Showing posts with label மாணவர்களுக்காக. Show all posts
Showing posts with label மாணவர்களுக்காக. Show all posts

Sunday, September 22, 2024

கத்தி மேல் நடக்கும் ஆசிரியர்கள்...

இன்றைய சூழலில் ஆசிரியர் பணி என்பது கத்தி மேல் நடப்பது போலாகிவிட்டது. ஆகிவிட்டது என்பதை விட ஆக்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

வீட்டில் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான சுதந்திரமும் செல்லமும் தான் வெளி இடங்களிலும் பள்ளியிலும் தொடர்கிறது. இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு நல்லதை விட தீயதே எளிதில் கிடைக்கின்றது.

உதாரணமாக சமூக வலைதளங்களில் பாடம் சார்ந்த வீடியோக்களை விட ரீல்ஸ் என்ற பெயரில் சில தருதலைகள் செய்யும் மோசமான செயல்தான் குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. அப்படி அதை பார்க்கும் மாணவர்கள் தாமும் அதைப்போல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இது இந்த பருவத்தின் இயல்பு தான். 

அதை நல்வழியில் மடைமாற்றும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். எது சரி எது தவறு என்று மாணவர்களுக்கு புரியவைப்பதே இன்றைய சூழலில் ஆசிரியர்களின் முதன்மை பணியாக உள்ளது. ஆனால் வகுப்பறை சூழலோ ஆன்லைன் பதிவேடுகளுடனே கடந்து போகவைக்கின்றது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் மாணவர்களால் நாளை எந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள முடியும். சிறு தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை, கண்டிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆசிரியர்களும் கேட்கமுடியவில்லை, ஏன் பெற்றோர்களாலே முடியவில்லை. அப்படி எனில் அவர்களுக்கு யார்தான் எடுத்துக்கூறுவது.

தற்போது அரசுப்பள்ளிகள் அனைத்தும் அளப்பரிய அளவில் உயர்ந்த இடத்தை நோக்கிச்சென்றுகொண்டு இருக்கின்றன. வண்ணம் பார்த்து ஆண்டுகள் பல ஆன பள்ளிகள் அனைத்தும் இன்று வண்ணமயமாக ஜொலித்துக்கொண்டு இருக்கின்றன.

செல்போன் சிக்னலே வராத ஊரில் உள்ள பள்ளிகளில் கூட 24-மணி நேர இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. வாசிப்பை ஊக்குவிக்க அட்டகாசமான நூலகங்கள் உள்ளன. வறுமையால் கல்வி தடைபடாமல் இருக்க அரசின் எண்ணற்ற நலத்திட்டங்கள் இருக்கின்றன.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியையும் பெருமையையும். இப்படியான சூழலில் தான் இப்போது தொடர்ச்சியாக இதுபோன்று அரசுப்பள்ளிகளை பற்றியும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பற்றியும் எதிர்மறையான செய்திகள் வந்துகொண்டு மக்கள் மனதில் கலக்கத்தை உண்டாக்கிக்கொண்டு இருக்கின்றன.

ஆசிரியர் மாணவர் உறவு எங்கு வலுவாக சிறப்பாக உள்ளதோ அங்கு கற்றல் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். ஆனால் இன்று அந்த உறவோ ஏதோ எதிரியை பார்ப்பது போல் ஆக்கிவிட்டது இன்றைய காலச்சூழல். ஒரு பள்ளியில் தான் எத்தனை பிரச்சனைகள், சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சனை, ஏற்றத்தாழ்வு, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனையையும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டும் மாற்ற முடியும் என்று எண்ணினால் அதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் எதுவும் இல்லை.

ஆசிரியர்களும் கற்பித்தல் என்பது வகுப்பறையோடு முடிந்துவிட்டது என்று எண்ணுகிறோம். அது தவறு. கற்பித்தல் என்பது வகுப்பறையை தாண்டி அந்த மாணவனை பற்றி முழுமையாக கற்றுக்கொள்வதில் தொடங்குகின்றது. எத்தனை ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் பெற்றோர்களுடன் உரையாடுகிறோம். மிக மிக குறைவே. 

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இந்த மூன்றும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். ஆனால் இன்று அனைத்தும் ஆசிரியர்கள் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது. 

இதுபோல பிரச்சனைகளை நாம் அனைவரும் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அரசுப்பள்ளிகளையே நம்பி இருக்கும் பெற்றோர்களின் மனநிலையில் இருந்தும், எப்படியாவது தன்னிடம் படிக்கும் மாணவன் உயர்ந்த இடத்திற்கு வந்துவிட மாட்டானா என நினைக்கும் ஆசிரியர்கள் இடத்தில் இருந்தும் பார்த்தால் தான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

தயவு செய்து அரசும் சமூகமும் மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த செயல்களையும் ஆசிரியகள் மேல்மட்டும் சுமத்தி தற்காலிக தீர்வை தருவதை விட்டு இதற்கு நிரத்தர முற்றுப்புள்ளியை வைத்து மீண்டும் இதுபோல் எங்கும் நடக்காதவாறு மிகச்சிறந்த செயல்திட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

ஞா.செல்வகுமார் இ.நி.ஆசிரியர் 
அரசுப்பள்ளி மாணவன். அரசுப்பள்ளி ஆசிரியர்.
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.

நன்றி
பகிர்வு பதிவு

Wednesday, June 22, 2022

அதிக மதிப்பெண் பெற வழிகள்..

*அதிக மதிப்பெண் எடுப்பது சுலபம்*. 
கீழ் கண்டவைகளை செயல்படுத்தினால்! 

*மாணிக்க மாணவர்களின் அனுபவங்கள்* 

1) ஆசிரியர் பாடம் நடத்தும் போது (முழுமையாக) 'கவனித்தாலே போதும்' 
கணிசமாக மதிப்பெண் எடுக்கலாம். 
2) புரிந்து படித்தால்...... 
3)பிறர்க்கு சொல்லிக் கொடுத்தால்..... 
4)அதிகாலையில் எழுந்து படித்து வந்தால்..... 
5)போட்டி போட்டு படித்தால்... 
6)தமது அம்மா அப்பாவிற்கு 
நல்வாழ்வளிக்க என்ற லட்சியம் இருந்தால்.... 
7) படித்ததை எழுதிப் பார்த்தால்.
8) குழுவாக விவாதித்து படித்தால்.... 
9)அமைதியான சூழலில் படித்தால். 
10)விளையாட்டு, யோகா, உடற்பயிற்சிக்குப் பிறகு படித்தால்..,. 
11)படித்ததை 
எழுதிப்பார்த்தால்.... 
12) பெரிய ஒரு பாராவை ' பல சிறிய பகுதிகளாக பிரித்து'
வரிசைப்படுத்தி படித்தால். 
13) கவனத்தை ஒருமுகப்படுத்தி
 ' குறிக்கோலுடன் ' படித்தால். 
14) கையெழுத்து அழகாய் இருக்க பயிற்சி செய்தால்.... 
15) பொது அறிவு புத்தகங்களை படித்தால்..... 
16)பள்ளிக்கு நேரத்திற்கு செல்வதும், விடுமுறை எடுக்காமல் செல்வதும் 
வழக்கப்படுத்தினால்.... 
17) சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டுத் தெளிவடைவதை  பழக்கமாக்கிக்கொண்டால்.... 
18)கால அட்டவணை போட்டு அதன்படி படித்துவந்தால்.... 
19) உதாரணங்கள், கதைகளுடன் ஒப்பிட்டு
நினைவு வைத்துக்கொண்டால்....

Thursday, November 04, 2021

மாட்டு வண்டியின் தொழில் நுட்பம்....ஆசிர

*வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி**வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி*

நன்றி
பகிர்வு பதிவு.

Monday, November 01, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

  நிராயுத
  பாணியாய்
  போராடும் 
  அந்த
  ஒற்றை 
  மனிதனை

  வலிமை 
  வாய்ந்த
  ஆயுதங்கள்
  வைத்திருக்கும்
  பிரிட்டிஷ்
  அரசால்
  நசுக்க 
  முடியாதா ?

எனும் 
கேள்வி
இங்கிலாந்து
பாராளுமன்ற
கூட்டத்தில்
எதிர்கட்சி 
உறுப்பினர்கள்
எழுப்பினர்

அதற்கு

  அந்த
  மனிதன்
  கத்தியை
  எடுத்திருந்தால்
  நான் துப்பாக்கியை
  எடுத்திருப்பேன்

  அந்த
  மனிதன்
  துப்பாக்கியை
  தூக்கி இருந்தால்
  நான் பீரங்கியை
  தூக்கி இருப்பேன்

  அந்த
  மனிதன்
  பீரங்கியோடு
  வந்திருந்தால்
  நான் குண்டு மழை
  பொழிந்திருப்பேன்

  ஆனால்

  அந்த 
  ஒற்றை
  மனிதன் 
  சத்தியத்தை
  கையில் வைத்து
  போராடுகிறானே

  சத்தியத்தை
  எதிர்க்கும்
  ஆயுதம்
  இதுவரை
  கண்டுபிடிக்க
  படவில்லை

என்று பதில்
அளித்தவர்
அந்நாட்டு
பிரதம மந்திரி
வின்ஸ்டன்
சர்ச்சில்

அந்த
ஒற்றை
மனிதன்

உலகம்
போற்றும்
உத்தமர்
காந்தி

எந்த
சூழ்நிலையிலும்
சத்தியத்தை
கடைபிடிப்பவர்
சரித்திரத்தில்
இடம் பிடிப்பது
நிச்சயம்
தானே

  வாங்க ::

  அவர்
  காட்டிய
  பாதையில்
  பயணப்பட
  தொடங்கலாம்

  அது
  கண்டிப்பாக
  கடினமாக கூட
  இருக்கலாம்

  இருப்பினும்
  முயற்சிகள்
  செய்யலாம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

நன்றி 
முனை.சுந்நர மூர்த்தி

Thursday, October 28, 2021

மன உளைச்சல்..நமக்கு வேண்டாமே...

உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து *ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. 

சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.* ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.* ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது...._

_அதைப் போல் உறுதியான *சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி*....அதே *மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...*_

_,*மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து* முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம்,#மனஉளைச்சல் தான்!

Tuesday, October 19, 2021

ஆன்ற குடிப்பிறத்தல் வலையொலி ஒசை( Audio Lesson)

வகுப்பு.8. பாடம்.தமிழ்.  இயல்.4. விரிவானம்.
ஆன்ற குடிப்பிறத்தல். வலையொலி ( Audio Lesson).கேட்டு மகிழ்ந்து பயன் பெற அன்போடு அழைக்கிறேன்.
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/22------8-e191q31


Tuesday, October 12, 2021

மன அழுத்தமின்றி பணிசெய்ய...வழிகள்...40

*பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில இதோ உங்களுக்காக, பொறுமையாக படித்துவிட்டு ஆசிரியர்-நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்*

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 40-வழிமுறைகள்:-

1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.

2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும்.

3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.

4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.

சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.

5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.

8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.

 

9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும்.கோபப்பட்டு பேசக்கூடாது.

10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.

11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,

குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும்போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.

 

13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேச பழக வேண்டும்.

14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.

15.பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர்,

மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்துவிட்டு அவர்களை வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.

17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.

18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.

19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.

20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல்,கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.

21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.

22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.

23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்.

24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்துவிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.

25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.

26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு,எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தரவேண்டும்.

27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லமுடியும்.

29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர் காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.

32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.

33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று  சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.

34.உறங்கும்போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.

35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் *அமைதி ஆனந்தம்* நம்பிக்கை* பெருக வேண்டும்   என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,

எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.

40.நீள் ஆயுள்,நிறை செல்வம்,மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்.

நன்றி 

என்றும் அன்புடன் 

கல்வி ஆசிரியர்கள்.

பகிர்வு பதிவு

Thursday, December 31, 2020

Tuesday, December 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...



ஒரு
கதை

ஒரு
கவிதை

ஒரு
கருத்து

ஒருவன்
குருவை தேடி
அடர்ந்த வனத்திற்கு
உள்ளே சென்றான்.

குருவை
கண்டான்
பேசினான்
பேசிக்கொண்டே
இருந்தான்.

நேரம் 
போனதே
தெரியவில்லை.

மாலை
மங்கியது

இருள் சூழ
தொடங்கியது.

" இரவு
  இங்கேயே
  தங்கி விட்டு செல் "

என்றார் 
குரு.

" இல்லை குருவே. 
  முக்கிய வேலை 
  நான் போயாக 
  வேண்டும் "

என்றான் 
இவன்.

இருள் 
இதற்குள்
அடர்த்தியாக
ஆனது.

இவன்
இருட்டில் செல்ல
அச்சம் அடைந்து
அதே நேரத்தில்
போகவும் 
எத்தனித்தான்.

இவன் மனதை 
அறிந்த குரு 
கைவிளக்கு
ஒன்றினை
ஏற்றி கொடுத்து...

" இதன் 
  ஒளியால்
  நீ நடந்து செல் "

என்று 
கூறினார்.

விளக்கை 
பெற்று நடக்க 
தொடங்கியவனை
பின் தொடர்ந்து 
வந்த குரு... 

அவன்
கையிலிருந்த 
விளக்கினை
வாங்கி ஊதி
அணைத்து விட்டு...

" இரவல் வெளிச்சம்
  துணைக்கு வராது
  உன் விளக்கு
  உன் இதயத்தில்.

  நெஞ்சில்
  துணிவிருந்தால்
  விளக்கு உனக்கு
  தேவையில்லை

  உள்ளத்தில்
  பயமிருந்தால்
  உயர்வு 
  உனக்கில்லை

  ஒளியும்
  இருளும்
  பாதையும்
  பயணமும்
  மாறி மாறி
  வரும் போகும்.

  தைரியமாக நீ 
  தொடர்ந்து செல்
  பயம் நீங்கும்
  பயணம் தொடரும்
  பாதையும் முடியும் "

என்று 
வாழ்த்தி
அனுப்பினார் 
குரு.

அவரின்
வாழ்த்துகளில்
வார்த்தைகளில்
நம்பிக்கையும்
மகிழ்ச்சியும்
அடைந்த
நம்மவர்...

தொடர்ந்து
சென்றார்
பயணத்தை
முடித்தார்.

அவரின்
வார்த்தைகளை
சிரமேற்
கொண்டார்
வாழ்விலும்
வென்றார்.

ஒரு
கவிதை :::

'  ஒளி
  குறைந்த 
  வீதியில்
  நடக்கும் 
  போதும்...

  உன் 
  விழிகளுக்கு
  வழி தெரியும்.

  உன்
  இதயத்தில்
  தீபம்
  எரிந்து
  கொண்டிருந்தால் '

புது 
கவிதை
நாயகன்

கவிஞர்
மு.மேத்தா

ஒரு
கருத்து :::

விதைக்கான
வெற்றி
அதன்
வீர்யத்தில்

நம்
வாழ்விற்கான
வெற்றி
நம்
நெஞ்சுறுதியில்

வாங்க.

நாம்
நம்மை
நம்புவோம்

நம் 
வாழ்வில்
ஜெயித்து
காட்டுவோம்.

_*அச்சம்*_
_*என்பது*_
_*மடமையடா*_

_*அஞ்சாமை*_
_*திராவிடர்*_
_*உடமையடா*_

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி.

Monday, December 21, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



அவரின்
கருப்பு கோட்
உலகம் அறிந்தது.

அங்கங்கே
கிழிசல்கள்.

அதன் மேல்
வெள்ளை
நூலில் 
தையல்கள்.

அதை
மறைக்க
கருப்பு மையில்
சாயம் வேறு.

இவ்வளவு
ஏழ்மை
நிலையிலும்

அவர்
பாடிய
ஒரு பாட்டு

' எத்தனை 
  கோடி 
  இன்பம்
  வைத்தாய்
  இறைவா '

அதனால் தான்
அவர்

மகா கவி
தேசிய கவி
தெய்வ கவி

என
போற்றப்பட்டார்.

எளிமையிலும்
மிக வலிமை

ஏழ்மையிலும்
மன செழுமை

கண்களில்
ஒரு காந்தம்

வார்த்தைகளில்
ஒரு ஜாலம்.

பாரதி
நமக்கெல்லாம்
ஒரு பாடமல்ல

அவர் ஒரு
வாழும் வரலாறு.

அவரின் புதிய 
ஆத்திசூடியின்
தெறிக்கும் சில
முத்துக்கள் :::

  அச்சம் 
  தவிர்

  ஆண்மை 
  தவறேல்

  உடலினை 
  உறுதி செய்

  எண்ணுவது 
  உயர்வு

  ஏறுபோல் 
  நட

  கற்றது 
  ஒழுகு

  குன்றென 
  நிமிர்ந்து நில்

  கூடி 
  தொழில் செய்

  சீறுவோர் 
  சீறு

  சூரரை 
  போற்று

  தூற்றுதல் 
  ஒழி

  தெய்வம் நீ 
  என்றுணர்

  நீதி நூல் 
  பயில்

  நேர்பட 
  பேசு

  புதியன 
  விரும்பு

  மூப்பினுக்கு
  இடம் கொடேல்

  யாரையும் 
  மதித்து வாழ்

  ரௌத்திரம் 
  பழகு

  வையத் 
  தலைமை கொள்

பாட்டுக்கு
மட்டுமல்ல
நாட்டுக்கே
நல்ல 
தலைவன்
அவன்.

அவன்
காட்டிய
பாதையில்
பயணம் 
செல்லின்...

விளைய 
போவது...

புதுமை !
வளமை !!
செழுமை !!!
இனிமை !!!!

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

புதிய 
நம்பிக்கைகளுடன்

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்


நன்றி. முனை.சுந்தரமூர்த்தி

Monday, December 14, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

ஒரு
மீனவன் 
தன்னுடைய
பையில் 
தான் 
பிடித்த 
பெரிய 
மீனை 
வைக்க 
முடியாமல் 
தண்ணீரில் 
மீண்டும்
விட்டு
விட்டான்...

ஆனால்
அவன்
சிறிய 
மீன்களுக்காக 
மணி
கணக்கில்
காத்துக் 
கிடக்கிறான் 
அவன் 
பெரிய 
மீனை 
சிறு
துண்டுகளாக்கி 
அதே 
பையில் 
அடைத்துக் 
கொண்டிருக்க 
முடியும் 
ஆனால் ...
அவன்
செய்யவில்லை
ஆம்
அவனை 
போன்றவர்களுக்கு 
பார்வை
மற்றும்
அறிவும் 
சற்று
குறைவுதான்..
கொஞ்சம் 
சிந்தனையை 
பயன்படுத்தி
சூழ்நிலையை 
தனதாக்கிக் 
கொண்டால் 
வெற்றி 
நிச்சயம் 
என்பதை 
நம்மில்
பல
பேர்
உணராமல் 
வெற்றிக்கு
விடுமுறை
விட்டு 
வருந்துகிறோம்...

வாங்க
விழிப்பா
இருந்து
வாழ்வில்
வெற்றி
கொள்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...

Sunday, December 13, 2020

உவமை கவிஞர் சுரதா விருது..

2020-ஆம் ஆண்டின் உவமைக் கவிஞர் சுரதா விருதினை தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்  மற்றும் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதிற்கு எனைத் தேர்வு செய்த சான்றோர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்!

Saturday, December 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  HBD RAJINI SIR  🍁

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

1975
'அபூர்வ ராகங்கள்'
திரைப்படம் 
வெளியானது.

கருப்பு - வெள்ளை
கலரில் அமைந்த
இத்திரைப்படம்

அந்த 
காலத்திலேயே
மெகா ஹிட்.

சிறந்த
திரைப்படம்

சிறந்த
ஒளிப்பதிவு

சிறந்த
பாடல்

என
மூன்று
தேசிய விருதுகள்
கிடைத்தது.

படம்
முழுக்க
ஸ்ரீ வித்யாவும்
கமலஹாசனும்
மேஜர் சுந்தரராஜனும்
ஜெயசுதாவும்
நாகேசும்

போட்டி போட்டு
நடித்தனர்.

மிக
சிறிய
பாத்திரத்தில்

கருப்பு
கலரில் இருந்த
ஒரு நடிகர் நடித்தார்.

அந்த
கருப்பு 
மனிதனை

பட்டை 
தீட்டினார்கள்
பால சந்தரும்
பாரதி ராஜாவும்.

காலம்
மாற மாற 
தன்னை மேலும்
பட்டை தீட்டிக்கொண்ட
அந்த மனிதர்

இதோ இன்று
கருப்பு வைரமாக
ஜொலித்து கொண்டு
இருக்கிறார்.

தொடக்கத்திலும்
தொடர்ந்து வளர்ந்து
வரும் நேரத்திலும்

எம்.ஜி. ஆர்.
சிவாஜி
ஜெய்சங்கர்
சிவகுமார்
என

மிக 
பெரிய
நடிகர்கள்
கோலோச்சிய
நேரமது.

அந்த
நேரத்திலேயே
தன் தனிப்பட்ட
நடிப்பால்
ஸ்டைலால்

அந்த கால
இளைஞர்களின்
மனதில் ஆதர்ஸ
நாயகனாக உயர்ந்தார்.

அவரை
அழிக்க
ஒழிக்க
திரை மறைவு
வேலைகள்
அரங்கேற்றம்
செய்யப்பட்டது.

அவருக்கு
பித்து பிடித்து
விட்டது என 
பத்திரிக்கைகளும்
தம் பங்குக்கு 
விளாசி
தள்ளின.

பாதகமாக
கருதப்படும்
கருப்பு நிறத்தை
கொண்டே

தன்
திரை வாழ்வை
சாதகமாக எப்படி
மாற்றி கொண்டாரோ
அதைப்போலவே

அத்தனை
எதிர்ப்புகளையும்

தன் சிரிப்பால்
தன் நடத்தையால்
தன் பொறுமையால்
வெற்றி கொண்டார் 
அவர்.

பெரியவர்கள்
ஆனாலும்
சிறியவர்கள்
ஆனாலும்
அவர்களை
மதித்து பாராட்டி

அவர்கள் மேல்
தன் அன்பாலும்
உயர்ந்த பண்பாலும்

பகைவரையும்
தன் பக்கம்
திரும்ப வைத்தவர்
இன்று...

தமிழக
வரலாற்றில்
தவிர்க்க முடியாத
ஒரு தலைவராக
மாறியிருக்கிறார்.

அவர்
நல்லவரா
கெட்டவரா

தேர்தலில்
நிற்பாரா
மாட்டாரா

ஜெயிப்பாரா
தோற்பாரா

என்னும்
(பக்க)வாதம்
மனிதர்களுக்கு
இடையே நடந்து
வருகிறது.

அவரை பற்றி 
பலர் தூற்றலாம்
கேலி செய்யலாம்
கேவல படுத்தலாம்

ஆனால்...

இதோ
இன்று வரை
யாரையும் எந்த 
சமூகத்தையும்
எந்த ஒரு 
இயக்கத்தையும்
பற்றி

ஒரு 
வார்த்தை கூட 
கண்ணிய 
குறைவாக அவர் 
பேசியதில்லை.

இதுவே அவரது 
பலமாக பலரால்
கருதப்படுகிறது.

சின்ன சின்ன
பிரச்சனைகளை
கூட
பெரிதாக 
ஊதிவிட்டு
குளிர் காயும் 
இந்த சமூகத்தில்

தன்னை 
பற்றிய
எதிர்மறை
விமர்சனங்களுக்கு

எதிர்வினை 
ஆற்றாமல் 
இருப்பது
 
அவருடைய 
மிக பெரிய 
பண்பை
பிரதிபலிக்கிறது
என்பதே உண்மை.

இது...

மதிப்பிற்குரியது
பாராட்டுக்குரியது
போற்றுதலுக்குரியது.

இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
ரஜினி சார் !!!

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

🎉🥁🎊🎉🥁🎊🎉

பகிர்வு பதிவு

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

" மனித மனம் 
  எதை கற்பனையில் 
  உருவாக்குகிறதோ, 
  நம்புகிறதோ அதை 
  அதனால் அடைய 
  முடியும் "

- எம்.எஸ்.உதயமூர்த்தி -

ஆம். 

நம் மன
எண்ணங்களின் 
வெளிப்பாடுதான்...
 
நாம் 
செய்யும் 
செயலில் 
அரங்கேற்றம்
செய்யப்படுகிறது.

நம் 
முதல் 
குடிமகனும் 
நம்மை கனவுகாண 
சொன்னது இதனால் 
தான்.

ஆனால்...

கால
வரையறை 
இல்லாத 
கனவுகளும்
திட்டங்களும்
வெறும் 
கற்பனைகளே. 

நாம் 
காணும் 
கனவுகளை 
செயல்படுத்த 
நாம் முயற்சிக்க 
வேண்டும்.

' முடியாது
  என்னும் ஒரு 
  வார்த்தை என்
  அகராதியில்
  இல்லை '

என்று
கூறியவர்
நெப்போலியன்.

' IMPOSSIBLE '
  என்னும்
  வார்த்தையில்...

  I'M POSSIBLE 
  என்னும் பொருள்
  அடங்கியுள்ளது 
  கண்கூடு.
   
யாரோ
ஒருவரால்
முடியும் போது...

நம்மால்
முடியாதா
என்ன ???

முடியாததற்கு 
காரணம், 
முயலாததே. 

நமக்கும்
ஆயிரம்
கனவுகள்
கற்பனைகள்.

அவைகளை
நனவாக்க
முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

  நேற்று
  என்பது
  உடைந்த
  பானை...

  நாளை
  என்பது
  மதில் மேல்
  பூனை...

  இன்று
  என்பதே
  நம் கையில்
  உள்ள
  வீணை.

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
காலை
வணக்கம்.

🎉🎉🎉🎉🎉🎉🎉

Sunday, December 06, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

சிரித்து
வாழ வேண்டும் :::

மூன்று
புத்த துறவிகள்
சிரிப்பது கூட ஒரு
தியானமே என்னும்
கொள்கையை...

தாங்களும்
கடைபிடித்து
மற்றவர்களையும்
கடைபிடித்து
வருமாறு உலகம்
முழுவதும் பயணம்
செய்து வந்தார்கள்.

இதற்கு...

' Laughing
  Therapy '

என
பெயரும்
வைத்தனர்.

ஒருநாள்
மூவரில் ஒருவர்
இறந்து போனார்.

அவர் உடல்
அருகே அமர்ந்த
மற்ற இருவரும்
சிரித்து கொண்டே 
இருந்தனர்.

இதனை கண்ட 
ஊர்மக்கள்
ஆத்திரம் அடைந்து
இருவரையும்
திட்டினர்.

துறவிகள்...

" வாழ்க்கையை
  மகிழ்ச்சியாக
  வைத்து கொள்ள
  ஒரே வழி...

  எப்போதும்
  எதற்கும்
  சிரித்து
  கொண்டே
  இருப்பதுதான்...

  இதை தான் தன்
  வாழ்நாள் முழுவதும்
  இவர் கடைபிடித்தார் "

என்றும்
கூறினர்.

ஊர்மக்கள் சற்று
பொறுமை அடைந்தனர்.

இறுதி சடங்குகளும்
செய்ய தொடங்கினர்.

இறந்த துறவி
கேட்டு கொண்டதின்
பெயரில் அவரின்
உடலை குளிப்பாட்டாமல்
சுடுகாட்டிற்கு எடுத்து 
சென்றனர்.

சற்று நேரத்தில்
நெருப்பு வைக்க
பட்டது.

உடனே...

துறவியின் உடலை
சுற்றி பட்டாசுகள்
வெடித்தன..

ஆம்...

அவர்
இறந்த பிறகும்
மக்கள் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலுடன்
பட்டாசுகளை கட்டிய
நிலையிலேயே
இறந்துள்ளார்.

அந்த
துறவியின் 
பெயர்தான்...

' Laughing
  Buddha '.

இன்று பல  
வீடுகளில்
வாஸ்து 
பிரச்சனை
நீங்குவதற்காக
வைக்கப்பட்டு
இருக்கும்...

தொந்தியுள்ள
சிரிக்கும் புத்தர் 
சிலை...

இவர்
நினைவில் 
வைக்கப்படுவது
தான் என்பது 
நினைவு 
கூறத்தக்கது.

" வாய்விட்டு
  சிரித்தால்
  நோய்விட்டு
  போகும் "

என்னும் 
சொலவடை 
நிஜமே.

வாங்க...

இனிவரும்
காலங்களில்
யாராவது
நகைச்சுவை
துணுக்குகள்
நம்மிடம்
உதிர்க்கும் 
போது...

அது 
நன்றாக 
இருந்தாலும்
இல்லாவிட்டாலும் 
கூட...

அவரையும் ஒரு
பொருட்டாக மதித்து
நாம் சிரிக்க
தொடங்குவோம்.

நம்மை சுற்றி
இருப்பவர்களையும்
சிரிக்க வைத்து
கொண்டே இருக்க 
முயற்சிகள் செய்வோம்.

  சிரிப்பில் 
  உண்டாகும் 
  ராகத்திலே

  பிறக்கும் 
  சங்கீதமே 

  அது 
  வடிக்கும் 
  கவிதை ஆயிரம்

  அவை 
  எல்லாம் 
  நம் எண்ணமே

  நம்
  மகிழ்ச்சி நம் 
  கை வண்ணமே.

அன்புடன்
காலை
வணக்கம்.

பகிர்வு

Friday, December 04, 2020

புதிய பார்வை..புதிய கோணம்....



சிறு 
ஆலம் 
விதைக்குள்...

அற்புத 
விருட்சம்
மறைந்திருப்பது
போல...

நம்
ஒவ்வொரு
மனிதருக்குள்ளும்...

அபார சக்தி
மறைந்திருப்பது
உண்மை.

அதை
சரியான
நேரத்தில் நாம் 
வெளிப்படுத்தும்
போது...

மாபெரும்
முடிவுகள்
மலர்ந்தே தீரும்.

இதற்கு
மிக சரியான
எடுத்துக்காட்டு.

மதிப்பிற்குரிய
நடராஜன்.

தமிழ்நாட்டின்
சேலம் மாவட்டம்
தாரமங்கலம் 
அடுத்த...

சின்னப்பம்பட்டி 
கிராமத்தை
சார்ந்த...

சாதாரண 
குடும்பத்தை 
சேர்ந்தவர் இவர்.

தந்தை 
தங்கராஜ் 
ஒரு நெசவு
தொழிலாளி.

தாய் 
சாந்தா 
சாலையோர 
கோழிக்கடை 
நடத்துபவர்.

12 ஆம் 
வகுப்பு வரை 
தன் சொந்த ஊரில்
அரசு மேல்நிலை 
பள்ளியில் படித்தார்.

வட்ட
மாவட்ட
மாநில 
அளவில்...

தன் 
கிரிக்கெட்
விளையாட்டில்
பரிமளித்தவர்...

TNPL 
மற்றும் ரஞ்சி 
போட்டிகளில் மிளிர 
தொடங்கினார்.

அதன்
தொடர் நிகழ்வாக
I P L போட்டிகளில்
மேலும் தன்னை
பட்டை தீட்டி
கொண்டார்.

இதன்
விளைவு...

இதோ 
இன்று 
சர்வதேச 
போட்டியில்
இடம் பெற்று...

இவர் மீது 
வெற்றி வெளிச்சம்
ஒளி வீச தொடங்கி
உள்ளது.

ஒட்டுமொத்த
தமிழர்களின்
இதய பூர்வ
வாழ்த்துக்கள்
நட்ராஜ்.

வாருங்கள்...

மென்மேலும்
புகழ் ஏணியில்
ஏறுங்கள்.

உங்களால்
நாங்கள் 
மகிழ்ச்சி
அடைகிறோம்.

தமிழ்நாடு
மட்டுமல்ல...

இந்தியாவே
உங்களால்
பெருமை 
கொள்கிறது.

இவரின்
வெற்றி பயணம்...

இன்றைய
இளைஞர்களுக்கு
மட்டுமல்ல...

நம்பிக்கையுடன்
செயல்பட்டு
வரும்...

ஒவ்வொரு
மனிதருக்கும்
ஒரு பாடமே.

புதிய
நம்பிக்கைகளுடன்...

Wednesday, December 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

ஒவ்வொரு 
நிமிடமும் 
புதிதாக 
ஒன்றை
கற்று
கொள்ளுங்கள் 
புதிய 
சிந்தனைகளை 
விதைத்து
ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் 
உரிய 
நேரம் 
வந்து
விட்டால் 
புலரும் 
சூரியனை
போல் 
இதழை
விரிக்கும் 
பூக்களை
போல் 
எண்ணமும்
வடிவம்
கொள்ளும்..

 நீங்கள் 
எதைத் 
தேடுகிறீர்களே
அது 
உங்களுக்கு 
கிடைக்கும் 
என்று 
நீங்கள் 
உறுதியாக
நம்ப 
வேண்டும் 
அதுவே
விரும்பத்தக்க 
பண்பு ....
அதுதான்
விடை
காணா
பல
செயல்களுக்கு
விடை
காண
செய்கிறது....
அதுவரை 
சாத்தியமற்றது
என்று
எண்ணியதை
சாத்தியப் படுத்துகிறது ...

வாங்க
புதிய
சிந்தனைகளை
விதைத்து
பல
அறியப்படாத
வினாக்களுக்கு
விடை
தேடுவோம்...
&&&&&&&&

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்.

₹₹₹₹₹₹₹₹₹₹

Tuesday, December 01, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



Niagara 
Syndrome.

ஒரு
பெரிய ஆறு.

ஒரு 
மனிதன் 
படகில் சென்று 
கொண்டு இருந்தான்.

காற்று 
தென்றலை போல 
வீசிக்கொண்டு
இருந்தது.

ரம்மியமான
சூழல்.

அதை
ரசித்து
கொண்டே,
துடுப்புகளை
பயன்படுத்தாமல்,
அதன்போக்கிலேயே
படகை போக விட்டான்.

காற்று 
சற்று வேகமாக 
வீச தொடங்கியது.

படகு 
ஆட்டம் போட 
தொடங்கியது.

இயற்கை
நம்மை இதமாக
தாலாட்டுகிறது

என்று 
மகிழ்ந்த இவன் 
இதனையும்
ரசிக்கலானான்.

நேரம்
ஆக ஆக
காற்று மிகவும்
பலமாக வீச
ஆரம்பித்தது.

அப்போது தான்
அவனுக்கு விழிப்பு 
நிலை வந்தது.

துடுப்புகளை 
எடுத்து கரையை
நோக்கி போட்டான்.

அவை அவன்
கட்டுபாட்டிற்கு
வரவில்லை.

அருகில்...

'ஹோ' என்ற
இரைச்சல் கேட்டது.

சில
நொடிகளில்...

படகு
மிக பெரிய
நீர்வீழ்ச்சியில்
விழ தொடங்கியது.

அதே
போலத்தான்.

'  நம்
  வாழ்வில்
  அதன் போக்கினை
  அதன் வழியில்
  போக விடாமல்...

  நம்
  போக்கிற்கு
  ஏற்ப திருப்பி
  கொள்ளாவிடில்...

  ஏற்படும்
  அபாயகர
  விளைவே...

  '  Niagara
     Syndrome '

எனப்படும்.

Anthony 
Robbins  
என்பவர் 
தன்னுடைய...

Awaken the Giant 
Within என்னும் 
நூலில்...

இதனை விரிவாக
விளக்கியுள்ளார்.

நம்
வாழ்க்கையும்
அமைதியான
ஓடம் தான்.

அதுவே
அளவில்லாத
வெள்ளம் வந்தால்
ஆடும் தான்.

' தென்னம் 
  இளங்கீற்றினிலே 
  தாலாட்டும் 
  தென்றலது...

  தென்னை தனை 
  சாய்த்துவிடும் 
  புயலாக 
  வரும்பொழுது '

என்னும்
வரிகளும்
உண்மையே.

இதைப்போன்ற
நேரங்களில்...

' வருமுன்னர் 
  காவாதான் 
  வாழ்க்கை 
  எரிமுன்னர் 
  வைத்தூறு 
  போலக் கெடும் '

என்னும்
வள்ளுவரின்
எச்சரிக்கையின் படி 
வாழ்ந்தோம் எனில்...

எந்த வகை
காற்றடித்தாலும்
நம் வாழ்வு வீழாது.

நம்
கனிந்த மனம்
எந்த காலத்திலும்
கலங்காது.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.


Sunday, November 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

கடவுளுக்குத் தெரியும் யாருக்கு எதை 
எப்போது கொடுக்க 
வேண்டும் என்று 
உங்களுக்கு பிரச்சினையை கொடுப்பதன் மூலம் 
உங்கள் மதிநுட்பம் 
அதிகரிக்க செய்கிறார் துன்பத்தை கொடுப்பதன் மூலம் உங்களுடைய 
சகிப்புத் தன்மையும் 
மன உறுதியையும் 
வளரச் செய்கிறார் 
எது நிகழ்ந்தாலும் 
ஏதோ ஒரு காரணத்தால் 
தான் நிகழ்கிறது 
இதனை புரிந்து 
கொண்டால் வருத்தப்பட எதுவுமில்லை ..

ஏமாற்றம் 
ஒரு உணர்வு 
அந்த உணர்வை 
நாம் தான்
அதனை ஏற்படுத்திக கொள்கிறோம் வெற்றியை போலவே தோல்வியையும் ஆதாயத்தை போலவே இழப்பையும் 
துன்பத்தைப் போலவே இன்பத்தையும் 
உறவை போலவே
 பிரிவையும் 
முன்கூட்டியே எதிர்பார்க்க வேண்டும் அதற்கு ஏற்ப மனதை தயார் செய்து கொள்ள வேண்டும் 
அப்போது ஏமாற்றம்
அளிக்கிற பாதிப்பு கடுமையாக இருக்காது..
வ

வாங்க
வாழ்க்கையை
ஏமாற்றம்
இல்லாம
வாழ
பழகுவோம்...

₹₹₹₹₹₹%
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்
&&&&&&&&

Friday, November 27, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



நன்றி 
என்றொரு
மந்திர சொல் :::

ஒரு
காடு.

ஞானி தன் 
சீடர்களுடன்
நடந்து சென்று
கொண்டு இருந்தார்.

கடும்
வெயில்.

உண்பதற்கு
கனிகள்
குடிக்க நீர் கூட
கிடைக்க வில்லை.

மிதியடி
இல்லாத
கால்களை
முட்களும் பதம்
பார்த்து கொண்டு
இருந்தன.

இரவு நேரம்
வந்து விட்டது.

சீடர்கள்
பாழடைந்த ஒரு
கோவிலில் தங்க
ஏற்பாடுகள் செய்து
கொண்டு இருந்தனர்.

ஞானி
சற்று சத்தமாக...

" இறைவனே !
  இன்றய 
  நாளை
  இனிமை
  ஆக்கியமைக்கு
  நன்றி "

என்று கூறி
இரவு வழிபாட்டை
தொடங்கினார்.

அன்றய
நிலைகளில்
பாதிக்க பட்டு
இருந்த சீடர்கள்
ஞானியிடம்
சற்று ஆவேசமாக...

" இன்று காலை
  முதல் நாம்
  அனைவரும்
  கொலைபட்டினி...

  குடிப்பதற்கு நீர்
  கூட இல்லாமல்
  துன்ப பட்டு 
  கொண்டு
  இருக்கிறோம்...

  இதில்...

  ஒன்றுமே தராத
  இறைவனுக்கு
  நன்றியா "...

என்று
வினவினர்.

அதற்கு
ஞானி...

" எதை 
  எப்படி 
  யாருக்கு 
  என்ன நேரத்தில் 
  தர வேண்டுமோ...

  அதை
  அவரவர்க்கு
  உரிய நேரத்தில்
  நிச்சயம்
  வழங்குவார்.

  இன்று...

  பசியை
  வலியை
  வேதனையை
  தந்துள்ளார்.

  நாளையே இந்த
  நிலை மாறலாம் "

என்றார்.

சீடர்கள் 
ஞானியிடம்
மன்னிப்பு கேட்டனர்.

வாங்க...

இறைவனுக்கு
மட்டுமல்ல...

தினமும்
நாம் சந்திக்கும்
அனைத்து
மனிதர்களுக்கும்...

எந்த
சூழ்நிலையிலும்
நாம் நன்றியை
தெரிவிக்கும் போது...

விளையும் 
நன்மைகள் ஏராளம்.

இதனை
புரிந்து கொண்டு...

இன்று 
இந்த நொடிமுதல்...

இறை 
சக்திக்கும்
நாம் சந்திக்கும்
அனைவருக்கும்
நன்றிகளை சொல்ல
தொடங்குவோம்.

நம்
வாழ்வின்
நிலையினை
மாற்றி அமைத்து
கொள்ள முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

*பகிர்வு....*