Wednesday, November 24, 2021

கோபம்..நம்...முதல் எதிரி...

🇨🇭#கோபம்_உங்களை_அழிப்பதற்கு
#முன்_நீங்கள்…

🇨🇭#அதை_அழித்து_விடுங்கள்❓❗❗

🔰  நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்❓❗

சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. 

எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.

👉சிலபேர் அழுவார்கள், 

👉சிலபேர் கையை பிசைவார்கள், 

👉பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), 

👉காச் மூச்சென கத்துவார்கள், 

👉கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். 

சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. 

⭕கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது❓

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

7. எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும் போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

8. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

9. உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

11.கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

12. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

13. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

14. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

15. மதம் சம்பந்தான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

16. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

17. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

18. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

19. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

20. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

21. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

22. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

23. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

❌ 👉கோபம் உன்னையே 
அழித்து விடும்❗❗❗

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” 

என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…

🔴 கோபம் ஏன்  ஏற்படுகின்றது❓

கோபம் என்பது
அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.

அதுமட்டுமல்லாமல்

நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம்……

👉 இதே கோபத்துடன் செயல்பட்டால்

💔 நட்பு நசுங்கி விடும்.

💔 உறவு அறுந்து போகும்.

💔 உரிமை ஊஞ்சலாடும்.

➡#மேலும்……↙

உடல் ரீதியாக, 

மன ரீதியாக, 

சமூக ரீதியாக, 

உளவியல்ரீதியாக, 

உணர்ச்சிப் பூர்வமான, 

சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் 

நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

¶ நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

¶ நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…

¶ நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…

¶ எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது 

…இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் #reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. 

சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. 

நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…

¶ வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

¶ திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

¶ தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

¶ மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

¶ முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….

கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 

55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

¶ கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

¶ இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

¶ மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

❌ 👉 நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன❓

சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க.

கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.

இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு ……

👉#இந்த_பாதிப்பால்…………

🇨🇭நரம்புத்தளர்ச்சி,

🇨🇭ரத்த அழுத்தம், 

🇨🇭மன உளைச்சல், 

🇨🇭நடுக்கம் 

🇨🇭பக்கவாதம்

 🇨🇭இதயம் செயல் இழப்பு        [ ஹாட்அட்டாக் ]

🇨🇭வியர்வை, 

🇨🇭மூக்கு விடைத்துக் கொள்தல், 

🇨🇭தூக்கமின்மை, 

🇨🇭ஓய்வின்மை, 

🇨🇭நெஞ்சுவலி, 

🇨🇭மாரடைப்பு, 

🇨🇭ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், 

🇨🇭எரிச்சல், 

🇨🇭தசைகள் கெட்டித்தன்மை ஆவது, 

🇨🇭தலைவலி

போன்ற உபாதைகள் உண்டாகிறது.
இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம்.
இதே நிலை நீடித்தால்
ஒரு #மன_நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல.
சத்தியமான உண்மை இது.

அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.

🆗 முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க.

🆗 அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. 

🆗 எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க.

🆗 அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க...

🆗 ஈகோ பார்க்காதீங்க.

நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே.

முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க.
யார்மேல தவறுன்னு சிந்தியுங்க...

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.

அப்படி இல்லைன்னா
அந்த இடத்தை விட்டு நகருங்க...

தனியா உக்காந்து யோசிங்க.

அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ 
அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள்.

அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம்.என்ன நடந்துருச்சு பெருசா.என்னத்த இழந்துட்டோம்.
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.

அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது.எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க.

வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள்
என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.

நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது.

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,
நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.

தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க...

கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.

#அதனால்……கோபத்தை அளவோடு வைத்து கொள்ளுங்க.

❤வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். 

❤அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்..

💚 கோபம் வராதிருக்க யோசிப்போம்..

💚 #அப்ப_என்ன_கோபத்தை_குறைங்க
#பாஸ்…❗❗❗

நன்றி
பகிர்வு பதிவு...

Tuesday, November 23, 2021

மெல்ல...கொல்லும்...உணவுமுறை...

#மெல்லஅழிந்த_இயற்கைஉணவுகள்..!!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன் 
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்...

 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

 புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், 
வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினை திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த 
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டு பரதேசிகள்...

நோய் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான். கேரட் , பீட்ரூட் 
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொணர்ந்தான், அது அவனுக்கு சரி..

ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின.

 விளைவு..?

தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு 
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்து கொண்டிருக்கின்றான்..

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைதனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெய்யும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம்,  அவற்றுக்கு உண்மையான 
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

 ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் 
நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று 
எதையோ குடித்து, 
எதையோ புகைத்து, எதையோ மென்று 
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும் 
அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 

 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.

 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 

விஷம் அவை..

இவை பெருக பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை இந்துமத ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 
காணலாம்..

இந்து தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு 
வீசபடும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் இந்துக்களின் உணவினை பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 
நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல் 
சிசேரியன் என மறுபுறம்.

 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இங்கு உருவான 
இந்து எதிர்ப்பு கோஷ்டிகள்..

இந்துமதம் ஒழிய ஒழிய இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை 
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... அந்த பாரம்பரியம் இந்து ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது..

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம். 

மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 
ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...


நன்றி
பகிர்வு பதிவு

Monday, November 22, 2021

http & https இடையே உள்ள ரகசியம்....

*" http" மற்றும் "https "* என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

 பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம், 

இதை அறிய 32 லட்சம் டெபிட் கார்டுகள் பறிகொடுத்துள்ளோம். 

இருந்தபோதும் வித்தியாசம் என்னவென்று சிலர் அறிந்திருப்பீர்கள்.

*_👉அறியதவருக்கு இப்பதிவு...._*

நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம்.

"http" என்பது "Hyper Text Transfer  Protocol" என்பதைக் குறிக்கும்.

"s" என்பது இணைந்தால்,  "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும். 
 
இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே.. இது தங்கள் கணினியின் மொழிகளை
தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும். இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாக பார்க்க முடியும்.
      
 எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ,

இந்த "http//" இணையமுகவரியில் தயவு செய்து பதிவிடாதீர்கள்.!

அதே சமயம் தங்கள் இணைய முகவரி "https://" என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணையமுகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள். 

இதிலிருந்து நமது தகவல்கழை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது.

இந்த S என்ற ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணையமுகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் தற்போது தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் என்றால், முதலில் இந்த வித்தியசத்தை கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.

எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய களம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும்.  (Eg: ".com"  or ".org", ".co.in", ".net"  etc).* இவற்றின் முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர்.
      
.Eg: "http://amazon.diwali -festivals.com" என எடுத்துக் கொள்வோம்.


இதில் ".com" என்பதற்கு முன்னால் உள்ள "diwali-festivals" ("amazon" என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையகளத்தின் முகவரி. எனவே இது "amazon.com" இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது "diwali-festivals.com" எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய களத்தைச் சேர்ந்தது.

இதே வழியில் வங்கித் திருட்டுக்களையும் தாங்கள் கண்டறிய முடியும். 

தங்கள் வங்கியுடனான இ-சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியது போல், ".com" எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா எனமுதலில் கவனியுங்கள். Eg: "icicibank.com" என்பது icici வங்கியைச் சார்ந்தது; 

ஆனால் , "icicibank.'வேறு ஏதோ வார்த்தை'.com" என வந்தால், அது iciciவங்கியுடையது அல்ல. 
அந்த‌ _"வேறு ஏதோ வார்த்தையுடையது.

 _👆இது பார்க்க சாதாரண விஷயமாகத் தோன்றும். 

ஆனால் இந்தத் தவறால் பணம் இழந்தவர்கள் பலர்.👆_

இன்று ஒரு தகவலுடனும்
காலை வணக்கத்துடனும்
உங்கள் கவிஞர்
க.மணிஎழிலன்

நன்றி கவிஞர் அவர்களே...!

Thursday, November 18, 2021

சேலம் மாவட்டம் நாளை...விடுமுறை

கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..*தொடர் மழையை யொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை (19.11.2021) விடுமுறை.*

*மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,செ. கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.* இதுவரை 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி தர்மபுரி, பெரம்பலூர் உட்பட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .. செங்கல்பட்டு, கடலூர் மாவட் டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. .. சென்னையிலிருந்து நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 


Thursday, November 11, 2021

நன்றியுள்ள விக்கி.... காணொளி சிறு கதை

பள்ளிக்கு வருகை தரும் மாணவச் செல்வங்களை மகிழ்விக்கும் நிகழ்வில் இன்றைய பண்பு நல கதை ஒன்று உங்கள் பார்வைக்கும் மாணவர்களின் மகிழ்வுக்கும் பகிர்வது..
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா...

காணொளியை கண்டு மகிழ்ந்து மறக்காமல் எங்கள் Channel யை Subscribe செய்து Bell பட்டனை அழுத்தி all என தர அன்போடு வேண்டுகிறோம்..

காணொளியை காண நீல நிற லிங்கை சொடுக்கவும்.
https://youtu.be/jnuclmLm6D8

Thursday, November 04, 2021

மாட்டு வண்டியின் தொழில் நுட்பம்....ஆசிர

*வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி**வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி*

நன்றி
பகிர்வு பதிவு.

Monday, November 01, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

  நிராயுத
  பாணியாய்
  போராடும் 
  அந்த
  ஒற்றை 
  மனிதனை

  வலிமை 
  வாய்ந்த
  ஆயுதங்கள்
  வைத்திருக்கும்
  பிரிட்டிஷ்
  அரசால்
  நசுக்க 
  முடியாதா ?

எனும் 
கேள்வி
இங்கிலாந்து
பாராளுமன்ற
கூட்டத்தில்
எதிர்கட்சி 
உறுப்பினர்கள்
எழுப்பினர்

அதற்கு

  அந்த
  மனிதன்
  கத்தியை
  எடுத்திருந்தால்
  நான் துப்பாக்கியை
  எடுத்திருப்பேன்

  அந்த
  மனிதன்
  துப்பாக்கியை
  தூக்கி இருந்தால்
  நான் பீரங்கியை
  தூக்கி இருப்பேன்

  அந்த
  மனிதன்
  பீரங்கியோடு
  வந்திருந்தால்
  நான் குண்டு மழை
  பொழிந்திருப்பேன்

  ஆனால்

  அந்த 
  ஒற்றை
  மனிதன் 
  சத்தியத்தை
  கையில் வைத்து
  போராடுகிறானே

  சத்தியத்தை
  எதிர்க்கும்
  ஆயுதம்
  இதுவரை
  கண்டுபிடிக்க
  படவில்லை

என்று பதில்
அளித்தவர்
அந்நாட்டு
பிரதம மந்திரி
வின்ஸ்டன்
சர்ச்சில்

அந்த
ஒற்றை
மனிதன்

உலகம்
போற்றும்
உத்தமர்
காந்தி

எந்த
சூழ்நிலையிலும்
சத்தியத்தை
கடைபிடிப்பவர்
சரித்திரத்தில்
இடம் பிடிப்பது
நிச்சயம்
தானே

  வாங்க ::

  அவர்
  காட்டிய
  பாதையில்
  பயணப்பட
  தொடங்கலாம்

  அது
  கண்டிப்பாக
  கடினமாக கூட
  இருக்கலாம்

  இருப்பினும்
  முயற்சிகள்
  செய்யலாம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

நன்றி 
முனை.சுந்நர மூர்த்தி