Tuesday, April 29, 2014

தமிழரின் பெயர்கள்

 சங்க காலத்துக்குப் பின்பு, தமிழர்கள் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக்கொள்வது வழக்கமாயிற்று. பங்கஜம்,  லக்ஷ்மி,  ஹேமா,  ஷண்முகம், ராஜகோபாலன்,  ஹரிஹரன் என வட எழுத்துள்ள பெயர்களைக்கூட வைத்துக்கொண்டனர்.

 நவநீதம் என்னும் பெயர் கொண்ட ஒருவரை,  "வாய்யா,  நவநீதம்" என்று அழைத்தால்,  வருவார்; "வாய்யா,  வெண்ணெய்" என்போமானால், பயங்கர கோபத்தோடு நம்மைத் திட்டக்கூடும்; ஆனால் இரண்டும் ஒன்று தான். நவநீதக் கிருஷ்ணன் = வெண்ணெய் (உண்ணும்) கிருஷ்ணன். "நந்த குமாரா,  நவநீதச் சோரா" என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள்; நவநீதச் சோரா என்பதற்கு என்ன பொருள்?  "வெண்ணெய்த் திருடனே" என்பது. ஒரு பெண்ணை அவளது பெயரைச் சொல்லி, “சியாமளா" என விளிக்கலாம்; பிரச்சினை எழாது; "கருப்பி" என்று கூப்பிட்டால்?  வெகுண்டு எழுவாள். சியாமளா,  வடசொல்; கருப்பி,  தமிழ். நீல மேகச் சியாமள வண்ணன் என்று கண்ணனைச் சொல்வார்கள்;  கருப்பு நிறம் உடையவன் என்பது அர்த்தம். அவனைச் சிலப்பதிகாரம், ‘கரியவன்’   என்கிறது: "கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?" ( ஆய்ச்சியர் குரவை)

 ராமனும் கருப்பன்தான். விசுவாமித்திரர் தசரதனிடம் சென்று,   தம் வேள்வியைக் காப்பதற்கு,  'இராமனை என்னுடன் அனுப்பு' என்று சொன்னார்:

  ".....  நின் செல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி" (கம்ப ராமாயணம்). உன் புதல்வர்கள் நால்வருள்ளும் கருப்பாக இருப்பவனைத் தா என்பது பொருள். அந்தக் கரு நிறக் கடவுள்களை பக்தி சிரத்தையோடு தொழுபவர்களுள்  பலர்,  கருப்பாக இருக்கிற மனிதர்களைத் தாழ்வாகக் கருதுகிறார்களே!  இது முரண்பாடு என்பதை அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.

 மறைமலையடிகள் தனித் தமிழைப் பரப்பியபோது,  தமிழ் உணர்வாளர்கள் தத்தம் பெயர்களை இளவழகன்,  மணிமொழி,  பூங்குழலி,  தாமரைக்கண்ணி, நாவுக்கரசு என்றெல்லாம் மாற்றிக்கொண்டனர். பெரியார் கட்சிக்காரர்களும் நெடுஞ்செழியன்,  சிற்றரசு,  வெற்றிச்செல்வி,  அன்பழகன், வில்லாளன்  என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள்; பொதுவுடைமை ஜீவானந்தம்கூட,  சுயமரியாதை இயக்கத்தில் இணைந்திருந்தபோது,  "உயிரின்பன்" ஆனார்.

 வரவரத் தமிழர்களுக்கு மொழிப் பற்று குன்றியமையால்,  தமிழ்ப் பெயர்கள் அருகி,    மீண்டும் வடமொழிப் பெயர்களே கோலோச்சத் தொடங்கின. அண்மைக் காலத்தில் திருமாவளவன்,  தொல்காப்பியன், தென்னவன் முதலான தமிழ்ப் பெயர்களை விடுதலைச் சிறுத்தைகள்  வைத்துக் கொண்டார்கள்.

  மற்றவற்களும்  மாற வேண்டும்  பெரும்பாலரின் போக்கு மாறவில்லை.

நன்றி 
அன்புன் 
சிவா...


முட்டுச் சந்துஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் 

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது

இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்!

தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்றுதான்.
1891 ம் ஆண்டு இதே நாளில்தான் புதுவையில் பாரதி தாசன் பிறந்தார்.

புரட்சிக் கவி என்றும் அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் கனக சுப்பு ரத்தினம். பாரதியார் பேரில் கொண்ட பற்றின் காரணமாக தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதியார் போலவே தீண்டாமைக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் பல புரட்சி புத்தகங்களை எழுதி புரட்சிக் கவிஞர் என்று பெயர் பெற்றார்.

இவரின் நினைவாக தமிழ்நாடு அரசு இவரது பெயரில் வருடத்துக்கு ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருது வழங்கி கவுரவித்து வருவது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது. எண்ணற்ற பரிசுகளை பெற்றுக் குவித்த இவருக்கு, மறைவிற்குப் பின்னர் சாகித்ய அகடமி பரிசும் வழங்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்  தக்கது


நன்றி 
அன்புடன் 
சிவா....

துருப்பிடித்த நேயம்..!


சடுதியில் விலகிச்செல்லும்
பைத்தியக்காரனின் அருகாமையென
இழந்துகொண்டிருக்கிறோம் நமக்கான இயல்புகளை..!

நின்று நிதானமாய் எதையும் ரசித்திட
அவசியமோ அவகாசமோ ஏதுமிருப்பதில்லை..!

பக்கத்து இருக்கைக் குழந்தையின் அழுகையில்
முகஞ்சுளிப்பதில் தோற்றுப்போகிறது
ஆதி மனிதனின் ஆசுவாசங்கள்...!

வண்ணத்துப்பூச்சியை மீண்டும் புழுவாக்கும் முயற்சியில்
லயித்துக்கிடக்குமித் துருப்பிடித்த நேயத்தில்
துர்நாற்றமடிக்கிறது தேங்கிக்கிடக்கும் ரத்தக்கறைகள்..!

காயங்களைக் குத்திக்கிழிக்கும் கோணிகளைக்கொண்டு
வேறேதும் செய்வதற்கில்லை நாம்..!

வாழ்விற்கான சாத்தியங்களில் தொலைந்துபோகிறது

வாழ்வதற்கான முகாந்திரங்கள்..!!
 
நன்றி 
அன்பன் 
சிவா...
 

தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன்னு இனிமே சொல்ல முடியாது ஏன்? ஜோக்ஸ்

ஜோக்ஸ்!

1.      அந்த நடிகை ஏன் திடீர்னு தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க?
‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்!

2.      இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப பயந்து போயிட்டார்?
அப்படியா?
ஆமாம்! ‘டிஸ்கவரி சேனல் கூட பார்க்கறதில்லேன்னா பார்த்துக்கோயேன்!

3.      தலைவர் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசறாரே! எந்த தைரியத்துல வீசறார்?
ஜெயிக்கமாட்டோங்கிற தைரியத்துலதான்!

4.      ஓட்டுப்போடப் போன தலைவர் ஏன் போடாமேயே திரும்பிட்டார்!
அவர் கையில கறை படறத விரும்ப மாட்டாராம்!

5.      என்னது மன்னர் தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டாரா?
ஆம் தன் கையாலேயே பதுங்குகுழி தோண்டிக்கொண்டார் என்று சொன்னேன்!

6.      அந்த டாக்டர் விவரமானவருன்னு எப்படி சொல்றே?
பல்ஸ் பிடிச்சு பார்க்கிறதுக்கு முன்னாடி பர்ஸை பிடிச்சு பார்க்கிறாரே!


7.      மக்களின் இதயங்களில் நான் குடியிருக்கிறேன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சா ஏன்?
மக்கள் வாடகை கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க!

8.      அந்த ஆள் முகத்துலேயே முழிக்க கூடாதுன்னு உங்க தொகுதிக்காரங்க சொன்னாங்களே என்ன பண்ணாங்க?
தொகுதி வேட்பாளரா நிக்க வைச்சு ஜெயிக்க வச்சிட்டாங்க!


9.      எதிரி நாட்டு மன்னன் அறைக்கூவல் விடுத்தும் மன்னர் சும்மா இருந்துவிட்டாரா ஏன்?
மன்னருக்கு எந்த ஒரு விசயமும் முழுசாய் இருக்க வேண்டுமாம்! முழுகூவல் விடட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்துவிட்டார்!

10.  ஐ.பி. எல் பார்த்ததுலே இருந்து தலைவர் அதே ஞாபகமா இருக்கார்?
ஏன்?
ப்ளேயர்களை ஏலத்தில எடுக்கிறமாதிரி தொகுதிகளையும் ஏலத்திலே எடுத்தா என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்கார்.

11.  டீ.வி பார்க்கறதுல எனக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் சண்டையே வந்துருச்சு?
அப்புறம்?
அவரு சமைக்கறப்ப நான் பாக்கிறதுன்னும் நான் சாப்பிடறப்ப அவரு பாக்கிறதுன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம்!

12.  ஏடிஎம் மிசின் மேலே ஏன் ஏறி நிக்கறீங்க!
அதுதாங்க பேலன்ஸ் சரியா இருக்கான்னு பாக்க சொல்லுச்சு!

13.  நம்ம தலைவர் தன்மான சிங்கம்!
எப்படி சொல்ற?
எந்த கட்சியும் ஆதரவு கேட்டு வராததாலே தன்னோட ஆதரவை நோட்டாவுக்கு கொடுக்கிறதா அறிக்கை விட்டிருக்காரே!

14.  அந்த நடிகைக்கும் டைரக்டருக்கும் லவ் பத்திக்கிச்சாமே!
கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அதை அணைச்சி வச்சிருக்காங்க!

15.  மகளிர் அணித்தலைவி எதுக்கு தலைவரோட கோச்சுக்கிட்டு போறாங்க?
தலைவரோட வீட்டுல 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டாங்களாம்!

16.  செயினை அறுத்துட்டு ஓடினவனை இன்ஸ்பெக்டர் விடாம துரத்திக்கிட்டு போய்…
மடக்கி பிடிச்சு செயினை வாங்கிட்டாரா?
ஊகும்.. மாமூலை வாங்கிட்டார்!

17.  அந்த  ஜெயிலிலே பணப்புழக்கம் அதிகம்னு எப்படி சொல்றீங்க!
எல்லா செல்லிலேயும் ‘செல்லு’ சுத்திவருதே!

18.  தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு சொன்னதும் வருத்தப்படாம ஏன் சிரிக்கிறீங்க?
தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் இல்லாத இடம் எது? இன்னும் எத்தனைநாளைக்கு இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டிருப்பீங்க!

19.  அந்த பேச்சாளர் ஏன்  இன்னிக்கு பேச மறுக்கிறார்?
இன்னோவா வரும்னு பேசி பேசி இன்னிக்கு வாயெல்லாம் நோவா ஆயிருச்சாம்!

20.  மன்னருக்கு படை என்றாலே அலர்ஜிதான்!
ஓகோ! அதனால் அடிக்கடி முதுகை சொறிஞ்சிக்கிறாரோ!


21.மன்னர் வாரிக் வாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறாறா? யாருக்கு!
வேறு யாருக்கு ராணியாருக்குத்தான் தலைவாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்!

22. எலக்‌ஷன் ட்ரெண்ட் மாறிப்போச்சா எப்படி?
  அப்போ வாக்குறுதியை  வாரி இறைப்பாங்க! இப்ப நோட்டை வாரி இறைக்கிறாங்க...

 நன்றி 
அன்பன் 
சிவா...
 

புகைப்பட ஹைக்கூ...வெடித்து
கூடியது வானம்!
மின்னல்!

வெளிச்சக் கீற்றுக்கள்
விதைத்தது மழை!
மின்னல்!

உடைத்து பார்த்ததும்
ஒளிவிட்டது
மின்னல்!

வேர்விட்டது வானம்
விரவி வந்தது மழை!
மின்னல்!

வான்மகளை தழுவ
வானத்தில் மேகமோதல்!
மின்னல்!

கீறல் விழுந்த வானம்
தூறலாய் மழை!
மின்னல்!

வேர்பிடித்தும்
கொடிபிடிக்கவில்லை
மின்னல்!

வெளிச்சச் சிதறல்கள்
ஒளிந்துகொண்டன
மின்னல்!

மேக இருளை
மோகித்தது
மின்னல்!

கண்ணொளி பறித்தது
மின்னொளி
மின்னல்!

வெள்ளம் பாய்ந்தது
விபத்து இல்லை!
மின்னல்!

மின் வெட்டில்
ஒளிர்ந்தது
மின்னல்!

கிளைவிட்டது
இலைவிடவில்லை!
மின்னல்!

வெளிச்சக் கீற்றை
விழுங்கியது வானம்!
மின்னல்!

மேகம் பிரசவித்த
மோகினி
மின்னல்!

ஒளிவெள்ளம்
ஒளிந்து விளையாடியது!
மின்னல்!
 
நன்றி 
அன்பன் 
சிவா....

 

வாக்காளர்- பயோ(யங்கர)டேட்டா

பெயர்-----------------------------------------------------வாக்காளர்

தொழில்--------------------------------------------------தேர்தலில் ஓட்டுப் போடுவது.

பலம்-------------------------------------------------------வாக்குரிமை

பலவீனம்-------------------------------------------------நியாபக மறதி

மறந்தது---------------------------------------------------போனமுறை வாக்களித்தது

மறக்காதது-----------------------------------------------மாற்றி மாற்றி குத்துவது

சமீபத்திய மகிழ்ச்சி----------------------------------ஓட்டுக்கு பணம் கிடைப்பது

சமீபத்திய எரிச்சல்------------------------------------நோட்டா காசு கொடுக்காதது

பிடித்தது-------------------------------------------------கூட்டம் கூட கொடுக்கப்படும் சரக்கு

பிடிக்காதது---------------------------------------------தேர்தல் நாளில் டாஸ்மாக் மூடல்

ரசிப்பது-----------------------------------------------------தலைவர்களின் பேச்சை

வெறுப்பது-------------------------------------------------நடிகைகள் இல்லாத பிரச்சாரம்


நன்றி 
அன்பன் 
சிவா...

Sunday, April 27, 2014

காமராஜரின் அறம் சார்ந்த வாழ்க்கை


சங்கரர், பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னைப்பாசத்தை துறந்தவர் அவர். தன் அம்மா அருகில் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். தன் அம்மா இருந்த வீட்டிற்கு விதிகளை மீறி குழாய் இணைப்பு கொடுத்த பொழுது, அதைத் தானே பிடுங்கி எறிந்து விட்டு ,"நான் பணம் கட்டி அனுமதி கேட்டேனா? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?"என்று கேட்டார் அவர். வெங்கட்ராமன் இவரின் அம்மாவுக்கு வாங்கித் தந்திருந்த மின்விசிறியை கழற்றி கொடுத்து அனுப்பிவிட்டார் இவர் !

ராஜாஜியின் ஆட்சி குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. ராஜாஜி பதவி விலகினார். அவருக்கு பின் தமிழகத்தின் முதல்வர் ஆன காமராஜர் அந்த அமைச்சரவையை அப்படியே வைத்துக்கொண்டார்.

ராஜாஜி நிதிப்பற்றாக்குறை என்று மூடிய ஆறாயிரம் பள்ளிகளை காமராஜர் திறந்தார் . பதினான்காயிரம் பள்ளிகள் கூடுதலாகவும் திறக்கப்பட்டன. பிள்ளைகளுக்கு பசியாற்ற கூடுதல் வரி போடவும்,கையேந்தவும் தயங்க மாட்டேன் என்று கம்பீரமாகச் சொன்னார் கர்மவீரர். நிக்ஸன் காமராஜரை பார்க்க விரும்பிய பொழுது முடியாது என்று மறுத்து அவர் சொன்ன காரணம் ," நம்ம அண்ணாவை பார்க்க நேரமில்லைன்னு சொன்னவர் தானே அவரு? அவரை நான் ஏன் பார்க்கணும்னேன் !"

யாரைப்பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் தி ஹிந்து கஸ்தூரி ரங்கனிடம் தந்து வைத்திருந்தார். அவை சேர்ந்ததும் அதைக்கொண்டு கட்சியின் பெயரில் வாங்கிய இடம் தான் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம். அதையும் தன் பெயரில் பதிவு செய்துகொள்ள மறுத்தவர் அவர்.

காமராஜர் திமுகவுக்கு எதிராக மவுன ஊர்வலம் நடத்திய பொழுது இரண்டு தொண்டர்கள் மீது கல் பட்டு ரத்தம் வடிய மேடைக்கு அவர்களை கொண்டு வந்தார்கள். காமராஜர் கடும் கோபத்தோடு ,"இங்கே என்ன நாடகமா நடக்குது ? அவங்களை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேருங்கனேன்" என்று சொன்னார். பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது ,"எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!" என்றார். சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்தவர் அவர். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே துவங்குகிறது.

காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி போடவில்லை . "இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!" என்றவரிடம், ரஷ்ய மை தடவித்தான் தேர்தலில் தோற்றுப்போனோம் என்று தொண்டர்கள் சொன்ன பொழுது "மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வில்லை அவ்ளோதான். !" என்று இயல்பாகச் சொன்னார்.

காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை இரவு மதுரையில் விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்து. மின்சாரம் இல்லாமல் போகவே முதல்வர் "கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்று சொல்லிவிட்டு கட்டிலைப்போட்டதும் போய் படுத்துக்கொண்டார். . கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு வந்து நின்றார். " நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று மட்டுமே வார்த்தைகள் வந்தன அவரிடமிருந்து.

1967ல் திமுகவினர் "கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர் தோற்றுப்போனார் "என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்," படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார்!" என்று பதில் போஸ்டர் ஒட்டினார். அரசாங்க பணத்தை விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதர்.

Monday, April 21, 2014

பாலைவனமாகும் சோலை வனங்கள்!தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து உதகை வரை இந்த மலைத் தொடரில் மனிதர்களின் புழக்கத்திற்கு வராத குன்றுகளின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள், பெய்யும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் தேக்கி வைக்கும் நீர்த் தொட்டிகளாக இயற்கையாகவே அமைந்துள்ளன. மலைச் சிகரங்களில் நடக்கும் மகத்தான இயற்கை நிகழ்வைப் புரிந்து கொண்டால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் சிக்கல் வராமல் செய்ய முடியும்.

சமவெளியைவிட மலை உச்சிகளில் மழைப்பொழிவு அதிகம். அறிவியல் படி தண்ணீர் உயரமான இடத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடிவரும் இயல்பு கொண்டது. ஆனால், இந்தப் புல்வெளிகள் இருக்கும் குன்றுகளில் மழை பெய்தால் அவற்றைத் தம் வேர்க் கால்களால் தேக்கி வைக்கும் இயல்பை புல்வெளிகள் கொண்டுள்ளன.

இக் குன்றுகளின் சரிவுகளில் இருக்கும் சோலைக் காடுகள் நம் மலைக்கே உரித்தான தனித்தன்மை கொண்டவை. வள்ளுவன் சொன்ன "அணிநிழற்காடு' இந்த சோலைகள்தான். கதிரவனின் ஒளிக்கீற்றுக்குள் புகமுடியாத, ஈரப்பதம் நிறைந்த சோலைகளில் மண் உருவாகும் விதமே சிறப்புக்குரியது.

தமிழகத்தின் ஆண்டுதோறும் சராசரி மழையளவு 900 மி.மீ. ஆனால், நமக்கு ஆண்டுக்கு 50 நாட்களுக்கும் குறைவாகவே மழை கிடைக்கிறது. இவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்த இயற்கை கொடுத்த கொடைதான் மலைக்காடுகள். இதைத்தான் நம் முன்னோர்கள் குறிஞ்சி நிலம் என வரையறுத்து வைத்தனர்.

காடாய் இருந்த முல்லை நிலங்களை அழித்து மருத நில வயல்களாய் மாற்றிய தமிழர்கள், குறிஞ்சி நிலத்தை எந்த சேதாரமுமின்றி வைத்திருந்ததாக வரலாறு சொல்கிறது. எந்த நதியும் சமவெளிகளில் உற்பத்தியாவதில்லை. மலைகளில்தான் உற்பத்தியாகிறது. பசுஞ்சோலைகளே ஆறுகளின் தாய்மடி.

வெள்ளையர்கள் காலத்தில் நமது மலை வளம் கொள்ளை போனது. இயற்கைச் சோலைகள் அழிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட யூகலிப்டஸ், வேட்டல், பைன், தேயிலை, காபி என பசுமைப் பாலைவனங்கள் உருவாக்கப்பட்டன. ஓடைகள் மடிந்து நதிகள் சுருங்கின. இன்னும் மிச்சமிருக்கும் மிகக் குறைந்த மலைக்காடுகளே தண்ணீரின் ஆதாரம். அவற்றைக் காப்பது நம் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.

உலகம் இன்று ஒரு பேராபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் "புவி வெப்பம்'. இதுபற்றி அறிவியல் உலகம் ஆழ்ந்த கவலையில் உள்ளது. மனிதர்கள் தோன்றிய நாள் முதல் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை பூமியின் வெப்பநிலை சீராக இருந்தது.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் வெப்பநிலை உயரத் தொடங்கி உள்ளது. விழும் கதிரவனின் ஒளிக்கீற்றுகளில் பெரும் பகுதியை பூமி திருப்பி அனுப்பி விடுகிறது. அந்த அளவோடு நின்றுவிட்டால் பூமி முழுவதும் துருவப் பகுதியை போல் உறைந்து போயிருக்கும். ஆனால், திருப்பி அனுப்பப்படும் வெப்பத்தை, புவியைச் சூழ்ந்துள்ள சில வாயுக்கள் உள்வாங்கி இங்கு ஓர் இதமான வெப்பம் நிலவ காரணமாய் உள்ளன.

இந்த விளைவு பசுமைக்குடில் விளைவு என்றும், அந்த வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கார்பன்-டை-ஆக்ûஸடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு, ஆகியவை முக்கியமான பசுமைக்குடில் வாயுக்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியேற்றிய கார்பன்-டை-ஆக்ûஸடு புவி வெப்பம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம். உலகின் துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக கடல் மட்டம் உயர்வதோடு பருவநிலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள குளிர்நாடுகளில்கூட அனல் காற்று வீசுகிறது. பெரும் வறட்சி, வெள்ளம் ஆகியவை பல நாடுகளை அச்சுறுத்துகிறது. விவசாயம் கேள்விக் குறியாகி உள்ளது. புதிய நுண் கிருமிகளின் தோற்றத்தால் புதுப்புது நோய்களுக்கு மனிதகுலம் உள்ளாக்கிறது. துருவக் கரடிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளன. இமயமலையில் பனி உருகுவது தொடர்ந்தால் வடஇந்திய நதிகள் அனைத்தும் வறண்டு போய்விடும்.

சுனாமியால் பாதித்த பல கடலோர கிராமங்கள் உள்பட மும்பை, சென்னை போன்ற நகரங்களும் கடலில் மூழ்கிவிடும். இந்த பேராபத்தில் இருந்து நம் தேசத்தையும், மக்களையும் காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தத் தருணத்திலும் விழித்துக் கொள்ளாவிட்டால் மணலும், கற்களும்தான் மிஞ்சும்.

ஜப்பானின் கியாட்டோ நகரில் கூடிய உலக ஆய்வாளர்கள், உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்ûஸடின் அளவைக் குறைக்க வலியுறுத்தினார்கள். ஆனால், இவற்றை பெருமளவு உற்பத்தி செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் கையெழுத்திட மறுக்கின்றன. கடந்த டிசம்பரில் கோபன்ஹெகனில் நடந்த உலக மாநாட்டிலும் இது பற்றி பேசப்பட்டது. ஆனால், செயல்பாடுகள் தொடர்பாக இன்றும் ஆயத்தமாகவில்லை.

கார்பன்-டை-ஆக்ûஸடு உற்பத்தியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதோடு உலகை வற்புறுத்தும் கடமை யும் நமக்கிருக்கிறது. மறுபுறம் இந்த பூமியின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன்மூலம் உற்பத்தியான கார்பன்-டை-ஆக்ûஸடை குறைக்கச் செய்யலாம். குறிப்பாக, இந்த பூமியில்தான் தண்ணீரும், உயிர்க்காற்றும் உள்ளது. அதனால்தான் பூமியை உயிர்க்கோளம் என்று அழைக்கிறோம்.

இந்த உயிர்க் கோளத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, இமயமலைக் காடுகள் உலகில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளே, வெளியேறிய கார்பன்-டை-ஆக்ûஸடை உறிஞ்சிக் குடிக்கின்றன. காடுகளைக் காப்பாற்றுவதன் மூலம் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பத்தில் இருந்து எல்லா உயிர்களையும் காப்பாற்ற முடியும்.

Sunday, April 20, 2014

Sim Card இல் அழிந்து போன தகவலகளை மீட்பது எப்படி?

sim-cardsசிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா? நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும்.

அதன் லின்க்
மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.
http://www.mediafire.com/download/skyx0y79qamp65k/simcard+recovery.rarஅன்புடன் 

சிவா...

சம்மர் கேம்ப் தேவையா?


செல்வ களஞ்சியமே 66

எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது அவனும் யோகாசனம் கற்க வருகிறான் என்று. துறுதுறுவென்று இருக்கும் அந்தக் குழந்தைக்கு எதற்கு யோகாசனம் இப்போது? ஓடிவிளையாடும் குழந்தையை இப்படி ஒரு இடத்தில் உட்காரச் சொல்வது பெரிய கொடுமை, இல்லையோ?

கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. குழந்தைகள் வீட்டில் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் என்று குழந்தைகளை வதைக்கும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒன்று மட்டும் நான் பார்த்துவிட்டேன். குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன கற்கிறார்கள்? யாருக்குக் கவலை? பள்ளி மூடியிருக்கும் சமயங்களிலும் பெற்றோர்களிடமிருந்து பணம் கறக்க பள்ளிகள் கண்டுபிடித்திருக்கும் புதுவழி இந்த சம்மர் கேப்ம்ஸ். முன்பெல்லாம் தனியார்கள் நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாமே செய்யலாமே என்று பள்ளிகளும் களத்தில் இறங்கிவிட்டன


அன்புடன்
சிவா.....
 

Saturday, April 19, 2014

குமுறல்?

குமுறல்?
கோடு போட்டு வாழ்ந்தே
உழைத்துத் தேய்ந்த ஓடானேன்
கேடுகெட்ட மனிதரும் கூட-
மிதித்து நடக்கும் ரோடானேன்?
ரவிஜி …
(புகைப்படம் : நன்றி கூகிள்)