் இணைய வழியாக பல தேசிய , கல்லூரிகள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்திய பல பயிற்சி யில் கலந்து கொண்டு  வெற்றி சான்றிதழ்களின் அணி வகுப்பு. ( இருபதுக்கு மேல் ) சில இங்கு...

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

அவர் ஒரு 
உலகப்புகழ் 
பெற்ற
குத்துச்சண்டை 
வீரர். 

அவரை 
வெற்றி கொள்ள 
யாருமில்லை 
என்ற 
இறுமாப்பு...

அவரிடம் 
அதிகமாக 
இருந்தது.

அவரை 
வெற்றிகொள்ள 
என்னென்னவோ 
முயற்சிகள் 
செய்தும்...

யாரும்
வெற்றிகொள்ள 
முடியவில்லை.

இதை 
கவனித்து 
கொண்டிருந்த 
ஒரு இளைஞன்...

அவருக்கு 
ஒரு பாடம் 
கற்று கொடுக்க 
விரும்பினான்.

அந்த நேரம் 
பார்த்து அந்த 
குத்துச்சண்டை 
வீரர்...
 
மக்களுக்கு 
ஒரு அழைப்பு 
விடுத்தார்.

தன்னை வெற்றி 
கொள்பவருக்கு
மிகப்பெரிய 
சன்மானம் 
வழங்குவதாக 
அறிவித்தார்.

இந்த
தருணத்திற்காக
காத்திருந்த
இளைஞன்...

அவருடன் 
போட்டிக்கு 
வருவதாக 
உறுதி அளித்தான்.

போட்டிக்கான 
நாளும் நேரமும் 
குறிக்கப்பட்டது.

இளைஞன் 
தம் மீது 
நம்பிக்கை 
கொண்ட... 

மூன்று 
நண்பர்களை 
அழைத்து சில 
குறிப்புகளை 
வழங்கி அதனை 
செயல்படுத்த 
கேட்டு கொண்டான்.

முதல் நண்பன்
போட்டி நடைபெற 
ஒரு வாரத்திற்கு 
முன் காலை 
பொழுதில் 
கையில் 
மிகப்பெரிய 
பூங்கொத்துடன்...
 
பிரபல 
குத்துச்சண்டை 
வீரரின் வீட்டுக்கு 
சென்றான்.

அவரை பார்த்து 
மலர் கொத்தை 
வழங்கி
வணக்கம்
தெரிவித்து...

நீங்கள் 
எப்போதும்
உறுதியாக
இருப்பீர்களே.

ஐயா
உங்களுக்கு
என்ன ஆச்சு.

என்னிடம்
பேசும்போதே
மூச்சு உங்களுக்கு
இரைக்கின்றதே.

உங்கள் உடலில்
நீங்கள் அக்கறை 
கொள்ளுங்கள்.

வெற்றி பெற
வாழ்த்துக்கள் 
ஐயா.

என்று 
கூறிவிட்டு
சென்றான்.

இவனின்
வார்த்தைகளில்
குத்துச்சண்டை
வீரர் கொஞ்சம்
சஞ்சலம் அடைய
தொடங்கினார்.

காலையில் 
நடைபழக்கம் 
கொண்டவர்
குத்து சண்டை 
வீரர்.

போட்டி 
நடைபெற 
இருந்த ஒரு 
மூன்று 
நாளைக்கு 
முன் அவர் 
நடைபயிற்சி 
செல்லும் போது...
 
இளைஞனின் 
இரண்டாவது 
நண்பன்
அவருடன் 
இணைந்து 
சென்றான்.

அவரை 
பார்த்து 
வணக்கம் 
தெரிவித்து... 

ஐயா 
தாங்கள் 
பிரபலமான 
குத்துச்சண்டை 
வீரர் என்பது 
ஊரறிந்த விஷயம். 

உங்களின் 
ஆத்மார்த்தமான 
ரசிகன் நான்.

நீங்கள் தான் 
இந்த போட்டியில் 
வெற்றி பெற 
வேண்டும்.

இருந்தாலும் 
கொஞ்ச நாளாக
நீங்கள் சோர்வாக
காணப்படுகிறீர்கள்.

தங்களுடைய 
இந்த நடைபயிற்சி 
சில நாட்களாக 
மிகவும் தளர்வாக
இருக்கிறது.

உங்கள் உடல் 
நலனில் அக்கறை 
செலுத்துங்கள் 

என்று 
கூறிவிட்டு 
சென்றான்.

இவனின் இந்த
வார்த்தைகளில்
குத்துச்சண்டை
வீரர்...

உண்மையில்
தாம் சற்று
தளர்வடைந்து
விட்டோமோ
என்று மனம்
தடுமாறினார்.

போட்டி
நடக்கக்கூடிய
நாள் வந்தது.

மேடைக்கு 
செல்ல 
தயாரானார்   
குத்துச்சண்டை 
வீரர்.

அப்போது 
இளைஞரின் 
மூன்றாவது 
நண்பன்
குத்துச்சண்டை 
வீரரிடம்...

கை 
கொடுக்க 
சென்றான்.
அவரும் 
கைகொடுத்தார்.

பின்னர் 
அந்த நண்பன்... 

ஐயா 
உங்களின் 
கைப்பிடியில் 
உறுதி இல்லையே. 

மிகவும் 
பலவீனமாக 
உங்கள் கைகள்
இருக்கிறது.

இருப்பினும்
உங்கள்
வெற்றிக்கு
வாழ்த்துக்கள்.

என்று 
கூறிவிட்டு 
சென்றான்.

அவ்வளவுதான். 

ஏற்கெனவே
மனதளவில்
தளர்ந்திருந்த
குத்துச்சண்டை 
வீரர்...

உடல் அளவிலும்
சோர்ந்து போனார்.

மணி 
அடிக்கப்பட்டது.
போட்டி
தொடங்கியது.

அவரின்
இந்த நிலைக்கு
காத்திருந்த
இளைஞன்...

ஆக்ரோஷமாக  
போட்டியிட்டு 
அபாரமாக 
அவரை
வென்றான்.

உடல் 
எவ்வளவு தான் 
உறுதியாக 
இருந்தாலும்...

தாம்
தளர்வடைந்து
விட்டோமோ...

தோல்வியடைந்து 
விடுவோமோ 
என்னும் 
அச்சம்...
 
மனிதனை 
மிக மோசமாக 
முடிவிற்கு 
தள்ளிவிடும்...

என்பதற்கான 
எடுத்துக்காட்டு 
இது.

வாங்க...

நம்மை
சீர்குலைக்க
கூடிய...

எந்த 
சக்திகள்
எத்தனை
திட்டமிட்டாலும்...

அது
உடல்நலம்
சார்ந்த
சங்கதியாக
இருந்தாலும்
சரி...

அல்லது...

வாழ்வில்
மேம்பாடு
அடைவதற்கான
சங்கதியாக
இருந்தாலும்
சரி...

அவைகளை
தவிடு 
பொடியாக்கி
ஜெயித்துகாட்ட...

நம்மால்
முடியும்.

நம்பிக்கைகள்
மற்றும்
வாழ்த்துகளுடன்...

அன்புடன்
இனய
காலை
வணக்கம்.

நன்றி 
முனை.சுந்தரமூர்த்தி


Wednesday, July 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

ஈராக் நாட்டின் 
புஷ்வா நகரம். 

ஓர் 
இறைமறுப்பாளர் 
ஒரு உயரமான 
மேடையில் 
நின்று...

இறைவன் 
இல்லை என்று 
பேசிகொண்டு 
இருக்கிறார்.

அப்போது 
ஒரு சிறுவன்
இறைவன் 
இருக்கின்றான் 
சில பேருக்கு அது 
தெரியவில்லை 
என்று கூறினான்.

இதை மறுத்த 
இறைமறுப்பாளர்...

நான் மூன்று 
கேள்விகளை 
கேட்கிறேன் நீ
பதில் சொல்வாயா?
என்று கேட்டார்.
 
சிறுவன் அதற்கு 
ஒப்புக்கொண்டான்.

இறைமறுப்பாளர்
முதல் கேள்வியை 
கேட்டார்.

இறைவன் 
என்ன செய்து 
கொண்டிருக்கிறார்?

சிறுவன் 
அவரை பார்த்து... 

மேடையில் இருந்து 
இறங்கி வாருங்கள் 
நான் பதில் 
கூறுகிறேன் 

என்று 
கூறினான். 

இறைமறுப்பாளர் 
மேடையில் 
இருந்து கீழே 
இறங்கினார்.

சிறுவன் 
மேடையில்
ஏறினான்.

இறைமறுப்பாளரை 
பார்த்து...

உங்கள் 
நிலையை 
கீழே தாழ்த்தி 
உள்ளார் 
என்னை 
மேலே ஏற்றி 
உள்ளார்...

இதுதான் 
இறைவன் 
இப்போது 
இந்த நிமிடத்தில் 
செய்திருக்கிறார் 

என்று  
கூறினான்.

இந்த பதிலில் 
இறைமறுப்பாளர் 
சற்று அவமானம் 
அடைந்தார்.

அடுத்த
கேள்வியை
கேட்டார்.

இப்போது 
இருக்கின்ற 
இறைவன்...

இதற்கு முன் 
யாராக இருந்தார் ?
என்று கேட்டார்.

சிறுவன் 
இறைமறுப்பாளரை 
பார்த்து...

பத்திலிருந்து 
தலைகீழாக 
எண்களை 
சொல்ல
சொன்னார்.

இறைமறுப்பாளர் 
பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
.....
.....
ஒன்று 
என
முடித்தார்.

தொடர்ந்து 
சொல்லுங்கள் 
என்று சிறுவன் 
இறைமறுப்பாளரை 
பார்த்து 
வேண்டினான்.

ஒன்றுக்கு கீழே 
ஒன்றும் இல்லை 
என்று
இறை மறுப்பாளர் 
கூறினார்.

சிறுவன்...

இறைவன் 
ஒருவனே 
அவனுக்கு 
முன்பும் 
யாரும் இல்லை 
அவருக்கு 
பின்பும் 
யாருமில்லை 

என்று 
கூறினான்.

இந்த 
விளக்கத்திற்கு 
இறைமறுப்பாளர் 
எந்த விதமான 
பதிலும் சொல்ல
இயலவில்லை.

இருப்பினும் 
மூன்றாவது 
கேள்வியை
சிறுவனை
பார்த்து கேட்டார்.

இப்போது 
எந்த திசையில் 
இறைவன் 
இருக்கிறார் ?

சிறுவன் 
அவருக்கு முன் 
ஒரு 
மெழுகுவர்த்தியை 
ஏற்றி...

இந்த தீபம் 
எந்த திசையை
காட்டுகிறது ?

என்று 
கேட்டான்.

இறைமறுப்பாளர்... 

தீபம் எல்லா 
திசையிலும் 
சுற்றி இருக்கிறது 
என்று கூறினார்.

சிறுவன்...

இறைவனும் 
எல்லா 
திசையிலும் 
பரவி
இருக்கின்றான் 
 
என்று 
கூறினான்.

இந்த மூன்று 
கேள்விக்கான 
விடைகளிலும் 
திருப்தி அடைந்த 
இறைமறுப்பாளர்...

தன்னுடைய 
தோல்வியை 
பகிரங்கமாக 
மக்கள் முன் 
ஒப்புக்கொண்டார்.

மேலும்...

இறைவன்  
எங்கும்
எதிலும்
எப்போதும்
இருக்கின்றான்...
 
என்பதை 
உணர்ந்து 
கொண்டார்.

அந்த 
சிறுவன்தான் 
பின்னாளில் 
புகழ்பெற்று
அறிஞராக 
விளங்கிய...

_*இமாம் அபு*_ 
_*ஹனிபா*_

வேண்டுதல் 
வேண்டாமை 
ஆத்திர 
மெய்சுடராய்

விளக்கிட 
முடியாத 
தத்துவ 
பொருளாய்

_*ஆண்டவன்*_ 
_*ஒருவன்*_ 
_*இருக்கின்றான்*_ 

_*அவன் அன்பு*_
_*மனங்களில்*_ 
_*சிரிக்கின்றான்*_

என்னும்...

கவிஞர்
_*ஆத்மநாதனின்*_
வார்த்தைகள்
உண்மைதானே.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Tuesday, July 21, 2020

இது இருந்தால்..கொரோனா பயம் வேண்டாம்..

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக  சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார்.
அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை  மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.
அதன் விபரங்கள் 
#மூலிகை #தேநீர்:
சுக்கு - 100 கிராம்,
அதிமதுரம் - 100 கிராம்,
சித்தரத்தை - 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் - 10 கிராம்,
திப்பிலி - 5 கிராம்,
ஓமம் - 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு - 5 கிராம்
மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.
பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த #மூலிகை #தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.
இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.
இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.
இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.
கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!
பத்தியமில்லை.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை  தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது  என்பது வியப்பான நற்செய்தி.
 எல்லோருக்கும் பயனுள்ள இந்த அரிய குறிப்பை உங்கள் நண்பர்களுக்கும் Share செய்க.
வாழ்க சித்த மருத்துவம்.
வளர்க தமிழரின்

Monday, July 20, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

இன்றைய 
நாளில்...
 
அன்பு என்ற 
வார்த்தை 
பெரும்பாலும்
தவறாகவே 
புரிந்து கொள்ள
பட்டுள்ளது.

யாராவது ஒருவர் 
நமக்குப் பிடித்தது 
போல் பேசும்போது
நாம் அவரை 
விரும்புவதும்...
 
அதே மனிதர் 
நாளை நமக்கு 
பிடிக்காததை 
செய்யும்போது...

நாம் 
அவரை முன்பு 
நேசித்தது போல 
நேசிக்காமல்
வெறுக்க 
தொடங்குவதும்...

வாடிக்கையாகி
வருவது கண்கூடு.

அப்போது
நமது அன்பு 
எங்கே போயிற்று? 

அந்த அன்பு 
' தற்காலிகமாக 
  பாதிப்புக்கு
  உள்ளாகிவிட்டது '
என்பதுதான்
உண்மை.

நாம்
சாதாரணமாக 
விளையாடும் 
இந்த பரமபத
விளையாட்டில்...

அன்பும் 
வெறுப்பும் 
மாறி மாறி 
வரக்கூடியதாகவும்...

ஒன்று 
மற்றொன்றாக 
மாறக்கூடிய
ஒன்றாகவும்
இருக்கிறது. 

இந்த 
அன்பு – வெறுப்பு 
உறவுமுறை என்பது
அன்பே அல்ல.

அது 
வெறுமனே ஒரு 
மனிதருக்கோ 
அல்லது ஒரு 
சூழ்நிலைக்கோ 
நாம் பதிலளிக்கும் 
ஒரு செயல்தான். 

அது, 
பொருள்சார்ந்த 
அல்லது 
பலன்சார்ந்த 
அன்பு 
அவ்வளவுதான்.

உண்மையான 
அன்பிற்கு 
பொருளை
பற்றி தெரியாது.

பலனை
பற்றி அறியாது.

எதிர்பார்ப்புகளை
உணராது.

உண்மையான
அன்பு 
எனப்படுவது
அன்பிற்காக
மட்டுமே.

அப்போது அது
தெய்வீகமாக 
ஆகி விடுகிறது
என்பதே நிஜம்.

வாங்க...

உண்மையான
அன்பை 
பகிர
தொடங்குவோம்.

அன்பான 
உலகை
படைக்கவும்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

இன்றைய 
நாளில்...
 
அன்பு என்ற 
வார்த்தை 
பெரும்பாலும்
தவறாகவே 
புரிந்து கொள்ள
பட்டுள்ளது.

யாராவது ஒருவர் 
நமக்குப் பிடித்தது 
போல் பேசும்போது
நாம் அவரை 
விரும்புவதும்...
 
அதே மனிதர் 
நாளை நமக்கு 
பிடிக்காததை 
செய்யும்போது...

நாம் 
அவரை முன்பு 
நேசித்தது போல 
நேசிக்காமல்
வெறுக்க 
தொடங்குவதும்...

வாடிக்கையாகி
வருவது கண்கூடு.

அப்போது
நமது அன்பு 
எங்கே போயிற்று? 

அந்த அன்பு 
' தற்காலிகமாக 
  பாதிப்புக்கு
  உள்ளாகிவிட்டது '
என்பதுதான்
உண்மை.

நாம்
சாதாரணமாக 
விளையாடும் 
இந்த பரமபத
விளையாட்டில்...

அன்பும் 
வெறுப்பும் 
மாறி மாறி 
வரக்கூடியதாகவும்...

ஒன்று 
மற்றொன்றாக 
மாறக்கூடிய
ஒன்றாகவும்
இருக்கிறது. 

இந்த 
அன்பு – வெறுப்பு 
உறவுமுறை என்பது
அன்பே அல்ல.

அது 
வெறுமனே ஒரு 
மனிதருக்கோ 
அல்லது ஒரு 
சூழ்நிலைக்கோ 
நாம் பதிலளிக்கும் 
ஒரு செயல்தான். 

அது, 
பொருள்சார்ந்த 
அல்லது 
பலன்சார்ந்த 
அன்பு 
அவ்வளவுதான்.

உண்மையான 
அன்பிற்கு 
பொருளை
பற்றி தெரியாது.

பலனை
பற்றி அறியாது.

எதிர்பார்ப்புகளை
உணராது.

உண்மையான
அன்பு 
எனப்படுவது
அன்பிற்காக
மட்டுமே.

அப்போது அது
தெய்வீகமாக 
ஆகி விடுகிறது
என்பதே நிஜம்.

வாங்க...

உண்மையான
அன்பை 
பகிர
தொடங்குவோம்.

அன்பான 
உலகை
படைக்கவும்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நான்றி
முனை.சுந்தரமூர்த்திSaturday, July 18, 2020

தமிழில் குரல் தட்டச்சு - செய்ய எளிய வழி...

தமிழில் குரல் தட்டச்சு  - ஓர் அரிய வரம்!   

                                           ************                        

     குரல் தட்டச்சு பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்குத் தெரியாதிருக்கும். தெரியாதவர்களுக்கு அதை அறிமுகப்படுத்தவே இக் கட்டுரை.

     இணையப் பயன்பாட்டில், தேடலுக்கான குறிச் சொற்களை தட்டச்சு செய்யாமல், குரல் தேடல் எனும் வசதியில், சொற்களைப் பேசி தேடல் செய்ய முடியும். இது சற்று பரவலாக அறியப்படக் கூடியது.  

      ஆனால் இது கூகுள், யூ ட்யூப் போன்ற சர்வர்களில் தேடல் செய்வதற்கு மட்டும் பயன்படக் கூடியது.  இதை வைத்து நாம் பொதுவான தட்டச்சுப் பணிகளை செய்ய இயலாது. அதற்கு இணையத்தில் வேறு சில செயலிகள் உள்ளன. 

     இந்த செயலிகள், உலக மொழிகளில் முக்கியமான சில அல்லது பல மொழிகளில் குரல் தட்டச்சு செய்யக்கூடியதாக இருக்கும். தனித்தனி மொழிகளில் குரல் தட்டச்சு செய்வதற்கும் செயலிகள் உள்ளன. இவற்றில் ஆங்கிலம், பெரும்பாலும் சரியான அளவில் பதிவாகும். இதர மொழிகளில் குற்றம் குறைகள் நிறையவோ, அல்லது குறைவாகவோ இருக்கும்.

   தமிழிலும் இது போல குரல் தட்டச்சு செயலிகள் பல உள்ளன. அவற்றில் பல செயலிகள் சரிவர செயல்படாது. பல செயலிகள் சொற்களை மிகத் தவறான முறையில் தட்டச்சு செய்யும். அவற்றால் எந்த உபயோகமும் இருக்காது.

     live transcribe எனும் செயலி,
பெரும்பாலும் சிறப்பாகவும், பெரும்பாலும் சரியாகவும்  செயல்படுகிறது. நமது உச்சரிப்பு சரியாக இருந்தால், ஒற்று எழுத்துக்கள் கூட பதிவாகும்.

      பொதுவாக இது எழுத்து  மொழிக்கானது. பேச்சு மொழிக்கானதல்ல. பேச்சு மொழியில் சொல்லப்படும்போது, அவற்றில் பல சொற்கள் தவறாக பதிவாகும்.  சில சமயம் பேச்சு மொழி மற்றும் கொச்சை சொற்களை, எழுத்து மொழிக்கு மாற்றிவிடும். வட்டார மொழி, ஜாதி மொழி போன்றவற்றுக்கும் இது அவ்வளவாக ஏற்புடையது அல்ல. 

    
     எனினும் பதிவு செய்த பின்னர் ஆங்காங்கே திருத்தங்கள் செய்து கொள்வதாயின், பேச்சு மொழி, வட்டார மொழி, ஜாதி மொழி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். 

     எழுத்து மொழியிலும் சிற்சில சொற்கள் மட்டும் தவறாகப் பதிவாகும். காற்புள்ளி, அரைப்புள்ளி முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, மேற்கோள் குறிகள் ஆகியவற்றை இதில் பதிவேற்ற முடியாது. ஆனால், இது பெரிய குறைகள் அல்ல. இக்குறைகள் எளிதில் நிவர்த்தி செய்யக் கூடியவை. எனவே, இந்த செயலியில் நாம் தட்டச்சு செய்து கொண்டு, அதை காப்பி செய்து, எழுதுவதற்கு நாம் உபயோகிக்கும் செயலிகள் எதிலாவது பேஸ்ட் செய்து, தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். எனவே இம்முறையில் மிக விரைவாக தட்டச்சு செய்ய முடியும்.

     அலைபேசியில் தட்டச்சு செய்வதற்கு நாம் மிக சிரமப் படுவோம். இந்தக் குரல் தட்டச்சு செயலியில் அத்தகைய சிரமம் இருக்காது. விரல் தட்டச்சு முறையை விட இதன் மூலம் குறைந்தபட்சம் 50 மடங்கு வேகத்தில் தட்டச்சு செய்ய முடியும் என நினைக்கிறேன். அலைபேசி தட்டச்சை விட நூறு மடங்கு வேகமான முறையில் இதில் தட்டச்சு செய்யலாம். காரணம், நாம் சொல்லச் சொல்ல இதில் தட்டச்சு ஆகிக்கொண்டே இருக்கும். நாம் சொல்லுவதை மட்டுமல்ல; பாடுவதையும் இது எழுத்தாக்கம் செய்து கொடுத்துவிடும். 

     இச் செயலியின் மூலம் நாம் குறிப்புகள், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நிலைத் தகவல்கள்,  கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்  எதை வேண்டுமானாலும் மிகக் குறுகிய நேரத்தில் எழுதி முடிக்கலாம். அலைபேசியில் அல்லது கணிணியில் மணிக்கணக்காக செய்யக்கூடியதை, இதில் மிகச் சில நிமிடங்களில் செய்துவிட முடியும். வாரக் கணக்காக, செய்யக்கூடிய பணிகளை, ஒரு நாள் அல்லது அரை நாளிலேயே செய்துவிடலாம்.

    ஆவணங்களையும் இதில்  எழுத முடியும் என்றாலும், ரகசியம் காக்கப்பட வேண்டியது எனில் அவற்றை இதில் எழுதாதிருப்பது நல்லது. காரணம், இதில் நாம் பதிவு செய்யக் கூடிய விஷயங்கள் அனைத்தும் சர்வரில் சேகரமாகிவிடும் என்பதுதான். எனவே, இணையம், அலைபேசி ஆகியவற்றை உபயோகிப்பதில் கடைபிடிக்கப்பட வேண்டிய எச்சரிக்கைகளை, இதிலும் பின்பற்றுவது மிக அவசியம். பொதுவெளியில் வெளியிட தக்க, சாதாரணமான விஷயங்களை தாராளமாக எழுதலாம். 

     இந்த செயலி என்னைப் பொறுத்தவரை அரிய வரம் என்றே சொல்வேன். கதை, கட்டுரைகளை இந்த செயலி மூலம் மிக விரைவாக எழுதி முடிக்க முடிகிறது. எனது எழுத்தாள நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி, பரிந்துரை செய்திருக்கிறேன்.

     Live transcribe செயலி, Google playயில் கிடைக்கும். இது ஆன்லைனில் செயல்படக் கூடியது. 

     இந்த செயலி, சில ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் சரிவர செயல்படாமல் இருந்தால் Tamil Voice Typing - குரல் தட்டச்சு எனும் கூகுள் செயலியைப் பயன்படுத்தலாம். 
ஆனால், இதில் சில குறைபாடுகள் உள்ளன. இது சற்று வேகக் குறைவானது. மேலும், அடிக்கடி தொடர்பு துண்டாகக் கூடும். அப்போது மைக்கை ஒவ்வொரு முறையும் ஆன் செய்துகொண்டே இருக்க வேண்டும். 

     மேலும், பேச்சை நிறுத்தினால், தட்டச்சுப் பதிவு துண்டாகிவிடும். எனவே, வாக்கிய இடைவெளி விடாமல், ஆனால், சொற்களுக்கிடையே தக்க இடைவெளிகளோடு, பேசிக்கொண்டே இருக்க வேண்டும். சில சமயம் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒரு முறை, அல்லது 3 - 4 தடவை துண்டாகிவிடும். அப்போது மைக்கை ஆன் செய்துகொண்டே இருக்க வேண்டி வரும். சரியான இடைவெளி மற்றும் கோணத்தில் வைத்துப் பேசினால் இந்த சிக்கல் இராது. 

     
     இந்த செயலியில் ஒரு சிறப்பம்சமும் உள்ளது. இது தட்டச்சுப் பலகையோடு இணைந்து செயல்படக் கூடியது. எனவே, திருத்தங்ஙளை இச் செயலிக்குள்ளேயே செய்துகொள்ளலாம். 

     எழுத்தாணி தமிழ் குரல் தட்டச்சு செயலி மூலமும் இதே போன்ற எழுத்தாக்கங்களைச் செய்யலாம். 

     நிறைய எழுதக் கூடியவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்,  இச் செயலிகளைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம். நேரமிள்மையால் குறைவாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள், பயண நேரங்களிலும், படுத்திருக்கும்போதும் கூட இதைப் பயன்படுத்தி, ஏராளமாக எழுதிக் குவிக்கலாம். 

     கணினி, மடிக் கணினி ஆகியவை இல்லாத எழுத்தாளர்கள், ஆண்ட்ராய்ட் ஃபோன் மூலமாகவே தங்கள் படைப்புகளை எழுதி, அதன் மூலமே உடனடியாக பத்திரிகைககளுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடவும் இயலும் என்பது தற்கால வசதி. வாசகர்களும் தங்களுக்கு வேண்டிய வகையில் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


 (பகிர்வு)

Friday, July 17, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

அவன் ஒரு
கருப்பின 
சிறுவன்.

தந்தையை 
இழந்தவன்.
தாய் 
வீட்டு வேலை 
செய்யும்
வேலைக்காரி.

சிறுவனுக்கு 
கணைய நோய்
வாட்டி
வதைத்தது.

உடல்
வளர்ச்சியும் 
குன்றியதாக
இருந்தது.

நிற்கும் போதே
கால்களும் 
கைவிரல்களும்
தடுமாறும்.

இந்நிலையில்
அவனுக்கு 
கால்பந்து 
என்றால் உயிர்.
 
ஒரு நாள் 
அவன் ஊருக்கு...

உலக 
புகழ் பெற்ற
கால்பந்தாட்ட 
வீரர் _*வில்சன்*_
நிகழ்ச்சி ஒன்றில்
பங்கு பெற
வந்தார்.

கூட்டத்தை 
முண்டியடித்து  
வில்சனை 
பார்க்க சென்ற 
அந்த சிறுவன்...

அவரின்
கையை 
தொட்டு 
பார்த்தான். 

இதை 
பார்த்த 
வில்சன்... 

"  உனக்கு 
   என்னப்பா 
   வேண்டும்? "

என்று கேட்டார்.

" உங்கள் ஆட்டம் 
  முழுவதையும்
  நான் ரசித்தேன்
  நன்றாக இருந்தது "

என்று கூறினான்
சிறுவன்.

மறுபடியும் 
அந்த சிறுவன் 
வில்சனை 
தொட்டான்.

" இப்போது என்ன 
  வேண்டும்? "

என்று கேட்டார்
வில்சன்.  

" நீங்கள் அடித்த 
  இரண்டாவது 
  கோல் மிகவும் 
  அற்புதமாக
  இருந்தது "

என்றான் சிறுவன்.

மீண்டும் 
தொட வந்த
சிறுவனை 
பார்த்து
எரிச்சலடைந்தார்
வில்சன்.

" நீ 
  என்ன தான் 
  சொல்லவருகிறாய்?
  சொல்லித்தொலை "

என்று கடுமையாக
பேசினார் வில்சன்.

சிறுவன் 
வில்சனை
பார்த்து 
நிதானமாய்...

" என்றாவது 
  ஒருநாள் 
  உங்களை நான் 
  தோற்கடிப்பேன் "

என்று கூறினான்.

" சரியாக 
  நிற்க கூட 
  முடியாத நீ...

  என்னை 
  ஜெயிக்க 
  போகிறாயா? "

என்று
ஏகத்தாளமாக
கூறினார் 
வில்சன்.

சரியாக 16 
ஆண்டுகளுக்கு 
பின்... 

வில்சனின் 
அனைத்து 
வெற்றிகளையும் 
தகர்த்து 
எறிந்தான்
அந்த சிறுவன்.

அவன் தான்
பின்னாளில் 
அமெரிக்காவின் 
தலை சிறந்த 
கால்பந்து 
வீரராக திகழ்ந்த
_*சிம்சன்*;_

அவரிடம் 
ஒரு கேள்வி 
கேட்கப்பட்டது.

" உங்களின் 
  வெற்றிக்கு  
  காரணம்
  என்ன ???

சிம்சன் 
கூறினார். 

" இரண்டே 
  இரண்டு 
  காரணங்கள் 
  தான். 

  ஒன்று என் 
  குறிக்கோளை 
  மிக உயரத்தில் 
  நான் வைத்தது.

  இரண்டாவது 
  என் வெற்றிக்கு 
  நான் அயராது 
  நம்பிக்கையுடன் 
  பாடுபட்டது "

நம்பவே 
முடியாத
சாகசங்களும்
வெற்றிகளும்
கை கூடுவது
இப்படித்தானே.

எந்த நிலையில்
நாம் இருந்தாலும்...

எத்தனை முறை
நாம் தோற்றாலும்...

நம்பிக்கையும்
விடாமுயற்சியும்
நம்மிடம் 
இருக்கும் வரை...

வெற்றிகள்
நம் அருகில்தான்.

வாங்க...

_*மோதி*_
_*விளையாடலாம்*_

_*சாதித்து*_
_*காட்டலாம்*_

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Thursday, July 16, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

🍁  புதிய பார்வை  🍁

ஒரு ஊரில் 
ஒரு ஞானி 
இருந்தார். 

ஒருநாள் 
அவரிடம் 
ஒருவர் வந்து...

இறைவனின் 
புகழை 
தினமும் பாடி 
வருகிறேன்...

இறைவனை
நான் காண
முடியுமா ??? 
என்று கேட்டார்.

நீங்கள் 
சிறப்பாக 
செய்யுங்கள் 
இறைவனை 
நீங்கள்
காணலாம் 
என்றார் ஞானி.

ஒரு சில 
தினங்கள் 
கழித்து...

இன்னொருவர் 
வந்தார். 

ஞானியை
பார்த்து...

இறைவனுக்கு 
உகந்த 
நாட்களில் 
கோவிலுக்கு 
சென்று 
வழிபடுகிறேன்.
உபவாசம்
இருக்கிறேன்...

இறைவனை 
நான் காண
முடியுமா ???
என்று கேட்டார். 

சிறப்பாக 
செய்யுங்கள் 
இறைவனை 
நீங்கள் 
காணலாம் 
என்று...
 
சொல்லி 
அனுப்பினார் 
ஞானி.

சில தினங்கள் 
கழிந்தன.

மற்றொருவர் 
ஞானியிடம் 
வந்து...
 
இறைவனின் 
பெயரில் 
அன்னதானம் 
செய்கிறேன் 
ஏழைகளுக்கு 
உதவி 
செய்கிறேன்... 

இறைவனை
நான் காண 
முடியுமா ???
என்று கேட்டார்.

சிறப்பாக 
செய்யுங்கள் 
இறைவனை 
நீங்கள் 
காணலாம் 
என்று கூறினார் 
ஞானி. 

நாள்தோறும்
இவைகளை 
கவனித்து 
கொண்டிருந்த
ஒரு சீடன் 
குருவிடம்...

எல்லோரிடமும் 
இறைவனை 
காண முடியும் 
என்று சொல்லி 
அனுப்புகிறீர்கள். 

உண்மையில் 
இறைவனை 
காணும் 
வழிதான்
என்ன ??? 
என்று கேட்டார்.

ஞானி...
 
இந்த மூன்று 
பேருமே கேட்டது
சரிதான்.

இறைவனின் 
புகழை தினமும் 
மனமுருக 
பாடி வந்தால் 
இறைவனை 
காணலாம்.

இறைவனுக்கு 
உகந்த 
நாட்களில் 

மனமுருக
உபவாசம் 
இருந்தாலும்...

கோவிலுக்கு 
சென்று 
நெஞ்சுருக
வழிபட்டாலும்...

இறைவனை
காண முடியும்.

இறைவனின் 
பெயரில் 
அன்னதானம் 
செய்வதும்...

ஏழைகளுக்கு 
உதவி 
செய்வதும் 
இறைவனை 
காணும் 
வழிதான்.

ஆனால்...

ஊர் மெச்ச 
மக்கள் பாராட்ட 
செய்யும் எந்த 
செயலாலும்
இறைவனை
காண முடியாது.

மாறாக
எதையும்...

பாசத்துடன்
நேசத்துடன்
கருணையுடன்...

நெஞ்சுருக
இதயபூர்வமாக 
செய்யும்போது...

இறைவனை
நாம் உணர
முடியும்...

என்று 
பதிலளித்தார் 
ஞானி.

வாங்க... 

இறைவனை
உணர
முயற்சிகள் 
செய்யலாம் 

அன்புடன் 
இனிய
காலை 
வணக்கம்.

Wednesday, July 15, 2020

கர்ம வீரர் காமராஜர்..சில குறிப்புகள்...

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், ” என்னய்யா… இது?” என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் “கேக்”வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்தவிலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்”காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.”மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி’என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால்`கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்’டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி’ என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்’, `ஆகட்டும் பார்க்கலாம்’என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.
66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.
69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
73. பெருந்தலைவர் காமராஜருக்கு “பாரத ரத்னா”எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.
76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.
78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்குஇலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.
79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.
82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்றுதமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்’என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாகதமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்சம்நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!
88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோதுதடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்சங்கு ஊதுறீங்க’ என்றுகமென்ட் அடித்தார்!
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும்அதைநிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்திஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்’ என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமானஅரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாகஎடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்கொண்டவர் காமராஜர்.
96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்’ என்றாலே காரியம்முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்`முடியாது போ’ என்று முகத்துக்குநேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவேபிடிக்காது அவருக்கு.
100. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசியசெலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.ஆனால்’எல்லாம் எனக்கு தெரியும்’ என்கிற மனோபவம்ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.
102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்தஊரில்என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்முக்கியமானவர் என்பதெல்லாம்அவருக்குத்தெரியும்.
103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.
104. சொல்லும் செயலும் ஒன்றாகஇல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்முழுமையாகப்பெற்றிருந்தார்.அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.
106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகிவிடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனைமணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்கொண்டு விடுவார் அவர்.
107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொருதிட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.
108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்அவர்.
109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.
110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கானவேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டுவிடுவார்.
111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்உண்டு.

நன்றி
படித்ததில் பிடித்தது...

Monday, July 13, 2020

புதிய பார்வை... புதிய கோணம்....

🍁  புதிய பார்வை  🍁

நிசப்தமான
குளத்தில்
ஒரு கல்லை
எறிந்தால்
உருவாகும்
வட்ட வட்ட
அதிர்வலைகள்
போல...

தெரிந்தோ
தெரியாமலோ
நம்முடைய
எண்ணங்களும்
செயல்களும்
சொற்களும்...

நம்மை
சுற்றியுள்ள
மனிதர்களின்
மனதில்...

அதிர்வுகளை
ஏற்படுத்த
கூடியவையாக
அமைகின்றன.

அது 
நல்லவையாக
அமையும் போது...

அவர்கள்
மனதில்
தாக்கத்தை
ஏற்படுத்தி...

அவர்களும்
நல்லவர்களாக
மாறும் சூழ்நிலை
ஏற்படும்.

சிறு துளி
பெரு வெள்ளம்
என்பதை போல...

ஒரு 
அகல் விளக்கு
பல்வேறு தீபங்கள் 
எரிய...

காரணமாய்
இருத்தல்
போல...

நம்முடைய
சொற்களும்
செயல்களும்...

இந்த
உலகத்தையே
மாற்ற போகும்
வல்லமை
கொண்டதாக
இருக்கட்டும்.

நாடும் வீடும்
வளம் பெற
தொடங்கட்டும்.

வாங்க...

முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Saturday, July 11, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

💕💕💕💕💕💕💕💕

கும்மிடி
பூண்டியில்
தனியார் 
பள்ளியில்...

ஒன்றாம் 
வகுப்பு
மாணவி
*ஐஸ்வர்யா*

தன்னுடைய
பிறந்த நாள்
கொண்டாட...

தான் சேர்த்து
வைத்திருந்த
300 ரூபாய்
பணத்தை...

இந்த
கொரோனா
காலத்தில்...

தூய்மை
பணியாளர்களுக்கு
தந்தை மூலமாக
உணவு வழங்க
உதவியாய்
இருந்திருக்கிறார்.

கோவை மாவட்டம்
கவுண்டன் புதூர் 
கிராமத்தை
சேர்ந்த 
22 வயதான
*கவிப்ரியா*

தாய் 
இல்லை.
தந்தை கூலி
தொழிலாளி.

சோப்பு 
நிறுவனத்தில்
வேலை செய்து
வரும் இவர்...

தம்முடைய
கொலுசை 
1000 
ரூபாய்க்கு 
விற்று...

கொரோனா
பாதித்த 
மக்களுக்கு...

கபசுர குடிநீர் 
வழங்கி 
இருக்கிறார்.

திருச்சி மாவட்டம்
வெங்கடாஜலபுரம்
பஞ்சாயத்து 
தலைவர்
*பழனிசாமி*

இவர்
தம் ஊரில்...

ஒரு ரூபாய்க்கு
ஒரு இட்லி
என்னும்
திட்டத்தை
தொடங்கி...

இந்த
கொரோனா
காலத்தில்...

ஏழை 
மக்களுக்கு
பசியாற்றி 
வருகிறார்.

சேலம் மாவட்டம்
இனாம் வேடு 
காத்தாம் பட்டி 
ஊராட்சி 
ஒன்றிய
பள்ளியில் 
பணிபுரியும் 
ஆசிரியை 
*ரேவதி*

தன் வகுப்பில்
பயிலும் 34 
மாணவர்களின்
பெற்றோர்...

கொரோனா 
காலத்தில் 
வேலை
இழந்ததினால்...

தன் 
சொந்த செலவில் 
34 மாணவர்
குடும்பத்திற்கும்...

தலா 
1000 ரூபாய்
மதிப்பிற்கு மளிகை
பொருட்கள் வாங்கி
கொடுத்து உதவி
செய்திருக்கிறார்.

*இசக்கிராஜ்*
இவர் ஒரு 
காவலர்.

இவரிடம் ஒரு 
சிறுவன் வந்து
கொரோனா 
வந்தா மூணு 
வேலையும் சோறு 
போடுவாங்களா?
என கேட்டுள்ளான்.

இவர்
போடுவார்கள் 
என்று கூறியதை 
தொடர்ந்து...

தானும் தன் 
பெற்றோர்களும்
சாப்பிட்டு மூணு
நாளாச்சு...

தங்கள் 
மூவரையும்
ஆஸ்பத்திரியில்
சேர்க்குமாறு
கெஞ்சி கேட்டு
இருக்கிறான்.

இதை கேட்டு
வேதனை பட்ட
காவலர்...

தன் சொந்த
பணத்தில்
2000 கிலோ 
அரிசி
500 கிலோ 
காய்கறி
மற்றும் 
மளிகை
பொருட்களை
வாங்கி...

அந்த பகுதி
ஏழை மக்களுக்கு
வழங்கி... 

பசியை 
போக்கி
இருக்கிறார்.

ஈரோடு 
மாவட்டத்தை
சேர்ந்த...

ஊராட்சி 
ஒன்றிய 
பள்ளியில்
பணிபுரியும்...

*லீலாவதி*
மற்றும்
*உமா தேவி* 
என்னும் இரு 
ஆசிரியைகள்...

தம் பள்ளியில்
படிக்கும் 32 
மாணவர்களின்
குடும்பத்திற்கு...

தலா 
1000 ரூபாய் 
வழங்கி...

அவர்களின்
வாட்டத்தை
சற்று
போக்கி
இருக்கிறார்கள்.

சென்னையில்
*பாலாஜி*
என்னும்
புரோகிதர்...

கொரோனா 
காலத்தில்
முக கவசம் 
அணியாமல் 
சென்ற 
மக்களை
பார்த்து...

வருந்தி
கண்கலங்கி
இருக்கிறார்.

மறுநாளில் 
இருந்து
தெருவில் 
நின்று...

வாகனங்களில்
போவோருக்கும்
நடந்து 
செல்வோருக்கும்...

இலவசமாக 
முக கவசம் 
விநியோகம்
செய்து வருகிறார்.

நாமக்கல்
மாவட்டத்தை 
சேர்ந்த
விவசாயி 
*மதிவர்மன்*

தன் நிலத்தில் 
விளைந்த
ஒரு டன் சிறு 
வெங்காயத்தை...

நாமக்கல் நகர
மக்களுக்கு 
இலவசமாக
வழங்கி உள்ளார்.

மனிதர்களின்
மனங்களில்
ஈரம்...

இன்னமும்
இருந்து
கொண்டுதான்
இருக்கிறது.

இக்கட்டான
நேரங்களில்
அது
வெளிப்படவும்
செய்கிறது.

 _*கொடுப்பவன்*_
 _*பெறுகிறான்*_
  
 _*கெடுப்பவன்*_
 _*அழிகிறான்*_

இது 
*பட்டினத்தாரின்*
பொன்
வாசகங்கள்.

 _*இட்டுப்பார்*_
 _*உண்டவர்கள்*_
 _*இன்புற்று*_
 _*இருக்கையிலே*_

 _*தொட்டுப்பார்*_
 _*உன்இதயத்தை*_
 _*தோன்றும்*_ 
 _*அதில் இன்பம்*_

இது
*பாரதி தாசனின்*
வார்த்தைகள்.

வாங்க...

பட்டினத்தாரின்
வாசகங்கள்
படியும்...

பாரதிதாசனின்
வார்த்தைகளின்
படியும்...

பாதிக்க பட்ட
மக்களுக்கு...

உணவோ
உடையோ
பொருளோ
பணமோ...

எதையாவது
கொடுத்து
உதவலாம்.

கொடுப்பதில்
உள்ள 
மகிழ்ச்சியை
உணர
தொடங்கலாம்.

_*மனம் இருந்தால்*_
_*மார்க்கம் உண்டு*_

அன்புடன்
காலை
வணக்கம்.


நன்றி
முனை.சுந்தரமூர்த்தி

Friday, July 10, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

சாமர்த்தியமான
மனிதராய்
வாழ்வது...

கடவுள்
கொடுத்த
வரமாக..

சிலர்
நினைக்கலாம்.

ஆனால்...

அன்பான
மனிதராய்
வாழ்வது தான்
வாழ்க்கை.

இதில்
தோல்விகளும்
வருத்தங்களும்
வலிகளும் கூட
ஏற்படலாம்.

அதை
முறியடிக்கும்
அல்லது
ஏற்கும்
பக்குவம்...

அன்பு மனம்
படைத்தவர்கள்
பெற்று
இருப்பார்கள்.

காலத்தை
கடந்தும்
மக்கள்
மனதில்
அவர்கள்...

வாழ்ந்து
கொண்டும்
இருப்பார்கள்.

அவர்கள்
நிரந்தரம்
ஆனவர்கள் 
அழிவதில்லை.

எந்த
நிலையிலும்
அவர்களுக்கு 
மரணமில்லை.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Thursday, July 09, 2020

புதிய பார்வை,...புதிய கோணம்....

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒரு 
கோவிலின்
வெளியே
இரண்டு
பிச்சைகாரர்கள்...

ஒரு 
பிச்சைக்காரன்
கடவுளின்
பெயரை
சொல்லியும்...

இன்னொரு
பிச்சைக்காரன்
மன்னரின்
பெயரை
சொல்லியும்...

பிச்சை எடுத்து
கொண்டிருந்தனர்.

மாறுவேடத்தில்
இருந்த மன்னர் 
இந்த இரண்டு
பிச்சைக்காரர்களின்
செயல்களை
கண்காணித்து
கொண்டிருந்தார்.

தன் பெயரை
சொல்லி பிச்சை
எடுத்து கொண்டு
இருந்த அந்த
பிச்சைக்காரன்
மேல்... 

மன்னருக்கு
கரிசனம்
ஏற்பட்டது.

இரண்டு நாள்
கழித்து அரசவை
விழாக்கோலம்
கொண்டிருந்தது.

அந்த 
விழாவில்
ஏழைகளுக்கு
பல்வேறு 
உதவிகளை
செய்து
கொண்டிருந்தார்
மன்னர்.

அப்போது
அந்த வரிசையில்
இரண்டு நாளுக்கு
முன் பார்த்த அந்த
இரண்டு 
பிச்சைகாரர்கள்
நின்று 
கொண்டிருந்ததை
மன்னர் பார்த்தார்.

கடவுளின்
பெயரை சொல்லி
பிச்சை கேட்டு
கொண்டிருந்த
முதல் 
பிச்சைகாரனுக்கு...

புது 
துணிமணிகள்
கொஞ்சம் 
நாணயம்
கொடுத்து 
அனுப்பினார்.

தன் பெயரை
சொல்லி 
பிச்சை கேட்டு 
கொண்டிருந்த
அந்த இரண்டாவது
பிச்சைகாரனுக்கு...

புது துணிமணிகள்
கொஞ்சம் நாணயம்
இவைகளுடன்
சேர்த்து...

ஒரு
பரங்கிக்காயை
கொடுத்து 
அனுப்பினார்.

இந்நிகழ்வுகள்
நடந்து ஒரு வாரம்
சென்றது.

மன்னர் 
கோவிலுக்கு
சென்றார்.

அங்கே
இரண்டாவது
பிச்சைக்காரர்
மட்டும் அமர்ந்து...

மன்னர் பெயரை
சொல்லி பிச்சை
எடுத்து
கொண்டிருந்தான்.

மன்னர்
அவனருகில்
சென்று...

விழா நாளன்று
உனக்கு புது
துணிமணிகளுடன்
நாணயங்கள் 
மற்றும்...

பரங்கிக்காயை
கொடுத்து
அனுப்பினேனே
அதை என்ன
செய்தாய்???

என்று 
வினவினார்.

அதற்கு
பிச்சைக்காரன்
தாங்கள் 
கொடுத்த
நாணயங்களை
செலவு செய்து
விட்டேன்.

பரங்கிக்காயை
5 வெள்ளி 
நாணயத்திற்கு
விற்று அதையும்
செலவு செய்து
விட்டேன் 
என்றான்.

இவன் 
பதிலில்
கோபமுற்ற
மன்னர்...

அடேய் முட்டாள்
பரங்கிக்காயின்
உள்ளே தங்க
வைர நகைகளை
போட்டு உனக்கு
கொடுத்தேனே.

அவைகளின்
மதிப்பு 
அறியாமல்
5 வெள்ளிக்கு
விற்று விட்டாயே.

உன் 
தலைஎழுத்து
கடைசி வரை
இப்படியே 
இருக்க
வேண்டியதுதான்...

என 
திட்டி விட்டு 
சென்றார்.

வழியில் முதல்
பிச்சைக்காரன்
அலங்கார 
உடைகளுடன்
மன்னருக்கு
எதிரில் வந்து...

மன்னருக்கு
வணக்கம்
செலுத்தினான்.

மன்னர்
ஆச்சரியப்பட்டு
நீ எவ்வாறு
பணக்காரனாக
மாறினாய்???
என்று கேட்டார்.

இறைவன்
பெயரை 
சொல்லி
பிச்சை எடுத்து
வந்த எனக்கு...

இறைவனே
ஒரு வழியை
காட்டினான்
என்றார்.

குழப்பம் 
அடைந்த
மன்னர் சற்று
விளக்கமாக
கூறுமாறு 
வேண்டினார்.

மன்னரே...

தாங்கள் 
விழாவில்
கொடுத்த 
பணத்திற்கு 
ஏழைகளுக்கு
அன்னதானம்
செய்யும்
நோக்கத்தில்...

எதிரில் வந்த 
ஒருவனிடம்
பரங்கிக்காயை
5 வெள்ளிக்கு
வாங்கினேன்.

வீட்டிற்கு சென்று
அதை அரியும் 
போது...

அதனுள்ளே 
தங்க வைர 
நகைகள் 
இருந்தது.

அவைகளை 
விற்று வந்த 
பணத்தில்

ஏழைகளுக்கு
அன்னதானம்
செய்து...

மீதமுள்ள
பணத்தில் ஒரு
சிறிய வீடும்
கொஞ்சம் நிலமும்
வாங்கி...
 
விவசாயம்
செய்ய 
தொடங்கினேன்.

இவை
எல்லாவற்றிற்கும்
காரணம்...

தினமும்
இறைவன்
பெயரை சொல்லி
பிச்சை கேட்டதே
என்றும்...

தன்னை 
ஆசிர்வாதம்
செய்யும் படியும்
மன்னரை 
வேண்டினான்.

அந்த
தருணத்தில்
மன்னர்...

தம் பெயரை விட
இறைவன் 
பெயருக்குதான் 
மகிமை என்பதை
உணர்ந்தார்.

வாங்க...

இறைவன்
பெயரை
என்றும்
சொன்னால்
எதுவும் 
நடக்கும்...

அவர் 
இதயத்தோடு 
கலந்து விட்டால்
எல்லாம் 
கிடைக்கும்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

Wednesday, July 08, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

நேர்மறை
சிந்தனையின்
தந்தை என
அழைக்கபடுபவர்
நார்மன்
வின்சென்ட்
பீலே.

நேர்மறை 
சிந்தனையின் 
திறன் 
என்ற நூலை
எழுதிய இவர்...

வாழ்க்கையில் 
பெற வேண்டிய 
வெற்றிகள், 
நம்பிக்கைகள், 
மகிழ்வான 
தருணங்கள், 
சிறப்புகள் 
பற்றி...

விரிவாகவும், 
இயல்பாகவும், 
அனைவரும்
ஏற்று கொள்ளும்
வகையிலும்...

இந்த 
புத்தகத்தில் 
எளிமையாக
விளக்குகிறார்.

ஏறக்குறைய 50 
ஆண்டுகளுக்கு
முன்னரே...

10 லட்சம் 
மக்களின்
மனதை 
மாற்றிய
நூல் இது.

மக்கள் 
எதிர்மறையான 
எண்ணங்களை 
கைவிட வேண்டும் 
என்றும்...

வாழ்க்கையில் 
நாம் வெற்றி பெற 
வேண்டுமானால்...

நமது 
நம்பிக்கை, 
நமக்கு
சாதகமான 
சூழ்நிலைகளை...

நமக்கு
ஏற்ற வகையில்
நாம் அமைத்து
கொள்ள வேண்டும்
என்றும் கூறியவர்
இவர்.

இவரின்
சிந்தனை 
துளிகள்
சில...

நல்லதே நடக்கும்
என உறுதியுடன்
இருப்பவர்கள்...

இறைவனின்
மகத்தான சக்தி
பெற்று வளம்
பெறுவர்.

உங்களுக்கு
தேவையான
சக்தியும்
செயல் 
ஊக்கமும்
உங்களிடம் தான்
உள்ளது.

இவைகளை
நீங்கள்
முழுமையாக
நம்பினால்...

இவை 
இரண்டும்
நீர்வீழ்ச்சி போல
தங்கு தடையின்றி
உங்களுக்கு
கிடைக்கும்.

வாழ்க்கையை 
அதன் போக்கில் 
அமைதியாக 
ஏற்று 
கொள்ளுங்கள். 

கட்டுப்பாட்டுடன் 
கூடிய 
உணர்ச்சியோடு 
உங்கள் 
பிரச்சனைகளை
கையாளுங்கள். 

வெற்றியை
நோக்கி
தொடர்ந்து 
சீராக 
செயல்படுங்கள்

உண்மையிலேயே 
சக்தி குறைந்து 
விட்டோமோ 
என்ற உணர்வே...
 
தனி 
மனிதனையும் 
சரி, 
ஒரு நாட்டையும் 
சரி, 
மிகவும் பாதித்து
விடுகிறது.

வாங்க...

இவரது 
கருத்துக்களை
முடிந்தவரை
தொடர
செய்வோம்.

இன்பமான
வாழ்வு 
அமைத்து 
கொள்ள
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
மதிய 
வணக்கம்


இங்க் பேனா - சுஜாதா

*இங்க் பேனா* - சுஜாதா
(இங்க் பேனா பற்றி இவ்வளவு சுவாரஸ்யமா எழுத சுஜாதாவோட இங்க் பேனாவால மட்டும்தான் முடியும்)👌👌💪

ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.

நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"

வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? 
 12/= ரூபாய்.) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.

நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!

சின்ன வயதில்  பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்திரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

கடைகளில்  தடியாகக் கட்டை பேனா கிடைக்கும். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகப்
படுத்துவார்கள்.  பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.

பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோகப் படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும். 
வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை  உபயோகப்படுத்த மாட்டார்கள்.

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.

கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  பேனா எழுதவில்லை என்றால் சாக்பீசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பீஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது  புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.

கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாய்லட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.

இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது.  ஆனால் இங்க் பேனாவை இப்போது நாம்  தொலைத்துவிட்டோம்

- படித்ததில் பிடித்தது