Monday, April 29, 2024

மரம் வளர்ப்போம்....உயிர் பெறுவோம்...!

உறவுகளுக்கும் நட்புகளுக்கும் வணக்கம்..!

இன்னும் பத்து வருடங்களில் வெயில் இப்பொழுதுள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்பொழுது நம்மால் அதி வெப்பத்தை தாங்க இயலாது. பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சிரமம்,
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.

நம் வீட்டைச் சுற்றி இடமிருப்பின், முடிந்த அளவிற்கு மரங்களை நடுவோம்.

*மரம் நடுவோம் இயற்கையை காப்போம்......

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்பொழுது தாம் வசிக்கும் பகுதிகளில் மரக் கன்றுகள் நட இப்பொழுதே திட்டமிடுவோம்!. நான் வசிக்கும் சிதம்பரம் தண்டேஷ்வர நல்லூர், குறுக்கு ரோடு பகுதியில் 100 மரக்கன்றுகள் (பூ பூக்கும்  மரக்கன்றுகள் ) இந்த ஆண்டு நகர் வாசிகளின் ஒத்துழைப்புடன் நட்டோம்,  நன்றாக வளர்ந்துள்ளது. இதுபோல் முயற்ச்சித்தால் ஓர் வனத்தையே நாம் உருவாக்கலாம்.....

இன்னும் சொல்லபோனால்  மரக்கன்றுகளை நட உற்பத்தியாளர்கள், 
வனத் துறையினர், 
பள்ளித் தாளாளர்கள், 
உயர் பதவிகளில் இருப்போர், 
பிரபலங்கள்,  வியாபாரிகள், 
ஆன்மீக தலைவர்கள், 
அனைத்து மதங்களின் குருமார்கள், 
கிராமத் தலைவர்கள், 
ஊர் தலைவர்கள், 
அனைத்துக் கட்சி தலைவர்கள் என இவர்களின் ஆதரவுகளையும் பெற்று பெரிய அளவில் செய்யலாம், பண ஆதரவும் Donation மூலமாகவும் பெற்று இதற்குரிய செலவினங்களை, கன்றுகளை பராமரிக்க பயன்படுத்தலாம்... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,

மரக்கன்றுகள் நடுவதற்க்கு உங்களுக்கான ஒரு குழுவை தயார் செய்ய வேண்டும்......, குழுவிற்கு தலைமையேற்ப்பவர் தன்னலமற்ற தேசிய சேவை செய்து,  பணி ஓய்வு பெற்ற பிறகும் தாய் நாட்டிற்காக ஏதேனும் தாம் நல்லதை மக்களுக்காக செய்யவேண்டும் என தியாக உள்ளத்துடன் வாழும் முன்னாள் இராணுவ வீரர்கள் தலைமையை ஏற்ப்பது சிறந்ததாக இருக்கும்,

 குழு அமைத்து செயல்பட முடியவில்லை எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள்
 அவர்கள் வீட்டு வாசலில் தெரு ஓரம், தோட்டத்தில் பழம், பூ, விலை உயர்ந்த மரங்கள் என நடவேண்டும், அப்படி செய்தாலே நாம் வசிக்கும் பகுதி பசுமை வாய்ந்த அழகிய வனமாக மாரும்,  

நண்பர்களே, அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள். 
இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள். 

மரக் கன்றுகள் நடுங்கள்
அல்லது மரக் கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது  நட உதவுங்கள்.

மரக் கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்பொழுதே முன் பதிவு செய்து வைக்கவும். சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மரக்கன்றுகளை தானமாகவும் தருகிறார்கள், சிலர் மரக்கன்றுகளை விலங்குகள் தின்னா வன்னம் கூண்டு தானமாக தருகிறார்கள்,  அதன் விபரங்களை பிறகு தருகிறேன்....

_பொது இடங்களில்_ :-
1. புங்கன் மரம்
2. வெப்ப மரம்
3. ஆவி மரம்
4. அரச மரம்
5. குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம் 

இவைகளை நன்கு வளர்ந்த கன்றுகளாகப் பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் _புங்கன்_ மரத்தை ஆடு மாடுகள் மேயாது. 

_நீர் வழித் தடங்கள்_ அருகில்:-
1. பூவரசு மரம்
2. பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டுக்கு அருகிலுள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம். 
1. கறுவேப்பிலை
2. லட்சக் கொட்டைக் கீரை
3. தேக்கு
4. நாட்டு மா மரம்
5. நாட்டு பலா
6. நாட்டு அத்தி 
7. குமிழ்
8. மகா கனி
9. மலை வேம்பு 
போன்ற மரங்கள் நடலாம்

*வழிபாட்டுத் தலங்கள்*-
1. மர மல்லி
2. மகிழம் மரம்
3. மனோரஞ்சிதம்
4. பாரிஜாதம்
5. புன்னை மரம்
6. செண்பக மரம்
7. மருதாணி போன்றவற்றை நடலாம்

நாம் இயற்க்கையை காப்பாற்றி பேணி காக்க வேண்டுமென்றால், மழை பெய்து வளம் பெருக, வெய்யில் கொடூறத்திலிருந்த நம்மை, உயிரணங்களை காப்பாற்ற வேண்டுமென்றால் மரங்கள் நிறைந்த வனமாக மாற்றுவோம்,  

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். 
மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். 

வெப்ப அலைகளுக்கு எதிரான ஒரு போர் போல் தான் இதுவும்!

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்!

நன்றே செய்வோம்!
அதனை இன்றே துவங்குவோம்!!

நன்றி!
பகிர்வு

Friday, April 12, 2024

இதற்குத்தானா இந்த ஓட்டம்...!

*தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்*
அண்ணன்,தம்பி,

அக்கா,தங்கை,

சின்ன அண்ணன்,

பெரிய அண்ணன்,

சின்ன அக்கா,

பெரிய அக்கா,

சித்தப்பா, பெரியப்பா,

அத்தை, மாமா,

மச்சான்,மச்சினி,

அண்ணி, கொழுந்தனார்,

நாத்தனார், தாய்மாமன்,

சித்தப்பா பையன்,

சித்தப்பா பொண்ணு,

பெரியப்பா பையன்,

பெரியப்பா பொண்ணு,

அத்தை பையன்,

அத்தை பொண்ணு,

மாமன் பொண்ணு,

மாமன் பையன்...

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 ஆண்டுகளுக்கு மேல் யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது.

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் !

அகராதியில் இருந்தே கூட

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்.

காரணம் என்ன !

#ஒண்ணேஒண்ணு, #கண்ணேகண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் !

அப்படி இருக்கும் போது

இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும்

சீர் வரிசை செய்யவோ,

பந்தல் போடவோ,

முதல் புடவை எடுத்துத் தரவோ

எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை !

திருமணத்தின் போது

அரசாணைக்கால் நட

எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை !

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட

எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை,

குழந்தைக்கு மொட்டை போட

யார் மடியில் உட்கார வைப்பார்கள் ?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு

எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.

இனி யார் போவார் ?

ஒவ்வொரு பெண்ணும்,

சொந்தபந்தம் ஏதுமின்றி

ஆறுதலுக்கு ஆள் இன்றி

தவிக்க போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும்

தன் கஷ்டநஷ்டங்களில்

பங்கு கொள்ள அண்ணன், தம்பி

யாரும் இன்றி அவதிப் பட போகிறார்கள்.

அப்பா, அம்மாவை தவிர

எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்

வெளியூருக்கோ,

இல்லை

தனிக்குடித்தனமோ சென்று விட்டால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள்

எல்லாம் வயதான காலத்தில்,

ஏன் என்று கேட்க நாதி அற்று

முதியோர் இல்லத்திலோ,

இல்லை அந்த ஒரு குழந்தைக்காக

கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள் !

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு

ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு

எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்

இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல்

ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால்

ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்

எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள்தானே

வயதான காலத்தில்

அப்பா, அம்மாவுக்கு

எதாவது ஒன்று என்றால்

நான் நீ என்று ஓடி வருவார்கள்!

கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரை விட்ட பெண்கள் கூட பெற்றோருக்குஒன்று என்றால் அத்தனையும் மறந்து விட்டு

முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து பாருங்கள்!

பணமில்லாத ஒருவனை

அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

ஆனால்,

உறவுகள் இல்லாத ஒருவன்

எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை

மறந்துவிடக் கூடாது!

கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன்

ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற

ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,

வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள் ? ? ?

தனி மனித மாற்றமே ...

நம் சமுதாயத்தின் மாற்றம்..

நன்றி...
பகிர்வு பதிவு...