Saturday, August 24, 2019

"பேலின்ட்ரோம்" என்றால்..என்ற?..

எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) !!
எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும்  எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்

தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!

விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,

தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி

ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !

1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
40.MALAYALAM
41.EVE
42.LEVEL
43DEED
44.ROTOR
45.CIVIC
46.POP
47.MADAM
48.EYE
49.NUN
50.RADAR
51.TOOT

நன்றி
நட்பூ...

புதிய பார்வை...புதிய கோணம்....

மௌனம்
சுடும்.

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார்.

அவர் பேசி யாருமே பார்த்ததில்லை.

அதனால் அவரை அவ்வூர் மக்கள் 'மௌன குரு' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

அந்த ஊருக்கு புதிதாக வந்த செல்வந்தன்
இதனை கேள்விப்பட்டான்.

"அவரை நான் பேச வைக்கிறேன்" என்று நண்பர்களிடம்
பந்தயம் கட்டினான்.

ஒரு நாள் மௌன குரு வீதியில் நடந்து வரும் போது செல்வந்தன்
அவரை வழிமறித்தான்.

கடும் சொற்களால்
குருவை ஏசினான்.

ஆனால் மௌனகுருவோ அவனிடம் எதுவும் பேசாமல் போய்விட்டார்.

ஊர் மக்கள் செல்வந்தனின் செயலைக் கண்டு ஆத்திரப்பட்டனர்.

அவன் பணக்காரன் என்பதால் யாரும் அவனை கண்டிக்க முடியவில்லை.

இப்படியே செல்வந்தன் குருவை ஏசுவதும் குருவோ அதை சட்டை செய்யாமல் செல்வதுமாக ஒரு மாத காலம் ஓடி விட்டது.

ஒரு நாள் மௌனகுரு அவர் ஆசிரமத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது, செல்வந்தன் குருவின் ஆசிரமத்தை நோக்கி செல்வதை அவ்வூர் மக்கள் பார்த்துவிட்டனர்.

'மௌனகுருவை பார்க்கும் இடத்தில் எல்லாம் கடும் சொற்களால் ஏசியதும் இல்லாமல் இப்பொழுது அவர் வீட்டிற்கே வந்துவிட்டானே. இனிமேல் பொறுத்திருக்க முடியாது. அவனை ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான்' என்று முடிவெடுப்பதற்கு முன் செல்வந்தன் ஆசிரமத்தை நெருங்கிவிட்டான்.

மௌனகுரு வருவது யார் என்று பார்ப்பதற்கு முன் செல்வந்தன் குருவின் கால்களில் விழுந்தான்.

தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.

"உங்களை ஏசுவதை ஒரு விளையாட்டாக தான் ஆரம்பித்தேன். அதுவே நாளடைவில் என்னை மனதிற்குள் வதைக்கத் தொடங்கியது. என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. என் மீதே எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. இனிமேல் இத்தவறை ஒரு போதும் செய்யமாட்டேன்" என்று கதறினான்.

மௌனகுரு அவனை
தட்டி எழுப்பினார்.

செல்வந்தன் கண்ணீர் ததும்பிய கண்களோடு குருவை பார்த்தான்.

மௌனகுரு அவனை மன்னித்துவிட்டதின் சான்றாக புன்னகைத்தார்.

வாங்க...

நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல்
இருக்க இயலாது.

ஆனால் தினமும்,
சிறிது நேரமாவது
மௌனமாக இருக்க
முயற்சி செய்யலாம்.

நமது மனம் அப்போது
மலரும் அதிசயத்தை
உணரவும் செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Saturday, August 17, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁புதிய பார்வை🍁

உயரத்தை
அடைய
நினைத்தால்...

ஏறித்தான்
ஆக
வேண்டும்...

கால்கள்
வலிக்கும்.
களைப்பாகும்..

இதெல்லாம்
உனக்கு
சாத்தியமில்லை
என்று...

மனம்
அச்சுறுத்தி
வேடிக்கை
பார்க்கும்...

ஓய்வெடுத்து
கொள் என்று
சபலம் தட்டும்...

நாம் தளரவே
கூடாது...

முழுமையான,
விருப்பத்துடன்
செய்தால்...

எந்த வலியும்
வேதனை
தராது.

உயரத்தை
அடைந்ததும்,
அத்தனை
களைப்பும்
சுகமாகும்...

நம்
வாழ்க்கை,
நம்
வசமாகும்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Thursday, August 08, 2019

புதிய பார்வை ...புதிய கோணம்....

நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம்.

என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.

நாங்கள் சொல்லட்டுமா?
என்று கேட்டன.

எனக்கு ஒரே வியப்பு. "எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்" என்றேன்.

மின் விசிறி சொன்னது
"Be cool"

கூரை சொன்னது
"Aim high"

ஜன்னல் சொன்னது
"See the world"

கடிகாரம் சொன்னது
"Every minute is precious"

கண்ணாடி சொன்னது
"Reflect before you act"

காலண்டர் சொன்னது
"Be up to date"

கதவு சொன்னது
"Push hard for your goals"

கீழ் விரிப்பு சொன்னது
"Kneel down and pray"

கழிப்பறை சொன்னது
"Flush out bad habits"

மேஜைமேல் இருந்த திருக்குறள் சொன்னது
"Read me for direction"*"

வியப்பில் ஆழ்ந்தேன். நம்மை சுற்றி நமக்கு வாழ்வில் வேண்டியவை கொட்டிக் கிடக்கிறது.

நாம்தான் புரியாமல் குருடர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம்.

விழித்துக்கொள்வோம் வெற்றிபெறுவோம்!

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்
🙏🙏🙏🙏💐💐💐💐

Monday, August 05, 2019

பதிய பார்வை....புதிய கோணம்...

குரு ஒருவர்
தன் மாணவனிடம், அந்தரங்கமாக பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குருகுல வேலைக்காரன்
அறைக்குள்
நுழைந்தான்.

"ஐந்து நிமிடம் வெளியே இரு. அதற்கு பிறகு உன்னை அழைக்கிறேன்" என்றார் குரு.

"புத்தரே யாரையும் காக்கச் சொல்வதில்லை. நீங்கள் எப்படி சொல்லலாம்? நான் ஏன் வெளியே போகவேண்டும்?" என்று
கோபப்பட்டான்
வேலைக்காரன்.

"சரி, நான் வெளியே போகிறேன்" என்று சொன்ன குரு, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

நம்மை புரிந்து
கொள்ளாதவர்களைப் பார்த்து, நாம் கோபப்பட வேண்டியதும் இல்லை.

அவர்களுக்கு நாம் யார் என்று, புரியவைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நாம்
நாமாக
இருப்போம்..
மாற்றத்தை
நோக்கி
நடை
போட்ட
வண்ணம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

நன்றி
சுந்தரமூர்த்தி..ஜி