Sunday, June 28, 2020

நன்றி....மிக்க நன்றி..!!!

நன்றி...!.... மிக்க  நன்றி..,!

எனது MINDMOULDERS BLOG ( மைண் மோல்டர்ஸ் வலைப்பூ) யை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 50,000 யை கடந்த நிகழ்வை  உறவுகள் மற்றும் நட்புகளாகிய உங்களோடு பகிர்ந்து மகிழ்கிறேன்...
 எனது mindmoulders Blog யை தொடர்ந்து பார்வையிட்டு பயன் பெற அன்போடு வேண்டுகுறேன்...

மிக்க அன்போடு
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்
சேலம்

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

ஊருக்கு
வெளியில்
ஆலமரத்தடியில்...

கண்பார்வையற்ற
துறவி ஒருவர்
அமர்ந்திருந்தார்.

அப்போது
அங்கு வந்த
ஒருவன்...

ஏய் 
சாமியாரே
இந்த பக்கம்
யாராவது
போனார்களா ???

என்று சற்றும் 
மரியாதை இன்றி 
கேட்டான்.

அப்படி யாரும்
சென்றதாக
தெரியவில்லை
என்று...

பதில் அளித்தார்
அந்த துறவி.

கொஞ்ச நேரம்
கழித்து...

வேறொருவர்
அங்கு வந்து
துறவியிடம்...

சாமி 
இந்த வழியாக
யாராவது
போனார்களா ???

என்று அதிகார
தொனியில்
கேட்டார்.

நான் கவனிக்க
வில்லை என்று
பதில் கூறினார்
துறவி.

சற்று நேரம்
கழித்து...

மற்றொருவர்
துறவியிடம்
அருகில் வந்து...

துறவியாருக்கு
என் அன்பு
வணக்கம்.

சற்று முன்
இவ்வழியாக
யாராவது
சென்றார்களா 
என்பதை 
தெரிவிக்குமாறு
பணிவுடன்
வேண்டினார்.

துறவி
இந்த வினாவில்
மனம் மகிழ்ந்து...

மன்னருக்கு
என் முதல்
வணக்கம்.

சற்று முன் ஒரு
காவல் வீரன்
சென்றான்.

அதை அடுத்து
ஒரு அமைச்சர்
சென்றார்.

இப்போது
நீங்கள் வந்து
இருக்கிறீர்கள்
என்று கூறினார்.

தங்களுக்கு
கண் பார்வை
இல்லை...

இருப்பினும்
எவ்வாறு 
சரியாக 
கூறினீர்கள் ???

என கேட்டார் 
மன்னர்.

இதை
அறிவதற்கு
பார்வை தேவை
இல்லை...

அவரவர் 
பேசுவதை 
வைத்தே
அவர் யார் 
என நாம் 
அறியலாம்.

முதலில் 
வந்தவன்
மரியாதை 
தவறி
பேசினான்...

இரண்டாவது
வந்தவன்
அதிகாரத்தில்
பேசினான்...

மூன்றாவது
நீங்கள் 
மிகுந்த
பணிவுடன்
பேசினீர்கள்
இது போதாதா...

என்று பதில்
அளித்தார்
துறவி.

மன்னர் 
மகிழ்ச்சி
அடைந்து...

துறவியை
மீண்டும்
வணங்கி
விடைபெற்றார்.

வாங்க...

நம்ம
பற்றிய
கருத்தை
தீர்மானிப்பது...

நாம் 
பயன்படுத்தும்
வார்த்தைகளே
என்பதை
உணருவோம்.

ஆதலால்
நல்லதையே
பேச முயற்சிகள்
செய்வோம்.

நம்
வாழ்க்கை
நம்
வார்த்தைகளில்.

அன்புடன்
இனிய
மதிய
வணக்கம்.


Friday, June 26, 2020

புதிய பார்வை...புதிய கோணம்,..

🍁🍁புதிய பார்வை🍁🍁

1976
பாலிவுட் 
உலகத்தின்
திருப்பு முனை.

ஷோலே
திரைப்படம்
சக்கைப்போடு
போட்ட படம்.

இதில்
இரண்டு
கதாநாயகர்கள்.

ஒருவர்
ஏற்கெனவே
புகழ் பெற்ற
தர்மேந்திரா.

மற்றொருருவர்...

அப்போது தான்
துறையில் 
நுழைந்து
பிரகாசிக்க
தொடங்கிய
அமிதாப் பச்சன்.

ஏறக்குறைய
45 ஆண்டுகள்
ஆகின்றன.

இருவரில்
ஒருவர் மட்டுமே
இன்றளவும்
ஜொலித்து
கொண்டிருக்கிறார்..

என்பது 
வயதை
தாண்டியும்
இன்னமும்
மக்கள் மனதில்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்.

அவர்
அமிதாப்.

காரணம்
என்ன???

அவர் 
ஒவ்வொரு
நாளும் தன்னை
Re - invent செய்து
கொண்டே 
இருப்பது
தான்.

இடையில்
கூலி படத்தில்
விபத்து 
ஏற்பட்டு
படுத்த 
படுக்கையில்
இருந்த போதும்...

ஒட்டு மொத்த
மக்களின்
பிரார்த்தனை
மற்றும்
தன்னுடைய  விடா 
நம்பிக்கையாலும்
மீண்டு வந்தவர்
அவர்.

தன்னுடைய
A B C L 
நிறுவனம்
நட்டத்தில் 
சென்றது...

அரசியலில்
முக்கியத்துவம்
கிடைக்காதது...

என
தொடர் 
தோல்விகள்
கிடைத்தும் கூட...

மனம்
தளராமல் 
தன்னுடைய 
இமேஜ் ஐ
விட்டு கொடுத்து...

தொலை காட்சி
தொடர்களில்
நடிப்பது...

திரையில்
சிறப்பான
பாத்திரங்களை
தேர்ந்தெடுத்து
நடிப்பது என...

அவர்
தன்னை
புதுப்பித்து 
கொண்டே
இருந்ததின்
விளைவு...

இன்றளவும்
மக்கள் 
மனதில்
மணந்து
கொண்டு
இருக்கிறார்.

வாங்க...

முயற்சிகள்
செய்யாதவன்
முடங்கி
கிடக்கிறான்.

தொடர்ந்து
முயல்பவன்
சாதித்து 
கொண்டு
இருக்கிறான்

என்னும்
வரிகளுக்கு
ஏற்ப...

நம்முடைய
சிந்தனைகளை
நாமும்
புதுமை
படுத்துவோம்.

புதிய உயரம் 
தினம் தொட
நடையை 
போடுவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”*

*“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”* 

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம் 

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” 

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு"  என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். 

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. 

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. 

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. 

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். 

ஒரு போட்டி தேர்வு எழுதுகிறோம். வறுமை நிச்சயமாக ஒரு தடையாகத் தான் இருக்கும். வசதி இருப்பவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கற்றுக்கொள்வார்கள். வறுமையை தடை என நினைத்துக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். 

ஆனால் நான் வறுமையிலிருந்து மீள வேண்டும் என்ற வேகம் மனதுக்குள் துளிர்க்கும் போது வாழ்க்கை பயணமும் மகிழ்வானதாக மாறிவிடும். அப்படி உருவாகும் வேகத்தால் தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது. தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

*வெற்றி நிச்சயம்*
மீள் பதிவு

Thursday, June 25, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
கிராமத்தில்
இரு நண்பர்கள்
இருந்தனர்.

முதல் நண்பன்
இரண்டாவது
நண்பனிடம்...

அருகில் 
உள்ள தன்
நிலத்தில்...

இருவரும்
சேர்ந்து 
கனி தரும்
மரங்களை நட்டு 
அவைகளை 
விற்பனை செய்து
பிழைக்கலாமா
என்று 
ஆலோசித்தான்.

இரண்டாவது
நண்பன் சோம்பல்
தனம் மற்றும்
நம்பிக்கை இன்மை
காரணமாக...

இதற்கு
உடன்படவில்லை.

இருப்பினும்
முதல் நண்பன்
தன் நிலத்தில்...

நல்ல கனிதரும்
மரங்களை நட்டு
அவைகளை நன்கு
பராமரித்து வந்தான்.

காலங்கள்
மாறின.

மரங்கள் வளர்ந்து
கனிகள் கொடுக்க
தொடங்கின.

முதலாம் நண்பன்
இரண்டாவது
நண்பனை
அழைத்து...

கனிகளை
சாப்பிடுமாறு
வேண்டினான்.

இரண்டாவது
நண்பன் கனிகளை
சுவைத்து...

சப்பென்று
இருக்கிறது
என்று கூறினான்.

இதை கேட்ட
முதல் நண்பன்
அவனுக்கு நன்றி 
தெரிவித்தான்.

மரத்தின் கனிகள்
சுவை தர என்ன
செய்வது என 
மற்றவர்களிடம்
விசாரித்து உரங்கள்
போட்டு வளர்க்க
தொடங்கினான்.

நாட்கள்
சென்றன.

இப்போது நண்பனை
அழைத்து கனிகளை
வழங்கி...

சுவை எவ்வாறு 
இருக்கிறது
என கேட்டான்.

கனிகளை
சுவைத்த நண்பன்...

ஒரே கசப்பாக
இருக்கிறது
என்றான்.

நண்பனுக்கு
நன்றி தெரிவித்த
முதல் நண்பன்...

கனிகளில் 
கசப்பை போக்கவும்
சுவையை
சேர்க்கவும்
என்ன செய்வது
என மற்றவர்களிடம்
ஆலோசனை கேட்டான்.

பின் அவர்களின்
கருத்துக்கள் படி
மரங்களுக்கு
சிறப்பு மருந்துகள்
போட்டு வளர்க்க
ஆரம்பித்தான்.

காலங்கள்
சென்றன.

இப்போது
நண்பனை
அழைத்து...

கனிகளை கொடுத்து
சுவைக்குமாறு
கூறினான்.

கனிகளை
சுவைத்த நண்பன்...

மிகவும்
இனிப்பாகவும்
சுவையாகவும்
உள்ளதாகவும்
கூறினான்.

அதன் பின்
கனிகளை விற்பனை
செய்ய
தொடங்கினான்.

வியாபாரம்
அமோகமாக
நடந்து ஊரில்
பணக்காரனாக
மாறிபோனான்.

இவனின்
வெற்றி குறித்து
ஒருவன் காரணம்
கேட்டான்.

என் வெற்றிக்கு
முழு காரணம்
என் நண்பன்தான்.

என்னுடைய
கனிகளை ருசித்து
சப்பென்று இருக்கின்றது
கசப்பாக இருக்கின்றது
என கூறும் போதெல்லாம்
நான் அவன் மேல்
கோபம் படவில்லை

மாறாக...

அவன் குறிப்பிட்ட
குறைகளை களைய
தொடங்கினேன்.

அதன் தொடர்வே
இந்த வெற்றி
என்று கூறினான்.

வாங்க...

நம்மையும் நம் 
செயல்களையும்
குறை கூறும்
கூட்டம் ஒன்று...

நம்மை சுற்றி
இருக்கத்தான்
செய்யும்.

அவர்கள் நம்மை
குறை கூறும்
போதெல்லாம்...

நாம் மனசார
அவர்களுக்கு
நன்றி தெரிவிக்க
வேண்டும்.

அவர்கள்
குறிப்பிடும்
குறைகள்
நம்மிடம்
இருப்பின்...

அவைகளை
களைந்து
நம்மை நாம்
மாற்றி கொண்டோம்
எனில்...

வெற்றி
நம்மை தேடி வரும்.

இது கொஞ்சம்
கடினம் தான்.

இருப்பினும்
முயற்சிகள்
மற்றும்
முறையான
பயிற்சிகள்
இருப்பின்...

எதுவும்
சாத்தியமே.

வாங்க
முயற்சி
செய்து 
கொண்டே
இருப்போம்....

அன்புடன் 
இனிய
காலை
வணக்கம்.

Monday, June 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்.....

🍁🍁புதிய பாதை🍁🍁

அமெரிக்க
அதிபர்
கென்னடி...

நாசா
விண்வெளி
ஆராய்ச்சி
கூடத்திற்கு...

ஒருமுறை
விஜயம்
செய்தார்.

அப்போது
அங்கிருந்த
சீருடை
அணிந்த
பணியாளர்
ஒருவர்...

இவர்
வருவதை
கண்டு
கொள்ளாமல்...

ஈர துணியால்
தரையை சுத்தம்
செய்து கொண்டு
இருந்தார்.

அவர் 
அருகில் சென்ற 
அதிபர்...

நீங்கள்
என்ன செய்து
கொண்டு
இருக்கிறீர்கள் ???
என்று கேட்டார்.

அதற்கு 
அந்த மனிதர்...

விண்வெளிக்கு
மனிதர்களை
சுகாதாரமாக
அனுப்பும்
பொருட்டு...

உதவி செய்து
கொண்டு
இருக்கிறேன்
என்றார்.

அந்த பதிலை
கென்னடி
எதிர்பார்க்க
வில்லை.

அவர் தம் 
தொழில் மீது
வைத்திருந்த
பக்தியை பார்த்து
அசந்து போய்...

பாராட்டி விட்டு
சென்றார்.

சாக்கடை
அள்ளும்
வேலையாக
இருந்தாலும்
அதை...

சந்தோஷமாக
செய்ய வேண்டும்
என்பது...

தமிழாசிரியர்
ஒருவரின்
கூற்று.

அவரின்
வார்த்தைகள்
அற்புதம் தானே.

வாங்க...

அவரின்
வாக்கு படி
நம் தொழிலை
நாம் நேசித்து 
செய்வோம்.

நல்லதொரு
சமுதாயம்
படைக்க
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


தமிழரின் கணிதத் திறமை...

தமிழர் வடித்த அழகு சிற்பக் கலைகளும் சரி தமிழ் எழுத்துகளும் சரி எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)நமது தமிழில் மட்டும் உண்டு!

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அக் காலத்தில் நம் முன்னோர் பயன்படுத்தியது எத்தனை ஆச்சரியம்! இதன் மூலம் எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்திருப்பது எத்தனை பெருமை

நன்றி மீள் பதிவு..

லேப்டாப் வாங்குபவர் கவனத்துக்கு....

*ஆன்லைன் கிளாஸ் சண்டைகள்!’ -லேப்டாப் வாங்கப் போகும் அப்பாக்களின் கவனத்துக்கு... #MyVikatan-மணிகண்ட பிரபு*

கற்றல் எவ்வளவு ஆனந்தமானது என்று வகுப்பறைகளும் எவ்வளவு கொடுமையானது என்பதை ஆன்லைன் வகுப்புகளும் உணர்த்துகின்றன தற்போது மாணவர்களுக்கு.

எங்கெங்கு காணினும் ஆன்லைன் வகுப்புகள். கல்லூரியில் தொடங்கி தற்போது யு.கே.ஜி வரையும் பரவியுள்ளது. பெற்றோருக்கு இதில் பிரச்சனை என்பது மொபைல் போனில் பார்க்க வைப்பது. வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் போன் கொடுப்பதில் வாரிசுரிமைப் போரே நிகழ்கிறது. காலத்தின் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுத்தியுள்ளது.

அப்பாக்களின் ஆப்ஷன்கள் மூன்று.

கம்பெனி லேப்டாப்

கம்மி ரேட்டுக்கு அசெம்பிள் செட்

கவர்ன்மென்ட் கொடுத்த லேப்டாப்.

இதுவும் கிடைக்காத பட்சத்தில் புது லேப்டாப் வாங்க வருகின்றனர்.

பைக் வாங்கப் போகும் போது MRF டயர் இருக்கானு பார்ப்பது போல் கணினி வாங்கும் போது பெயின்ட், எம்.எஸ் ஆபீஸ் இருக்கானு கேட்கும் வெள்ளந்தி அப்பாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். தேடலில் லேப்டாப் குறித்த அடிப்படை தகவல் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

புதிதாய் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

யுகேஜி படிக்கும் மகனுக்கு M.E, M.tech லெவல் வேண்டாம். மினிமம் வசதியுள்ள லேப்டாப் ஆப்ஷன் வைத்துக் கொள்ளலாம்.

Life long வரணுமில்ல என்பதையும் நம்ப வேண்டாம். இணைய உலகில் இன்னைக்கு வாங்கினா நாளைக்கு அப்டேட் மாடல் வந்திடும். Processor என்பது எல்லா மதர் போர்டுகளிலும் இருக்கும் ஒரு சிப். இப்போதைக்கு processor ஐ3 & ஐ5 வாங்கலாம். ஆனால், ஐ7, ஐ9 வரை வந்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவும். இதில் processor-க்கு அருகில் இருக்கும் 2.80GHz என்பது பிராசசரின் வேகம். இது குறையும் போது வேகம் குறைவாய் இருக்கும்.

intel, AMD brand-ல் இன்டெல் அட்வான்ஸ் வெர்ஷன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். நம்ம கணினிக்கேற்ற பொருத்தமான மணமகனாய் இருப்பார்.

RAM எனும் வேகப்படுத்தி மடிக்கணினியில் மினிமம் 4 GB இருக்கணும். 8 GB இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. DDR3 அல்லது DDR4 RAM பொருத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கவும்.

தற்போது பெரும்பாலும் 1-TB மெமரி உள்ள லேப்டாப் தான் வருகிறது.

மற்றது சாலிட் ஸ்டேட் ட்ரைவ் வேகம் அதிகம், விலையும் அதிகம், நினைவுத் திறன் குறைவு.

Bluetooth, WiFi, Memory Card Slot, HDMI cable option, DVD RW Drive அல்லது பென் ட்ரைவ் ஆப்ஷன் தற்போது இரண்டு வந்து விட்டது.

USB தற்போது 3.0 வெர்சன் வந்துள்ளதால் கொஞ்சம் வேகமாய் இருக்கும்.

வெப்கேமரா அனைத்து லேப்டாப்புகளிலும் வருகிறது. தரமாய் இருக்கிறதா எனச் சரி பார்க்கவும்

பேட்டரி 8 மணி நேரம் இருப்பது போல் வாங்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சார்ஜர் போட வேண்டும்.

15.6 அல்லது 14 இன்ச் display LED monitor வாங்கலாம். அதிலும் Full HD, Ultra HD என வந்து விட்டதால் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் memory card slot, Front mic, audio speaker system இணைந்ததா எனப் பார்த்துக் கொள்ளவும்

Screen resolution ஐ கண் பார்வையை உறுத்தாத அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

Hard disc பயன்பாட்டின் வேகத்தைப் பொறுத்து தேர்வு செய்யலாம். இதன் வேகம் 7200RPM, 5400RPM போன்றவற்றை பார்க்கவும். 320GB,160GB, 80GB எனும் அளவில் கிடைப்பதால் பயன்பாட்டைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கலாம்.

SSD (solid state drive) இருந்தால் லேப்டாப் ஆன் செய்தவுடன் துரித வேகத்தில் உடனே ஆன் ஆகிவிடும். குறைவாய் இருந்தால் ஆன் ஆவதில் தாமதம் ஆகும். ஆனால், சற்றுவிலை அதிகமாய் இருக்கும்.

O.S எனும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முக்கியமானது. இதுதான் லேப்டாப்பின் இதயம் போலே. தற்போது விண்டோஸ் 10 புது வெர்ஷன் வந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு வாங்கவும்.

எனக்கு செக்யூரிட்டி அதிகம் தேவையெனில் ஆப்பிளின் Mac ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நாடலாம்.

Graphic card இருந்தால் ஆன்லைன் வகுப்பில் அனிமேஷன் சப்போர்ட் ஆவது எளிதாய் இருக்கும். இதில் இருவகையாய் இருக்கும். அதிக வீடியோக்கள் பார்ப்பதாய் இருந்தால் Dedicated graphic card உபயோகிக்கலாம். கணினி வேகம் குறையாது. குறைவான பயன்பாடு மட்டும் போதுமென்றால் integrated graphic card போதும்.

ஆன்ட்டி வைரஸ் புரோக்கிராம் முக்கியமாய் இருக்க வேண்டும். அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஆமை புகுந்த வீடும் ஆன்ட்டி வைரஸ் இல்லாத கணினியும் நல்லாயிருக்காது.

i3-4GB , i5-8GB, i7-8GB இருக்கும். தேவைக்கேற்ப பார்த்து வாங்கலாம்.

பொதுவானவை.

சுள்ளான் சூடானேன் சுளுக்கெடுத்துறுவேன் எனும் வசனம் போல் சில லேப்டாப்கள் அதிகம் வெப்பமாகும். விலை மலிவு, அசெம்பிள் வாங்கும் போது இதுபோன்ற பிரச்னை வரும். 4ஜிபி RAM-ல் சில இயங்குதளங்கள் processing-க்காக 3ஜிபி எடுத்துக் கொள்ளும். எனவே, பயன்பாடு அதிகமிருக்கும் பட்சத்தில் 8 ஜிபியாக அதிகரித்துக் கொள்ளலாம்.

சின்னக் கல்லு பெத்த லாபம் என்பது போல எடை குறைந்த லேப்டாப்கள் எளிதில் கையாள வசதியாய் இருக்கும். எடை குறையக் குறைய விலை அதிகம் என்பது சாரம்.

ஜம்பிங் கால்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல என்பது போல் நம்முடைய முதல் தேர்வு கம்பெனி லேப்டாப்கள் தான். ஒரு வருட வாரன்டி கொடுத்தாலும் சில ஆண்டுகள் நன்கு உழைக்கும். மேலும் பழுது ஏற்படின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களை நாடலாம்.

சிறியது அழகு என்பது போல் மிகப்பெரிய திரை இருந்தால் அடிக்கடி எடுத்துச் செல்ல அசெளகரியம் ஏற்படும். எனவே, மீடியமே அழகு.

குறைந்த அளவு பயன்பாடே எனில் 25,000 வரையும், கல்லூரி மாணவர்கள் எனில் 45,000 வரையும் பின் தேவைக்கு ஏற்ப வசதி உள்ளவர் அதற்கு அடுத்து விலையுள்ளவரை வாங்கலாம்.

சரியான தேர்வே தீர்வு.

எல்லோரும் வைத்துள்ளனர் என வாங்காமல் தேவையாக இருப்பின் வாங்கவும். பள்ளிவயது குழந்தைக்கு எனில் i3-4GB-1TB போதும். கல்லூரி மாணவர்க்கு எனில், i5-8GB-2TB -Grabhic card போதும். பிசினஸ்க்காக வாங்க வேண்டுமெனில் கமர்ஷியல் லேப்டாப் வாங்கலாம். ஏனெனில் வெயில், தூசு, வெப்பம் ஆகியவற்றுக்குப் பொருந்தும். எல்லாமே இருப்பதுபோல தேவை எனில் i7-8GB-16GB RAM-SSD Hard disc- graphic card 8GB.

பட்ஜெட், பயன்பாடு இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன லேப்டாப் வாங்குவதில். இணைய வல்லுநர் நண்பர்கள் மற்றும் துறைசார் நண்பர்களின் ஆலோசனையுடன் வாங்கலாம். நல்லன தேர்தெடுத்தால் பிறகு வரும் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் வசதியும் ஆண்ட்ராய்டு போனும் இல்லாத மாணவ மாணவியரின் கதி என்ன எனவும் யோசிக்க வைத்துள்ளது.

மாணவர்கள், பெற்றோர்களின் நலன் கருதி மீள் பதிவு...

நன்றி..
- மணிகண்ட பிரபு

Sunday, June 21, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

ரிச்சர்ட் ஜான்
என்பவர்
தத்தம்
துறையில்
உச்ச
வெற்றி
பெற்றவர்களில்
500 பேரிடம்...

அதற்கான
காரணம்
குறித்த
நேர்காணல்
ஒன்றை
நடத்தினார்.

அவைகளை
தொகுத்து
இறுதியில்
ஒரு
முடிவை
அறிவிக்கிறார்.

அது...

"வெற்றியாளர்கள்
 அனைவரிடமும்
 அவர்கள்
 எந்த துறையில்
 இருந்தாலும்...

 எந்த கல்வி
 பயின்று
 இருந்தாலும்...

 அவர்கள்
 *வெற்றி*
 *பெற்றதற்கான*
 *ஒரே காரணம்*...

 அவர்கள்
 செய்யும்
 செயலில்
 அவர்கள்
 *தீவிரமான*
 *ஆர்வம்*
 கொண்டிருந்ததே."

 வாங்க...

நம்
செயலில் 
நாம்
தீவிர
ஆர்வத்தை
செலுத்துவோம்.

வெற்றி
பெற்றவர்
பட்டியலில்
நாமும் 
இணைய
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Saturday, June 20, 2020

தந்தையர் தின வாழ்த்துகள்...

https://youtu.be/Ty2--otMBe4

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

பொதுவாக
மனிதரின்
முன்னேற்றத்தை
தடுப்பது...

மூன்று
அம்சங்களே...

தோல்வி
குறித்த
அச்சம்.

வெற்றி
குறித்த
அச்சம்.

மாற்றம்
குறித்த
அச்சம்.

மாற்றத்தை
குறித்த
அச்சத்தை
நீக்கினால்...

மற்ற
இரண்டும்
தானாய்
நம் வழிக்கு
வரும்.

வாங்க...

மாற்றத்தை
மனம் உவந்து
ஏற்போம்.

மகிழ்ச்சி
தானாய்
வந்து
சேர்வதை
உணர்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Friday, June 19, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

ஒரு 
கிணற்றை
சுற்றி அர்ஜுனன்
துரியோதனன்
மற்றும் சிலர்
நின்று கொண்டு
இருந்தனர்.

அப்போது 
அந்த வழியாக 
துரோணர்
வந்தார்.

"இங்கு என்ன
 செய்கிறீர்கள்???"

என்று  
துரியோதனனை
பார்த்து கேட்டார்.

வயதான
தோற்றம்.
முகத்தில்
மீசை, தாடி
உடையோ
கசங்கலான
கந்தை.

துரோணரை
பார்த்த
துரியோதனன்...

மனதிற்குள்
அவரை பற்றி
மிக கேவலமாக
நினைத்து கொண்டு...

"நாங்கள் இங்கு
 இருந்தால் உமக்கு
 என்ன???

 உங்கள் 
 வேலையை
 பார்த்து கொண்டு
 நீங்கள் போங்கள் "

என்றான்.

இந்த பதிலில்
துரோணர் முகம்
மாறியது.

உடனே 
அங்கிருந்த
அர்ஜுனன்...

"ஐயனே
 நாங்கள் 
 விளையாடி
 கொண்டிருந்தபோது
 பந்து கிணற்றில்
 விழுந்து விட்டது.

 இதை
 எடுப்பதற்கான
 முயற்சிகளில்
 நாங்கள் ஈடுபட்டு
 கொண்டு
 இருக்கிறோம்."

என்று
பணிவுடன்
கூறினான்.

அகமகிழ்ந்த
துரோணர்
அர்ஜுனனை
அழைத்து...

கிணற்றின் 
கறையில்
இருந்த 
புற்களை
பறித்து 
கொண்டு
வருமாறு 
கூறினார்.

ஏன் ?
எதற்கு ??
என்னும் 
கேள்விகளை
கேட்காமல்...

புற்களை
பறித்து கொண்டு
அவர் அருகில்
சென்றான்
அர்ஜுனன்.

"நான்
 உன் காதில் 
 மந்திரம் ஒன்று
 சொல்கிறேன்...

 அதை உன்
 மனத்திற்குள் 
 உச்சரித்து...

 இந்த
 புற்களை 
 ஒவ்வொன்றாக 
 கிணற்றில் போடு"

என்றார் 
துரோணர்.

அர்ஜுனன்
மறு பேச்சின்றி
அவர் கூறியவாறு
மந்திரத்தை 
உச்சரித்து...

புற்களை
ஒவ்வொன்றாக
போட்டான்.

என்ன
அதிசயம் !!!

புற்கள் 
ஒன்றோடு ஒன்று
இணைந்து
கயிறு போல
உருக்கொண்டு
கிணற்றில்
சென்று...

அந்த
பந்தை மேலே
கொண்டு வந்தது.

எல்லோரும்
ஆச்சர்யத்தில்
மிதக்க...

அர்ஜுனன்
துரோணர் 
காலில் விழுந்து
வணங்கினான்.

மகிழ்ச்சி
அடைந்த
துரோணர்...

"அர்ஜுனா
 கொஞ்ச காலம்
 கழித்து என் 
 குடிலுக்கு வா.

 வில்
 வித்தையில்
 உனக்கு 
 சிறப்பான
 பயிற்சிகள் 
 தருகிறேன்"

என்று கூறி
அந்த இடத்தை
விட்டு சென்றார்.

' எண்பதத்தால் 
  எய்தல் 
  எளிதென்ப 
  யார்மாட்டும்
  பண்புடைமை 
  என்னும் வழக்கு.'

எல்லாரிடத்தும் 
எளிதில் கண்டு
பேசுவதற்கேற்ற 
நிலையில் 
இருப்பவர்கள்...

பண்புடையவர் 
என்று 
சொல்லப்படுகின்ற 
தன்மையை 
அடைதல் எளிது.

இது
ஐயன்
வள்ளுவனின்
வாக்கு.

நேர்மையுடனான
துணிவு
வாழ்க்கையை
உயர்த்தும்.

வாய்மையுடனான
பணிவு
வாழ்க்கையில்...

என்றும்
மகிழ்ச்சியை
கொடுக்கும்.

இது
உண்மைதானே.

வாங்க...

துணிவுடன்
பணிவுடன்
வாழ...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்

Thursday, June 18, 2020

புதிய பார்வை ...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

எடுத்த 
முயற்சிகள்
எல்லாமே 
தோற்றதாகவும்...

வெற்றி என்பதே
எட்டா கனியாக
இருப்பதாகவும்...

விரக்தியில்
இருந்து விடுபட
வழி ஒன்றை
கூறுமாறும்...

ஞானியிடம்
வேண்டினார்
ஒருவர்.

உன்னை முன்னேற
விடாமல் ஒருவன்
தடுத்து கொண்டு
இருக்கிறான்.

அவனை 
நான் பார்த்து 
கொள்கிறேன்.

நீ
நாளை வா
என்று சொல்லி
அனுப்பினார் ஞானி.

மறுநாள்
அம்மனிதர்
வந்து ஞானியை
சந்தித்தார்.

ஞானி...

உன்னை முன்னேற
விடாமல் தடுத்த
அவனை...

அந்த
பெட்டியில்
வைத்திருக்கிறேன்.
விருப்பம் இருப்பின்
போய் பார் 
என்றார்.

அது ஒரு
சவப்பெட்டி.

உள்ளே 
திறந்து
பார்த்தவர்
அதிர்ந்து போனார்.

காரணம்
பெட்டியின் உள்ளே
யாருமில்லை.

மாறாக
முகம் பார்க்கும்
கண்ணாடி ஒன்று 
அங்கு வைக்க
பட்டிருந்தது.

அதில் 
அவர் முகம்
தெரிந்தது.

கோபத்தின்
உச்சிக்கு சென்ற
அம்மனிதர்...

நீங்கள்
இவ்வாறு
செய்யலாமா???
என ஆவேசமாக
கேட்டார்.

ஞானி...

சவபெட்டியில்
தெரிவது உன்
முகமல்ல...

உனக்குள் நீ 
வகுத்து கொண்ட
தேவை இல்லாத...

எல்லைகள்.
கோடுகள்.
தடைகள்.

அவைகளை
குழி தோண்டி
புதைத்து விடு.

உனக்குள் 
இருக்கும்
அற்புத 
ஆற்றல்களை
உணர்ந்து...

அதை உன்னால் 
சாதித்து காட்ட 
முடியும் என்று
நம்பிக்கை 
கொண்டு...

புதிய 
மனிதனாய்
புறப்பட்டு வா.

இனிமேல் 
நீ தொட்டது
அனைத்தும்
துலங்கும்.

வெற்றி மேல்
வெற்றி வந்து
உன்னை 
அடையும் "

என்று
வாழ்த்தி
அனுப்பினார்.

"நீ 
 யாராக
 மாறவேண்டும்
 என்று 
 நினைக்கிறாயோ

 அவராகவே
 மாறும் சக்தி
 உனக்குள் உண்டு"

இது
விவேகானந்தரின்
வாக்கு.

வாங்க...

நேற்றைய
மனிதனை
இழந்து...

இன்று
புதிதாய்
பிறந்து...

நாளைய
வரலாற்றில்
இடம் பிடிக்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Tuesday, June 16, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

குரு 
ஒருவரிடம் 
செல்வந்தர்...

என் 
மனம் 
மிகவும் 
குழப்பத்தில் 
இருக்கிறது...

என் 
பணியாட்கள்
கூட எனக்கு 
உண்மையாக 
இல்லை...

மனைவி, 
பிள்ளைகள் 
உள்பட உலகமே 
சுயநல கூட்டமாக 
உள்ளது...

யாருமே 
சரியில்லை 
என்றார்.

புன்னகைத்த 
குரு கதை 
ஒன்றை 
சொன்னார்.

ஓர் 
ஊரில் 
ஆயிரம் 
கண்ணாடிகள் 
இருக்கிற அறை 
ஒன்று இருந்தது. 

அதற்குள் 
சென்று 
ஒரு சிறுமி 
விளையாடினாள். 

தன்னை
சுற்றி ஆயிரம் 
குழந்தைகளின் 
மலர்ந்த முகத்தை 
கண்டு மகிழ்ந்தாள். 

அவள் 
கை 
தட்டியவுடன், 
ஆயிரம் 
பிம்பங்களும் 
கை தட்டின. 

உலகிலேயே 
மகிழ்ச்சியான
இடம் இதுதான்...

என்று 
எண்ணி,
அடிக்கடி அங்கே 
சென்று விளையாடி
மகிழ்ந்தாள்.

அதே 
இடத்துக்கு 
ஒருநாள் 
மனநிலை 
சரியில்லாத 
ஒருவன் வந்தான். 

தன்னை 
சுற்றி 
ஆயிரம் 
கோபமான 
மனிதர்களை 
கண்டான். 

அச்சம் கொண்ட 
அவன், அந்த 
மனிதர்களை 
அடிக்க கை 
ஓங்கியவுடன்...

ஆயிரம் 
பிம்பங்களும் 
அவனை அடிக்க 
கை ஓங்கின. 

உலகிலேயே 
மோசமான இடம் 
இதுதான்...

எனக் கூறி, 
அவன் அங்கிருந்து 
வெளியேறினான்.

"இந்த 
 சமூகம் தான் 
 ஆயிரம் 
 கண்ணாடிகள் 
 இருக்கிற அறை. 

 நாம் 
 எதை வெளி
 படுத்துகிறமோ 
 அதையே 
 சமூகம் 
 பிரதிபலிக்கிறது.

 உன் மனதை
 குழந்தையை 
 போல் நீ
 வைத்திரு.

 உலகம் உனக்கு 
 சொர்க்கமாகும்"

என்றார் 
குரு.

குருவின்
கூற்றுப்படி...

நம் 
வாழ்வின்
சொர்கமும்
நரகமும்
நம் கையில்.

எண்ணங்கள்
சீரானால்
வாழ்க்கையே
சிறப்பாகும்.

நல்லதை
வெளி
படுத்துவோம்.

நல்லதே
நடக்கும்.

வாய்ப்புகள்
நம் வசம்.

வளமாக
வாழ்ந்து
பார்க்க...

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க...

அன்புடன்
காலை
வணக்கம்.


Monday, June 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

இளைஞன்
ஒருவன்
பெரியவருடன்
பேசும் போது...

'கடவுள் எனக்கு
 எந்த உதவியும்
 செய்ததில்லை'...

என்று
கூறினான்.

அதற்கு
பெரியவர்...

"இறைவனை
 உணர்ந்து
 கொள்ளும்
 தன்மை...

 உனக்கு
 இன்னும்
 வாய்க்கவில்லை"

என்று
இளைஞனிடம்
கூறினார்.

சில நாட்கள்
சென்றன.

இளைஞன்
நண்பனை
பார்க்க ஒரு
கிராமத்திற்கு
சென்றான்.

அந்த ஊர் 
ஒரு காட்டை 
தாண்டி
செல்வதாய்
இருந்தது.

இளைஞனுக்கு
அது புதிய வழி.

நேரமோ
மாலை மங்கும்
வேளையாய்
இருந்தது.

காட்டில்
ஒரு இடத்தில்
பல வழிகள்
பிரிந்தன.

எதில் செல்வது
என்று குழப்பம்
மேலிட்டது.

இருள் வேறு
தொடங்க
ஆரம்பித்தது.

புது வித
சப்தங்கள் கேட்க 
இவனுக்கு
மெலிதாய் பயம்
பிடிக்க 
தொடங்கியது.

அந்த நேரம் ஒரு
விறகு வெட்டி
அந்த வழியாய்
வந்தார்.

இளைஞன்
அவருடன்
அந்த ஊருக்கு
செல்லும்
வழியை 
கேட்டான்.

அவர்
தான் அந்த
ஊருக்குத்தான்
செல்வதாகவும்
தன்னை
தொடரும்படியும்
கூறினார்.

சில 
நிமிடங்களில்
இருவரும்
அந்த ஊருக்கு
போய் சேர்ந்தனர்.

அன்று 
மாலையே 
இளைஞன்
பெரியவரை
பார்த்தான்.

பேச்சினூடே
நடந்த 
நிகழ்ச்சிகளை
அவரிடம்
கூறினான்.

பெரியவர்
இளைஞனிடம்...

"நீ காட்டில் 
 செல்லும் வழி 
 தெரியாமல்
 தவித்த அந்த
 நேரத்தில்...

 விறகு வெட்டி
 வந்த காரணம்
 என்ன ??? "

என்று
வினவினார்.

இளைஞனுக்கு
பதில் சொல்ல
தெரிய வில்லை.

"கடவுள் 
 உனக்கு
 உதவியதே 
 இல்லை
 என்று 
 கூறினாயே

 அன்று 
 அந்த 
 நேரத்தில் 
 வந்தது
 இறைவனே.

 ஒன்று 
 நினைவில்
 வைத்துக்கொள்.

 இறைவன் 
 எந்த
 நேரத்திலும் 
 நேராக
 வர மாட்டார்.

 நீ தவித்ததை 
 போலவே
 மக்கள் தவிக்கும்
 நேரங்களில்...

 விறகு வெட்டி
 வந்து உனக்கு
 உதவியதை 
 போல...

 யாராவது 
 ஒரு மனிதர் 
 வடிவத்தில்
 வந்து நம்மை
 காப்பாற்றுவார்.

 இது தான் 
 இறைவனை
 உணரும்    
 தருணங்கள் "

என்று 
கூறினார்.

'நமக்கு 
 உதவும்
 யாருமே...

 மனித
 வடிவில் 
 உலவும்
 கடவுளர்களே'

என்பது
உண்மைதானே.

வாங்க...

மனிதர்களை
மதிப்போம்.

மனசார
அவர்களை
துதிப்போம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Saturday, June 13, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

1000 முறை
சோதனைகளில்
தோற்றவர்
எடிசன்...

அவர்
அதற்காக
முயற்சிகளை
கைவிடவில்லை.

ஆரிக்கள்
நிறுவனத்தை
தொடங்கிய
ஜார்ஜ் எலிசன்...

தந்தை
யாரென்றே
தெரியாதவர்...

அவர்
அதற்காக
கவலை
படவில்லை.

ஓடும்
தொடர்
வண்டியில்
இருந்து...

தள்ளி
விட்டனர்
காந்தியை...

அவர்
அதற்காக
மனம் தளர
வில்லை.

அன்னை
தெரசா
யாசகம்
கேட்ட போது...

அவர் 
கைகளில்
காரி உமிழ்ந்தனர்.

அவர்
அதற்காக
வருத்தபடவில்லை.

திருட
வந்தபோது
ஒன்றுமில்லை
என்பதற்காக...

விழுந்த 
அடிகளை தாங்கி 
கொண்டவர்
ரமணர்...

அவர்
அதற்காக
மனம்நொந்து
கொள்ள வில்லை.

நாம்
இதில்
இருந்து 
தெரிந்து 
கொள்ளும்
செய்திதான் 
என்ன ???

'ஒறுத்தார்க்கு
 ஒருநாளை
 இன்பம்...

 பொறுத்தார்க்கு
 பொன்றும்
 துணையும்
 புகழ்'

என்று
வள்ளுவர் 
குறிப்பிடும்
பொறுமையை
கடைபிடிப்பவர்கள்...

அவர்  தம்  வாழ்வில்
உலகம் உள்ளவரை
புகழ் பெறுவர்
என்பதே.

வாங்க...

நாமும்
பொறுமையை
கடைபிடிக்க...

முடிந்தவரை
முயற்சிகள்
செய்யலாம்.

பொன்னான
உலகில்
புன்சிரிப்புடன்
வலம் வரலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Friday, June 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

கால்
கருகி போன
சிறுவன்
ஒருவன்...

ஓட்ட 
பந்தயத்தில்
கலந்து 
கொள்வதாகவும்
முதல் பரிசு
பெறுவதாகவும்
கனவு கண்டான்.

கல்லூரியில்
படிக்கும் போது
100 மீட்டர்
ஓட்ட பந்தயத்தில்
கலந்து கொள்ள
பெயர் கொடுக்கும்
போதே...

ஏகப்பட்ட
கிண்டல்கள்
கேலிகள்
முதுகுக்கு
பின்
அரங்கேறின.

அவைகளை
புறம் தள்ளி
பங்கு பெற்று
பரிசுகள்
பெறுகிறான்.

இந்த சின்ன
முயற்சியின்
பலனும்...

அதனால்
கிடைத்த
பரிசும்...

அவனை
மேலும்
சாதிக்க
வேண்டும்...

என்னும்
உணர்வை
அவனுக்குள்
விதைத்தன.

அதன் பின்
நடந்த 
நிகழ்வுகள்...

நம்பவே
முடியாதவை.

ஆனால்
நடந்தேறின.

சரித்திரத்திலும்
இடம் பெற்றன.

அது...

1936 ல்
ஜெர்மனியில்
நடைபெற்ற
ஒலிம்பிக்
போட்டியில்...

அவன்
கலந்து 
கொண்டு...

1500 மீட்டர்
ஓட்ட 
பந்தயத்தில்
பங்குபெற்று...

முதல் இடம்
பிடித்தது
மட்டுமல்ல...

முந்தைய
சாதனையை
முறியடித்து...

புதிய
சாதனையும்
புரிந்ததே.

அவர் 
பெயர்
ஹெலன்
கன்னிங்ஹாம்.

நம்மிடமுள்ள
ஆற்றல்களை
புரிந்து 
கொள்வது...

நம் 
செயல்கள் மீது
உறுதியான
நம்பிக்கை
கொள்வது...

அதற்கான
காலம் 
வரும் வரை
காத்திருப்பது...

அது
தொடர்பாக
இடைவிடாமல்
பயிற்சி
செய்வது...

இவைகளை
எவர் புரிந்து
தன் வசப்படுத்தி
செயல்
படுகிறாரோ...

அவரே
வெற்றியாளராக
சாதனையாளராக
மலர்கிறார்...

வாங்க...

நாமும்
முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Thursday, June 11, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

18 ஆம்
நூற்றாண்டு.

அம்மை நோய்
தீவிரமாக
பரவியிருந்த
காலம்.

அதற்கான
தடுப்பு மருந்து
அப்போது
கண்டுபிடிக்க
படவில்லை.

தன் வீட்டில்
தினசரி பால்
ஊற்ற வரும்
பால்கார
பெண்மணியிடம்...

"ஊரில் அம்மை
 நோய் தாக்கம்
 அதிகமாய்
 பரவி வருகிறது.

 நீங்கள் உங்கள்
 உடலை மிகவும்
 கவனமாக 
 பார்த்து 
 கொள்ளவும்"

என்று
கூறினார்
மருத்துவரான
ஜென்னர்.

"தனக்கு அம்மை
 நோய் தாக்காது"

என கூறினார்
பால்கார 
பெண்மணி.

காரணம் கேட்டார்
ஜென்னர்.

"மாட்டுக்கு வரும்
 அம்மை நோய்
 எனக்கும் 
 ஒருமுறை வந்தது.

 அதனால் 
 எனக்கு மீண்டும்
 அம்மை நோய்
 வராது"

என கூறினார்
பால்கார 
பெண்மணி.

இதைக்கேட்ட
ஜென்னர்...
 
"அது எப்படி
 உறுதியாக
 சொல்கிறீர்கள் ?"

என 
வினவினார்.

"என்னுடைய 
 பாட்டி
 அப்படித்தான்
 எனக்கு கூறினார்"

என்றார் 
பால்கார
பெண்மணி.

அந்த 
காலகட்டத்தில்...

'கவ் பாக்ஸ்' 
எனப்படும் 
பசுக்களின் 
மடிக்காம்புகளை 
புண்ணாக்கும் 
ஒரு நோய் 
இருந்தது

அது 
ஒரு வகையான
பெரியம்மை நோய்.

அது ஒரு 
மனிதனுக்கு 
ஒரு தடவை 
வந்து விட்டால்...

அதே 
மனிதனுக்கு 
மறுபடியும் வராது 
என்பதுதான் 
அந்த கால 
நம்பிக்கை.

இந்த
நம்பிக்கை
வைத்துதான்...

பால் கார
பெண்மணி
அவ்வளவு
உறுதியாக
கூறினார்.

இதையே 
அடிப்படையாக
வைத்து...

ஏறக்குறைய
20 ஆண்டுகள்
ஆராய்ச்சி செய்து...

'கவ் பாக்ஸ்'
கிருமிகளை 
மென்மை படுத்தி...

ஊசிமூலம் 
ஒருவரது உடலில் 
செலுத்தி...

அம்மை
நோய்க்கு தடுப்பு
மருந்து கண்டு
பிடித்தார் மருத்துவர்
எட்வர்ட் ஜென்னர்.

இந்த
வரலாற்று
நிகழ்வின்
தொடக்க புள்ளி...

பால் கார
பெண்மணியின்
உறுதியான
நம்பிக்கையான
வார்த்தைகளே
என்றால் அது
மிகையல்ல.

வாங்க...

நம்மை
சுற்றியுள்ள
எவருமே...

நம்மை விட
உயர்ந்தவரோ
அல்லது
தாழ்ந்தவரோ...

படித்தவரோ
அல்லது
படிக்காதரோ...

எவருடைய
கருத்தையும்...

நாம்
எவ்வாறு 
எடுத்து
கொள்கிறோம்...

அவைகளை
எவ்வாறு
பயன்படுத்தி
கொள்கிறோம்...

என்பதில்
இருக்கிறது
நம் வெற்றி !!!

இது
உண்மைதானே.

அன்புடன் 
இனிய
காலை
வணக்கம்.

Wednesday, June 10, 2020

Animated video ( Number family )


புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பாதை 🍁🍁

அரசர் ஒருநாள்
தம் மந்திரியுடன்
ஊர் மிகவும்
சுத்தமின்றி
சுகாதாரமின்றி
இருப்பதாகவும்...

இதனால் மக்கள் 
பாதிக்கபடுவார்கள்
என்றும்...

மக்களுக்கு
எத்தனை முறை
சொன்னாலும்
கேட்பதேயில்லை
என்று கூறி
வருத்தப்பட்டார்.

மறுநாள் காலை
இது தொடர்பாக
பேச மந்திரியை
அழைத்தார்.

மந்திரி 
நகர்வலம்
சென்றதாக 
தெரிவிக்கப்பட்டது.

மன்னரும்
நகர்வலம் 
கிளம்பினார்.

ஒரு 
தெருவில்
மந்திரி 
குப்பைகளை
ஒன்றாக சேர்த்து
தீ வைத்து எரித்து
கொண்டிருந்தார்.

இதை பார்த்த
அந்த ஊர் 
தலைவர்
பதட்டத்துடன்
தானும் 
மந்திரியுடன்
சேர்ந்து... 

தெருவை
சுத்தம் செய்ய
தொடங்கினார்.

இதை கண்ட
ஊர் மக்களும்
அவர்களுடன்
இணைந்து
சுத்தம் செய்ய
தொடங்கினர்.

சற்று நேரத்தில்
ஊரே சுத்தமாகி
போனது.

இதை கண்ட
மன்னர் மகிழ்ச்சி
அடைந்து...

மந்திரியையும்
அந்த ஊர் 
தலைவரையும்
மக்களையும்
மனதார 
பாராட்டினார்.

மந்திரி
நினைத்திருந்தால்
ஒரு ஆணையை
போட்டு விட்டு...

அதன்படி
ஊர் தலைவர்
நடக்கும்படி
உத்தரவு
இட்டிருக்கலாம்.

ஊர் 
தலைவரும்
அதேபோல்
பணியாளர்களை
சுத்தம் செய்ய
பணித்து
இருக்கலாம்.

ஆனால் 
இவைகளை 
எல்லாம் கடந்து...

மந்திரியே
களத்தில் இறங்கி
முன்னுதாரணமாக
சுத்தம் செய்ய
தொடங்கியதால்
மக்கள் மனம்
மாற்றம் பெற்றது

இதனால்
ஊரே சுத்தமாய்
மாறிப்போனது.

எந்த ஒரு
நடைமுறையும்
வெற்றி பெற
வேண்டுமெனில்...

பேசிக்கொண்டே
இருந்தால்
போதாது.

செயலில்
இறங்கி
செய்து காட்ட 
வேண்டும்.

இந்த கதை
கூறும்
செய்தியும்
அதுவே.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

💫💫💫💫💫💫💫💫

Tuesday, June 09, 2020

புதிய பார்வை.. புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
சீடன் 
குருவிடம்...

தன் மனம்
அடிக்கடி அலை
பாய்வதாகவும்
அதை அடக்க 
முடியவில்லை
என்றும்...

அதற்காக
தவம் செய்ய 
முடிவு செய்து
இருப்பதாகவும்...

தன்னை 
ஆசிர்வதிக்கவும்
வேண்டினான்.

குருவும் 
அவனை
ஆசிர்வதித்து 
அனுப்பி வைத்தார்.

ஒரு காட்டு
பகுதியில்
தவம் செய்ய 
தொடங்கினான்
சீடன்.

அப்போது
மலர்களின் 
வாசனை
அவன் 
மூக்கை
துளைத்தது.

அதனூடே 
ஒரு பெண் 
நடந்து 
சென்றாள்.

அவன் தவம்
கலைந்தது.

அடுத்த 
நாள்...

வாசனையை
முகர கூடாது 
என்று மூக்கை மூடிக்கொண்டான்.

தவம்
தொடர்ந்தது.

அதே நேரம்
ஜல் ஜல் என
கொலுசு சத்தம்
கேட்டது.

நேற்று
தவத்தை
கலைத்த
அதே பெண்
நடந்து 
சென்றாள்.

தவம் 
கலைந்தது.

அடுத்த 
நாள்....

மூக்கையும்
காதையும்
மூடி கொண்டான்.

தவம்
தொடர்ந்தது...

அதே நேரத்தில்
அதே பெண்
வண்ணமயமான
ஆடை அணிந்து
நடந்து சென்றாள்.

அதை பார்த்த
அவன் தவம்
கலைந்தது.

அடுத்த நாள்
மூக்கை
காதை
கண்ணை
மூடி கொண்டு
தவத்தில்
ஈடுபட்டான்.

இருப்பினும்
அந்த பெண்
வரும் நேரம்
பார்த்து...

அவன்
மனம்....

இன்னும் 
சற்று நேரத்தில் 
அந்த பெண் 
வருவாள் 
என்று 
கூறியதாம்.

மனதை அடக்க
நினைத்தால்
அது அலையும்.

அறிய 
நினைத்தால்
அது அடங்கும்.

இது 
மகரிஷியின்
வாக்கு.

உன்னை 
அறிந்தால் 
நீ உன்னை 
அறிந்தால்
உலகத்தில் 
போராடலாம்...

உயர்ந்தாலும் 
தாழ்ந்தாலும்
தலை
வணங்காமல் 
நீ வாழலாம்.

இது
நல் கருத்தை 
கூறும்
பாடல் வரிகள்

வாங்க...

மகரிஷியின்
வாக்கின்
படியும்...

கவியரசரின்
வார்த்தைகளின்
படியும்...

நம் 
மனதை
நாம் அடக்க 
நினைக்காமல்...

நம்
மனதை
நாம் அறிய 
முற்படுவோம்.

அற்புத 
வாழ்வில்
மலரவும்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

💫💫💫💫💫💫💫💫💫

Monday, June 08, 2020

புதிய பார்வை...புதிய பார்வை...

🍁 புதிய பார்வை 🍁

மடிப்பாக்கத்தில் 
ஒரு பெண்மணி,
யாருடைய 
ஆதரவும் 
இல்லாத 
நிலையில்...

சத்துணவு 
கூடத்தில், 
சமையலர் 
வேலையில் 
சேருகிறார்.

அவர் 
குடும்பத்தில் 
ஐந்து நபர்கள்.

வருமானம் 
போதாமையால் 
அப்பகுதியில் 
இட்லி கடை 
வைக்கிறார்.

கிடைத்த 
வருமானத்தில் 
குடும்பம் சுமாராக 
இயங்கியது.

சூழலை புரிந்து 
கொண்ட மகன்,
தன் படிப்பிலேயே 
முழு கவனத்தை 
செலுத்தி...

அனைத்து 
வகுப்பிலேயும் 
முதல் 
மாணவனாக 
வருகிறான்.

பிட்ஸ் 
பிலானியில் 
படிப்பை 
தொடர்ந்த 
மகன்...

அவமானங்கள்,
வேதனைகள்,
வலிகள்,
அத்தனையும் 
புறம் தள்ளி...

படிப்பில் மட்டுமே 
முழு கவனத்தை 
செலுத்துகிறான்.

கல்லூரியில் 
நடைபெற்ற 
வளாக தேர்வில் 
கிடைத்த...

ஒரு நாள் ஊதியம் 
ஏழாயிரம் ரூபாய் 
வேலையை
உதறி விட்டு...

ஓராயிரம் 
பேருக்கு 
வேலை தரும் 
எண்ணத்தை...

தன் மனதில் 
விதைக்கிறான்.

நண்பர்கள், 
உறவினர்கள் 
இவனை, 
பிழைக்க 
தெரியாதவன், 
என பரிகாசம் 
செய்கின்றனர்.

அவைகளை 
புறம் தள்ளி, 
Food King
என்னும்...

உணவு
தயாரிக்கும்
நிறுவனத்தை 
தொடங்குகிறான்.

அவன் 
அவராகிரார்.

இன்று கோவா,
அகமதாபாத்,
சென்னை உள்பட 
பல நகரங்களில்...
அவரது 
நிறுவனங்கள் 
வெற்றி நடை 
போட்டு கொண்டு 
வருகிறது.

குடிசையில் 
வசித்த அவர் 
ஒபாமாவின் 
அழைப்பின் 
பேரில் ...

நாற்பது நாட்கள் 
அவரது 
விருந்தாளியாக 
வாழ்ந்து 
இருக்கிறார்.

80 விருதுகளை 
வாங்கி 
குவித்திருக்கிறார்.

2003 ல் அம்பானி 
வாங்கிய விருதை 
2008 ல் இவர் 
வாங்கி 
ஆச்சர்ய பட 
வைத்திருக்கிறார்.

அவர்...

மதிப்பிற்குரிய
திரு.சரத்பாபு 
ஏழுமலை 
அவர்கள்.

ஒவ்வொரு 
பூக்களுமே 
சொல்கிறதே...

வாழ்வென்றால் 
அது போராடும் 
போர்க்களமே...

நம்பிக்கை 
என்பது 
வேண்டும் 
நம் வாழ்வில்...

லட்சியம் 
நிச்சயம் 
வெல்லும் 
ஒரு நாளில்..

என்னும் 
வரிகளுக்கு 
ஏற்ப...
போராட்ட கள 
வாழ்வேயே
பூக்கள் நிறைந்த 
பாதையாக
மாற்றி 
அமைத்து...

தன் லட்சிய 
வாழ்வில் வெற்றி 
பெற்றுள்ளார் 
அவர்.

வாங்க...

நமக்கும் 
இலட்சியங்கள்
பல உண்டு.

அவரை போல 
நாமும் நம் 
லட்சியத்தில் 
வெற்றி பெற...
முயற்சிகள் 
செய்வோம்.

நம் வாழ்வில்
ஜெயித்து
காட்டுவோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

- மீள் பதிவு -

💫💫💫💫💫💫💫💫

HOW TO PHOTO RISIZE TAMIL TUTORIAL.BY A.SIVA

Sunday, June 07, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

துறவியிடம்
விறகு வெட்டும்
தொழிலாளி
ஒருவன்,
பணக்காரர் ஆக
வழி கேட்டான்.

துறவி 
சொன்னார்...

காட்டுக்கு 
உள்ளே சென்று 
உன் தொழிலை 
செய். பணக்காரன்
ஆவாய்.

இவன் 
உள்ளே சென்றான்.

அங்கே தேக்கு 
மரங்கள் இருந்தன 
வெட்டி விற்றான்.
பணம் நிறைய 
வந்தது.

மறுபடியும் 
துறவியிடம் சென்று
மேலும் பணம் 
வேண்டும் என்றான்.

துறவி 
கூறினார்...

இன்னமும் 
உள்ளே போ.

இவன் 
துறவி கூறியபடி
இன்னும் உள்ளே 
சென்றான்.

அங்கே கருந்தேக்கு
மரங்கள் இருந்தன.
வெட்டி பணமாக்கி 
பெரிய பணக்காரன்
ஆனான்.

இதிலும் திருப்தி 
அடையாத இவன்...

மேலும் பணம் 
சேர்க்க ஆசைப்பட்டு
துறவியிடம் சென்று
கேட்டான்.

துறவி 
கூறினார்...

இன்னமும் 
உள்ளே போ.

இவன் 
சென்று பார்த்தான்.

அங்கே 
விலையுயர்ந்த 
அகர் மரங்கள் 
இருந்தன.

இவன் 
அதையும் வெட்டி
விற்று மிக பெரிய 
பணக்காரன் 
ஆகிப்போனான்.

இப்போது 
ஒரு கேள்வி
மனதில் எழுந்தது.

இவை எல்லாம் 
தெரிந்தும் துறவி 
ஏன் இந்த 
காரியங்களை 
செய்யவில்லை ?

இதை 
அவரிடமே 
கேட்டான் 
விறகு வெட்டி.

துறவி...

காட்டின் உள்ளே 
செல்ல செல்ல 
பணக்காரன் 
ஆகும் வழி 
உனக்கு 
தெரிந்தது.

பணம் பொருள் 
இவைகளை விட
ஒரு அற்புதமான 
விஷயம் உள்ளது.

அதன் பெயர்
'மன அமைதி'

அது உனக்கு 
தேவைப்படும் 
காலம் வரும்.

அப்போது 
என்னை வந்து 
பார்.

உனக்கு 
எல்லாம் புரியும்
என சொல்லி 
அனுப்பினார்.

நாட்கள் 
நகர்ந்தன...

பணம் சேர்ந்த 
கையோடு 
பல்வேறு 
நிலைகளில்,

வாழ்வு சென்றதில்
அவன் மனதில்
மகிழ்ச்சி குறைய
தொடங்கியது.

இப்போது 
துறவியை தேடி 
சென்று...

'மன அமைதி' 
பெறும் வழியை 
கேட்டான் அந்த 
விறகு வெட்டி.

துறவி கூறினார்
உள்ளே போ.

விறகு வெட்டி 
குழம்பினான்.

உள்ளே உள்ளே 
போனதால் தான்
பணக்காரன்
ஆனேன்.

இன்னமும் நான்
உள்ளே போக 
மாட்டேன் 
என்றான்.

துறவி 
அவனை பார்த்து 
நகைத்து விட்டு...

வா 
இந்த மரத்தடியில் 
உட்கார்.

எல்லாவற்றையும் 
மறந்து மனதளவில்
துறந்து உன் மனதில்
உள்ளே போ. 

மன அமைதி 
உனக்கு கிட்டும்
என்று கூறினார்
துறவி.

அவர் 
கூறியபடியே
எல்லாவற்றையும்
மறந்து மரத்தின் 
கீழ் அமர்ந்தான் 
விறகு வெட்டி.

மனதின் 
உள்ளே 
உள்ளே 
சென்றான்.

பல 
சிந்தனைகள் 
புறப்பட்டன.

அவன் 
ஞானம் பெற 
தொடங்கினான்.

தன்னை
அறிந்தவன்
ஞானி ஆகிறான்.

தன்னையே
வென்றவன்
மகான் ஆகிறான்.

இது 
வார்த்தைகள்
மட்டுமல்ல...

வாழ்வியல்
நெறிகளும்
கூட...

வாங்க..

மன நிம்மதி
மற்றும்
மன அமைதி
பெற...

நம்மை நாம் 
அறிய
தொடங்கலாம்.

நம்மை நாம்
வெல்ல
முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

💫💫💫💫💫💫💫💫

Tuesday, June 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
பொன்மாலை
பொழுது...

பூங்காவில்
சிறுவன் ஒருவன்
பள்ளியில் இருந்து
வந்து ஒரு பெஞ்சில்
அமர்ந்தான்.

தன் பையில் 
இருந்து
ஒரு பாக்ஸை 
எடுத்து...

அதில் இருந்த 
உணவை உண்ண 
தொடங்கினான்.

யதேச்சையாக
எதிர் பெஞ்ச்சை
பார்த்தான்.

அங்கு ஒரு
வயதான பாட்டி
புன்னகையுடன்
இவனை
பார்த்தபடி
அமர்ந்திருந்தார்.

இதை கண்ணுற்ற
சிறுவன் தானும்
புன்னகைத்த படி
அந்த பாட்டியை
உணவருந்த 
அழைத்தான்.

பாட்டியும் 
சிறுவன் அமர்ந்த 
பெஞ்சில் அமர்ந்து 
அவன் கொடுத்த 
உணவை உண்டார்.

சற்று நேரத்தில்
இருவரும் 
புன்னைகைத்தபடி
அவரவர் வீட்டிற்கு
திரும்பினர்.

சிறுவனின் தாய்
என்ன இன்று 
நீ மிகவும் 
மகிழ்ச்சியாய்
இருக்கிறாய்?
என்று கேட்டார்.

அம்மா 
இன்று மாலை 
பூங்காவில் ஒரு 
கடவுளை 
கண்டேன்...
 
அவர் 
மிக அழகாக 
புன்னகைத்தார்...

அந்த அன்பு முகத்தை 
என்னால் மறக்க 
இயலவில்லை
என்று கூறினான்.

அதே நேரம்
பாட்டி வீட்டில்...

பாட்டியின் மகள்
இன்று நீங்கள் 
மிகவும்
மகிழ்ச்சியாக 
இருக்கிறீர்கள்
என்ன காரணம்?
என்று கேட்டாள்.

பாட்டி...

இன்று மாலை
நான் ஒரு 
கடவுளின்
குழந்தையை 
கண்டேன்.

அவன் அழகாக 
இருந்தான்.

பாசமாக 
என்னிடம் 
பழகினான்.

எனக்கு 
உணவு வழங்கி 
உண்ணவும் 
கூறினான். 

அவனின் 
பிரகாசமான 
புன்னகையை 
மறக்க 
முடியவில்லை 
என்று கூறினார்.

அறிமுகம் 
இல்லாத
மனிதர்கள் கூட...

அவர்களின் 
புன்னகையில்...

அவர்கள் 
வழங்கும்
சிறு ஆறுதல் 
வார்த்தைகளில்...

அவர்கள் 
செய்யும்
சிறு சிறு 
செயல்களில்...

நாம் கடவுளை
காண முடியும்.

பாசமுள்ள 
பார்வையிலே
கடவுள் 
வாழ்கிறான்...

அவன் 
கருணை கொண்ட
நெஞ்சினிலே
கோவில் 
கொள்கிறான்...

என்னும் வரிகள்
உண்மைதானே.

வாங்க...

அன்பு 
உலகில்
சஞ்சரிப்போம்.

அற்புத 
சமூகத்தை
படைக்கவும் 
செய்வோம்.💫💫💫💫💫💫💫💫

Monday, June 01, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

கேரள
ராஜ்பவனில்
ஒரு அரசு
நிகழ்ச்சி.

தலைமை
விருந்தினர்
இந்திய
குடியரசு
தலைவர்
கலாம்
அவர்கள்.

அப்போதைய
நடைமுறை...

குடியரசு
தலைவர்
அவருக்கு
பிடித்த இரு
நபர்களை...

தம்முடைய அரசு
விருந்தினர்களாக
கலந்து கொள்ள
செய்யலாம்.

கலாமும் 
இருவரை
கூட்டி சென்றார்.

ஒருவர்
சாலையில்
செருப்பு
தைக்கும்
தொழிலாளி...

மற்றொருவர்
சிறிய அளவில்
ஓட்டல் நடத்தி
கொண்டிருந்தவர்.

விழா 
நடத்தியவர்கள்
இதைக்கண்டு
நெகிழ்ந்தனர்.

அதில்
பங்குபெற்ற
அந்த ஏழை
விருந்தினர்கள்
மகிழ்ந்தனர்.

தன்னுடன் 
பழகிய
நபர்களை...

அவர்கள்
எந்த நிலையில்
இருந்தாலும்...

மதிப்பு
கொடுத்து
மகிழ வைத்து
பார்ப்பவர்
*மாமனிதர்*
என்பதை...

நிரூபித்து
காட்டியவர்
*கலாம்*

வாங்க...

அவர் 
வழியில்
நாமும்...

ஏழையின்
சிரிப்பில்
இறைவனை
காண...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.🍂🍃🍂🍃🍂🍃🍂