Sunday, April 10, 2022

அப்பா பாசம் பொய்யாகலாமா...?

அப்பா பாசம்பொய்க்கலாமா..?*

அன்புப் பிள்ளையே !

கைப்பேசிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு

காது கொடுத்து கேள்

" அப்பா நான் படிக்கணும்பா
கைப்பேசி வேணும்பா 

 வெல கம்மியில
வாங்கித் தாப்பா "

இப்படி நீ கேட்டப்போ
நெஞ்சுருகிப் போனேன்

சக்திக்கும் மீறி
கடன வாங்கி

தரமான கைப்பேசியை

உன் கையில கொடுத்துப்புட்டு 

"படிக்குது என் புள்ளன்னு"

நம்பித்தானே நான் கிடந்தேன்

"வரவுக்கு மீறிய செலவு
வேண்டாம்" னு 

அம்மா தடுத்த  போது...

" புள்ளப் படிப்புக்கு இது முக்கியமாக்கும்

உனக்கு ஒரு எழவும் தெரியாது " ன்னு

முரட்டு பிடவாதமா

வாங்கித் தந்த கைப்பேசி அது

கவனிச்சு பாத்தியா நீ...

கறிச்சோறு குறைஞ்சு போச்சு

மூனு வேள சாப்பாடு

இரண்டு வேளையா
மாறிப் போச்சு....

 சக்தி இல்லா
உடம்பினால

சம்பாதினையும்
பாதியாச்சி !

மானம் காத்த
துணியெல்லாம்

நஞ்சும் கூட போயாச்சு

உன் கவனமோ 
கைப்பேசியில் நிலையாச்சு

நான் படுற 
பாடெல்லாம்

நீ பட வேணாம் னு

இராப்பகலா உழைக்கிறேனே

தூக்கமின்றி கிடக்கிறேனே

சம்பந்தமே இல்லாதது போல
கைப்பேசியில் வாழறியே !

என்னப் படிக்கிறேன்னு

எதேச்சையா பார்த்தப்போ

படிப்புக்குச் சம்பந்தமில்லா

விளையாட்டில் நீ மூழ்கி

எட்டிப்பார்ப்பது *அப்பா* ங்கிறதையும் மறந்து

ஆனந்தக் களிப்பில்

ஆடித் திளைக்கிறியே !

அன்றொரு நாள் வாத்தியார்

"கொஞ்ச நாளா
உம் புள்ள  போற போக்கு சரியில்லை"ன்னு

குறையா 
சொன்னப்போ
ஏத்துக்காத எம் மனசு

கண்ணெதிரே கண்ட பின்பு

கலங்கித்தான் தவிக்கிறதே !

உனக்காக நான் சுமந்த
வலிகளெல்லாம்

எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து

ஏளனமாய்ச் 
சிரிக்கிறதே

"உன்னைக் கெடுத்தது
நான்தான்" என

அம்மா ஏசுகிறாளே !

கொஞ்சம் யோசி என் உசுரே !

கைப்பேசி இல்லாதப்போ

கலகலப்பா இருந்த வீடு

இப்படி வெளவெளத்து கிடக்கிறதே !

இனி ஒரு முடிவெடு

உனக்கான சிகரத்தை

உனக்கான விலாசத்தை

உலகினில் பதிக்க

எந்திரக் கருவியை

மந்திரக் கருவியாக மாற்று

இனியும் இதனுள் மூழ்காதே

அறிவியல் சாதனம்

ஆற்றலை வளர்க்கும்

மூலமாக மாறட்டும்

"எம் புள்ள
ஜெயிக்கும்"

என்ற  நம்பிக்கை மட்டும்

எப்போதும்
பொய்த்துப் போகாது இருக்கட்டும்

 பாசத்துடன் அப்பா

நன்றி!
பகிர்வு பதிவு...

Friday, April 08, 2022

தமிழ் வாழ்க...

“ஐயா வணக்கம்."

"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"

"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"

"நேற்றுதான் ஐயா *புலனம் (WhatsApp)* மூலம் அனுப்பினேன். இன்று காலை *பற்றியம் (Messenger)* மூலமும் பகிர்ந்தேன்."

"நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது *தொலைவரி (Telegram)* தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். *இயங்கலை (Online)* மூலம் பங்கேற்கலாமா ?" 

"சரி ஐயா. *காயலை (Skype)* மூலம் பேசுங்கள். நாங்கள் *ஒளிவீச்சி (Projector)* மூலம் பங்கேற் பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்."

"மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் *தடங்காட்டி (GPS)* உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன்.   "

"பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் *படவரி (Instagram)* மூலமும், *கீச்சகம் (Twitter)* மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்."

"நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் *அருகலை (WiFi)* வசதி இருக்கிறதா?" 

"இல்லை ஐயா. எனது இன்னொரு *திறன்பேசி (Smart Phone)* மூலம் *பகிரலை (Hotspot)* உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா. உங்கள் இல்லத்தில் *ஆலலை (Broadband)* இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?" 

"இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை."

"உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, *வலையொளி (Youtube)* மூலமும், *முகநூல் (Facebook)* மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை *வன்தட்டில் (Hard Disk)* கில் சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு *முடக்கலை (Offline)* யிலும் கண்டு களிக்கலாம்."

"மிக்க நன்றி

*⭕ WeChat          -        அளாவி* 
*⭕Bluetooth       -        ஊடலை* 
*⭕ Thumbdrive   -       விரலி* 
*⭕ cctv                 -       மறைகாணி* 
*⭕ OCR              -         எழுத்துணரி* 
*⭕ LED              -         ஒளிர்விமுனை*  
*⭕ 3D                  -        முத்திரட்சி* 
*⭕ 2D                 -         இருதிரட்சி* 
*⭕ Printer          -        அச்சுப்பொறி* 
*⭕ Scanner         -        வருடி* 
*⭕ Simcard          -       செறிவட்டை* 
*⭕ Charger          -        மின்னூக்கி* 
*⭕ Digital             -         எண்மின்* 
*⭕ Cyber            -          மின்வெளி* 
*⭕ Router           -         திசைவி* 
*⭕ Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு*
*⭕ Thumbnail              சிறுபடம்* 
*⭕ Meme           -         போன்மி* 
*⭕ Print Screen -          திரைப் பிடிப்பு* 
*⭕ Inkjet             -           மைவீச்சு* 
*⭕ Laser            -          சீரொளி*

தமிழ் வாழ்க...🙏🙏