Showing posts with label பெற்றோர்களுக்காக. Show all posts
Showing posts with label பெற்றோர்களுக்காக. Show all posts

Wednesday, December 28, 2022

புத்தகம் நமது உயிர் தோழன்...

பிள்ளைகளுக்கு புத்தகத்தை ஃப்ரெண்டாக்க...

‘பாடப் புத்தகங்களைப் படிக்க வைக்கவே பெரும்பாடாக இருக்கு. இதுல கதை புத்தகத்தை எப்படி படிக்க வைக்கிறது?’ என்ற கேள்வியைக் கேட்காத பெற்றோர்களே அதிகம். அவர்களில் நீங்களும் இருக்கலாம்.

பிள்ளைகள் பாடப் புத்தகம் தவித்த புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு முதலில் வாழ்த்துகள். ஏனெனில், பல பெற்றோர்கள் மற்ற புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

உங்களையும் அப்படிக் கேள்விக் கேட்டு குழப்பக்கூடும். யாரேனும் அவ்வாறு கேட்டால், “ஊருக்கு 100 பொறியாளர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், மற்ற பொறியாளர்களை விடவும் க்ரியேட்டிவாகச் சிந்திப்பவர்களுக்கும் அதைச் செயல்படுத்துபவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கிறது. இதுவே வருங்காலத்தில் எல்லாத் துறைக்குமே. பாடப்புத்தகங்கள் மொழியையும் தகவல்களையும் கற்றுத்தருகின்றன. குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும் க்ரியேட்டிவ் திறனை, மேலும் செழுமையாக வளர்த்தெடுக்கவே மற்ற புத்தகங்களைப் படிக்க சொல்கிறோம்” என்று அவர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள்.

சரி, எப்போது பார்த்தாலும் டிவி பார்த்துகொண்டே இருப்பவர்களின் கவனத்தை எப்படித் திருப்பலாம்? பிள்ளைகள் டிவி பார்க்கட்டும். ஆனால், நீங்கள் அவர்கள் பார்க்கும் இடத்தில் உட்கார்ந்து புத்தகம் படியுங்கள். அதுவும் பிள்ளைகளுக்கு ஏற்ற புத்தகங்களாகப் படியுங்கள். இதை, ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உங்கள் பக்கம் திரும்ப, நீங்கள் புத்தகம் பக்கம் திருப்பி விடுங்கள்.

ஒரு வாரம் கழித்தும் உங்கள் பக்கம் திரும்ப வில்லை என்றால்... கவலையே வேண்டாம். அதுக்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் படிக்கும் புத்தகத்தில் ஓவியங்கள் இருக்கும். பெரும்பாலும் கறுப்பு - வெள்ளையில்தான் இருக்கும். புதிதாக க்ரையான்ஸ் வாங்கி வந்து, அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுங்கள். நிச்சயம் உடனே பிள்ளைகள் ஒட்டிக்கொள்வார்கள். இரண்டு நாட்கள் இப்படியே செல்லட்டும். அடுத்த நாள், இந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்ட கதைக்குள் அல்லது பாடலுக்குள் இருக்கும் க்ளூ உதவும் என்று சொல்லுங்கள். வரையும் ஆர்வத்தோடு கண்டிப்பாகக் கதையைப் படிப்பார்கள்.

பிள்ளைகள் வரைந்த ஓவியங்களை மொபைலில் போட்டோ எடுத்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். அதைப் பார்த்து கிடைக்கும் பாராட்டுகளை உங்கள் பிள்ளைகளிடம் தெரிவியுங்கள். அது இன்னும் படிக்க வைக்கவும், வரைய வைக்கவும் உதவும்.

புத்தகம் படிக்க என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். பிள்ளைக்கு ஒரு புத்தகத்தைக் கொடுக்கும் முன், அதை நீங்கள் படித்துவிடுங்கள். அதில் உள்ள கேரக்டர் போல தோசை ஊற்றிக்கொடுங்கள் அல்லது பிரட்டை அந்த உருவத்திற்கு நறுக்கிக்கொடுங்கள். ’என்ன இது புதுசாக இருக்கிறதே’ என்று பிள்ளை கேட்டால், அந்தப் புத்தகம் பற்றியும் கதையில் கொஞ்சமும் சொல்லுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கான எந்த சர்ப்பரைஸ் கொடுப்பதாக இருந்தாலும், நிச்சயம் அதோடு ஒரு புத்தகம் கொடுங்கள். தவறியும்கூட புத்தகத்தை மட்டுமே சர்ப்பரைஸாகக் கொடுக்காதீர்கள். ஏனெனில், பிள்ளைகள் ரொம்ப ரொம்ப விரும்பும் / ஆசைப்படும் விஷயங்களே சர்ப்பரைஸாக இருக்கட்டும். இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில் ஒரு கட்டத்தில் சர்ப்பரைஸ் பொருளோடு என்ன புத்தகம் என்று பார்க்க ஆரம்பிப்பார்கள். பிடித்த புத்தகம் எனில், படிக்கவும் செய்வார்கள். உங்கள் பிள்ளை யாருக்கேனும் சர்ப்பரைஸ் கொடுக்க உங்களோடு சேர்ந்து திட்டமிட்டால், அதில் புத்தகத்தையும் இணைத்து விடுங்கள்.

பிள்ளையின் வயதும், அவள் கையாளும் மொழியளவையும் வைத்து புத்தகங்களைத் தேர்வு செய்யுங்கள். முடிந்தால், பிள்ளையையும் புத்தகம் வாங்க அழைத்துச் செல்லுங்கள். இந்தப் பழக்கம் நீடிக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட பணம் கொத்து பிள்ளைக்குப் பிடித்த புத்தகத்தை தானே தேர்வு செய்ய வைக்கலாம்.

உங்கள் வீட்டுக்கு புதிய பொருள் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு பிள்ளை படித்த கதையில் வரும் ஒரு கேரக்டரின் பெயரைச் சூட்டலாம். உதாரணத்திற்கு, பிள்ளைக்காக அழகான குட்டி சேர் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு ’குட்டி இளவரன்’ எனப் பெயர் வைக்கலாம். (சிறுவர்கள் படிக்க வேண்டிய நல்ல புத்தகம் குட்டி இளவரசன்). புதிய பெயர் வைக்கும் ஆவலில் புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள்.

படித்த புத்தகம் பற்றி பிள்ளையின் கருத்துகளை பேப்பரில் எழுத வைக்கலாம். பேச வைத்து வீடியோவாக்கி யூ டியூப் சேனல் தொடங்கி அதில் பதிவிட்டு வரலாம். புத்தகங்கள் படிக்கச் சொல்லும் பெற்றோர் இரண்டு விஷயங்களை எப்போதும் கடைபிடியுங்கள். முதலாவது, உங்கள் பிள்ளைக்குப் பிடிக்கவே பிடிக்காத புத்தகத்தைத் திணிக்காதீர்கள். மற்ற புத்தகங்களை வாசிக்க வாசிக்க பிள்ளையாகவே அந்தப் புத்தகத்தைத் தேடி வரும். இரண்டாவது, படித்த புத்தகங்கள் பற்றி கேள்விகளாகக் கேட்காமல் உரையாடுங்கள். இப்படி இந்தக் கதை முடிந்தது சரியே இல்லை. வேறு மாதிரி முடிந்திருக்க வேண்டும்... என்பதுபோல உரையாடுங்கள். ஒருபோதும் பாடப்புத்தகம் படித்த பிறகு கேள்வி எனும் தொனியை உருவாக்கி விட வேண்டாம். அப்படியான எண்ணம் வந்துவிட்டால், கதையின் சுவாரஸ்யத்திலிருந்து மனம் விலகி மனப்பாடம் என்பதாக மாறிவிடும். நாம் கதை / பாடல் புத்தகங்களைத் தருவதே ’ஒரு புத்தகத்தை மகிழ்ச்சியோடு படிக்கும் பழக்கம்’ உருவாக்குவதற்கே. அது கெட்டுவிடலாம். கவனம்.

- விஷ்ணுபுரம் சரவணன்

thanks: arumbu magazine
நன்றி
படித்ததில் பிடித்தது
பகிர்வு பதிவு

Sunday, April 26, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁🍁புதியபார்வை 🍁🍁

உலகில் பல
மனிதர்களை,
வருத்தத்தில்
உள்ளாக்குவது,
மனித
உறவுகளிடம்,
சமரசம்
காணாமையே.

நம்மை சுற்றி உள்ள
மனிதர்கள் மீதும்
உறவுகள் மீதும்
நமக்கிருக்கும்
கசப்பான
நினைவுகளை...

தன் வாழ்நாளின்
கடைசிநாள் வரை
சுமந்து கொண்டே
இறப்பவர்கள்
நிறைய பேர்
உள்ளனர்.

நம்
கோபத்தை
பேச்சுக்களில்
வெளிபடுத்தி,
ஜெயிக்கிறோம்
அல்லது
தோற்கிறோம்.

தொடர்ந்து
அவர்களை
எப்படியாவது
வெல்லும்
எண்ணங்களிலும்
செயல்களிலும்
ஈடுபடுகிறோம்.

இதன்
விளைவுகள்...

வருத்தங்கள்,
வேதனைகள்,
பகை உணர்வுகள்
தான்.

இந்த
வாழ்வு முறை,
அடுத்த
தலைமுறை வரை
தொடர்தல்,
அதை விட
கொடுமையானது.

மனித உறவுகள்
என்பது
மகத்தானது !
உயர்வானது !!
உன்னதமானது !!!

"தன்னைப்போல
பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே

அந்த தன்மை வர
உள்ளத்திலே
கருணை வேண்டுமே

பொன்னைப்போல
மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை

இதை புரிந்துகொண்ட
ஒருவனை போல்
மனிதன் வேறில்லை"

என்னும்
வைர வரிகள்
நினைவு
கூறத்தக்கது.

வாங்க...

கசப்பான
நினைவுகளை
களை எடுப்போம்.

மக்கள் விரும்பும்
மனிதனாக வாழ
முயற்சிகள் செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Thursday, April 23, 2020

நாட்டின் வளர்ச்சி...வீழ்ச்சியில்...ஆசிரியர்கள்

ஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில்.

இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும்.

பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது.

ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும்; எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும்.

ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும்.

அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள்.

பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள்.

மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு "உயிரின் வாழ்வியலுக்கு" அவசியமானவர்.

பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான்.

இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும், போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும்" அதிகரித்துக் காணப்படுவார்கள்.

அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும்.

''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி" "சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.

பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.

எனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.

- முக நூல் பதிவு -

அன்புடன்
காலை
வணக்கம்.

Saturday, December 07, 2019

பெற்றோர்களே ஒரு நிமிடம்...

ட#குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு...! நாளைக்காக மட்டும் வாழமுடியுமா? ( சற்று பெரிய பதிவுதான் இருப்பினும் படிக்க வேண்டிய ஒரு கடிதம்)

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள் இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான்.

மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்
‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.

ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான்

‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க mm நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’
அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’
‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும்.

எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’
‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’
அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன்.

அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்
‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.
All parents - do read it
✍✍✍✍

நன்றி..வாசித்த அனைவருக்கும்...

Saturday, November 23, 2019

இனிமை..கணிதம்...

சேலம் ஊரகம் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...நேற்று (12-7-19) கணித மன்ற துவக்க விழா நடைப்பெற்றது.

அது சமயம் பள்ளி தலைமை ஆசிரியர்  வாழ்க்கைக்கு கணிதம் மிக முக்கியம் என்றும் மாணவர்கள் அனைவரும் கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தலை சந்தேகமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார்கள்...

பின்னர் 8 ஆம் வகுப்பு ( கௌதம், மாணவர்கள்  "நான் விரும்பும்  கணித மேதை" என்ற தலைப்பில்  கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றி பல அறிய தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் " எங்கும் கணிதம் எதிலும் கணிதம் " என்ற குறு நாடகம் நடித்து காட்டி நம் வாழ்வில் கணிதம் எப்படி பின்னி படர்ந்துள்ளது என்பதை நகைச்சுவை உணர்வோடு மாணவர்களுக்கு நடித்து காட்டினார்கள்....

பின்னர் எம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் ( அபர்ணா,) "உங்களுக்கு தெரியுமா ? "என்ற தலைப்பில் பல அறிய கணித தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்தார்கள்...

அடுத்த நிகழ்வாக எம் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வினாடி வினா நடத்தி மாணவர்களின் கணித அறிவை சோதித்து அவர்களை உற்சாக படுத்தினார்கள்...

பின்னர்  எம் 8 ஆம் வகுப்பு மாணவிகள் "நொடி கணக்கு" என்ற தலைப்பில் (தீபா,     ) மாணவர்களிடம் மனகணக்கு போட்டு அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தனர்.

இறுதியாக மாணவ மாணவியர் கணித மன்ற தொடக்க விழாவில் கூறிய பல தகவல் தங்களுக்கு புதியனவாகவும், மகிழ்வு தருவதாக இருப்பதாகவும் தொடந்து வரும் வாரங்களில் தங்களின் பங்களிப்பு இருக்கும்  என்று கூறியது கணித ஆசிரியரான எனக்கு ( ஆ.சிவராமகிருஷ்ணன்) மிக்க மகிழ்ச்சி அளித்தது.

மிக்க அன்புடன்
ஆ.சிவராமகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் )
ஊ.ஒ.ந.நி.பள்ளி
சர்க்கார்கொல்லப்பட்டி
சேலம் ஊரகம்.
சேலம்.

இனிமை கணிதம்...

கணித மன்ற செயல்பாடு உங்கள் செய்தியில் வெளியிட அன்போடு வேண்டுகிறேன்.

அன்போடு
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.

Monday, October 21, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

'ராவியதுல் பஸரியா' என்று ஈராக் நாட்டில், ஒரு பெண் ஞானி இருந்தார்.

அவர் ஒரு நாள், தெருவில் போய் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் காலத்திலேயே வாழ்ந்த, இன்னொரு ஞானி ஒருவர், 
கைகளை ஏந்தி, இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

"இறைவா! எனக்கு வெற்றியின் கதவுகளை திறந்து விடுவாயாக. உன் கருணையின் கதவுகளை திறப்பாயாக" என்று.

அதை கேட்ட 'ராவியதுல் பஸரியா' பிரார்த்தித்து கொண்டிருந்த அந்த ஞானியின் தலையில்,
ஓங்கி குட்டினார்.

வலியோடும் கோபத்தோடும், 'யார் அப்படிச் செய்தது' என்று  திரும்பிய அந்த ஞானியை, பார்த்து...

"இன்னும் எவ்வளவு காலத்துக்கு, இப்படி முட்டாள்தனமாக, பிரார்த்தித்து கொண்டிருப்பாய்?

வெற்றியின் கதவுகளும், கருணையின் கதவுகளும், என்றைக்கு மூடியிருந்தன?

அவை எப்போதுமே திறந்தேதான் உள்ளன "
என்று ராபியா கூறினார்.

ஆம்.

அவர் சொன்னது சரிதான். அவை என்றைக்குமே மூடியிருந்ததில்லை.

ஆனால்...

நாம்தான், நமது தவறுகளாலும், முட்டாள் தனங்களாலும், அவை
நம்மை வந்து சேர்ந்துவிடாமல்,
நம்முடைய கதவுகளை,  மூடி வைத்து கொள்கிறோம்.

பானையை கவிழ்த்து வைத்திருந்தாலோ,
ஓட்டை பானையை வைத்திருந்தாலோ,
எவ்வளவுதான் மழை
பெய்தாலும், பானை நிறையுமா? என்ன??

- நாகூர் ரூமி -

அன்புடன்
காலை
வணக்கம்.

Thursday, October 17, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

நேர்மையே உன்
விலை என்ன ???

ஒரு கிராமத்தான் குதிரை வாங்க, குதிரைகள் விற்கும் சந்தைக்கு போனான்...

பல்வேறு நிறங்களில்,
வகைகளில் குதிரைகள் இருந்தன...

ஒன்றை தேர்ந்தெடுத்து, பணம் கொடுத்து வாங்கி, வீட்டிற்கு அழைத்து வந்தான்...

குதிரையின் தோளில் இருந்த, சேனத்தை எடுக்கும்போது, அதனுள் இருந்த சுருக்கு பையில், விலையுயர்ந்த வைர கற்கள் இருந்தன...

திடுக்கிட்டவன், அந்த சுருக்கு பையை எடுத்து கொண்டு, குதிரையை வாங்கிய சந்தைக்கு சென்று, குதிரை விற்றவனை தேடினான்...

அகப்பட்ட அவனிடம், விஷயத்தை கூறி, அவனிடமே
அந்த சுருக்கு பையை வழங்கினான், அந்த கிராமத்தான்...

பையில் இருந்த வைரகற்களை எண்ணிய குதிரை வியாபாரி,
"வைரகற்கள் சரியாக உள்ளது. இரண்டு வைர கற்களை உனக்கு பரிசாக தருகிறேன். வைத்து கொள் " என்றான்.

அதற்கு கிராமத்தான்," நான் ஏற்கெனவே இரண்டு கற்களை எடுத்து கொண்டு மீதம் உள்ளதைதான் உன்னிடம் தந்தேன்" என்றான்.

மீண்டும் கற்களை எண்ணி பார்த்த குதிரை வியாபாரி, எண்ணிக்கை சரியாக இருந்ததை எண்ணி வியப்புற்று," எல்லாம் சரியாகத்தான்உள்ளது.
எண்ணிக்கை குறைய வில்லையே" என்றான்...

கிராமத்தான், "இரண்டு
கற்கள் எடுத்தது
உண்மைதான். அதற்கு
'நேர்மை,சுய மரியாதை'
என்று பெயர் என்று பதில் அளித்தான்...

நேர்மையும், சுய மரியாதையும்
உயர்மதிப்பை பெற்று தரும்
என்பது உண்மைதானே.
இந்த நாள்
இனிக்க
வாழ்த்துகள்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Monday, October 14, 2019

கலாம் 50...

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றிய அரிய 50 தகவல்கள்!

செவ்வாய், 15 அக்டோபர், 2019

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:



1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.