Showing posts with label ஆசிரியர்கள். Show all posts
Showing posts with label ஆசிரியர்கள். Show all posts

Thursday, July 15, 2021

பாரதியாரின் தமிழ் மொழி வாழ்த்து..என் குரலில்


வகுப்பு எட்டு
படம்..தமிழ்
அலகு.1
கவிதைப் பேழை
பாரதியார் எழுதிய தமிழ் மொழி வாழ்த்து...கேளுங்கள்...தமிழை அள்ளி பருகுங்கள்...


https://anchor.fm/sivaramakrishnan7/episodes/8-e14ftps

Tuesday, June 29, 2021

கண்ணாடி சொல்லும் பாடம்...



கண்ணாடி சொல்லித்தரும் பாடம்..!!*  

ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அந்தப் பெரியவரிடம் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அந்த பெரியவர் அடிக்கடி அந்த கண்ணாடியை எடுத்து பார்ப்பார். 
அதன் பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். 

இதனை தொடர்ந்து அவரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் கவனித்து வந்தான். 
பெரியவரின் இந்த செய்கையானது இளைஞனுக்குக் குறுகுறுப்பை உண்டாக்கியது…!

*'அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதை எடுத்து உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை ஏதாவது மாயா ஜாலக் கண்ணாடியோ?’* என்று நினைத்தான்.

தொடர்ந்து பெரியவரின் செயலால் ஈர்க்கப்பட்டான்.. 

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அதுபற்றி அந்த பெரியவரிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்து
பெரியவரிடம் நேரில் சென்றான்.

*“ஐயா…!”*

*"என்ன தம்பி?”*

*“உங்கள் கையில் இருப்பது முகம் பார்க்கும் கண்ணாடிதானே?”*

*"ஆமாம்!”*

*"அதில் என்ன தெரிகிறது?”*

*"நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்! அவ்வளவுதான்... ஏன் கேட்கிறாய்..!”*

*"அப்படியானால் அதுவும் எல்லோரிடமும் இருப்பது போன்ற சாதாரணக் கண்ணாடிதானே அது?”*

*“ஆமாம்!”*

*"அப்படி என்றால் பிறகு ஏன் அதையே அடிக்கடி பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”*

இளைஞனின் கேள்வியை கேட்டதும் பெரியவர் புன்னகைத்தார்.

*“தம்பி... சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அதனை ஒவ்வொரு முறை எடுத்து பார்க்கும் போதும் அது தரும் பாடங்கள் நிறைய!”*
என்றார்.

இளைஞனுக்கோ ஆவல் அதிகமானது
*"பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”*


*"ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும்? எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்? என்பதை இந்தக் கண்ணாடியிடம் இருந்து கற்க முடியும்...! கற்கவும் வேண்டும்...”*
என்றார் பெரியவர்.

*“எப்படி?”*

*“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை! குறைப்பதும் இல்லை! உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?"*

*“ஆமாம்”*

*“அதே போல் உன் சகோதரனிடம், நண்பனிடம், உன் உறவுகளிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகைப்படுத்தியோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பை தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி நமக்கு சொல்லும் 'முதல் பாடம்'!”*

*“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்!. அடுத்து…?”*

*"கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையை காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடுகிறது... இல்லையா?”*

*“ஆமாம்!”*

*“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் அவரை பற்றி பேசக் கூடாது. இது கண்ணாடி நமக்கு கற்றுதரும் 'இரண்டாவது பாடம்'!”*

*“கிரேட்! அப்புறம்?”*

*"ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”*

*“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக பாதுகாப்பாக அல்லவா  வைத்துக் கொள்கிறார்!”*

*“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் கண்ணாடி எப்படி முகக்குறையை காட்டும் போது, ஏற்று கொள்கிறோமோ, அதேபோல் அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால், கறையை போக்க, முகத்தை திருத்தி கொள்வது போல, அவர் சுட்டிக்காட்டிய குறைகளையும், திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் 'மூன்றாவது பாடம்'!”*

*"ஆகா.... அருமையான விஷயம்"*

*“இன்னும் ஆழமாக யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கலாம்!”*
என்றார் அந்த பெரியவர்.

இந்த விளக்கங்களை  கேட்ட அந்த இளைஞன் வியந்து போனான். 
*"ஒரு கண்ணாடியில் இவ்வளவு விசயங்கள் இருக்கா?... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையான விஷயங்களே!!... நன்றி அய்யா.."*
என்று அந்த பெரியவருக்கு  நன்றி கூறி விட்டு மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் சென்றான் அந்த இளைஞன்.

ஆமாம்...

அந்த பெரியவர் சொன்னது போலவே

*நம் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் கண்ணாடி போன்றவர்களே!!* 

*ஒருவரைப்பற்றி மிகைப்படுத்தியோ, குறைத்தோ, பேசுவதும் கூடாது*

*ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசுவதும் கூடாது!!*

*ஒருவர் நமது தவறினை சுட்டிக்காட்டும் போது... ஏற்று கொள்ளாமல் இருப்பதும் கூடாது!!*

*கண்ணாடி சொல்லித்தரும் இந்த பாடங்களை நாமும் கடைபிடித்துதான் பார்ப்போமே!!!*

 படித்ததில்  பிடித்தது...
பகிர்வு பதிவு

Sunday, June 07, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

துறவியிடம்
விறகு வெட்டும்
தொழிலாளி
ஒருவன்,
பணக்காரர் ஆக
வழி கேட்டான்.

துறவி 
சொன்னார்...

காட்டுக்கு 
உள்ளே சென்று 
உன் தொழிலை 
செய். பணக்காரன்
ஆவாய்.

இவன் 
உள்ளே சென்றான்.

அங்கே தேக்கு 
மரங்கள் இருந்தன 
வெட்டி விற்றான்.
பணம் நிறைய 
வந்தது.

மறுபடியும் 
துறவியிடம் சென்று
மேலும் பணம் 
வேண்டும் என்றான்.

துறவி 
கூறினார்...

இன்னமும் 
உள்ளே போ.

இவன் 
துறவி கூறியபடி
இன்னும் உள்ளே 
சென்றான்.

அங்கே கருந்தேக்கு
மரங்கள் இருந்தன.
வெட்டி பணமாக்கி 
பெரிய பணக்காரன்
ஆனான்.

இதிலும் திருப்தி 
அடையாத இவன்...

மேலும் பணம் 
சேர்க்க ஆசைப்பட்டு
துறவியிடம் சென்று
கேட்டான்.

துறவி 
கூறினார்...

இன்னமும் 
உள்ளே போ.

இவன் 
சென்று பார்த்தான்.

அங்கே 
விலையுயர்ந்த 
அகர் மரங்கள் 
இருந்தன.

இவன் 
அதையும் வெட்டி
விற்று மிக பெரிய 
பணக்காரன் 
ஆகிப்போனான்.

இப்போது 
ஒரு கேள்வி
மனதில் எழுந்தது.

இவை எல்லாம் 
தெரிந்தும் துறவி 
ஏன் இந்த 
காரியங்களை 
செய்யவில்லை ?

இதை 
அவரிடமே 
கேட்டான் 
விறகு வெட்டி.

துறவி...

காட்டின் உள்ளே 
செல்ல செல்ல 
பணக்காரன் 
ஆகும் வழி 
உனக்கு 
தெரிந்தது.

பணம் பொருள் 
இவைகளை விட
ஒரு அற்புதமான 
விஷயம் உள்ளது.

அதன் பெயர்
'மன அமைதி'

அது உனக்கு 
தேவைப்படும் 
காலம் வரும்.

அப்போது 
என்னை வந்து 
பார்.

உனக்கு 
எல்லாம் புரியும்
என சொல்லி 
அனுப்பினார்.

நாட்கள் 
நகர்ந்தன...

பணம் சேர்ந்த 
கையோடு 
பல்வேறு 
நிலைகளில்,

வாழ்வு சென்றதில்
அவன் மனதில்
மகிழ்ச்சி குறைய
தொடங்கியது.

இப்போது 
துறவியை தேடி 
சென்று...

'மன அமைதி' 
பெறும் வழியை 
கேட்டான் அந்த 
விறகு வெட்டி.

துறவி கூறினார்
உள்ளே போ.

விறகு வெட்டி 
குழம்பினான்.

உள்ளே உள்ளே 
போனதால் தான்
பணக்காரன்
ஆனேன்.

இன்னமும் நான்
உள்ளே போக 
மாட்டேன் 
என்றான்.

துறவி 
அவனை பார்த்து 
நகைத்து விட்டு...

வா 
இந்த மரத்தடியில் 
உட்கார்.

எல்லாவற்றையும் 
மறந்து மனதளவில்
துறந்து உன் மனதில்
உள்ளே போ. 

மன அமைதி 
உனக்கு கிட்டும்
என்று கூறினார்
துறவி.

அவர் 
கூறியபடியே
எல்லாவற்றையும்
மறந்து மரத்தின் 
கீழ் அமர்ந்தான் 
விறகு வெட்டி.

மனதின் 
உள்ளே 
உள்ளே 
சென்றான்.

பல 
சிந்தனைகள் 
புறப்பட்டன.

அவன் 
ஞானம் பெற 
தொடங்கினான்.

தன்னை
அறிந்தவன்
ஞானி ஆகிறான்.

தன்னையே
வென்றவன்
மகான் ஆகிறான்.

இது 
வார்த்தைகள்
மட்டுமல்ல...

வாழ்வியல்
நெறிகளும்
கூட...

வாங்க..

மன நிம்மதி
மற்றும்
மன அமைதி
பெற...

நம்மை நாம் 
அறிய
தொடங்கலாம்.

நம்மை நாம்
வெல்ல
முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

💫💫💫💫💫💫💫💫

Tuesday, June 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
பொன்மாலை
பொழுது...

பூங்காவில்
சிறுவன் ஒருவன்
பள்ளியில் இருந்து
வந்து ஒரு பெஞ்சில்
அமர்ந்தான்.

தன் பையில் 
இருந்து
ஒரு பாக்ஸை 
எடுத்து...

அதில் இருந்த 
உணவை உண்ண 
தொடங்கினான்.

யதேச்சையாக
எதிர் பெஞ்ச்சை
பார்த்தான்.

அங்கு ஒரு
வயதான பாட்டி
புன்னகையுடன்
இவனை
பார்த்தபடி
அமர்ந்திருந்தார்.

இதை கண்ணுற்ற
சிறுவன் தானும்
புன்னகைத்த படி
அந்த பாட்டியை
உணவருந்த 
அழைத்தான்.

பாட்டியும் 
சிறுவன் அமர்ந்த 
பெஞ்சில் அமர்ந்து 
அவன் கொடுத்த 
உணவை உண்டார்.

சற்று நேரத்தில்
இருவரும் 
புன்னைகைத்தபடி
அவரவர் வீட்டிற்கு
திரும்பினர்.

சிறுவனின் தாய்
என்ன இன்று 
நீ மிகவும் 
மகிழ்ச்சியாய்
இருக்கிறாய்?
என்று கேட்டார்.

அம்மா 
இன்று மாலை 
பூங்காவில் ஒரு 
கடவுளை 
கண்டேன்...
 
அவர் 
மிக அழகாக 
புன்னகைத்தார்...

அந்த அன்பு முகத்தை 
என்னால் மறக்க 
இயலவில்லை
என்று கூறினான்.

அதே நேரம்
பாட்டி வீட்டில்...

பாட்டியின் மகள்
இன்று நீங்கள் 
மிகவும்
மகிழ்ச்சியாக 
இருக்கிறீர்கள்
என்ன காரணம்?
என்று கேட்டாள்.

பாட்டி...

இன்று மாலை
நான் ஒரு 
கடவுளின்
குழந்தையை 
கண்டேன்.

அவன் அழகாக 
இருந்தான்.

பாசமாக 
என்னிடம் 
பழகினான்.

எனக்கு 
உணவு வழங்கி 
உண்ணவும் 
கூறினான். 

அவனின் 
பிரகாசமான 
புன்னகையை 
மறக்க 
முடியவில்லை 
என்று கூறினார்.

அறிமுகம் 
இல்லாத
மனிதர்கள் கூட...

அவர்களின் 
புன்னகையில்...

அவர்கள் 
வழங்கும்
சிறு ஆறுதல் 
வார்த்தைகளில்...

அவர்கள் 
செய்யும்
சிறு சிறு 
செயல்களில்...

நாம் கடவுளை
காண முடியும்.

பாசமுள்ள 
பார்வையிலே
கடவுள் 
வாழ்கிறான்...

அவன் 
கருணை கொண்ட
நெஞ்சினிலே
கோவில் 
கொள்கிறான்...

என்னும் வரிகள்
உண்மைதானே.

வாங்க...

அன்பு 
உலகில்
சஞ்சரிப்போம்.

அற்புத 
சமூகத்தை
படைக்கவும் 
செய்வோம்.



💫💫💫💫💫💫💫💫

Monday, June 01, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

கேரள
ராஜ்பவனில்
ஒரு அரசு
நிகழ்ச்சி.

தலைமை
விருந்தினர்
இந்திய
குடியரசு
தலைவர்
கலாம்
அவர்கள்.

அப்போதைய
நடைமுறை...

குடியரசு
தலைவர்
அவருக்கு
பிடித்த இரு
நபர்களை...

தம்முடைய அரசு
விருந்தினர்களாக
கலந்து கொள்ள
செய்யலாம்.

கலாமும் 
இருவரை
கூட்டி சென்றார்.

ஒருவர்
சாலையில்
செருப்பு
தைக்கும்
தொழிலாளி...

மற்றொருவர்
சிறிய அளவில்
ஓட்டல் நடத்தி
கொண்டிருந்தவர்.

விழா 
நடத்தியவர்கள்
இதைக்கண்டு
நெகிழ்ந்தனர்.

அதில்
பங்குபெற்ற
அந்த ஏழை
விருந்தினர்கள்
மகிழ்ந்தனர்.

தன்னுடன் 
பழகிய
நபர்களை...

அவர்கள்
எந்த நிலையில்
இருந்தாலும்...

மதிப்பு
கொடுத்து
மகிழ வைத்து
பார்ப்பவர்
*மாமனிதர்*
என்பதை...

நிரூபித்து
காட்டியவர்
*கலாம்*

வாங்க...

அவர் 
வழியில்
நாமும்...

ஏழையின்
சிரிப்பில்
இறைவனை
காண...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.



🍂🍃🍂🍃🍂🍃🍂

Sunday, May 31, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

ஒரு
சொல்
மற்றவர்
வாழ்க்கையை
புரட்டி போடும்
தன்மையை
உடையது.

நாம்
உதிர்க்கும்
சொல்...

ஆளை
கொல்லும்
விஷமாக
இல்லாமல்...

அன்பை
பரப்பும்
விதையாக
இருக்கட்டும்.

மனதை
குத்தும்
முள்ளாக
இல்லாமல்...

மனதை
மயக்கும்
மலராக
மணக்கட்டும்.

அடுத்தவர்
வாழ்வு அழிய
கூடியதாக
இல்லாமல்...

அவர் 
குடும்பம்
ஜொலிக்கும்
ஒளியாக
அமையட்டும்.

அகன்அமர்ந்து 
ஈதலின் நன்றே 
முகனமர்ந்து
இன்சொலன் 
ஆகப் பெறின்.

உள்ளம் 
மகிழ்ந்து 
கொடுக்கும் 
பொருளுதவியை
விடவும்...

முகம் 
மலர்ந்து 
சொல்லும்... 

இனிமையான 
வார்த்தை 
சிறந்தது.

இது
ஐயன்
வள்ளுவனின்
வாக்கு.

வாய்ப்புகளும்
வார்த்தைகளும்
நம் வசமே.

வாங்க...

நல்லதை
நினைப்போம்.

நல்லதையே
பேசுவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


நன்றி...
- Dr.Sundar Murthy -

💫💫💫💫💫💫💫

Tuesday, May 26, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு 
விமான 
பயணம்.

எகனாமிக் 
கிளாஸ்
இருக்கை 
பகுதியில்...

பயணிகள்
அவரவர் 
இருக்கையை
பார்த்து அமர 
தொடங்கினர்.

டிப் டாப் ஆசாமி
ஒருவர் வந்தார்.

முகத்தை 
சீரியஸ் ஆக 
வைத்து 
கொண்டு... 

கடுகடு என்று 
முனுமுனுத்தபடி...

ஒருவழியாக
இருக்கையை
கண்டு பிடித்து
அமர்ந்தார்.

ஜன்னல் 
இருக்கைக்கு
பக்கத்து 
இருக்கை...

அவருக்கு
ஒதுக்க
பட்டிருந்தது.

ஜன்னல் 
இருக்கையில் 
அமர்ந்தவரிடம்...

நான் உங்கள் 
இருக்கைக்கு
வருகிறேன்.

நீங்கள் என் 
இருக்கைக்கு
வருகிறீர்களா?
என்று கேட்டார்.

அவரும் 
சரி என்று கூறி 
இருக்கையை
மாற்றி கொண்டார்.

பின்னர் 
டிப் டாப் ஆசாமி 
தான் ஒரு பெரிய 
பிசினஸ் மேன் 
என்றும் அது 
விஷயமாக 
பயணம்
மேற்கொள்வதாக
தெரிவித்தார்.

நீங்கள் யார் என்று
இவரை கேட்டார்.

என் பெயர் 
நாராயண மூர்த்தி
இன்போசிஸ் 
நிறுவன தலைவர்
என்று கூறினார்
இவர்.

இதை 
கேட்டவுடன்
நம் ஆசாமி...

சாரி சார்.
மன்னிச்சிக்குங்க 
சார்...

நீங்க 
பிசினஸ் கிளாஸ் 
பகுதியில் 
வரலாமே சார்...

இந்த
எகனாமிக் 
கிளாசில் என்
வந்தீர்கள்?
என கேட்டார்.

நாராயண 
மூர்த்தி...

பணம் இன்று 
வரும் நாளை 
போகும்...

அதே போல் தான்
அந்தஸ்தும்...

நாம் 
போக வேண்டிய 
இடத்திற்கு 
எந்த கிளாசில் 
போனால் 
என்ன?...

சேருமிடம் தான்
முக்கியம்
என்று பதில் 
கூறினார்.

நம்ம 
டிப் டாப் ஆசாமி
அப்புறம் 
வாயையே 
திறக்கவில்லை.

நிலை 
உயரும் 
போது...

பணிவு 
கொண்டால்...

உலகம் 
உன்னை 
வணங்கும்...

என்னும்
வரிகள்
உண்மைதானே.

வாங்க...

எந்த நிலையில்
இருந்தாலும்
நாம்...

எளிமையாய்
வாழ
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Monday, May 25, 2020

ஹைகூ கவிதைகள்...

ஹைகூ கவிதைகள்...

ஆக்கம்.
கனவு ஆசிரியர்
கவிஞர் ஆ.சிவா...
சேலம்.


மனைவி
₹₹₹₹₹₹₹₹
1.அடி உதை குத்து
உடம்பு வலிக்கிறது உள்ளம்
இனிக்குது மனைவியால்...


2.குடும்ப பஞ்சாயத்து தேர்தலில்
போட்டியின்றி வெற்றி பெற்ற
வேட்பாளர் மனைவி...

3. மின் இணைப்பு இல்லாமல்
மின்னுகிறது  எங்க வீட்டு
நட்சத்திர மனைவி...

4. தாய்க்கு பின் வந்த
சேய்க்கு வழி சொன்ன
மந்திரவாதி மனைவி...

5.நின்றால் பெருங்கூட்டம் தெருவில்/
நடந்தால் ஆரூர் தேரின்
அச்சாணியாய் மனைவி....!