" அரவக்குறிச்சி
பள்ளியில்
பள்ளிப்படிப்பை
முடித்துவிட்டு
சான்றிதழ்
வாங்க
பள்ளிக்கு
சென்றேன்.
தலைமை
ஆசிரியர்...
" தொடர்ந்து
என்ன செய்ய
போகிறாய் ? "
என்று
கேட்டார்.
" நான்
மாடு மேய்க்க
போகிறேன் "
என்று
கூறினேன்.
அவருக்கு
அதிர்ச்சி.
" மேலே
படிக்கலாம்
அல்லவா ? "
என்று
கேட்டார்.
" அதற்கு
எல்லாம்
எங்கள் வீட்டில்
வசதி இல்லை "
என்று
கூறினேன்.
அருகில்
இருந்த கணித
ஆசிரியர்...
" கணித
பாடத்தில் 98
மதிப்பெண்
பெற்றிருக்கிறாய்.
எனவே நீ
பொறியியல்
படிப்பு படிக்கலாம் "
என்று
கூறினார்.
அந்த
ஒரு வார்த்தை
என் வாழ்க்கையை
புரட்டிப் போட்டது.
என்
பெற்றோருக்கு
தெரியாமல் என்
சைக்கிளை விற்று
அந்த பணத்தில்...
கோவை பிஎஸ்ஜி
கல்லூரியில்
பொறியியல் படிப்பு
படித்தேன்.
அந்த ஆசிரியர்
கூறிய அந்த ஒரு
வார்த்தை தான்
என்னை
பொறியாளராக
மாற்றியது "
இந்த
வார்த்தைகளுக்கு
சொந்தக்காரர்.
பல்லாயிரம்
பொறியாளர்களை
உருவாக்கிய...
அண்ணா
பல்கலைக்கழக
முன்னாள்
துணைவேந்தர்...
மதிப்பிற்குரிய
டாக்டர் பாலகுருசாமி
அவர்கள்.
ஆசிரியர்
மட்டுமல்ல
யாரோ
ஒருவர்
கூறும்
ஒரு
வார்த்தை...
நம்மை
நம்
எதிர்காலத்தை
மாற்றத்தை
ஏற்படுத்த
வல்லது.
அதை
உணர்ந்தவர்கள்
உபயோக
படுத்தியவர்கள்
வெற்றி
பெறுகிறார்கள்.
வரலாறு
படைக்கிறார்கள்.
வாங்க...
அடுத்தவர்
கூறும்
நல்
வார்த்தைகளை
நாமும்...
செவி மடுப்போம்
செயல் படுத்துவோம்
சாதித்து காட்டுவோம்.
அன்புடன்
இனிய
வணக்கம்
No comments:
Post a Comment