Wednesday, September 04, 2024

அன்புள்ள...அப்பா..

அப்பா...........

அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!

உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.

வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன்

தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

உலகை அறிமுகம் செய்தவர்

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன்

வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

நண்பன்

காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

சூப்பர் ஹீரோ

தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

எப்பொழுதும் மாறாதவர்கள்

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

உன்னத உறவு

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது.           *ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்...

நன்றி
பகிர்வு பதிவு..

Tuesday, September 03, 2024

மனிதரில் மாணிக்கம்..

ஒரு உண்மைக்கதை..!!

ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது அவர் எதிரில் உடுத்த உடை 
கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க..

சுற்றுமுற்றும் பார்க்கிறார்..
உடனே அவர் தன் இடுப்பில் கட்டி 
இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு 
வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம் 
ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்..

இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்..

அங்கே பழைய ஜரிகை வியாபாரம் 
செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்.. 

வணிகரும்.. ஆஹா.. 
இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே.. 
சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்... ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்..

அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அருகில் சென்று பார்க்கிறான்..

அவர் தன் வேட்டியை பக்கத்தில் 
கழட்டி வைத்து விட்டு தியானம் 
செய்து கொண்டிருக்க.. 

இதை வாய்ப்பாக பயன்படுத்தி 
மெல்ல அதை எடுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கிறான்.. அந்த சமயம் பார்த்து 
கீழே கிடந்த முள் ஒன்று அவன் காலில் குத்த.. ஆ.. அம்மா என்று அலறுகிறான்..

அந்நேரம் பார்த்து தியானத்தில் 
இருந்து கண் விழித்து பார்த்தவர்.. 

அங்கே நிகழ்ந்ததை நினைத்து அடடா.. 
நாம் அந்த வேட்டி மீது வைத்திருந்த ஆசை அவனை திருடனாக மாற்றிவிட்டதே என மனதிற்குள் வருந்தினாராம்.. 

ஆஹா.. இது எப்பேர்ப்பட்ட மனநிலை.?

தான் ஒரு பொருள் மீது வைத்த பற்று 
அது இன்னொருவரை திருடனாக மாற்றி விட்டதே என அவர் நினைத்து வேதனை படுகிறார். 

அப்படி நினைத்தவர் தான்
துறவி 'மகாவீரர்'..

அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பாருங்கள்...

ஆனால்.. இன்றைய உலகில் எத்தனை பேர் இத்தகைய மனநிலையில் வாழ்கிறார்கள்..?

அவரவர்..
மனநிலைக்கே...
விட்டுவிடுவோம்...

நன்றி 
பகிர்வு பதிவு..