Tuesday, June 29, 2021

பூக்கள்...பூக்கும் ..தருணம்..நடனம்

ஆங்கிலேயர்களுக்கு நம் தமிழர் உணர்த்திய நாகரீகம் மற்றும் பண்பாட்டை  மாதுராசு பட்டிணம் திரைபடத்தில் பூக்கள். பூக்கும் பாடலின் நடனம. உங்கள் பார்வைக்கு..காணொளியை கண்டு Command & Share செய்யவும் மறக்காமல் Subscribe செய்யவும் அன்போடு வேண்டுவது...உங்கள் அன்பன்
சேலம் சிவா..


YouTube Video link Click செய்க
https://youtu.be/IOXq07E-18A

கண்ணாடி சொல்லும் பாடம்...



கண்ணாடி சொல்லித்தரும் பாடம்..!!*  

ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அந்தப் பெரியவரிடம் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அந்த பெரியவர் அடிக்கடி அந்த கண்ணாடியை எடுத்து பார்ப்பார். 
அதன் பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். 

இதனை தொடர்ந்து அவரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் கவனித்து வந்தான். 
பெரியவரின் இந்த செய்கையானது இளைஞனுக்குக் குறுகுறுப்பை உண்டாக்கியது…!

*'அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதை எடுத்து உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை ஏதாவது மாயா ஜாலக் கண்ணாடியோ?’* என்று நினைத்தான்.

தொடர்ந்து பெரியவரின் செயலால் ஈர்க்கப்பட்டான்.. 

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அதுபற்றி அந்த பெரியவரிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்து
பெரியவரிடம் நேரில் சென்றான்.

*“ஐயா…!”*

*"என்ன தம்பி?”*

*“உங்கள் கையில் இருப்பது முகம் பார்க்கும் கண்ணாடிதானே?”*

*"ஆமாம்!”*

*"அதில் என்ன தெரிகிறது?”*

*"நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்! அவ்வளவுதான்... ஏன் கேட்கிறாய்..!”*

*"அப்படியானால் அதுவும் எல்லோரிடமும் இருப்பது போன்ற சாதாரணக் கண்ணாடிதானே அது?”*

*“ஆமாம்!”*

*"அப்படி என்றால் பிறகு ஏன் அதையே அடிக்கடி பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”*

இளைஞனின் கேள்வியை கேட்டதும் பெரியவர் புன்னகைத்தார்.

*“தம்பி... சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அதனை ஒவ்வொரு முறை எடுத்து பார்க்கும் போதும் அது தரும் பாடங்கள் நிறைய!”*
என்றார்.

இளைஞனுக்கோ ஆவல் அதிகமானது
*"பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”*


*"ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும்? எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்? என்பதை இந்தக் கண்ணாடியிடம் இருந்து கற்க முடியும்...! கற்கவும் வேண்டும்...”*
என்றார் பெரியவர்.

*“எப்படி?”*

*“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை! குறைப்பதும் இல்லை! உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?"*

*“ஆமாம்”*

*“அதே போல் உன் சகோதரனிடம், நண்பனிடம், உன் உறவுகளிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகைப்படுத்தியோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பை தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி நமக்கு சொல்லும் 'முதல் பாடம்'!”*

*“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்!. அடுத்து…?”*

*"கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையை காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடுகிறது... இல்லையா?”*

*“ஆமாம்!”*

*“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் அவரை பற்றி பேசக் கூடாது. இது கண்ணாடி நமக்கு கற்றுதரும் 'இரண்டாவது பாடம்'!”*

*“கிரேட்! அப்புறம்?”*

*"ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”*

*“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக பாதுகாப்பாக அல்லவா  வைத்துக் கொள்கிறார்!”*

*“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் கண்ணாடி எப்படி முகக்குறையை காட்டும் போது, ஏற்று கொள்கிறோமோ, அதேபோல் அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால், கறையை போக்க, முகத்தை திருத்தி கொள்வது போல, அவர் சுட்டிக்காட்டிய குறைகளையும், திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் 'மூன்றாவது பாடம்'!”*

*"ஆகா.... அருமையான விஷயம்"*

*“இன்னும் ஆழமாக யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கலாம்!”*
என்றார் அந்த பெரியவர்.

இந்த விளக்கங்களை  கேட்ட அந்த இளைஞன் வியந்து போனான். 
*"ஒரு கண்ணாடியில் இவ்வளவு விசயங்கள் இருக்கா?... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையான விஷயங்களே!!... நன்றி அய்யா.."*
என்று அந்த பெரியவருக்கு  நன்றி கூறி விட்டு மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் சென்றான் அந்த இளைஞன்.

ஆமாம்...

அந்த பெரியவர் சொன்னது போலவே

*நம் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் கண்ணாடி போன்றவர்களே!!* 

*ஒருவரைப்பற்றி மிகைப்படுத்தியோ, குறைத்தோ, பேசுவதும் கூடாது*

*ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசுவதும் கூடாது!!*

*ஒருவர் நமது தவறினை சுட்டிக்காட்டும் போது... ஏற்று கொள்ளாமல் இருப்பதும் கூடாது!!*

*கண்ணாடி சொல்லித்தரும் இந்த பாடங்களை நாமும் கடைபிடித்துதான் பார்ப்போமே!!!*

 படித்ததில்  பிடித்தது...
பகிர்வு பதிவு

Sunday, June 20, 2021

தந்தையர் என்ற மெழுகுவர்த்தி...

*தலைமுறை இடைவெளி*

அன்று பரீட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்
சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,😥
டேய் உனக்காவது இது கிடைத்தது ,
நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு
வசதியில்லை என்று சொன்ன
என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!😉😉

இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது
150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி 
இதைவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,,
என் மகளிடம் பெருமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரீட்சை எழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன்,,
ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,
, சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,
,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்....
bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை.....
என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது
நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!!

நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!😉😉
நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெருவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்
இன்று அப்பா filter water கேன்
(2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன் 🤔
இதுதான் தலைமுறை இடைவெளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாடிவிட்டு
தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி
( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)
அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்
நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!
( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டர்) ;
இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?
என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான்,
ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!
இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்...

இன்று
ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன்
(கடகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலபுண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)

boost is secert of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;
இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;
நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க 🤔🤔
இது நெட்டில் சுட்டது இல்லை! 
வாழ்கையில் பட்டது!!..

இன்று தந்தையர் தினம்....
நல்வாழ்த்துகள் !!!!!!

படித்ததில். பிடித்தது.. பகிர்வு பதிவு...

Thursday, June 17, 2021

சிகரத்தை நோக்கி....

பெரிய அளவு பிக்செல் புகைபடங்களை ( Big Size Pixel photos  )  சிறிய அளவு பிக்செல் புகைபடமாக  ( Small Size Pixel Photos) மாற்றி எளிதாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய பயன்படும் செயலியின் செயல் விளக்க வீடியோவை காணுங்கள்.... மறக்கமல் Subscribe செய்து ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்...

மிக்க பேரண்போடு..
சேலம்.ஆ.சிவா....

Please click the Tutorial Link
https://youtu.be/3fBfnrP6RuM

எனது Siva Mindmoulders channel 50,000 பார்வையாபளர்கள் பார்வையிட்டுள்ளார்கள்...உங்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்....



Monday, June 14, 2021

பள்ளிக்கல்வி ஆணையரின் பாராட்டு சான்றிதழ்....

அனைவருக்கும் வணக்கம்...கொரோனா பெருதொற்று காலத்தில் ( முதல் அலையின் போது ) ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்வித்துறை ஆணையரின் அறிவுருத்தலின் படி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் பொருட்டு குழு உருவாக்கபட்டு அக்குழுவின் பரிந்துறையை ஏற்று  தேவையான பாடம் ( அவசியமான ) கரு பொருளை மட்டும் கற்றல் கற்பித்தில் செய்ய  பள்ளிக்கல்வி துறை பரிந்துரை செய்துள்ளது.இப்பணியில் நான் கணிதம் பாடங்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த ஆணையர் அவர்களுக்க நன்றி!..

 மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழல் உள்ளதால் அவர்களின் கற்றல் இழப்பை தடுக்க பாட இணைப்பு ( Bridge course ) மற்றும் பாட பணித்தாள் ( Work Book )  புத்தகம் தயாரிக்கும் பணியில்  ( கணிதம் ) இணையம் மூலமாக பங்கேற்று என் பணியை சிறப்பாக பணியாற்றியதை  நமது பள்ளி கல்வித்துறை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இவண்
என்றும் கல்விப்பணியில்
சேலம்.ஆ.சிவா..

Friday, June 11, 2021

புதிய பாரவை..புதிய கோணம்..வலையொலி..

புதிய பார்வை புதிய கோணம் இணைய வழி வானொலி பதிவை கேட்டு மகிழ அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்....
மிக்க அன்போடு
சேலம்.ஆ.சிவா...

https://anchor.fm/sivaramakrishnan7/episodes/8-e12kilr

வலையொலி கேட்க பின் வரும்  வழிமுறையை பின்பற்றவும்...


Friday, June 04, 2021

காந்த குரலோனுக்கு இனிய பிறந்தநாள் சபர்ப்பணம்..

உறவுகளுக்கும் நட்புகளுக்கும் வணக்கம்....
இசைக்கு மதம்,இனம்,மொழி,வண்ணம் ,ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது....அந்த இசையின் மூலம் தன் காந்த குரலால்  நம் மனதில்   என்றும் வாழ்ந்து வரும் மாபெரும் இசைக் கலைஞன் திரு. S.P. பாலசுப்பரமணியன் .  இந்த இசை மேதையின் பிறந்தநாள்  இன்று ( ஜீன்.04).  எங்களது இந்த  சிறு நடனத்தை  திரு.SPB Sir  அவர்களின் பொற்பாதங்களில் காணி க்கையாக  சமர்ப்பணம் செய்கிறோம்...
காணொளியை கண்டு களித்து மறக்காமல் SivaMindmoulders Channel யை Subscribe செய்து ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்..

என்றும் கலைப்பணியில்...
ஆ.சிவா...& ரேஷ்மா...சேலம்.
 
https://youtu.be/7OD1yQ4REmQ


இசை ராசாவுக்கு இனிய பிறந்தநாள்....

🍁 HBD ILAYARAJA 🍁

இசை
இரட்சகன்
இளையராஜா ::

  அது 
  ஒரு
  நிலா
  காலங்கள்

  மனதை
  விட்டு 
  அகலாத
  
  மகிழ்ச்சியான
  நேரங்கள்
  ( 1976 - 79 )

வேலூரில்
கல்லூரியில்
B.Com., படித்து 
கொண்டிருந்த
வேளை

பாபி
ஷோலே
யாதோன் 
கி பாரத்
ஹம் கிசிசே
கும் நஹீன்
உட்பட

இந்தி
பாடல்கள்
மட்டுமே
சக்கை போடு
போட்டு கொண்டு
இருந்தன

இந்தி
தெரியாவிட்டால்
கூட

தெரிந்த மாதிரி
பாவ்லா செய்து
கொண்டு

நான் உட்பட
மக்கள் செய்த
அலப்பறைகள்
கொஞ்ச
நஞ்சமல்ல

இதை
ஒடித்தவர்
ஒழித்தவர்
ராசய்யா
என்னும் 

மெலிந்த
தேகம்
கொண்ட
ஒரு
கிராமத்து
இளைஞர்

அவரின்
அன்னக்கிளியை
வானுயர
பறக்க விட்டது
இலங்கை
வானொலி

ஒரு 
நாளைக்கு
குறைந்தது
ஐந்து அல்லது
அதற்கு மேல்

அந்த
படத்தின்
அனைத்து
பாடல்களை
ஒலிக்க விட்டு

அவரை 
ஒரேநாளில்
உச்சாணி
கொம்பில்
உட்கார
வைத்தது
இலங்கை
வானொலி

அடுத்தடுத்து

16 
வயதினிலே

கிழக்கே 
போகும் ரயில்

நிறம்
மாறாத பூக்கள்

என
பட்டிதொட்டி
என பட்டையை
கிளப்பிய 
அவருக்கு

சோதனை
காலமும்
உடனே
வந்தது

அது ...

A சென்டர்
B சென்டர்
மக்களுக்கான
இசை போட
தெரியாது

அதாவது
மேற்கத்திய
இசை ஞானம்
இல்லை 
என்பதே
அது

பாருங்க...

அடுத்து

சிவப்பு 
ரோஜாக்கள்
என்னும் ஒரு
படத்திற்கு
(இரண்டே
பாடல்கள்
தான்) தூள்
கிளப்பியிருந்தார்
அந்த இசைராஜா

தொடர்ச்சியாக...

பிரியா
என்னும்
ஒரு படத்தில்

ஸ்டிரியோ 
போனிக்
முறையில்
புது வித
இசை 
அமைத்து

புகழ் 
ஏணியில்
உட்சம் தொட
தொடங்கினார்
அந்த இதயராஜா

காப்பி 
அடிக்கிறார்
என்னும்
இவர் மீது
வைக்கப்பட்ட
குற்றச்சாட்டு

குறைந்த
காலத்திலேயே
காணாமல்
போனது

இந்த
45 ஆண்டு
கால இசை
சாம்ராஜ்யதில்

மாபெரும்
சக்ரவர்த்தியாக
அசைக்க முடியாத
சக்தியாக அவர்
இருக்கிறார்
என்றால்

அதற்கு
மூன்றே
மூன்று
காரணம் 
தான்

அது...

திறமை
பொறுமை
நம்பிக்கை

ஆண்டவர்
அவர் 
அருகில்
வசிப்பதால்

அத்துணையும்
அவருக்கு
கூடி
வருகிறது
என்பது
நிஜம்

  செவியில்
  நுழைந்து
  இதயம்
  கலந்து
  மனதை
  மகிழ
  செய்யும்

  இசை
  பிரம்மாவுக்கு

  இனிய
  பிறந்த நாள்
  வாழ்த்துக்கள்

அன்புடன்
மாலை
வணக்கம்
நட்பூக்களே

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி