Tuesday, September 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

ஒரு இலையும் மண்ணாங்கட்டியும் 
ஒன்றை ஒன்று 
தீவிரமாக காதலித்தன எத்தனை பெரிய 
துயரம் ஆபத்து 
வந்தாலும் ஒருவரை 
ஒருவர் பிரிய 
கூடாது என்றும் ஒருவருக்கொருவர் துணையாக 
இருக்க வேண்டும் 
என்றும் அவை 
தீர்மானித்துக் கொண்டன இந்நிலையில் ஒருநாள் பெரும் சூறைக்காற்று 
வீசியது காற்றில் 
இலை அடித்து 
செல்லாமல் இருக்க 
வேண்டும் என்பதற்காக 
அதன் மீது 
மண்ணாங்கட்டி ஏறி 
அமர்ந்து காப்பாற்றியது...

அதேபோல் இன்னொரு 
நாள் மழை 
பெய்ய தொடங்கியது தண்ணீரில் தனது அன்புக்குரிய மண்ணாங்கட்டி கரைந்து போய் 
விடக்கூடாது என்று 
நினைத்த இலை 
அதன் மீது 
குடை போல 
இருந்தது காப்பாற்றியது...

ஆமாங்க 
இதுதான்
வாழ்வின்
அர்த்தம்..
நாமும்
இதை
பின்பற்ற
முயற்சி
செய்வோமே...!

&&&&&&&
அன்புடன்
இனிய
காலை 
வணக்கம்
&&&&&&&&&

புதிய பார்வை ...புதிய கோணம்....


'  பகையுள்ள
   இடத்தில்
   அன்பையும்

   தவறுள்ள
   இடத்தில்
   மன்னிப்பையும்

   பிளவுள்ள
   இடத்தில்
   ஒற்றுமையையும்

   பிழையுள்ள
   இடத்தில்
   உண்மையையும்

   ஐயமுள்ள
   இடத்தில்
   உறுதியையும்

   விரக்தியுள்ள
   இடத்தில்
   நம்பிக்கையையும்

   இருள் உள்ள
   இடத்தில்
   ஒளியையும்

   மருள் உள்ள
   இடத்தில்
   மகிழ்ச்சியையும்

   நான்
   விதைப்பேனாக  '

அன்னை 
தெரசா 
கூற்றுப்படி...

பார் முழுதும் 
மனிதக்குல
பண்புதனை 
விதைப்போம்.

பாமரர்கள் 
நெஞ்சத்திலே
பகுத்தறிவை 
வளர்ப்போம்.

போர் முறையை 
கொண்டவர்க்கு
நேர்முறையை 
விதைப்போம்.

சீர் வளர 
தினமும் 
வேகமதை 
வளர்ப்போம்.

முயன்றால்
முடியாதது
உண்டோ

முயற்சி
செய்யலாம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Monday, September 28, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

வாழ்வில் 
நமக்கு 
வாய்ப்புகள் 
உண்டு 
காற்றில் 
பறக்கும் 
பட்டம் 
வானம் 
முட்டும் ..
காற்றோடு 
பறக்கும்
பட்டம் 
விரைவில் 
மண்ணை 
தட்டும் ..
விதைக்கும்
 நேரத்தில் 
வேடிக்கை 
பார்த்தால்
விளைச்சல் 
அல்ல 
மன உளைச்சலே 
மிஞ்சும் ..
 செந்நீரை 
கண்ணீராக 
மாற்றும் 
கலை 
கண்களுக்கு 
மட்டுமே 
தெரியும் 
கண்களை 
கண்ணீரில் 
அல்ல 
மனதை 
மகிழ்ச்சியாக 
வைத்திருங்கள்..
எந்த 
நிலையிலும் 
வாழ்க்கை 
வாழ்வதற்கே 
வெற்றி 
உன்னை 
அனைவரும் 
அறிமுகம்
 செய்யும் 
தோல்வி 
உன்னை 
உலகையே 
அறியச் 
செய்யும்...

👍👍👍👍👍👍👍

அன்புடன் 
இனிய 
காலை
வணக்கம்..

புதிய பார்வை.. புதிய கோணம்..



பிறர் 
உன்னை 
தூற்றலாம்
தாழ்த்தலாம்
வெறுக்கலாம்
அவமான 
படுத்தலாம்.

அது 
அவர்களது 
பிரச்சினை.

உன்னை நீ 
உணர்ந்து 
கொண்டால்...

பிறரின் 
தூற்றுதலும் 
போற்றுதலும்...

கடல் 
அலைகளை
போலவே...

' இதுவும்
  மேல்மட்ட 
  செயலே '

என்பதை
உணரலாம்.

_*கடல்*_
_*அலைகளால்*_

_*கடல்*_
_*ஒருபொழுதும்*_

_*பாதிக்கப்படுவது*_
_*இல்லை*_

- ஓஷோ -

அவமானங்களை
சந்திக்காத
தலைவர்கள்
இல்லை.

ஆனால்...

அவர்கள்
அவைகளை
வெகுமானமாக
மாற்ற தெரிந்து
வைத்திருந்தார்கள்.

அதனால் தான்
அவர்கள்
வெற்றியும்
பெற்றார்கள்.

வாங்க...

நம் 
வாழ்வில்
நமக்கும்
இவைகள்
ஏற்படுவது
உண்டு.

இவைகளை
உரமாக்கி
உயர்வடைய
முயற்சிகள்
செய்வோம்.

' இன்று 
  கண்ட 
  அவமானம் 

  வென்று 
  தரும் 
  வெகுமானம்

  வானமே 
  தாழலாம்

  தாழ்வதில்லை 
  தன்மானம்

  மேடுபள்ளம் 
  இல்லாமல் 

  வாழ்வில் 
  என்ன 
  சந்தோஷம்

  பாறைகள் 
  நீங்கினால்
  ஓடைக்கில்லை 
  சங்கீதம்  '

வைரமுத்துவின்
வைர வரிகள்
உண்மைதானே.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
பகிர்வு..


Sunday, September 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



முறையான
சங்கீதம்
படிக்காமலேயே...

சாதனை
செய்திருக்கிறார்

சரித்திரம்
படைத்திருக்கிறார்

சகாப்தம்
ஆகவே
மாறியிருக்கிறார்.

இவரை தேடி
வந்தவை.

கின்னஸ்
சாதனை

பல்வேறு
விருதுகள்

பலப்பல
பாராட்டுக்கள்.

இவர்
வாழ்க்கை
நமக்கு
விடுத்திருக்கும்
செய்தி.

'  பண்பாடு
   மாறாத

   நல்ல
   மனிதனாய்

   நாளும்
   இரு  '

என்பதே.

'   உண்மை
   ஒருநாள்
   வெல்லும்

   இந்த
   உலகம்
   உன்பேர்
   சொல்லும்  '

என்னும்
வார்த்தைகள்
இன்று
உறுதி படுத்த
பட்டுள்ளன.

'  இமயமலை 
   ஆகாமல் 
   எனது 
   உயிர் 
   போகாது

   சூரியன் 
   தூங்கலாம் 
   எனது விழி 
   தூங்காது

   வேர்வை 
   மழை 
   சிந்தாமல் 
   வெற்றி 
   மலர் 
   பூவாது

   எல்லையை 
   தொடும் 
   வரை 
   எனது 
   கட்டை 
   வேகாது

   ஒவ்வொரு 
   விதையிலும் 
   விருட்சம் 
   ஒளிந்துள்ளதே

   ஒவ்வொரு 
   விடியலும் 
   எனது 
   பெயர் 
   சொல்லுதே  '

என்னும்
இவரின்
'மாயக்குரல்'

இன்று
மந்திர
'குறலானது'

இசை
உள்ளவரை
நீ இருப்பாய்.

ஒவ்வொரு
மனதிலும்
நீ வாழ்கிறாய்.

இறப்பு
உடலுக்கு
தான்.

உன்
பெயருக்கு
இல்லை.

போய் வா
பாலு...

கண்ணீருடன்
காலை
வணக்கம்..

நன்றி...பகிர்வு

Thursday, September 24, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

காலை 
நேர உணவு 
மதிய உணவு 
மாலை 
வேளையில் 
காபி 
இரவு உணவு 
என்று நேரம் 
தவறாமல் 
நாம் 
எப்படி உண்டு 
வருகிறோமே 
அது போலத்தான் 
சாப்பாட்டை 
மட்டும் அல்ல 
அனைத்து 
விஷயங்களையும் 
நேரம் தவறாமல் 
செய்ய வேண்டும் 
என்ற 
பழக்கத்தை 
வழக்கமாக்கிக் 
கொள்ள வேண்டும் ...

பணத்தை 
சேமிக்க வேண்டும் 
என்று 
நினைக்கிறோம் 
தண்ணீர் 
தட்டுப்பாடின்றி 
கிடைக்க 
அதனை 
சேமிக்க 
வேண்டும் 
என்று 
நினைக்கிறோம் ..

ஆனால் 
நேரத்தை 
மட்டும் 
நாம் அவ்வாறு 
நினைப்பதே இல்லை அதனையும் 
சேமிக்க 
பழகி விட்டால் 
நமது 
வாழ்க்கையின் 
ஒவ்வொரு
 செயலும் 
வெற்றியை 
நோக்கி 
பயணம் செய்யும்..

வாங்க
வெற்றி 
பெற 
புறப்படுவோம்..

அன்புடன்
இனிய 
மதிய 
வணக்கம்..

Monday, September 21, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

💃  யார் சுகவாசி ?  💃

☻ அதிகாலையில்    
    எழுபவன் 
    சுகவாசி!

☻ தூங்கி 
    எழுந்ததும்
    காலை 
    2டம்ளர்
    சுத்தமான
    தண்ணீர்  
    பருகுபவன் 
    சுகவாசி!

☻ உணவு 
    உண்ண
    வேண்டிய
    முறையறிந்து
    உண்பவன்
    சுகவாசி!

☻ வளையாத
    முதுகு
    தண்டுடன்
    நிமிர்ந்து 
    உட்கார
   முடிந்தவன் 
    சுகவாசி!

☻ 10 நாட்களுக்கு
    ஒருமுறை
    உண்ணா 
    நோன்பு
    இருப்பவன்
    சுகவாசி!

☻ படுத்தவுடன்
    தூங்குகிறவன்  
    சுகவாசி!

☻ நாவடக்கம் 
    உடையவன் 
    சுகவாசி!

☻ கோபம் 
    இல்லாமல்
    நிதானத்தோடு
    வாழ்பவன்    
    சுகவாசி!

☻ கற்பு நெறி
    தவறாது   
    வாழ்பவன்
    சுகவாசி!

☻ ஈகை
    மனப்பான்மையை
    வளர்ப்பவன்
    சுகவாசி!

☻ மன்னிக்கிறவன்,
    மன்னிப்பு
    கேட்கிறவன்
    சுகவாசி!

☻ வாழ்க்கையில்
    நம்பிக்கை,
    பொறுமையுடன்
    வாழ்பவன்
    சுகவாசி!

☻ கவலைப்படாத  
    மனிதன் 
    சுகவாசி!

☻ சிரித்து 
    மகிழ்ந்து 
    வாழ்பவன் 
    சுகவாசி!

- படித்ததில்
  பிடித்தது -

வாங்க...

சுகமாக
நலமாக
வளமாக
வாழலாம்.

வாய்ப்புகள்
நம் வசம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்

Sunday, September 20, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

தூண்டில்
போட்டு 
காத்திருக்காதே 
சில 
மீன்கள் 
மௌன 
விரதத்தில் 
இருக்கும் !..


வலையை 
வீசு..
அறிமுகம் 
இல்லாதவனுக்கு
 அன்பைக் கொடு 
அறிமுகம் 
உள்ளவனுக்கு 
அன்போடு 
கொடு ...

வறண்டு 
இருக்கும் 
தொண்டைக்கு 
தேன் 
அல்ல 
தண்ணீரே 
போதும்!..

அன்பை 
விதைப்போம்
மனிதம் 
வளர்ப்போம்....

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்.

Sunday, September 13, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



புல்லாங்குழலும்
கால்பந்தும்
காற்று
தொடர்புடையது.

புல்லாங்குழல்
காற்றை
உள்ளேயே
வைத்து...

இனிய
இசையாக
வெளியே
விடுகிறது.

கால்பந்து
காற்றை
உள்ளேயே
வைத்து...

வீரர்களிடம்
உதை படுகிறது.

நம்
எண்ணங்களும்
செயல்களும்
நமக்கும்
பயன்பட்டு...

நம்மை சுற்றி
உள்ளவர்கட்கும்
பயன்படும்
போது...

போற்ற
படுகிறோம்.

மாறாக...

நமக்கு
மட்டுமே
பயன்பெறும்
வகையில்...

முழுக்க
முழுக்க
சுயநலமாக
வாழும் போது
மற்றவர்களால்
மறக்க படுகிறோம்.

அல்லது
தூற்ற படுகிறோம்.

நாம்
புல்லாங்குழலா ???
அல்லது
கால்பந்தா ???

வாய்ப்புகள்
நம் வசம்.

வளமாக
வாழ்ந்து
பார்க்கலாம்
வாங்க...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்....

Tuesday, September 08, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



செல்வ 
செழிப்பான 
குடும்பத்தில் 
பிறந்து...

ஆன்மிகத்திற்கு 
சென்றவர் 
பட்டினத்தார். 

பணத்தின் 
நிலையாமையை 
உணர்ந்து 
துறவியானார்.

ஒருமுறை, 
வயல் வரப்பில் 
தலை வைத்து
படுத்திருந்தார். 

தண்ணீர் 
எடுக்கச் சென்ற 
இரு பெண்கள் 
இதைக் கண்டனர்.

" சாமியாராகியும் 
  இன்னும் சுகம் 
  போகவில்லையே "

என்றாள் 
ஒருத்தி. 

பதிலுக்கு 
மற்றொருத்தி...
 
" காவியுடுத்திய 
  சாமியில்லையடி 
  சரியான ஆசாமி 
  போலிருக்கு "

என்று 
கிண்டலடித்தாள். 

இதை கேட்ட 
பட்டினத்தார் 
திடுக்கிட்டார். 

அவர்கள் 
திரும்பி 
வருவார்கள் 
என்று 
எண்ணி...

வரப்பின் மீது 
வைத்திருந்த 
தலையை தூக்கி 
உடலை மட்டும் 
சாய்வாக வைத்து 
கொண்டார்.

அந்த 
பெண்களும் 
தண்ணீர் 
குடத்துடன் 
திரும்பி வந்தனர். 

அவர்களில் 
ஒருத்தி, 

" யார் என்ன
  பேசுகிறார்கள் 
  என்று 
  கவனிப்பதுதான் 
  இந்த சாமியாருக்கு 
  வேலை போலும் "

என்றாள்.

மற்றொருத்தி...

" நீ சொல்வது 
  சரி தான்.
  நாம் என்ன 
  சொன்னால் 
  இவருக்கென்ன? 

  இவர் 
  தானுண்டு 
  தன் வேலையுண்டு 
  என்று இருக்க 
  வேண்டியதுதானே "

என்று 
பதிலளித்தாள்.

பட்டினத்தார் 
மேலும் 
அதிர்ச்சியுற்றார். 

' சந்நியாசமே 
  போனாலும் கூட 
  உலகம் யாரையும் 
  மனம் போன 
  போக்கிலே தான் 
  விமர்சிக்கும்.

  ஊர் வாயை மூட 
  உலைமூடி ஏது? 

  யார் எது 
  சொன்னாலும் 
  நமக்கு சரி என்று 
  தோன்றுவதை 
  செய்வதே உத்தமம் '

என்னும் 
படிப்பினையை 
பெற்றவராய்...

தன் 
வழியில் 
நடக்க 
ஆரம்பித்தார்
பட்டினத்தார்.

வாங்க...

நம்மை சுற்றி
உள்ள மக்கள்
நம்மை பற்றி
ஏதேனும் பேசி
கொண்டுதான்
இருப்பார்கள்.

அவைகள்
சரியாய்
இருந்தால்
நம்மை நாம்
சீர் செய்து
கொள்வோம்.

தவறாய்
இருப்பின் 
அவைகளை
புறம் தள்ளுவோம்

வளர்ச்சியை
பற்றி மட்டுமே
நினைப்போம்.

வளமாக
வாழ்ந்தும்
காட்டுவோம்.

வாய்ப்புகளும்
வாழ்க்கையும்
நம் கையில்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி

Tuesday, September 01, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

நாம்
பிறக்கும் நாடு
பேசும் மொழி 
நம்முடைய 
பெற்றோர்
ஆசிரியர்கள்
உறவினர்கள்
நண்பர்கள் 
உருவாக்கும் 
சூழல்தான்...

நமக்கான 
அடித்தளத்தை 
அமைத்து
தருகிறது. 

ஆனால்
சில நேரம் 
அது நம்மை 
கட்டுப்படுத்தி
விடக்கூடும். 

மொழி
மாநிலம்
நாடு கலாசாரம் 
போன்ற...

வட்டங்களுக்குள் 
சிக்கி கொள்ளாமல்...

உலக
பார்வையோடு 
சிந்திக்கும்போது... 

இன்னும் 
பல வாய்ப்புகள் 
நமக்குக் கிடைக்கும்.

ஆனால், 
அந்தப் பார்வை 
எளிதில் கிடைத்து 
விடாது. 

நம்மை
போலவே 
இருக்கிறவர்கள்...

நம்மை 
போலவே 
சிந்திப்பவர்களிடம் 
மட்டுமல்லாமல்...

கொஞ்சம் 
வெளியில் வந்து 
பார்க்க வேண்டும்,
பழக வேண்டும். 

பார்வைகள்
மாறும்போது...
 
காட்சிகள் 
மாறும்.

மனம் 
விரிவாகும்.
 
தன்னம்பிக்கை 
பெருகும்.

புதிய 
முயற்சிகளில் 
துணிவோடு 
இறங்கும் போது...

வெற்றிகள்
நம் காலடியில்
குவியும்.

 - என் சொக்கன்  -

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

புதிய
பார்வை
பிறக்கட்டும்.

புதிய
சிந்தனை
சிறக்கட்டும்.

புதிய
வெற்றிகள்
அமையட்டும்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.