Thursday, March 09, 2023

Introducing virtual REALITY - ppt download

Introducing virtual REALITY - ppt download: Virtual Environment Introduction A computer generated world with which user can interact is called Virtual Environment. This interaction can vary from looking around to interactively modifying the world.

Saturday, March 04, 2023

நீங்கள்தான் மாணவர்கள் விரும்பும் ஆசிரியர்...

படித்ததில் பிடித்தது 

ஒரு பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஓய்வறையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்.

01 உங்களுக்கு இப்போது ஓய்வுப் பாடவேளை தான்.

02 ஆனால் பாடசாலையில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வகுப்பிற்கு ஆசிரியரின்றி மாணவர்கள் இருக்கலாம்.

03 அந்த வகுப்பு உங்களுக்கு உங்கள் பாடத்திற்கு தொடர்பில்லாத வகுப்பாய் இருக்கலாம்.

04 அவர்கள் தற்போது ஒழுக்க, நடத்தை, கட்டுப்பாடு ரீதியாக மேற்பார்வையின்றி செயற்படலாம்.

05 அவர்களது கட்டுமீறிய விளையாட்டுக்கள் அவர்களது பாதுகாப்பினை கேள்விக்குட்படுத்தலாம்.

06 இவையெல்லாம் உங்களது பொறுப்பு கடமை இல்லாதிருக்கலாம்.

07 ஆனால் சில வேளைகளில் அந்த வகுப்பு மாணவர்கள் உங்கள் இன்றைய நாளை அழகாக்கக் கூடிய வாய்ப்பிருக்கலாம்.

08 உங்கள் சந்ததியின் ஏதோவொரு தலைமுறைக்கு உங்களால் புண்ணியம் தேடித் தரக்கூடியவர்களாக இருக்கலாம்.

09 அவர்கள் வாழ்வில் உங்களை மறக்க முடியாத ஆசிரியர்களாக ஆக்கக் கூடிய வாய்ப்பிருக்கலாம்.

10 எங்கோ ஒரு பள்ளியில் உங்கள் பிள்ளை கூட இது போன்று கவனிப்பின்றி இருக்கலாம்.

11 இன்றைய நாளின் இந்த நேரத்தினை செலவின்றி தேடும் புண்ணிய காரியத்திற்காக செலவிடுவதாக எண்ணி அந்த வகுப்பிற்கு செல்லுங்கள்.

12 கற்பிக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களுடன் அன்புடன் நட்புடன் உரையாடுங்கள்.

13 அவர்களுடன் விளையாடுங்கள்

14 அவர்களதும் உங்களதும் நேரத்தினை அழகாக்குங்கள்.

15 பாடசாலைக்கு தரமான மாணவர்களை உருவாக்க சம்பளத்தை தாண்டி உழைக்க கிடைக்கும் வாய்ப்பினை தவற விடாதீர்கள்.

16 அந்த ஆத்ம திருப்தியினை அனுபவித்துப்பாருங்கள்.

17 புறம் பேசி,நேரத்தினை வீணடித்து தேடும் பாவங்கள் தொலைந்து உங்கள் தலைமுறை தாண்டி நிலைத்து நிற்கும் புண்ணியம் கிடைக்கும்.

18 உங்களைத் தேடி ஓடிவரும் ஒரு மாணவர் கூட்டத்தை பெறுவீர்கள்.

19 வாழ்க்கையின் அர்த்தம் அழகாகும்.

20 வரங்கள் நீங்கள் வேண்டாமலேயே கிடைக்கும்.

21 பாடசாலையின் பெறுமதி மிக்க ஆசிரியர் இனி நீங்கள் மட்டுமே.

நன்றி
பகிர்வு பதிவு..

Monday, February 13, 2023

வாழ்க்கைப் பாடம்...

🔘 *ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார்.*

▪ *ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.*

🔳 *அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.*

▪ *இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.*

🔘 *‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’*

🔳 *அவருடைய வார்த்தையில் அனலடித்தது.*

▪ *சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.*

▪ *இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது.*

🔳 *வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார்.*

🔳 *நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.*

▪ *உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான்.*

🔳 *அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை ‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.*

▪ *சிறுவன் திரும்பினான்.* 

🔳 *சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான்.*

▪ *வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.*

🔘 *‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.*

🔳 *இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன்.*

🔘 *பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன்.*

🔳 *அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்…*

▪ *சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.*

🔘 *சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.*

🔘 *ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.*

▪ *குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.*

▪ *அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.*

🔘 *பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.*

🔳 *ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல.*

▪ *ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.*

🔳 *வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது. 

📌 *குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.*

💢 *அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.*

*படித்ததில் உணர்ந்தது*

நன்றி..!

பகிர்வு பதிவு...

Tuesday, February 07, 2023

வாழ்க்கை மந்திரம்

*நம் மனதை நிமிர்த்தும் மந்திர சொற்கள்..!!*         
        
          
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  

அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி  வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். 

மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல..

5.பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..

6.சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் 
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.கஷ்டம் தான்,ஆனா முடியும்...

10.நஷ்டம் தான் , ஆனா மீண்டு வந்திடலாம்.

11.இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு...

14.உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப்  பார்...

15.இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே..

19.முடியுமான்னு நினைக்காதே. முடியணும்…னு நினை...

20.கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

21.அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு...

22.விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை...

24.சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25.ஆகா, இவனும் அயோக்கியன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.

26.உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், 
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31.அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32.நாலு காசு பார்க்கின்ற நேரம். கண்டதைப் பேசிக் காலத்தை கழிக்கலாமா?

*வீழ்வது கேவலமல்ல,* 
*வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்..* 
*முயற்சியுடன் எழுந்திடுங்கள்..!!* 

*உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.*

*வெற்றி நமதே!*
நன்றி
படித்ததில் பிடித்தது...
பகிர்வு பதிவு