Wednesday, March 29, 2017

கண்ணாடி ....சிந்தனை. கதை....

சிந்தனை சிறுகதை...

அவர் ஒரு சமூக சேவகர். ஒரு நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரு சுரங்கபாதையை கடக்கும்போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, “உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்” என்று மிரட்டுகிறான்.

திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன் ஏஜ் வயது.

அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவனிடம் தனது பர்ஸை ஒப்படைக்கிறார் இவர். அவன் தப்பியோட முயற்சிக்கும் தருணம், அவனை கூப்பிடுகிறார்.

“தம்பி… ஒரு நிமிஷம்… நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியை காட்டி எல்லார்கிட்டேயும் பணம் பறிக்கிறதா இருந்தா இந்த கோட் உனக்கு தேவைப்படும். இதை போட்டுக்க. ஏன்னா… வெளியிலே ரொம்ப குளிரா இருக்கு!” கூறியவாறே தனது கோட்டை கழட்டுகிறார்.

திருடனுக்கு ஒரு கணம் குழப்பம். இவரை வித்தியாசமாக பார்த்தான்.

“நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?”

இவர் ஒரு படி மேலே போய் … “நீ பசியுடன் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உனக்கு ஒ.கே. என்றால் நாம் இருவரும் பக்கத்தில் ஏதாவது கடையில் டின்னர் சாப்பிடலாம்!!” என்றார்.

அவன் இன்னும் அவரை நம்பாமாலே பார்த்தான்.

“இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ ரிஸ்க் எடுத்து உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன். உனக்கு விருப்பம் இருந்தால் டின்னருக்கு வா…”

திருடனுக்கு மேலும் குழப்பம். அவர் வேறு ஏதாவது கத்தியோ ஆயுதமோ மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரை சோதனையிட்டான். அப்படி எதுவும் இல்லை.

அருகில் சாலையோரம் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறார்கள்.

மேனேஜர் முதல் வெயிட்டர் வரை அனைவரும் வந்து இவருக்கு விஷ் செய்கிறார்கள்.

“என்ன இது உங்களுக்கு இப்படி ராஜ மரியாதை தருகிறார்கள்? நீங்கள் தான் ஒருவேளை இந்த இடத்திற்கு சொந்தக்காரரோ?”

“இல்லை.. இல்லை… நான் அடிக்கடி இங்கு சாப்பிடுவது வழக்கம்…! எனவே எனக்கு அனைவரும் நல்ல அறிமுகம்!!”

“வெயிட்டரிடம் கூட பண்போடு நடந்துகொள்கிறீர்களே…?”

“நாம் எல்லோரிடமும் பண்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று உனக்கு பள்ளியில் சொல்லித் தரவில்லையா?”

“தந்தார்கள். ஆனால்… அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று நினைத்தேன்!”

சாப்பிட்டு முடிக்கும்போது, அவனிடம், “என்னிடம் கொடுக்க பணம் இல்லை. பர்ஸ் தான் உன்னிடம் இருக்கிறதே. பர்சை திருப்பித் தந்தால் சாப்பிட்டதற்கு பணத்தை செலுத்திவிடுகிறேன். உன்னையும் கண்ணியமாக நடத்துவேன்” என்றார்.

நியாயமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு திருடன் பர்ஸுடன் ஓட்டம் பிடித்திருக்கவேண்டும். ஆனால் அவன் ஓடவில்லை. மாறாக அந்த பர்ஸை அவரிடமே திருப்பித் தந்தான்.

அடுத்து இவர் என்ன செய்தார் தெரியுமா? “உனக்கு ஒ.கே. என்றால் இந்த கத்தியை நான் வாங்க விரும்புறேன்” என்று கூறி இருவர் சாப்பிட்டதற்கும் பணத்தை தந்ததோடல்லாமல் அந்த கத்தியை திருடனிடம் ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டார்.

ஒரு திருடனை மாற்றியது போலவும் ஆச்சு. தன்னையும் காத்துக்கொண்டு தன் பொருளையும் காப்பாற்றிக்கொண்டது போலவும் ஆச்சு.

வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். “மகனே… டயம் கேட்டா நீ வாட்ச்சையே கழட்டிக் கொடுக்குற ஆள்… நீ இப்படி நடந்துகிட்டதலயும் அவன் பதிலுக்கு அப்படி நடந்துகிட்டதலயும் எந்த ஆச்சரியமும் இல்லை!” என்றார்.

WORLD IS A MIRROR. நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியே தான் அவர்களும் நம்மை நடத்துவார்கள்.

கதையில வேணும்னா இதெல்லாம் படிக்க நல்லாயிருக்கும் இருக்கும். நிஜத்துல இதெல்லாம் சாத்தியமா? – இது தானே உங்க கேள்வி…! (அதானே… நாமெல்லாம் யாரு?!)

இது கதையல்ல…! சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம்!!! அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்தி பெரிதும் பேசப்பட்டது!!

குறிப்பு :

ஜூலியோ டயஸுக்கு சாத்தியப்பட்ட இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா……..? படும்! படும்!!

* எதையும் பாஸிட்டிவ்வாக பார்ப்பவர்களுக்கு!

* எந்த சூழலிலும் இன்சொல்லே பேசுபவர்களுக்கு!!

* இடியே விழுந்தாலும் நிலைகுலையாத மனப்பக்குவம் இருப்பவர்களுக்கு!!!

* தன்னைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசிப்பவர்களுக்கு!!!!

நம்பிக்கையும் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். இந்த பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்… அட….நீங்கள் விரும்புவது தான் சார்… நடக்கும் !!

Tuesday, March 28, 2017

உணவே மருந்து...பழைய சோறு...

🍚 *பழைய சோத்துல இவ்வளவு            விஷயமுள்ளது*🍚

*உணவே மருந்து மருந்தே உணவு.*

திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.

இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

👉ஆனால், முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த *பழைய சாதத்தில்* தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் *உணவுப் பாதையையே ஆரோக்கியமாக* வைத்திருக்கிறதாம்!

👉கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

👉 *பழைய சாதத்தின் நன்மைகள் சில*

1. ⛅ காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் *சுறுசுறுப்பாகவும்* இருக்கிறது.

2. 🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. ☀மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு *குடல்புண், வயிற்று வலி* போன்றவற்றையும் *குணப்படுத்தும்.*

4.☝அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் *உடலை சீராக* இயங்கச்செ ய்கிறது.

5.☝இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால், *இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும்.*

6.✅மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான 💪 சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. 👉 *அலர்ஜி, அரிப்பு* போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. 👉 *அல்சர்* உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. 👉 எல்லாவற்றிற்கும் மேலாக *நோய் எதிர்ப்பு சக்தி* அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. 👉 ஆரோக்கியமாக அதே சமயம்  *இளமையாகவும் இருக்கலாம்.*

📚படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன் 📲👍

Sunday, March 26, 2017

மூக்கு கண்ணாடி.....குட்டிக்கதை



தினம் ஒரு குட்டிக்கதை.

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக
கீழே போட்டு உடைத்து விட்டது.அவள்
அப்பா அந்த குழந்தையை கடுமையாக
திட்டி விட்டார்....

அன்று இரவு முழுவதும் அந்த பெண்
தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார்
செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர்
அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும்
கோபமுற்றார்.

யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில்
எதாவது பொருள்
வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள
கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன்
என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா
உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த
பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம்
வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம்
தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த
பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

நன்றி... பா.ரமேஷ்...

எலியும்...பூனையும்...

ஒரு ஜப்பானிய சாமுராய் வீரனின் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.அதிலும் குறிப்பாக,ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.ஆகவே சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்.

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.ஆனால், எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.முடிவில் சாமுராய் தானே எலியைக் கொல்வது என முடிவு செய்து, ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.ஆனால் வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீது பாய்ந்து தாக்கியது.அதில் அவனும் காயம் அடைந்தான்.‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா?’ என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்,

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது.அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்’’ என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.பூனையும் உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது. பூனை இருப்பதை அறிந்த எலி,தயங்கித் தயங்கி வெளியே வந்தது.கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது.மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.ஆனால், இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள் வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது. சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,

"எப்படி முரட்டுஎலியைக் கொன்றாய்? இதில் என்ன சூட்சுமம்?’’எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.நான் பொறுமையாக காத்திருந்தேன்.நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது. ஆகவே,அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டுதான்இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு  பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.என் நகங்கள் கூட கூர்மையானவை.ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது.எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.ஆகவே ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.பலவான் தனது பேச்சிலும்,செயலிலும் அமைதியாகவே இருப்பான்.உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்.ஆனால் தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதைபொருந்தக்கூடியதே.மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.ஆனால்,அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

நம் பலம் மட்டும் நம் பலமில்லை,நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்.

Saturday, March 25, 2017

கனா காலம்.....

குற்றமும் தண்டனையும்!
========================

ஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே கொஞ்சம் சிரமமான பணி என்பது எமது கருத்து.

வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் பொறுப்பு என்பது சாதாரணமல்ல..! அதற்குப் பொறுமையும் நிதானமும் அவசியம்.

மறுமையில்  சன்னிதியில் ஓர்ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும் மாட்டமாட்டார்கள். "கற்ற கல்வியைவைத்து என்ன செய்தாய்?” என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட நகரமுடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.

ஃபிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் குற்றமும் தண்டனையும் எனும் பகுதியில் (மலையாளம்) மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கூறுகின்றார்:

அது ஒரு தேர்வு நேரம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.

ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார். தண்டனை என்ன தெரியுமா..? பள்ளிக்கூட அசெம்ப்லி ஒன்றுகூட்டப்பட்டு அனைவர் முன்னிலையிலும் குச்சியால் கையில் ஆறு அடி அடிப்பதுதான் அன்றைய பெரும் தண்டனை. அசெம்ப்லி கூட்டப்பட்டது.

ஆனால் இந்த முடிவை தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்த்தார். "அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும் கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்க மாட்டான். ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.

தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தலும் மாணவனுக்குத் தண்டனைக் கொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் ஆசிரியரின் நிர்ப்பந்தத்திற்கு தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதித்தார்.

அந்த மாணவனை சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: "இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.

உடனே தாமஸ் மாஸ்டர் கூறினார்: "இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல... நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாக செய்திருந்தால் இவன் காப்பியடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.

தலைமை ஆசிரியர் அவருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். உடனே அந்த மாணவன் அழுதவண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் முட்டுக்குத்தி நின்றவாறு, "இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.

பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: "நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக் காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே இனி ஒருபோதும் நான் காப்பி அடிக்க மாட்டேன் மாஸ்டர்..!”

இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஓர் புதிய பாடத்தை அன்றுதான் பள்ளிக்கூடமே கற்றுக்கொண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்கே பெற்ற ஒரு நிகழ்வு இது.

இன்றைய ஆசிரியர்களையும் மாணவர்களையும்  தயவு செய்து இத்துடன் ஒப்பிட வேண்டாம்..! அது ஒரு கனா காலம்!

Thursday, March 23, 2017

அரிதாரம்.....

முகமூடி....
&&&&&&&

அரிதாரம் பூச்சி
அக அழகை
முகத்தில் காட்டும்
முக மூடி..
++++++++++++++

அன்னாட காட்சி
&&&&&&&&&&&
அரிதாரம் வண்ணங்களின்
அணி வகுப்பு
எண்ணங்களின்  பிடியில்
அன்னாட காட்சியாய்...

-------------------------------

ஆண்டி....
%%%%%%%

அரிதாரம் கலைஞனின்
உயிர் மூச்சி
வேசத்தில் அரசனாய்
உண்மையில் ஆண்டியாய்...

@@@@@@@@@@@

பிரம்மன்..
&&&&&&&

அரிதாரம் கலைகளின்
படைப்பில் பிரம்மன்
காத்தலில் நடிகன்
அழித்தலில் சாமானியன்....

நட்புடன் ஆ.சிவா...சேலம். நி.மு.420

Wednesday, March 22, 2017

பாவங்கள்....

*சின்னச் சின்னப் பாவங்கள்.*

ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், ''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது.நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?''
அடுத்தவன் ஞானியிடம் சொன்னான், ''நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?''
ஞானி சிரித்தார்.

முதல் ஆளிடம்,''நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா,''என்றார். இரண்டாமவனிடம்,''நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா.''என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.
இப்போது ஞானி சொன்னார்,
''சரி,இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,'' என்றார்.

முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.

இரண்டாமவன் தயக்கத்துடன்,''இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?''என்று கேட்டான்.

ஞானி
சொன்னார்,''முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான்.அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்சி சுலபம்.உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்.'' என்றார்.

நல்லவர்களை விடக் குற்றவாளிகளே விரைவில் பக்குவ நிலையை அடைய முடியும். தன்னை நல்லவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விமோசனமும், பரிபக்குவமும் எளிதில் சித்திப்பதில்லை....
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நல்லவராக நினைப்பதை விட நல்லவராக வாழ்ந்து பிறர் போற்றும் படி வாழ்வோமா ?....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏