Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, October 08, 2017

மாற்றம்...கவிதை

மாற்றம்.....

மாற்றம் எங்கும் எதிலும்
குகைகள் மரங்கள் மாளிகையாய்
இலை தலைகள் உடைகளாய்
அங்கம் காட்டும் ஜன்னலாய்..
நாகரீகம் என்ற மந்திரம்
மாற்றி போட்டது மனிதனை..
கூட்டுக் குடும்பம் குலைந்து
தனித் தீவில் தவிக்கிறோம்..

மாற்றம் என்று எண்ணி
சொந்த காசில் சூனியம்...
ஆண்மகன் பெண்டிர் பணியிலே
பெண்டிர் ஆண்மகன் பணியில்
மாற்றம் பதியம் போட்டது
மரபின் மாற்றத்தை மனதில்...

வேலை என்ற பெயரில்  காசுக்காக  நாகரீக பிச்சை...
நலம் மறந்து நாசமானோம்
காபாற்ற யாருமில்லா அனாதையாய்/....
ஓடினோம் வாழ்வின் எல்லைக்கு
முகவரி தேடி...தேடி...
கண்டோம் முகவரியை கல்லறையில்.../

நட்புடன்....

ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்

Sunday, May 07, 2017

அழகு.. கவிதை

அழகு
@@@
இறைவன் படைப்பில்
அதிசயம் நீ..
கவலையை களையும்
களைக்கொல்லி நீ
உறவின் அச்சயபாத்திரம்
அப்பாக்களின் தேவதை
அம்மாக்களின் மாமியார்
உன் பாவடையால்
பட்டு பூச்சிகள்
மோட்சம் பெற்றன
உன் சிரிப்பை
பார்க்க தவமிருக்கும்
வண்ணத்து பூச்சிகள்
உன் நடையை
பார்த்து பழகின
மயில்...புலிகள்.

₹₹₹₹₹₹₹₹₹₹
நட்புடன் ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்

₹₹₹₹₹₹₹₹%%


Tuesday, April 11, 2017

வானவில்- கவிதை

வானவில்
&&&&&&&&

நிறங்களின்
அணிவகுப்பாய்  இன்பம்
துன்பம் கோபம்
நட்பு உவகை
ஈகை உபசரிப்பு
பண்புகளின் பறை...

அழகு கருத்துக்களின்
அறிவு பெட்டகம்
வாழ்வின் அர்த்தம்...

குழந்தையின் எண்ணத்தில் முதல் ஒவியமாய்...

முப்பரிமாணம்  
இது இயற்கையின்
முதல் கண்டுபிடிப்பு..

இயற்கை அன்னை
வண்ணங்களை குழைத்து
வரைந்த அஜந்தா?.....


₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

நட்புடன் ஆ.சிவராமகிருஷ்ணன்....சேலம்....

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

Thursday, April 06, 2017

தொட்டில். ....கவிதை

கச்சேரி...
₹₹₹₹₹₹₹

தொட்டில்  நடமாடும்
தெய்வத்தின்  குடில்
தாய்மார்களின்  குரலிசையின்
மேடை  கச்சேரி.
###########₹₹

தாய் பட்டம்
@@@@@@@

தொட்டில்  குழந்தைகளின்
சொர்க்கம்  தாலாட்டை
படைக்கும்  பிரம்மன்
தாய் பட்டத்த்துடன்.

##############

குழந்தை
&&&&&&

தொட்டில்  என்
வாழ்வில்  மறக்க
முடியாத  இடம்
இப்படிக்கு - குழந்தை

#############
நட்புடன் ஆ.சிவா.. சேலம்..

நி.மு.420

&&&&&&&&&&&

############
சமத்துவ புரம்
@@@@@@@

தொட்டில்  - கிருஷ்ணன்
ஏசு அல்லா
குடில் கொண்ட
சமத்துவ புரம்.

நட்புடன் ஆ.சிவா.. சேலம்..

நி.மு.420
&&&&&&&&&&&

Thursday, March 23, 2017

அரிதாரம்.....

முகமூடி....
&&&&&&&

அரிதாரம் பூச்சி
அக அழகை
முகத்தில் காட்டும்
முக மூடி..
++++++++++++++

அன்னாட காட்சி
&&&&&&&&&&&
அரிதாரம் வண்ணங்களின்
அணி வகுப்பு
எண்ணங்களின்  பிடியில்
அன்னாட காட்சியாய்...

-------------------------------

ஆண்டி....
%%%%%%%

அரிதாரம் கலைஞனின்
உயிர் மூச்சி
வேசத்தில் அரசனாய்
உண்மையில் ஆண்டியாய்...

@@@@@@@@@@@

பிரம்மன்..
&&&&&&&

அரிதாரம் கலைகளின்
படைப்பில் பிரம்மன்
காத்தலில் நடிகன்
அழித்தலில் சாமானியன்....

நட்புடன் ஆ.சிவா...சேலம். நி.மு.420

Tuesday, March 07, 2017

பெண் என்றால் தியாகம்....?

💐பெண்கள் தின வாழ்த்து...💐

உறவில்
அம்மா
அக்கா
அத்தை
தங்கை
அண்ணி
பெரியம்மா
சித்தி
என்று
பல அவதாரம்
எடுத்து
எங்கும்
எதிலும்
விழுதாய்
விருச்சமாய்
இருந்து
குடும்பத்தையும்
மனித
குலத்தையும்
வாழவைக்கும்
பெண்டிர்
உங்கள்
தியாகங்கள்
போற்றதக்கது...

உங்கள்
உழைப்பு
வணங்கதக்கது....
நீங்கள்
இன்னும்
பல சாதனை
செய்து
வீட்டையும்
நாட்டையும்
காக்க
இனிய
மகளீர்
தின வாழ்த்துகள்....
💐💐💐💐💐💐💐💐
நட்புடன் ஆ.சிவா..
💐💐💐💐💐💐💐

Thursday, March 02, 2017

இன்றைய கவிதை - விலை....

🌷விலை🌷

நாடு
செளிக்கும்
மக்கள்
பஞ்சம்
பட்டினி
இன்றி
மகிழ்ச்சியாய்
வாழ்வோம்
என்னெண்ணி
போட்ட
விலைமதிப்பற்ற
ஓட்டை
விலை
கொடுத்து
வாங்கும்
அரசியல்
சதுரங்கம்
நம்
நாட்டில்
ஆரங்கேறி
வருவது
நாட்டுக்கும்
வீட்டுக்கும்
கேடு....
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

கற்றற்ற
கல்வியை
விலை
கோ
கொடுத்து
வாங்கும்
வெட்க்கேடு
நம்
ஊரில்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

திறமை
விலை
போவது
பொதுவியல்....
விலையால்
திறமை
அற்றவர்
மேலேரும்
ஏணி
நம் நாட்டில்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

விழத்துக்கொள்
உன்
இனம்
மானம்
மொழி
விலை
பேசுவதை
தடுத்து
நிறுத்து
எனக்கென்ன
என்ற
எண்ணம்
கொண்டால்
உன்
அழிவு
உன்
கண்முன்னே...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿

   

Sunday, February 26, 2017

இன்றைய கவிதை- திறமை

😋திறமை😋

இலக்கை
எட்ட
உதவும்
நெம்புகோல்..
🌿🌿🌿🌿🌿🌿
சாமானியனை
சாதனை
ஆளானாய்
மாற்றும்
மின்சக்தி...
🌿🌿🌿🌿🌿
இது
இல்லாதவரை
புழுவாகவும்
பலுவாகவும்
எண்ணும்
உலகு....
🌿🌿🌿🌿🌿🌿
வெற்றி
மீது
நம்பிக்கை
கொண்டவர்
பின்
பற்றும்
பாடம்
திறமை
🌿🌿🌿🌿🌿
திறமையை
வளர்க்க
விதைப்போம்
நம்
சந்த்திகளுக்கு
வெற்றி
கனியை
சுவைக்க...
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿

Thursday, February 23, 2017

ரதம்.....இன்றைய கவிதை

🕍ரதம்🕍

பனங்காயை
சக்கரமாக்கி
விரகு
சிப்பி
கொண்டு
கோபுரம்
அமைத்து
அம்மாவின்
கிழிந்த
புடவையை
சுத்தி
கோபுமாக
வடிவமைத்து
அழைத்தோம்
ரதம்
என்று....
😁😁😁😁🇮🇳🇮🇳

இன்றும்
நெஞ்சில்
நீங்கா
நினைவுகள்
கலர்
கலராய்
அவ்வப்போது
எட்டிப்பார்ப்பது
ரதமாய்
ரனமாய்...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😁

கால ஓட்டத்தில்
கரை
புரண்டோடியது
ரதம்...
நினைவுகள்
மட்டும்
அடையாளமாய்...
💐🇮🇳💐💐🇮🇳💐🇮🇳🇮🇳

பலருக்கு
தெரியவில்லை
வருங்கால
பொரியாளர்களை
கண்ணெடுக்கும்
மாயக்கண்ணாடி
ரதம் என்று...
🇮🇳🇮🇳😋🇮🇳💐💐
அந்த
ரதவிளையாட்டை
மீட்டெடுப்போம்
மகிழ்ச்சி யை
நம்
குழத்தைகளுக்கு
உடமைநயாக்குவோம்.....
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿

Tuesday, February 21, 2017

உலக தாய்மொழி தின கவிதை....

தாய் மொழி தமிழ்🙏🙏

தமிழ்
உலக
மொழிகளின்
பிறப்பிடம்....
🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்
முதல் மொழி....
கல்தோன்றி
மண்தோணறா
காலத்திலும்
வாழ்ந்த
மொழி...
🙏🙏🙏🙏🙏🙏

இனிமை
பழமை
அழகு
என்ற
சொற்களின்
அகராதி
தமிழ்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

அரசரும்
ஆண்டியும்
ரசித்து
ருசித்து
சுவாசித்து
வாழ்ந்த
மொழி
நம்
தமிழ்
மொழி....
🙏🙏🙏🙏🙏

முண்டாசு கவி
போன்ற
பல
கவிகள்
தமிழை
புசித்து
வாழ்ந்த
வரலாறு
உலகறிந்தது...
🙏🙏🙏🙏🙏🙏

இத்தகு
பெருமை
மிகு தமிழ்
மொழி
கலச்சாரம்
நாகரீகம்
என்ற
பெயரால்
அழிக்கப்படுவதையும்
அமுக்கப்படுவதையும்
இனியும்
அனுமதிக்கலாமா?…..
🙏🙏🙏🙏🙏🙏🙏

போற்றுவோம்
தமிழை
காப்போம்
தமிழை
தமிழன்
என்ற
கர்வத்தோடு...
🙏🙏🙏🙏🙏🙏
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿

Thursday, February 09, 2017

புன்னகை - கவிதை

💐புன்னகை💐

உறவு பாலம்
நட்பு வட்டம்
பலப்பபட
பயன்படும்
சிமெண்ட்...
😋😋😋😋😋😋

கோபம்
என்ற
கோடாரியை
தூக்கிஎறிய
உதவும் கை
புன்னகை...
😋😋😋😋😋😋

நகையையும்
பகையையும்
வேரருக்கும்
யுத்தி
புன்னகை....
😋😋😋😋😋😋😋

மூதியோர்
இளையோர்
சிறுவர்
சிறுமியர்
குழந்தைகளின்
அழகின்
அடையாளம்
புன்னகை...
😋😋😋😋😋😋

பல கோடி
கொடுத்து
முடிக்கும் பல
காரியங்களை
விலையேதும்
இல்லாமல்
புன்னகையால்
சாதிக்கலாம்...
😋😋😋😋😋😋

வாழ்வு மலர
வாழ்வு சிறக்க
வாழ்வின் அர்த்தம்
பெற
கூடி வாழ
குதுகுலமாய் வாழ
சிரிப்போம்
சிரிப்போம்
புன்னகையாய்
என்றென்றும்...
😋😋😋😋😋😋

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


   

Saturday, December 17, 2016

மகா கவி பாரதி(தீ)

மகா கவி பாரதி(தீ)

தமிழ்த் தாயின்
செல்லப் பிள்ளை
புரட்சி என்ற
அணு
புதைந்த கவி...

தமிழையும்
தமிழகத்தையும்
தலை நிமிர
வைத்த கவி...

பாட்டுக்கொரு புலவன்
எளியோரையும்
வழியோரையும்
தன் தோல்
சுமந்து மகிழ்ந்தவன்...

ஆங்கிலேயர்க்கு
பாட்டால்
பாடம்
புகட்டிய மாமேதை...

இவன் பாடல்கள்
அனைத்தும்
தமிழ் தாயின்
உடலில் அணியும்
மின்னும் அணிகளன்கள்...

பெண்ணினத்தின்
மறுபக்கத்தை
உலகரிய செய்த
மகா கவி பாரதி...

பெண் விடுதலை
என்ற விதைக்கு
உயிர் கொடுத்த
சூரியன்...

பாரதியின் திறனை
கண்டுஅஞ்சிய
காலன்
அவனை இளமையிலேயே
பறித்து கொண்டானோ...?

பாரதி(தீ)
நீ
மீண்டும்
பிறப்பாய்
என
நம்பி
காத்திருக்கிறோம்....
உன்
வரவை நோக்கி...

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿😫🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

சலங்கை ஒலி

👏சலங்கை ஒலி👏

பாரம்பரிய
நடனம்
பரதநாட்டி
கதக்கலி
குச்சுபுடி
மண்ணின்
மணம் கமரும்
கரகாட்டம்
ஒயிலாட்டம்
தப்பாட்டம்
சிறக்க
செய்வது
சலங்கை ஒலி...

சலங்கை
இல்லா ஆட்டம்
சுவர் இருந்தும்
சித்திரம்
இல்லாமையே....

இது
மகிழ்ச்சி
ஆனந்தம்
சிங்க நடை
ஏறு நடை
தாண்டவம்
ஆகியவற்றை
வெளிகாட்டும்
கால கண்ணாடி...

நாமும்
மகிழ்வாய்
ஆனந்தமாய்
வாழ்ந்து
சலங்கையின்
ஒசையை
ரசிப்போம்
உறவோடும்
நட்போடும்....
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

பாரம்பரிய
நடனம்
பரதநாட்டி
கதக்கலி
குச்சுபுடி
மண்ணின்
மணம் கமரும்
கரகாட்டம்
ஒயிலாட்டம்
தப்பாட்டம்
சிறக்க
செய்வது
சலங்கை ஒலி...

சலங்கை
இல்லா ஆட்டம்
சுவர் இருந்தும்
சித்திரம்
இல்லாமையே....

இது
மகிழ்ச்சி
ஆனந்தம்
சிங்க நடை
ஏறு நடை
தாண்டவம்
ஆகியவற்றை
வெளிகாட்டும்
கால கண்ணாடி...

நாமும்
மகிழ்வாய்
ஆனந்தமாய்
வாழ்ந்து
சலங்கையின்
ஒசையை
ரசிப்போம்
உறவோடும்
நட்போடும்....
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Monday, July 11, 2016

தலைநகரம்.

தலைநகரம்

நீர்
ஆதாரங்களான
ஏரி
குளம்
குட்டைகளை
அடுக்கு
மாடிகளாக
நிரப்பி
பெரும்
பேர்
பெற்றவர்கள்....

மற்றவர்களையும்
அருகில்
வசிப்பவர்களின்
இன்பம்
துன்பம்
பற்றி
ஏதும்
அறியா
புத்திசாலிகள்.....

அவர்கள்
அறிந்த்து
எல்லாம்
சம்பாதிப்பது
தன்
குடும்பத்தை
மகிழ்ச்சியாக
வைத்து
கொள்ளும்
கடமைவாதிகள்......

தேர்தல்
வந்தால்
வரிசையில்
நின்று
தன்
வாக்குரிமையை
நிறைவேற்றா
படித்த
மகா
புத்திசாலிகள்
வாழும்
நகரம ....

நட்புடன்
ஆ.சிவா...

பரிசு - கவிதை

      பரிசு 

ஊக்கத்தின்
திறவு
கோல்......
🌴🌴🌴🌴🌴🌴
நம்பிக்கை
என்ற
விதை
முளைக்க
உதவும்
மண்.......
&&&&&&&&-&
வெற்றியின்
அடை
மொழி.....
:-c:-c:-c:-c:-c:-c

சாதனைகள்
பலவற்றை
விதைக்கும்
நாற்றங்கால்.......
±++++±++++++++

பூமியில்
பிறந்த
ஒவ்வொரு
மனிதனும்
பெற
துடிக்கும்
மந்திர
கோல்.....
👏👏👏👏👏👏👏
நட்புடன் ஆ.சிவா...
🌳🌳🌳🌳🌳🌳🌳

Sunday, July 10, 2016

கரகாட்டம்..... கவிதை

️ கரகாட்டம் 👰

தமிழர்களின்
பாரம்பரிய
நடனம்
இது.....
🌋🌋🌋🌋🌋🌋

சாமாணியனின்
கலைகளில்
முதல்
இடம்
பிடித்தவன்...
🌋🌋🌋🌋🌋🌋🌋

கிராமத்து
மக்கள்
அல்லாது
நகரத்து
மக்களும்
ரசித்து
விரும்பி
ஆடும்
ஆட்டம் ....
🌋🌋🌋🌋🌋

உலக
அரங்கில்
ஆங்கீகாரம்
பெற்ற
ஆட்டம்....
🌋🌋🌋🌋🌋

தியானம்
யோகா
உடல்திறன்
கடின
உழைப்பு
போன்றவற்றின்
கூட்டு
உருவம்....
🌋🌋🌋🌋🌋🌋

ஏழை
பணக்காரன்
இந்து
முஸ்லிம்
கிருஷ்டியன்
என்று
பிரித்து
பார்க்காமல்
அனைவரையும்
ஒன்றாக
கட்டி
போடும்
கரகாட்டத்தை
வளர்த்து
தமிழன்
பண்பாட்டை
உலகறிய
செய்வோம்.....
🌋🌋🌋🌋🌋
நட்புடன்
ஆ.சிவா....
👰👰👰👰👰👰👰

Sunday, February 08, 2015

தூ ய் மை இந்திய .....





தூ ய்மை இந்தியா
திட்டத்தால் எங்கும்
சுத்தம்…. சுத்தம்
எங்கள் வீட்டில்
அறை எல்லாம்
சுத்தம்…. சுத்தம்
அடுப்பறையும்
சுத்தம்…. சுத்தம்
அனால் எங்கள்
வீட்டு அடுப்பு
படுக்கையானது 
எங்கள் வீட்டு புனைக்கு……

அன்புடன் சிவா….


Saturday, December 20, 2014

எங்கள் வீட்டு பூனை .....




துய்மை இந்தியா
திட்டத்தால் எங்கும்
சுத்தம்…. சுத்தம்
எங்கள் வீட்டில்
அறை எல்லாம்
சுத்தம்…. சுத்தம்
அடுப்பறையும்
சுத்தம்…. சுத்தம்
அனால் எங்கள்
வீட்டு அடுப்பு
படுக்கையானது 
எங்கள் வீட்டு புனைக்கு……


அன்புடன் சிவா….

Tuesday, October 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


 மானுடர்  வாழ்வில் 

துன்பம்  என்ற  
இருள்  விலகி 
பகாவன்  கிருஷ்ணனனின்
அருள்  ஒளியால்  
கருணையால் 
ஒளிரடும்  இன்பம்  
இன்பம்  ....
வசந்தம் வந்து 
வீட்டில்  நிலைத்து 
நிற்க 
உறவினர்களுக்கும் 
நண்பர்கள் 
அனைவர்க்கும்  
இனிய 
தீபா வளி 
நல் வாழ்த்துக்கள் .....
அன்பன் 
..
சிவா.





Sunday, October 19, 2014

வெற்றி என்ற விதை



அவமானங்களை 
அசிங்கங்களையும்
 புரகணிப்புகளையும் 
  சேகரியுங்கள் 
அது  
வெற்றி என்ற 
விரிச்ச  மரம் 
முலைக்க 
 விதையாகும் 
நண்பர்களே .....


நன்றியுடன் 
.
சிவா.