Saturday, February 29, 2020

புதிய பார்வை.. புதிய கோணம்...

போடி நாயக்கனுர் பகுதியில் ஒரு பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேருந்தில் மக்கள்,
அளவுக்கு அதிகமாக
கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

இரண்டு பேர், அந்த பேருந்துகளில் இருந்த நெரிசலை பார்த்து, ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

அப்போது,
அந்த வழியாக சென்ற
ஒரு லாரியை மடக்கி,
தம்மை அதில் ஏற்றி
கொள்ளுமாறு கேட்டனர்.

லாரி டிரைவர், அவர்களை ஏற்ற முடியாது என்று கூறினார்.

அவர்கள் இருவரும் "தம்மை
ஏற்றி செல்லவில்லை எனில்
அந்த கூட்டமே நடைபெறாது,
எனவே அருள் கூர்ந்து தம்மை ஏற்றி செல்லுமாறு"  வேண்டினர்.

இதைக்கேட்ட டிரைவர்
"நீங்கள் செல்லவில்லை என்றால் கூட்டம் நடைபெறாமல் போய்விடுமா?
நீங்கள் என்ன பெரிய அண்ணாதுரையா ?? "
என்று வினவினார்.

அதற்கு,
இருவரில் ஒருவர்
"ஆமாம் அய்யா...
நான்தான் அண்ணாதுரை"
என்று பதில் அளித்தார்.

இதைக்கேட்ட லாரி டிரைவர் மன்னிப்பு கேட்டதுடன், தன் லாரியில் அவர்களை ஏற்றி சென்றது வரலாறு.

அறிஞர்களும்
சான்றோர்களும்
எளிமையை என்றும்
கடைபிடித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று.

வாங்க..
நாமும்
எளிமையான
வாழ்க்கை
வாழ்ந்து
மற்றவர்கள்
மனதில்
இடம்
பிடிப்போமா?...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Tuesday, February 25, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

முழுமையான
அக்கறையுடன்,
அர்ப்பணிப்பு
உணர்வுடன்,
செய்யும்
காரியமே...

'முழு வெற்றியை'
பெற்றுத்தரும்.

தான் செய்யும் காரியங்களில்
தன்னை மறந்து
முழுவதுமாக
ஐக்கியப்படுதல்...

'அர்ப்பணிப்பு'
எனப்படும்.

'மெய் வருத்தம் பாரார்,
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார், செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார், கருமமே கண்ணாயினார்'

இது ஒரு
பழம்பெரும் பாடல்.

தன் கடமையை
கண்ணாக நினைப்பார்கள்.

உடல் சோர்வு
பார்க்க மாட்டார்கள்.

பசியை பற்றி
கவலை பட
மாட்டார்கள்.

காரியம் முடியும் வரை
கண்ணுறங்க
மாட்டார்கள்.

யார்க்கும் தீங்கு
நினைக்க மாட்டார்கள்.

தன்னை பற்றிய
அவச்சொற்களை
புறக்கணிப்பார்கள்.

ஓய்வில்லாமல்
தம் பணியை செய்து
அதன் முடிவில்,
வெற்றியில்,
மனம் மகிழ்வார்கள்.

இதுவே
இப்பாடலின்
பெருங்கருத்து.

வாழ்வில்
உயர்ந்தவர்களின்
குணங்கள் இது.

'முட்கள்' இல்லாத
அரியணை இல்லை.

'முயற்சி' இல்லாத
வெற்றி இல்லை.

'இனிமை' இல்லாத
வாழ்வில் அர்த்தமில்லை.

'அர்ப்பணிப்பு' இல்லாத
வாழ்வில் பெருமைஇல்லை.

நன்றி

- கே.ராமசாமி -

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Friday, February 21, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

🌹

அருமையான கருத்து.

படிக்கத் தகுந்தது...

நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.

அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.

சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.

எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.

இறுதியாக, சாதித்து விட்டேன்!

அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.

எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு ,

நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.

அவரைக் கடந்த பிறகு,
நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....

1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.

2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.

3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.

4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.

5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.

அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது.
நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?

நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நம்மாலேயே இழந்து கொண்டிருக்கிறோம் என்று.

நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,
ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.

உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

சிலர் தங்கள் கவனத்தை,

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,? எங்கே செல்கின்றார்கள்,? என்ன அணிகிறார்கள்,? என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,? என்ன பேசுகிறார்கள் என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.

நாம் யாருடனும் போட்டி அல்ல. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மை யும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.
 

(*படித்ததில் பிடித்தது*)

அன்புடன்
இனிய
காலை
*வணக்கம்.*

🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹

Wednesday, February 19, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

ஈமெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே என்றான் துடைக்க வந்தவன். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே! என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,

ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,

ஈமெயில் முகவரி இல்லை என்று பதிலளிக்க,

ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன் என்றார் வியாபாரி.

ஆம்
வாங்க
நண்பர்களே
நம்பிக்கை
இழக்காமல்
வாய்ப்புகளை
நாமே
உருவாக்க
நம்மை
பழக்கப்படுத்தி
கொள்வோம்.

*இனிய காலை வணக்கம்*

Tuesday, February 18, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

உயர்ந்த
மனிதர்களின்
ஒப்பற்ற சாரம்
'நேர்மையே'.

'உண்மை'
எனப்படுவது
வேறு...

'நேர்மை'
எனப்படுவது
வேறு...

'உண்மை'
பேசுவது
முதல் படி.

'உண்மை'யை
கடை பிடிப்பது
இரண்டாம் படி.

'உண்மை'யாய்
நடப்பது
மூன்றாம் படி.

'உண்மை'யாகவே
இருப்பது
நான்காம் படி.

இவை
எல்லாவற்றையும்
தாண்டி...

'நேர்மை'யாய்
வாழ்வது
'உண்மை'யின்
உச்ச படி.

நல்ல
பண்பு,
உயர்ந்த
எண்ணம்,
மேன்மைமிகு
நடத்தை,
மாசில்லா
ஒழுக்கம்,
தூய்மையான
குணம்...

இவைகள்
'நேர்மை'யின்
வடிவங்கள்.

'நேர்மை'
ஒரு மனிதனின்...

உள்ளத்தை
தூய்மை
படுத்துகிறது.

வாக்கினிலும்
செயலிலும்
இனிமை
சேர்க்கின்றது.

பதட்டத்தையும்
கோபத்தையும்
குறைக்கிறது.

மன
அமைதியையும்,
ஞானத்தையும்
தருகின்றது.

குறைகளற்ற,
பரிபூரணமான
மகிழ்ச்சியை,
எந்நாளும்
அளிக்கின்றது.

இதன்
காரணமாக...

'நேர்மை'
ஒருவரை...

குன்றில்மேல்
இட்ட விளக்காய்,
'ஒளிர'
வைக்கின்றது.

ஒரு மரம்
தன்
'இலைகளை'
காட்டிலும்...

தன்
'கனிகளால்'
மதிப்புறுவதை
போல...

ஒரு
மனிதன்...

தன்
படிப்பில்,
பதவியில்,
செல்வத்தில்
காட்டிலும்...

தன்
'நேர்மை'யில்
மிளிர்கிறான்
என்பதே
உண்மை...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Sunday, February 16, 2020

இனிக்கும் கணக்கு

1. ஒரு ஊரில், ஒரு விவசாயி ஒரு கலம் நெல்லை வயலிலே உலரவைத்தான். அந்த நெல்லை குருவிகள் கூட்டமாக வந்து அனைத்து நெல்லையும் தின்றுவிட்டன. அந்த விவசாயி ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து அக்குருவிகளின் கூட்டத்தின் மீது விட்டெறிந்தான். அந்த மண்ணாங்கட்டி பட்டு ஒரு குருவி இறந்து விட்டது. இறந்த குருவியின் வயிற்றைக் கூறிட்டுப் பார்த்தால் அதில் மூன்று நெல்கள் இருந்தன. எனில், அவனது அனைத்து நெல்லையும் தின்ற குருவிகள் எத்தனை?

[குறிப்பு: ஒரு கலம் = 96 படி, ஒரு படிக்கு 14400 நெல்]

2.ஒரு நாட்டில் மட்டைப்பந்து (Cricket) விளையாட்டு விளையாட பல நாடுகளைச் சேர்ந்த 5 அணிகளைத் தயார் செய்ய நினைத்தனர். ஒரு அணிக்கு 11 விளையாட்டு வீரர்கள்: 6 மட்டைவீச்சாளர்கள், 5 பந்துவீச்சாளர்கள். மொத்தமாக 10 நாடுகளிலிருந்து 36 மட்டைவீச்சாளர்களும், 25 பந்துவீச்சாளர்களும் இருந்தனர். மட்டைவீச்சாளர்கள் தரவரிசைப்படி 1 முதல் 36 வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். இதேபோல், பந்துவீச்சாளர்களும் தரவரிசைப்படி 1 முதல் 25 வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். இப்பொழுது ஒவ்வொரு அணிக்கும் 11 வீரர்களை பின்வரும் நிபந்தனைகளிம் கீழ் தேர்ந்தெடுக்க வேண்டும்.
1. ஒவ்வொரு அணியின் 6 மட்டைவீச்சாளர்களின் தரவரிசையைக் கூட்டினால், 111 வர வேண்டும்
2. ஒவ்வொரு அணியின் 5 பந்து வீச்சாளர்களின் தரவரிசையைக் கூட்டினால் 65 வரவேண்டும்.
மொத்தமாக 6 மட்டைவீச்சாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. 5 அணிகளின் வீரர்களின் தரவரிசை என்ன? இதற்கு ஒரு தீர்வுதான் உள்ளதா? ஒன்றுக்கு மேல் என்றால் இப்படி எத்தனை அணிகள் அமைக்க முடியும்?

3. ஒரு ஊரில் ஒரு முத்து வியாபாரி இருந்தார். ஒரு நாள் அவர் அரசரைச் சந்தித்து முத்துக்களை விற்க வந்தார். ஒரு முத்துப்பெட்டியில் 49 முத்துக்களை தர வரிசையாக அடுக்கிவைத்திருந்தார். முதல் முத்துக்குப் பணம் 1 ரூபாய், இரண்டாவது முத்துக்குப் பணம் 2 ரூபாய், இப்படியே, 49 வது முத்துக்குப் பணம் 49 ரூபாய் என்று கூறி அந்த முத்துப் பெட்டியில் உள்ள முத்துக்களை அரசருக்குக் காட்டினார். அரசர் அதனை வாங்குவதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், சில நிபந்தனைகளின் கீழ் வாங்கிக் கொள்வதாகக் கூறினார். எனக்கு 7 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் 7 பேருக்கும் இந்த முத்துக்களைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால், பங்கிடுவதில் முத்துக்களும் சரியாக இருக்க வேண்டும். விலையும் சரியாக இருக்க வேண்டும். அப்படி உங்களால் கொடுக்க முடிந்தால் வாங்கிக் கொள்வேன் என்றார். முத்து வியாபாரி முத்துக்களை எவ்வாறு பகிர்ந்தளித்தார்?
[15/02, 8:28 PM] Ganesh: ஒரு பண்ணையில் சில ஆடுகள், சில பசுக்கள், சில எருமைகள் இருந்தன. 1 ஆடு கால் நாழி பால் தரும். 1 பசு 2 நாழி  பால் தரும். 1 எருமை 4 நாழி பால் தரும். அந்தப் பண்ணையில் மொத்தம் இருந்த கால்நடைகளும் நூறு, தினமும் கிடைக்கும் பாலும் நூறு நாழி. எனில், மொத்த ஆடுகள் எத்தனை? பசுக்கள் எத்தனை? எருமைகள் எத்தனை?

பக்கத்து வீட்டுப் பண்ணையாரிடமும், இதே போன்ற பண்ணை இருந்தது. இரு பண்ணையார்களின் வீட்டில் உள்ள மொத்தக் கால்நடைகளின் எண்ணிக்கையும் பால் அளவின் எண்ணிக்கையும் சமம். ஆனால் முதல் பண்ணையாரின் வீட்டில இருந்த பசுக்களை விட இரண்டாவது பண்ணையாரிடம் பாதி பசுக்களே இருந்தன. எனில், இருவரது பண்ணைகளிலும் இருந்த மொத்த ஆடுகள், பசுக்கள், எருதுகளின் எண்ணிக்கை எத்தனை?

விடை காணுங்கள் நண்பர்களே...

புதிய பார்வை...புதிய கோணம்...

"எங்கே நிம்மதி ?
எங்கே நிம்மதி ??
அங்கே எனக்கோர்
இடம் வேண்டும்"

இந்த
பாடலின் வரிகள்...

காற்றில் கலந்து,
காதுகளில் அடைந்து,
மனதை வருடும்
போதெல்லாம்...

'அந்த இடம்
எங்கே இருக்கிறது'?
எனும் எண்ணம்
நம் மனதில் எழவே
செய்கிறது.

உண்மையில்
அப்படி 'ஒரு இடம்'
இருக்கும் எனில்...

இன்றைய
காலகட்டத்தில்,
அவ்விடத்தில்...

மக்கள் கூட்டம்
எவ்வளவு இருக்கும்
என்பது...

கற்பனையிலும்
அடங்காது.

'மன நிம்மதி' என்பது
கடை சரக்கா என்ன ?

ஆனாலும்...

'அது
எளிதில் கிடைக்கும்'
என்னும் எண்ணம்
பல பேருக்கு
வருவதில்லை...

'அதை' தேடி
எங்கும் அலையாமல்,
'நம் மனதிலேயே
அது உள்ளது'
என்பதை
கண்டறிவதில்...

'நம் திறமை'
ஒளிந்துள்ளது.

'மன நிம்மதி'
என்பது
'ஒரு உணர்வு'.

அது நம்
எண்ணங்களில்
கட்டமைக்கப்படுகிறது.

நல்ல சிமெண்ட்
கொண்டு
வீடுகட்டுவது போல...

நல்ல
எண்ணங்களால்
நம் மனதை நாம்
'கட்டமைக்க' வேண்டும்.

அதுவே நமக்கு
'நிம்மதியையும்
மகிழ்ச்சியையும்'
தரும்.

நம் மனதை
கட்டமைக்கும்
புறக்காரணிகளான...

சுற்றுப்புற சூழ்நிலை,
பொருளாதார நிலை,
சக மனிதர்களுடன்
உள்ள தொடர்பு,
சமுதாயத்தை பற்றிய
நேர்மறை சிந்தனை,
உடல் நலம்...

இவைகளை
நாம் எவ்வாறு
கையாள்கிறோம்
என்பதை பொறுத்து
நம் மகிழ்ச்சி அமைகின்றது...

இவைகளில்
ஏதேனும் ஒன்றில்
சறுக்கல் ஏற்படின்...

நம் மனம்
பாதிப்படைவது
திண்ணம்.

அக நிலையில்
'உறுதி மிக்கவராக'
'சூழ்நிலையை
கையாளும் பக்குவம்
கொண்டவராக'
இருப்பின்...

புறகாரணிகளால்
ஏற்படும் ஏமாற்றங்கள்
நம்மை பாதிப்பதில்லை.

மாறாக...

சூழ்நிலையை
கையாள தெரியாத
நிலை திருப்பின்...

நம் மனம்
நிம்மதியை இழந்து
தவிக்கிறது...

வாய்ப்புகளும்,
வாழ்க்கையும்
நம் வசம்
வாங்க
வாழ்க்கைய
வாழ்ந்துதான்
பார்போம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Wednesday, February 12, 2020

யார் ஆசிரியர்....

*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*
இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

*1. கதிரவனைப் போல்...*

காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*

உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*

பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

*4. பாடம் வேண்டாம்...*

ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.

*5. கேள்வி கேளுங்கள்...!*

பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!*

புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*

மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*

வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*

மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*

உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

*நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!...*
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

புதிய பார்வை...புதிய கோணம்....

"மனசே சரியில்லை"
பெரும்பாலோர்
அடிக்கடி கூறும்
வார்த்தைகள் இவை.

நம் மனதை,
அதன்போக்கில்
விட்டு வைத்தால்...

அதுவே
சுறாவளியாய்
மாறி...

நம்மை
துன்பக்கடலில்
மூழ்கடித்துவிடும்.

அதே
நேரத்தில்...

நம் மனதை
நாம் சரியாக
ஆட்சி செய்தால்...

நம் வாழ்க்கை
சிறப்பானதாக
அமைய தொடங்கும்.

" Keep your face
To the sunshine...
And you can not
See the shadow "

இது
ஹெலன் கெல்லரின்
வார்த்தைகள்.

"பேயாயுழலுஞ்
சிறுமனமே
பேணாயென்சொல்
இன்றுமுதல்"

இது
பாரதியின் வாக்கு.

மனதில்
அழுக்குகளை
படியவைத்து,
முகத்திற்கு
அழகு சேர்த்து
என்ன பயன்???

பூக்களும் பழங்களும்
எப்படி நறுமணம்
வீசுகின்றதோ...

அதன் பயனாக அவை,
இறைவனுக்கு
படைக்கப்படுகிறது.

மாறாக...

காய்ந்த சருகுகளும்,
அழுகிய பழங்களும்
படைப்பதற்கு
நிராகரிக்கப்படுகின்றன.

அதை
போலத்தான்...

மனதை
இருளடிக்க செய்து,
அதன் போக்கில் வாழ்க்கையை செலுத்தினால்...

நம் மனம்
துன்பக்கடலில்
சிக்கிய தோனி
போலாகிவிடும்...

ஆனால்...

நல்லதையே
சிந்திக்கும்
பண்புகளோடு,
நம் மனம்
இருப்பின்...

நல்மணம் வீசும் பூந்தோட்டமாக,
நம் வாழ்க்கை
மலரும்...

வாய்ப்புகளும்,
வாழ்க்கையும்
நம் வசமே...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.