உங்கள் கையில்
திட்டம் இருந்தால்
நீங்கள் எடுத்துக்கொண்ட வேலையில் பாதி
முடிந்த மாதிரி ..
திட்டம் என்பது
என்ன ..?
தான் கொண்ட
குறிக்கோளை
அடைவதற்கான வழிமுறைகளை
வரைவு செய்து
கொள்வது ...
திட்டத்தை வரைவு செய்யும்போதே செயல்பாட்டின் பல நிலைகளையும் மனக்கண்ணில் காட்சியாக்கி பார்க்க வேண்டும் அப்போதுதான் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை
காண முடியும்
உங்கள் செயலில்
எந்த கட்டத்தில்
யார் தேவைப்படுவார்கள் என்பதையும் அறிய
முடியும் ....
திட்டம் வெற்றி
வாய்ப்புகளை
உறுதிசெய்யும் தோல்விக்கான சந்தர்ப்பங்களை
குறைக்கும்..
திட்டம் இடுதல்
முக்கியம் ...
திட்டமிட்டபடி
செயல்படுவது
அதை விட முக்கியம் ...
உங்கள் திட்டம் முழுமையானதா இல்லையா என்பதை பொறுத்தே
நீங்கள் முதல்
இடம் பெறுவதும் உங்களுடைய முகவரி நிலைப்பதும்
உங்கள் கையில்..
உங்களுடைய அன்றாட பணியை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் இன்று
எந்த நேரத்தில்
யாரை சந்திப்பது
இன்று எந்த
நேரத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டும்
என்று திட்டமிட்டுக் கொண்டால்
நாம் மனஉளச்சலுக்கு உள்ளாக வேண்டி
இருக்காது ...
திட்டமிட்டுக் கொண்டால்
ஒரு தெளிவு
கிடைக்கும் ...
திட்டமிட்டு செய்கிற
வேலை நிச்சயம்
நடக்கும்
திட்டமிட்டு
வாழ்கிற
வாழ்க்கையில்
நிம்மதி
கிடைக்கும் ...
வாங்க
நாமும்
திட்டமிடுவோம்
நிம்மதியாக
வாழ்வோம்
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..
2 comments:
Well said
அருமை... கணக்கியல் அறிந்தோருக்கு எளிது...
Post a Comment