Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, September 24, 2015

சமூக வலைதளங்களில் பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்

: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்

COMMENT (3)   ·   PRINT   ·   T+  
புதிய டைப்ரைட்டருடன் முதியவர் கிருஷ்ணகுமார்
புதிய டைப்ரைட்டருடன் முதியவர் கிருஷ்ணகுமார்
உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் டைப்ரைட்டரை காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் உடைத்த சம்பவம் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி, பெரும் பிரபலமடைந்தது. அந்த காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த முதியவருக்கு புதிய டைப்ரைட்டர் வழங்கிய மாவட்ட நிர்வாகம், ரூ.1 லட்சம் இழப்பீடு அளிப்பதாகவும் உறுதி அளித்தது.
இந்நிலையில், இந்த சம்பவத்தால் பிரபலமடைந்ததால் தனது வருமானத்தை இழந்து விட்டதாக அந்த முதியவர் கிருஷ்ண குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“அஞ்சலகம் முன்பு தட்டச்சு செய்து கொடுத்ததால் கொஞ்சம் வருவாய் கிடைத்து வந்தது. என் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதால் நான் தேவையற்ற வகையில் பிரபலமாகியுள்ளேன்.
என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் சேர்ந்து விடுவதால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கடந்த இரு நாட்களாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. நான் சம்பாதிக்கவில்லை என்றால், என் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவது. நான் வேலை செய்யவே வந்திருக்கிறேன்; ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க அல்ல.
உதவி செய்வதாகக் கூறி பலர் என்னிடம் வங்கிக் கணக்கு கேட்டனர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. அடையாளம் தெரியாதவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர்” என கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.


நன்றி தமிழ் இந்து நாளிதழ்

சமூக அக்கறையுடன்  அன்புடன்  சிவா....

Sunday, July 19, 2015

புவி வெப்பமடைதல் நம் பங்கு என்ன?

3 - புவி வெப்பமடையக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தில் உலக அளவில் இந்தியாவின் இடம்
ஆற்றல்
132% - 2035 வாக்கில் இந்தியாவின் ஆற்றல் நுகர்வில் ஏற்படவிருக்கும் அதிகரிப்பு. அதேநேரத்தில் வரும் முப்பதாண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அதிக ஆற்றல் உற்பத்தி, புவி வெப்பமடைதலையும் அதிகரிக்கும்
மின் இழப்பு
23% - மின்திருட்டாலும் பழுதடைந்த மின் அமைப்புகளாலும் இந்தியாவில் ஏற்படும் மின் இழப்பின் சதவீதம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
70% - இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் காற்று மின்னாற்றலின் அளவு.
16% - 2040 வாக்கில் இந்தியாவின் ஆற்றல் தேவையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் ஈடுகட்டக்கூடிய அளவு. அந்தக் காலகட்டத்திலும்கூட புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு 75 சதவீதமாக இருக்கும் என்றே உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
80 கோடி - இந்தியாவில் சாணம், விறகு உள்ளிட்ட எரிபொருட்களைக் கொண்டு எரிசக்தியைப் பெறுவோரின் எண்ணிக்கை. இதில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில்தான் இருக்கிறார்கள். இது காற்று மாசுபாட்டுக்குப் பெருமளவு காரணமாகிறது.
நிலக்கரி
100 கோடி டன்கள்- 2019 வாக்கில் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியின் உத்தேசிக்கப்பட்ட அளவு. இது தற்போதைய அளவைவிட இரண்டு மடங்கு.
55% - 2040 வாக்கில் இந்திய மின்னுற்பத்தியில் நிலக்கரி மின்சாரத்தின் உத்தேசமான பங்கு.
60% - கடந்த ஆண்டில் இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கும் மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டிருப்பவையின் சதவீதம். நிலக்கரிதான் புவி வெப்பமடையச் செய்வதற்கு முக்கிய காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள்தொகை
30 கோடி - இந்தியாவில் கொடிய வறுமையில் உழலும் மக்களின் எண்ணிக்கை. குண்டுபல்புகூட இல்லாத மக்களின் எண்ணிக்கையும் இதே அளவுதான்.
145 கோடி - 2028-ல் இந்தியாவின் மக்கள்தொகை என்று கணிக்கப்பட்டிருக்கும் அளவு. மக்கள்தொகையில் அப்போது சீனாவை, இந்தியா பின்னுக்குத் தள்ளியிருக்கும்.
யார் அதிகம்?
அதேநேரம் இந்தியாவின் மக்கள்தொகையையும் இந்தியாவால் வெளியேற்றப்படும் கார்பன் டையாக்சைடின் அளவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனிநபர் ஒருவர் வெளியேற்றும் கார்பன் டையாக்சைடின் அளவைவிட, இந்தியர் வெளியேற்றும் அளவு குறைவுதான்.
- தொகுப்பு: தம்பி

thanks to   tamil Hinud.

Saturday, April 11, 2015

இஷ்டப்படி படிக்கலாம்

-பன்முக அறிவுத் திறன்

ம.சுசித்ரா
எக்கச்சக்கமாக ஃபீஸ் கட்டிச் சிறப்பான பயிற்சி அளிக்கும் பள்ளியில் என் மகனைச் சேர்த்துள்ளேன். காலை முதல் மாலைவரை பள்ளியில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதுவும் போதாமல் மாலை முதல் இரவு உறங்கும்வரை டியூஷனுக்கும் செல்கிறான்.
அவன் படிப்புக்குத் தேவையான புத்தகங்கள், டேப்லெட், மடி கணினி இப்படி எல்லாவற்றையும் வாங்கித் தருகிறேன். அவன் நண்பர்களும் நன்றாகப் படிக்கிறார்கள். இவனும் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள்தான் வாங்குகிறான். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் மிகக் குறைவான மதிப்பெண்கள்தான் பெறுகிறான். இதற்கு மேல் என்ன செய்வதென்றே புரியவில்லை.
இப்படிப் பரிதவிக்கும் பெற்றோர்கள் பலரைத் தினசரிச் சந்திக்க முடிகிறது. பெற்றோர்கள் மட்டுமல்ல, இதே மனநிலையில் பேசும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் உண்டு. எல்லா முயற்சிகளும் செய்தாகிவிட்டது. ஆனால் பலன் ஏதுமில்லையே எனக் கவலை கொள்கிறார்கள் இவர்கள். சொல்லப் போனால் பல தனியார் பள்ளிகள் மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மூன்று விதமாக அவர்களைச் சலித்து, பிரித்து எடுக்கிறார்கள்.
புத்திக்கூர்மை கொண்ட மாணவர்கள், நடுத்தர அறிவுடைய மாணவர்கள், மந்தமான மாணவர்கள் என அடையாளம் சூட்டுகிறார்கள். அதன் பின் அவர்களுக்குத் தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் புத்திக்கூர்மையான மாணவருக்கு ஒரு முறை சொல்லித்தரப்படும் அதே பாடம் மந்தமானவர் என அடையாளம் காணப்பட்டவருக்கு பல முறை சொல்லித்தரப்படுகிறது. சில பாடங்கள் தீவிரமான கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகின்றன. சில சுருக்கமான வழிகள் சொல்லித்தரப்படுகின்றன.
மீண்டும் மீண்டும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. ஆகவே அந்த மாணவர்கள் மீண்டும் அறிவிலிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள் மனமுடையக்கூடாது என்பதற்காக மெதுவாகக் கற்கும் திறன் படைத்தவர்கள் (slow learner) என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இத்தகைய அணுகுமுறை தீர்வாகாது என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர்.
திரும்பத் திரும்ப பேசுற நீ…
குறிப்பிட்ட பாடத்தைப் படிக்க ஒரு மாணவர் திணறுகிறார் என்றால் அவருக்கு கற்கும் திறனில் குறைபாடு உள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆகவே முன்பு வகுப்பில் எந்தப் பாடத்தை, எத்தகைய வழிமுறையில் சொல்லித்தந்தார்களோ அதே அணுகுமுறையில் மீண்டும் தனிக் கவனம் செலுத்திக் கற்றுத் தருகிறார்கள்.
இதற்குச் சிறப்புப் பயிற்சி எனப் பெயர் சூட்டுகிறார்கள். ஆனால் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, “திரும்பத் திரும்பப் பேசுற நீ. என்ன…திரும்பத் திரும்பப் பேசுற நீ” என வடிவேலு சொன்னதையே திரும்பி திரும்பி பேசி காமெடி செய்வதுபோல இது எதிர்மறையாகத்தான் வேலை செய்யும்.
மாற்றம் தேவை
ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின்னடைவு ஏற்படக் காரணம் அவருடைய கற்கும் ஆற்றலில் உள்ள குறைபாடு அல்ல. அவருக்கு அந்தப் பாடம் கற்பிக்கப்பட்ட முறையில்தான் சிக்கல் உள்ளது என்கிறார் கார்டனர். கணிதம் மற்றும் தர்க்கத் திறனில் ஒரு மாணவர் பின்தங்கியிருக்கலாம். ஆனால் அவரிடம் பன்முக அறிவுத்திறனில் உள்ள வேறுவகையானத் திறன் அற்புதமாக இருக்கும். அந்தத் திறன் மூலமாக அவரால் எதையும் சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியும். கேட்டல் திறனை அடிப்படையாகக் கொண்டிருப்பவரால் ஒலி வழியாகக் கற்ற விஷயங்களை நன்கு நினைவுகூரமுடியும்.
உடல் ரீதியான அறிவு படைத்தவர்களை ஒரே இடத்தில் உட்கார வைத்துப் பாடம் கற்பித்துப் பயன் இல்லை. ரோல் பிளே, உடல் அசைவு என செயலில் ஈடுபடும்போது உற்சாகமாக உணர்வார்கள். சில மாணவர்கள் வகுப்பு நடக்கும்போது இடையில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படியானால் அவர் மனிதத் தொடர்பு அறிவாற்றல் கொண்டவராக இருக்கலாம். குழுவாக இணைந்து செயல்பட்டால் அருமையாகக் கற்றுக் கொள்வார்.
கார்டனர் அளிக்கும் பதில் இதுதான். எல்லா மாணவர்களாலும் கற்க முடியும். ஆனால் ஒரு தகவலைப் புரிந்து கொண்டு உள்வாங்கும் விதம் நபருக்கு நபர் வேறுபடும். அதே போல நாம் பார்த்து வியக்கும் பல புத்திசாலிகளிடம் எட்டு அறிவுத்திறன்களில் ஒரு சில திறன்கள்தான் அபரிமிதமாக இருக்கும். அவர்களும் மற்ற திறன்களில் பின்தங்கித்தான் இருப்பார்கள். இது மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டுக் கார்டனரால் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மை.
கல்விக்கு எதிரானதா?
கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.
கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.
ஒரு மாணவரின் ஐ கியூ எனப்படும் மொழி, தர்க்கம் மற்றும் கணித அறிவை மட்டும் கண்டறிந்து அதன் அடிப்படையில் பயிற்றுவிக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்கிறார் கார்டனர். ஏனெனில் அவை மட்டுமின்றி இசை, உடற்கூறு மற்றும் விளையாட்டு, காட்சி மற்றும் வெளி, மனிதர்களோடு தொடர்பு கொள்ளுதல், தன்னிலை அறிதல், இயற்கை இப்படி எட்டு விதமான அறிவுத் திறன்கள் இருக்கின்றன. ஆகவே, ஒரே முறையில் கஷ்டப்பட்டு படித்தது போதும். இனி இஷ்டப்பட்ட விதங்களில் படிக்கலாம் என்பதுதான் கார்டனர் விடுக்கும் அழைப்பு.
கடந்த 25 ஆண்டுகளாக கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாடு உலகெங்கிலும் பல சர்வதேசக் கல்விக் கூடங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு ஏன்? இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் உள்ள சர்வதேசப் பள்ளிகளில் பன்முக அறிவுத்திறன் கற்பித்தல் முறை அறிமுகமாகியுள்ளது. அவை செயல்படும்விதம், மக்களை சென்றடைய வேண்டிய விதம் குறித்துத் தொடர்ந்து பேசலாம். 

நன்றி இந்து தமிழ் நாளிதழ்

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி....

அன்புடன்  சிவா......

பிளஸ் 2-க்குப் பிறகு:

மாணவர்களை வளர்க்கும் மென்திறன்

எஸ்.எஸ். லெனின்


பள்ளிப் பருவம் முடித்துக் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண்களைக் குவிப்பது அத்தனை பெரிய சிரமமாக இருக்காது. ஆனால், அந்த மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல வேலையைத் தேடுவதுதான் குதிரைக்கொம்பு.
மென்திறன்
வேலை தரும் நிறுவனங்களுக்கு உங்களின் மதிப்பெண்கள் ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே. ஒரு நிறுவனத்தில் சவாலான பணியைச் சாதிப்பதற்கு மதிப்பெண்களைத் தாண்டி மேலும் நிறைய திறன் தேவைப்படுகிறது. கல்லூரிப் பாடத்துடன் இத்தகைய திறனை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. வேலை தேடலுக்கு மட்டுமல்ல, சமூகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு மென் திறனே கைகொடுக்கிறது.
மதிப்பெண்களைக் குவிக்கத் தெரிந்த மாணவர்கள்கூட, கல்லூரிப் பருவத்தில் சிறிய பிரச்சினைகளுக்கும் துவண்டுவிழுவது இந்தத் திறன் கைவரப்பெறாமல் இருப்பதால்தான். தடாலென்று சூழ்ந்துகொள்ளும் குழப்பம், மாறிமாறி அலைபாயும் மன எழுச்சி, மன அழுத்தம், நல்லதையும் கெட்டதையும் பிரிக்கும் பக்குவமில்லாதது ஆகியவற்றை உதறித் தள்ளவும் கல்லூரிப் பருவத்தில் மென் திறனே பெரிதும் உதவியாக இருக்கும்.
களத்தைப் பொறுத்து மென் திறனை பல வகையாக வல்லுநர்கள் பட்டியலிட்டிருந்தாலும், கல்லூரி செல்லக் காத்திருப்போருக்கு அவசியமானதாக, கீழ்க்கண்டவற்றை அடையாளம் காட்டுகிறார், பெரம்பலூர் ‘மெஜெல் அண்ட் மெஜெல்’ மென் திறன் பயிற்சி மைய இயக்குநர் சேவியர் அமலதாஸ். இந்த விடுமுறையில் உங்கள் பகுதியில் இருக்கும் மென் திறன் பயிற்சி மையம் மூலமாக மாணவர்கள் இவற்றைப் பயிலலாம்.
1. குழுவாக பணியாற்றல் (Team working):
தனித்து இயங்கும் பள்ளிப் பருவ இயல்புக்கு மாறாகத் திறந்த உலகமாக எதிர்கொள்ளப்படும் கல்லூரிப் பருவத்தில் குழுவாகப் பணியாற்றும் திறன் அவசியம். சக மாணவர்கள், ஆசிரியர்கள், வெளியுலகத்தினர் என அதிக எண்ணிக்கையில் மனிதர்களோடு ஊடாடி அவர்களிடமிருந்து தனக்குச் சிறப்பானதைப் பெற்றுக்கொள்வதும், குழுவாக ஒருங்கிணைந்து இலக்கை அடைவதும் இந்தத் திறனின் வெளிப்பாடாகச் சொல்லலாம்.
பின்னாளில் நிறுவனம் ஒன்றில் பலதரப்பட்ட தனி மனிதர்களை, அவர்களுடைய சாதக பாதகங்களை எடைபோட்டு பொது இலக்கு நோக்கி முன்னெடுக்கும் திறமை குழுவாக பணியாற்றுவது மூலமாகவே கிடைக்கும். எனவே வகுப்புகள், புராஜெக்ட் பணிகள், விளையாட்டு, விடுதி தங்கல் என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மாணவனாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இயங்கினால் இந்தத் திறன் எளிதில் வசப்படும்.
2. தகவல் தொடர்பு (Communication):
தாராளமயப் பொருளாதாரத்துக்கு உலகம் மாறியதிலிருந்து தகவல் தொடர்புதான் பல்வேறு நிறுவனங்களின் ஆதாரமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தகவல்தொடர்புக் கலையின் நுட்பங்களை அறிவது முக்கியம். எழுத்து, பேச்சு, உடல் மொழி என்பவை இந்தத் திறனின் உட்கூறுகள்.
பேச்சு மூலம் ஒருவரைத் தன் வசப்படுத்துவது தனிக் கலை. அதே போலத்தான் எழுதுவதும். இந்த இரு திறன்களையும் பயிற்சியால் சாத்தியமாக்கிக்கொள்ளலாம். ஆனால் உடல்மொழி (Body Language) மூலம் ஒருவருடைய மனஓட்டத்தை உணர்வதையும் உணர்த்துவதையும் நிதர்சன உலகில் பழகியே தெரிந்துகொள்ள முடியும். தண்ணீரில் இறங்கினால் மட்டுமே சாத்தியமாகும் நீச்சல் போல, பல்வேறுபட்ட மனிதர்களிடம் பழகியே உடல் மொழி திறனைக் கூர்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
3. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் (Problem solving):
பள்ளிப் பருவத்தில் செயல்வழி கற்றல், செய்முறை தேர்வுகளின் நோக்கமே இந்த மென் திறனை மேம்படுத்திக் கொள்வதுதான். பட்டிமன்றம், வாதிடுதல் உள்ளிட்டவையும் செயற்கையாக ஒரு சவாலை உருவாக்கி, அதைத் தன்னுடைய பாணியில் தீர்க்க முயற்சிக்கும் கலைதான். ஆனால், பொத்திப் பொத்தி வளர்க்கும் தற்போதைய பெற்றோர் வளர்ப்பில் குழந்தைகளுக்கு இந்தத் திறனில் பரிச்சயமே கிடைப்பதில்லை.
எனவே, இந்தத் திறனில் புடம் போட்டுக்கொள்ள, தனிப்பயிற்சி அவசியம். கல்லூரிப் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒவ்வொன்றையும் தடையாகக் கருதாமல், தங்களுடைய திறமையை உரசிப் பார்த்துச் சொல்லக் கிடைத்த சவாலாக எதிர்கொள்ளும் மனநிலை இந்தத் திறனை வளர்த்தெடுக்கும்.
4. நேர மேலாண்மை (Time management):
படிப்போ, விளையாட்டோ, பொழுதுபோக்கோ... எப்போது, எதில் ஈடுபட்டாலும் அப்போது அதை முழுமையாக மேற்கொள்வதே நேர மேலாண்மைக்கு அடிப்படை. ஒரு செயலைத் தொடங்கும் முன்னர் அதற்கு முறையான திட்டமிடல், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளைக் கணக்கிடல், சரியான நேரத்தில் தொடங்குதல் ஆகியவை இதன் அடுத்த படிகள். நேர மேலாண்மையின் அருமையைப் புரிந்துகொண்டவர்கள், கல்லூரிப் பருவத்தை என்றைக்கும் நினைவுகூரத்தக்கதாக மாற்றிக்கொள்வார்கள்.
5. கூர் நோக்கு (Observation):
வெற்றிகரமான நபர்களைத் தனித்துக் காட்டுவது அவர்களுடைய கூர் நோக்குத் திறனும், நடைமுறையில் அந்தத் திறனை இதர திறன்களோடு பொருந்தச் செய்வதும்தான். விழிப்புடன் இருத்தலும், வருமுன் அறிதலை வளர்த்துக்கொண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பகுத்தறிந்து பார்க்க கூர் நோக்கல் திறன் உதவும். இணையத்தில் இந்தத் திறன் வளர்ப்புக்குச் சுவாரஸ்யமான விளையாட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன.
6. முரண்பாடுகளைத் தீர்ப்பது (Conflict resolution):
அடிப்படையான சமூகத் திறனும், மனிதவள மேம்பாட்டுக் கலையில் அத்தியாவசியமானதும் இதுதான். வெவ்வேறு மனிதர்களைக் கையாள்வதில், அவர்களிடமிருந்து சிறப்பானதைப் பெறுவதற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இந்தத் திறன் பெரிதும் உதவும். ஆனால், பிரச்சினையைக் கண்டு பின்வாங்குவது, ஒத்திப்போடுவது போன்றவை அண்டாமல் இருப்பது இந்தத் திறன் வளர்ச்சிக்கு உதவும்.
7. தலைமைப்பண்பு (Leadership):
மென் திறனுக்கான பாராட்டு உணர்வு, நகைச்சுவை உணர்வு, குழுவை வழிநடத்தும் ஆற்றல், சிறப்பான மதிப்பீடுகளைப் பின்பற்றுவது என்று தலைமைப்பண்புக்கான பன்முகத்திறன்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தன்வயமாக்கிக்கொள்ளக் கல்லூரிப் பருவமே சரியான களம்.

நன்றி  தமிழ் இந்து நாளிதழ்
மாணவர்கள் நலம் கருதி.....
அன்புடன் சிவா....

Sunday, April 05, 2015

வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'

- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்

குள.சண்முகசுந்தரம்

தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்
தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்
“இன்னும் பத்து ஆண்டுக்குள் இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைந்தது ஐம்பது அரசு ஊழியர்களையும் உருவாக்கிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் தாமரைச்செல்வன்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது சித்தாதிக்காடு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன். 15 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளிக் குழந்தைகளைப் போல இந்தப் பள்ளிக் குழந்தைகளையும் சீருடை, டை அணிந்து மிடுக்காக நடக்கவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை தந்தவர்.
பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட பெற்றோருக்கு நேரமும் இருக்காது; ஞாபகமும் வராது. இதனால் தனது பள்ளிக் குழந்தை களின் பிறந்த நாளுக்கு தனது செலவிலேயே கேக் வாங்கி வந்து குழந்தைகள் மத்தியில் அதை வெட்டவைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார் தாமரைச்செல்வன். இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா - இதெல்லாம் இந்தக் காலத்து பள்ளிக் குழந்தைகளுக்கு கனவாகிவிட்ட நிலையில் தாமரைச்செல்வனின் செலவில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு தவறாமல் சுற்றுலா போகிறார்கள்.
“இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுல இருப்பவங்க. பெத்தவங்கள கேட்டால் ‘ஆடி மாசம் பொறந்தான்’னு தான் சொல்லுவாங்க. இந்த நிலைமையை மாத்தி, பிள்ளைகளின் பிறந்த நாளை அனைத்துப் பெற்றோருக்கும் தெரியவெச்சேன். ஒருவாரம் முன்னாடியே பிறந்த நாள் தேதியை பெத்தவங்களுக்கு தெரிவிச்சிருவோம். ஆரம்பத்துல கேக் மாத்திரமில்லாமல் புத்தாடையும் நானே எடுத்துக் குடுத்தேன். இப்ப, ஒன்றிரண்டு பேர் தவிர மத்தவங்க புத்தாடை எடுத்துடுறாங்க. கேக், சாக்லேட் மட்டும்தான் நம்ம செலவு. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல நாட்டம் வந்தாதான் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க. அதுக்காகத்தான் இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை செய்யுறோம். வீட்டில் நம்ம பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட மாட்டோமா? அப்படித்தான் நினைச்சுக்குவேன்.
வறுமையில இருந்தாலும் சில குடும்பங்களை குடி சீரழிக்குது. அதனாலேயே பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வெக்க முடியாம திண்டாடுறாங்க. இன்னும் சிலருக்கு இயல்பாகவே வறுமை காரணமா படிப்பை தொடர முடியாம போயிடுது. அப்படி பாதியில் படிப்பை நிறுத்த வேண்டாம். மேலே படிக்க நான் உதவி செய்யுறேன்னு தைரியம் கொடுத்து பல பிள்ளைகளை கல்லூரி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.
மது அருந்தும் தகப்பன்களிடம், ‘நீ குடியை விடுறதா இருந்தா உன் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி அவங்கள குடியிலிருந்தும் மீட்க முயற்சிக் கிறேன். எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைச் சிருக்கு. இப்ப இந்த ஊருல மொத்தம் 187 பட்டதாரிகள் இருக்காங்க. ஆனா அரசு ஊழியர் ஒருத்தர்கூட இல்லை.
எஞ்சி இருக்கிற எனது பத்தாண்டு பணிக் காலத்துக் குள்ள இந்த ஊருல வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைஞ்சது 50 அரசு ஊழியர்களையும் உருவாக்கிக் காட்டுவேன். அதுக்காக விரைவில் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுறதுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் தாமரைச்செல்வன். 

நன்றி இந்து தமிழ் நாளிதழ்
 ஆசிரியர்களின்  புனிதம் கருதி......
 வாழ்த்துகளுடன்....
 சிவா....



Saturday, January 17, 2015

2014 பூமியின் அதிவெப்பமான ஆண்டு:

 அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு

வானிலை மாற்றத்திற்கான ஐ.நா. குழு, அதிக வெப்பநிலைக்கு மனித நடவடிக்கைகளே 95% காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. | கோப்புப் படம்: ஏ.பி.
வானிலை மாற்றத்திற்கான ஐ.நா. குழு, அதிக வெப்பநிலைக்கு மனித நடவடிக்கைகளே 95% காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. | கோப்புப் படம்: ஏ.பி.
உலகம் முழுவதும் மக்கள் நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்தி கிரீன்ஹவுஸ் வாயுக்களை காற்றில் கலக்கச் செய்து சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததால் 2014ஆம் ஆண்டு பூமியின் அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக அமெரிக்க அரசின் இரு அறிவியல் அமைப்புகள் கூறியுள்ளன.

இதுகுறித்து நாஸா விண்வெளி ஆய்வுக்கழகம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA) ) நடத்திய ஆய்வின் அடிப்படையில் தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு உலக அளவில் பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படுத்தும் மாசுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும் 1997லிருந்து 10 வருடங்கள் மிகவும் வெப்பமாக வருடங்களாக இருந்தன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2010க்கு மேல் உலக வெப்பமயமாதல் குறித்த சில சந்தேகங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கூற்றுகள் சமீப வருடங்களாக நிறுத்தப்பட்டன.

2014ல் வெப்பநிலை, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உள்ளிட்டு வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை நீண்டிருந்தது. மேற்கு அலாஸ்கா தீவுகளிலிருந்து ரஷ்யாவின் கிழக்கு வரை தென் அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இன்னும் சில இடங்களிலும் உலகம் முழுவதும் பதிவானதாக நாசாவும் நோயாவும் தெரிவித்துள்ளன. குழப்பமான வானிலை நிலைமைகளால் வருடத்திற்கு வரும் பாதிப்படையும் புவிவெப்பமாதலுககான காரண கர்த்தாக்களால் மனிதர்களால் உருவாக்கப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களால் உருவாக்கப்படும் மாசு, மிகப்பெரும் இடர்களை பூமிக்கு ஏற்படுத்திவருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுக் கழக இயக்குநர் காவின் ஸ்மித் தெரிவித்தார்.

பெரும் சுற்றுச்சூழல் கேட்டை விளைவிப்பதில் கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாகத் தெரிவிக்கும் இந்தப் புள்ளிவிவரம் மிகவும் தெளிவானது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் நடத்திய ஆய்வு ஏற்கெனவே வெப்பமும் மழையும் மிதமிஞ்சிய அளவில் இருந்ததைத் தெரிவித்ததால் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அண்டார்டிகா கண்டத்தில் உள்ள கிரீண்லேண்ட்டில் பிரமாண்ட ஐஸ்கட்டிகள் உருகிக்கொண்டிருப்பதால் கடல் மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் கடலோர மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

டிசம்பரில் பாரீசில் சந்திப்பு

அடுத்த டிசம்பரில், 200 உலக நாடுகள் பாரீஸில் சந்தித்து புவிவெப்பமாதலைத் தடுப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மாற்றிக்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் பயன்படுத்தும் சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐ.நாவின் இத்தகைய முயற்சிக்கு உச்சபட்ச ஒத்துழைப்பை நல்கும் என்றார்.

புதிய புள்ளிவிவரம் ஒன்றின்படி, ''வரும்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றம் ஒரு பிரச்சனையாக இருக்காது எனும் இன்னொரு நினைவூட்டலாக - இங்கு இதற்காக நாம் நடவடிக்கை எடுப்பதற்காக இனிமேல் காலம்கடந்து காத்திருக்க முடியாதாகவும் அது நிகழ்கிறது'' என்றார் வெள்ளைமாளிகை அதிகாரி.

பைப்லைன் புதைக்க எதிர்ப்பு

கனடா நாட்டின் கச்சா எண்ணை, கீஸ்டோன் xL பைப்லைன் பூமிக்குள் புதைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வழியாக எடுத்துச்செல்லப்படுவதை எதிர்ப்பவர்கள் பைப்லைன் கட்டுமானப் பணிகளை எதிர்த்துவருகின்றனர்.

அமெரிக்க அரசின் நடவடிக்கைகள்

அமெரிக்க செனட் உறுப்பினர் ஜேம்ஸ் இன்ஹோஃபே கூறுகையில், 2010க்கும் 2014க்கும் இடையில் உள்ள வெப்பநிலை வித்தியாசம் இன்றியமையாதது என நிரூபணமாகியுள்ளதை அடுத்து அமெரிக்க அரசு நம்பிக்கையான வகையில் சிறந்த காலநிலை மாற்றத்திற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருதால், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையில்லாதது என்றார்.

மனிதர்களின் செயல்களே புவிவெப்பமாதலுக்கு காரணம் என்பது தெளிவானது. நாம் வாழும் இந்த பூமியை பேரழிவின் விளிம்புக்கு கொண்டுசெல்லக்கூடாது என்ற கவலைப்படுபவர்கள் எங்களை நம்ப வேண்டும் என்றார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இடையிலான பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பு (IPCC) கூறுகையில் 95 சதவீத மனிதகுல நடவடிக்கைகளே இதற்கு காரணங்களாகின்றன. மாறாக காலநிலையின் இயற்கை வேறுபாடுகளுக்கு சூரியனில் ஏற்படும் புள்ளிகள் காரணிகளாக உள்ளன. அதற்கும் காரணம் நாம் புவிவெப்பநிலையை உயர்த்திக்கொண்டிருப்பதுதான்.

சூரிய சக்திகளுக்கு பரிந்துரை

பாரீசில், உலக நாடுகளில் இன்னும் அறிமுகமாகாத படிம எரிபொருட்களுக்கு இப்பொழுதே தடை விதிப்பதுகுறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். எண்ணை விலை குறைப்பை ஊக்குவிக்காமல், அதற்கு மாற்றாக காற்று மற்றும் சூரிய சக்திகளைப் பயன்படுத்த சிபாரிசு செய்யப்படும்.

அமெரிக்காவின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி மிச்செல் லெவி ராய்டரிடம் கூறுகையில், அரசியல் மாற்றங்கள் நிகழும் பொறுப்புமிக்க நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

நகைச்சுவை

இங்கிலாந்து தேசிய காலநிலை மாற்றத்திற்கான வளிமண்டல அறிவியல் மையப் பல்கலைக்கழக இயக்குநர் ரோவான் சூட்டான், ஒரு குறிப்பிட்ட வருடம் சூடானதாக இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது, நகைச்சுவையானது. ஆனால் கடந்த 14, 15 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியிருந்தது என்பதுதான் உண்மை. நூற்றாண்டின் திருப்பத்தில் வெப்பம் பெருகத் தொடங்கியது தெளிவான விஷயம் என்றார். 1980கள் அல்லது 1990களில் கூட வெப்பம் வேகமாக உயரவில்லை. அசாதாரணமான வெப்பமாற்றம் 1998லிருந்துதான் தனது முதல் அடியை எடுத்துவைத்தது. IPCC தெரிவித்திருப்பது அது வெப்பமயமாதலின் காலஇடைவெளியைத்தான் என்றார்.

எல்நினோ காரணிகள்

1880களிலிருந்து பூமிமேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.4 டிகிரி பாரன்ஹீட் (0.8.டிகிரி செல்சியஸ்) இருந்தது. நாசா மற்றும் நோயா மேற்கொண்ட ஆய்வு கடந்த ஆண்டு நிலத்தில் ஏற்பட்டுவரும் மிதமான வெப்பநிலை அதிகமானதன் காரணமாக உலகின் அனைத்துப் பெருங்கடல்களும் நெருக்கடிக்குள்ளாகின என்று கூறுகிறது.

20ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான சராசரி வெப்பநிலையாக, உலகம் முழுவதும் நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல்களின் மேல்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.25 டிகிரி பாரன்ஹீட் (0.69 டிகிரி செல்சியஸ்) உயர்ந்திருப்பதாக NOAA தெரிவிக்கிறது. பதிவாகியுள்ள இந்த வெப்பஅளவு என்பது எல்நினோவினால் ஏற்படும் காலநிலைமாற்றம் அல்ல என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். வளிமண்டலத்தை வெப்பமயமாக்கி எல்நினோவின் பெரும்பாதிப்பாக 1998 உள்ளிட்ட கடந்த சில ஆண்டுகள் வரை காணப்பட்டது.

ஐ.நா.நடவடிக்கை

பாரீஸ் ஒப்பந்தத்தின்மூலம் உலக நாடுகளிடையே மாசுக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதாக ஐநா தெரிவித்துள்ளது. புவிவெப்பமாதல் 3.6 டிகிரி ஃபாரன்ஹீட் (2 டிகிரி செல்சியஸ்) குறைய வழிவகை செய்யும் வகையில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளில் புவிவெப்பமாதலுக்கு பெரும் காரணமாகத் திகழும் நிலக்கரி உபயோகத்தை தணிக்கும் வகையில் நடவடிக்கைகள் இதன்மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. 

நன்றியுடன் 
சிவா..

செ ய் தி  தமிழ் இந்து

Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள்



 
மாந்தர் தம் வாழ்வில்
வெற்றி கொடி பறக்க

அவர் தம் சுற்றம் 
சிறக்க

இல்லங்கள் தோறும்
ஆனந்தம் பொங்க

கதிரவனின் கதிர்களை ப்போல்
ஒளி பொங்க

என்றும் இனிமையுடன் 
வாழ 

என் நண்பர்களுக்கும் 
என் வளையை வாசிப்பவர்களுக்கும்
என் வளர்ச்சியில் அக்கறைக்
கொண்ட அனைத்து 
நல்ல உள்ளங்களுக்கும்
என் உறவுகளுக்கும்......

எனது தைத் திரு நாள்(பொங்கல் நல்வாழ்த்துக்கள்)
வாழ்த்துக்கள்.........

மிக்க அன்புடன்
சிவா....


Sunday, November 16, 2014

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற. .

.
மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு மு றையும் டேட்டா கேபிள்களை

வைத்திருக்க முடியாது. இருந்தும் தகவல்களை மாற்ற ப்ளூடூத் வசதியை பயன்படுத் தலாம்.  ப்ளூடூத் மூலம் இருகருவிக ளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள் வது எளிமையாக முடிகிற து. ஆனால் ப்ளூடூத் கருவியை கணினியுடன் இ ணைப்பது கடினமாக உள்ளதா, அப்ப இதை படிங்க…
 .
ஆன்
 .
முதலில் உங்க மொபைல் ப்ளூடூத் தை ஆன் செய்யுங்கள், பின் அந்த டிவைஸ் கண்டுபிடிக்கும்படி (டிஸ்க வரபிள் ஆப்ஷனில்) உள்ளதா என்று பாருங்கள்.
 .
கணினி
 .
இப்ப உங்க கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனு சென்று கன்ட் ரோல் பேனலை க்ளிக் பன்னு ங்க, அங்கு டிவைச ஸ் மற் றும் ப்ரின்டர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
 .
ஆட் டிவைஸ்
 .
இப்போ ஆட் டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இது ஹார்டுவேர் மற்றும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும்.
 .
தேடல்
 .
ஆட் டிவைஸ் பட்டனை க்ளிக் செய்தவுட ன் தானாக ப்ளூடூத் டிவைஸை தேட ஆரம்பிக்கும்.
 .
ணினி
 .
இப்போ உங்க கணினியை மொ பைல் கருவியுடன் இணைக்கலா ம். உங்க ப்ளூடூத் பெயர் மெனுவி ல் தெரிந்ததும் Next என்ற பட்ட னை அழுத்தவும். இது கணினியுடன் ப்ளூசூத் இணை வதை உறுதி படுத்தும்.
 .
ம‌லர் விழி

Tuesday, October 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


 மானுடர்  வாழ்வில் 

துன்பம்  என்ற  
இருள்  விலகி 
பகாவன்  கிருஷ்ணனனின்
அருள்  ஒளியால்  
கருணையால் 
ஒளிரடும்  இன்பம்  
இன்பம்  ....
வசந்தம் வந்து 
வீட்டில்  நிலைத்து 
நிற்க 
உறவினர்களுக்கும் 
நண்பர்கள் 
அனைவர்க்கும்  
இனிய 
தீபா வளி 
நல் வாழ்த்துக்கள் .....
அன்பன் 
..
சிவா.





Tuesday, September 30, 2014

போட்டோ மிக்ஸ் மென்பொருள்




போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம். 


2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்களை வெட்டி ஒட்டி கொலாஜ் எனப்படும் ஓவிய போட்டோக்களை அமைக்கலாம். வால் பேப்பர்கள், சிடி, டிவிடி கவர்களை உருவாக்கலாம். இறுதியில் கிடைக்கும் போட்டோ இவ்வாறு மாற்றப்பட்டது என அறிந்து கொள்ளாத அளவிற்கு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ போல காட்சி அளிக்கும். அனைத்தும் முடிக்கப்பட்ட போட்டோக்களை பிரிண்ட் எடுக்கலாம். மின் அஞ்சல் மூலம் அனுப்பலாம். டீ கப், பனியன் ஆகியவற்றில் பிரிண்ட் செய்திடக் கொடுக்கலாம். 

விண்டோஸ் இயக்கத்தில் இந்த புரோகிராம் இயங்குகிறது.
 
மிக்க நன்றியுடன்
சிவா...
 

Thursday, August 21, 2014

தெரிந்து கொள்ள வேண்டிய கணனி நுட்பங்கள்


Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் 
இருக்கும் காலம்.

MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

DES - Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method)வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

RAID - Redundant Array of Independent Disks : ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட் புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.

Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும். 

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

ஹனி மங்க்கி (Honey Monkey): கம்ப்யூட்டரில் நாம் இணையத்தில் உலா வருவது போல, நம்மைப் போலவே செயல்பாடுகளை மேற்கொள்ளும் புரோகிராமிற்கு ஹணி மங்க்கி என்று பெயர். இணைய தளங்களில் ஹேக்கர்கள் தாக்கம், வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், பாதுகாப்பினைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளனவா என்று இது தொடர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டே இருக்கும்.

Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. 

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும். 

நிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் Alt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் Folder and search options' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு 'Always show menus' என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பயனுள்ள வலைதள முகவரிகளின் தொகுப்பு...



(முகநூலில் படித்தேன்....மிகவும் பயனுள்ள தகவல் களஞ்சியம் என்று தோன்றியது...அதனால் இந்த வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ளுகிறேன் ...)


நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள்
உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல
வேண்டும். அந்த அளவுக்கு பலர்
அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம்.

தமிழக அரசின்
பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள
அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...

சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?l
an=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/
webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/
appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
E-டிக்கெட் முன் பதிவு

7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/

8)விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
E-Payments (Online)

9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம்
செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/

11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
www.tneb.com
http://www.itzcash.com/
https://www.oximall.com/http://
www.rechargeitnow.com/

12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும்
வசதி
www.cityunionbank.com
www.icicibank.com
www.hdfcbank.com
www.sbi.com

13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும்
வசதி
http://www.flipkart.com/
http://www.snapdeal.com/
http://www.amazon.com/
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html

14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம்
செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள்
(Online)

15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன்
விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lan
g=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.phphttp://www.iob.in/
vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-
Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/
el_indian/el_indian.htm

16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு /
மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results

17) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

18) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std
பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/

19) 10th & 12th வகுப்பிற்கான
அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும்
பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

20) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி,
தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்
அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/

21) உள் நாடு மற்றும் உலக நாடுகளில்
வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும்
வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/ .
இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/

22) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும்
வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

23) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
கணினி பயிற்சிகள் (Online) 1)
அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com
http://99likes.blogspot.com/
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-
training.html

24) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-
children.html
http://99likes.blogspot.com/

25) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/

26) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப்
கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
www.gmail.com
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
பொது சேவைகள் (Online)

27) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/

28) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல்
பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/

29) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள்
மூலமாக பதிவு செய்து தங்கள்
வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
www.ssmatric.com (brahmin website) }
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/

30) குழந்தைகளுக்கான தமிழ்
பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ்
அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும்
பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

31) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php

32) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த
ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

33) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://
www.youtube.com/
http://www.cooltamil.com/
www.tamilplay.com
www.mobitamilan.com
www.kuttyweb.com
இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி /
தொலைபேசி தகவல்கலை இலவசமாக
தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

34) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக
வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
http://www.oneindia.co.in/

35) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக
கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/

36) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும்
தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம்
மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம் http://
services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

37) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST /
ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL /

39)E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம்
மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய.

1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம்
செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.com
http://www.filehippo.com/

வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்
விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின்
அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்க
ு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html.

அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக்
கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித்
தொகை விண்ணப்பம் மற்றும் பெண்
குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான
மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால்
கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர்
உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://
www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
தேவையான வெப்சைட்களை பயன்படுத்துங்கள் !
பயன்பெறுங்கள் !!...
நன்றியுடன் 
சிவா...