Friday, December 25, 2015

எது நிம்மதி? எங்கே சந்தோஷம்?

எது நிம்மதி? எங்கே சந்தோஷம்?

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒருவர், 'சுவாமி! என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை!' என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினார்.

"ஒரு ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.இந்த சமூகம் தான் அந்த ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.உலகம் உனக்கு சொர்க்கமாகும்!

Thursday, December 17, 2015

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?


நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும். - ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்
      நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது
நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார்.
அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர்.

இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர்.

ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு  காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது. 

நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும்  ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர்.

* ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார்.

* ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார்.

* ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும்  இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு.

* ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும்.

* ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர்.

* ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து  ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார்.

* ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர்.

* ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது.

* ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள். 

* ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது.

* ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர்.

* ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார். 

* ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு  எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார். 

* ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார்.

* ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார். 

* ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...?

நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா