Monday, December 21, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



அவரின்
கருப்பு கோட்
உலகம் அறிந்தது.

அங்கங்கே
கிழிசல்கள்.

அதன் மேல்
வெள்ளை
நூலில் 
தையல்கள்.

அதை
மறைக்க
கருப்பு மையில்
சாயம் வேறு.

இவ்வளவு
ஏழ்மை
நிலையிலும்

அவர்
பாடிய
ஒரு பாட்டு

' எத்தனை 
  கோடி 
  இன்பம்
  வைத்தாய்
  இறைவா '

அதனால் தான்
அவர்

மகா கவி
தேசிய கவி
தெய்வ கவி

என
போற்றப்பட்டார்.

எளிமையிலும்
மிக வலிமை

ஏழ்மையிலும்
மன செழுமை

கண்களில்
ஒரு காந்தம்

வார்த்தைகளில்
ஒரு ஜாலம்.

பாரதி
நமக்கெல்லாம்
ஒரு பாடமல்ல

அவர் ஒரு
வாழும் வரலாறு.

அவரின் புதிய 
ஆத்திசூடியின்
தெறிக்கும் சில
முத்துக்கள் :::

  அச்சம் 
  தவிர்

  ஆண்மை 
  தவறேல்

  உடலினை 
  உறுதி செய்

  எண்ணுவது 
  உயர்வு

  ஏறுபோல் 
  நட

  கற்றது 
  ஒழுகு

  குன்றென 
  நிமிர்ந்து நில்

  கூடி 
  தொழில் செய்

  சீறுவோர் 
  சீறு

  சூரரை 
  போற்று

  தூற்றுதல் 
  ஒழி

  தெய்வம் நீ 
  என்றுணர்

  நீதி நூல் 
  பயில்

  நேர்பட 
  பேசு

  புதியன 
  விரும்பு

  மூப்பினுக்கு
  இடம் கொடேல்

  யாரையும் 
  மதித்து வாழ்

  ரௌத்திரம் 
  பழகு

  வையத் 
  தலைமை கொள்

பாட்டுக்கு
மட்டுமல்ல
நாட்டுக்கே
நல்ல 
தலைவன்
அவன்.

அவன்
காட்டிய
பாதையில்
பயணம் 
செல்லின்...

விளைய 
போவது...

புதுமை !
வளமை !!
செழுமை !!!
இனிமை !!!!

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

புதிய 
நம்பிக்கைகளுடன்

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்


நன்றி. முனை.சுந்தரமூர்த்தி