Wednesday, August 31, 2016

எஸ். எஸ். பிள்ளை நினைவு நாள்

ஆகஸ்ட் 31: எஸ். எஸ். பிள்ளை நினைவு நாள்

கணிதத்தில் அளப்பரிய சாதனைகள் புரிந்த ராமானுஜனுக்குப் பிறகு இந்தியாவின் கணிதப் புகழை உலகறியச் செய்த மேதைகளில் முக்கியமானவர் சுப்பைய சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ். எஸ். பிள்ளை). திருநெல்வேலி மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த எஸ்.எஸ்.பிள்ளை சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.

படிப்பில் படு சுட்டியாக இருந்தாலும் வாழ்க்கைச் சூழல் இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் பல ஆசிரியர்களின் உதவியால் செங்கோட்டை எஸ். எம். எஸ், எஸ். அரசு உயர்நிலைப் பள்ளி, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதத்தில் பி. ஏ. பட்டப் படிப்பு எனப் படிப்படியாக முன்னேறினார். (அந்நாளில் கணிதத்தில் வழங்கப்படும் பட்டத்தைப் பி. ஏ. பட்டம் என்றே குறிப்பிடுவர்.)

போராடிப் பெற்றப் பட்டம்

பி.ஏ. கணிதத்தில் இரண்டாம் வகுப்பில் எஸ்.எஸ்.பிள்ளை தேர்ச்சி பெற்றதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இராமானுஜன் இதே போன்ற சூழலில் சிக்கித் தவித்தபோது சென்னை பச்சையப்பன் கல்லூரியின் அன்றைய முதல்வர் சின்னதம்பிப்பிள்ளை உட்படப் பலரின் பரிந்துரையால் சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்காக விதிகளைத் தளர்த்தியது. இம்முறை எஸ். எஸ். பிள்ளைக்கும் யாரேனும் உதவ முன்வருவார்களா?

எஸ்.எஸ். பிள்ளையின் கணித அறிவைக் கண்டுணர்ந்து மீண்டும் சின்னதம்பிப்பிள்ளையே சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் “சாதாரண மாணவர்களுக்கென உருவாக்கிய விதிமுறைகளை மேதைகளின் மீது திணிக்காதீர்கள்” என வாதிட்டார். ஒரு வழியாக, எஸ். எஸ். பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1927-ல் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

நூற்றாண்டுப் புதிருக்கான விடை

இங்கிலாந்தில் கிங்க்ஸ் கல்லூரியில் ராமானுஜனருடன் ஆய்வு புரிந்த ஆனந்த ராவ்விடம் இப்போது எஸ். எஸ். பிள்ளை ஆய்வு மாணவரானார். எண்ணியலில் நான்கு ஆண்டுகள் சிறப்பான ஆய்வு மேற்கொண்டு எம். எஸ். சி. பட்டம் பெற்றார். 1929-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆனார். பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தவர் கணிதத்தில் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அவருடைய அரிய கண்டுபிடிப்புகளுக்காக முனைவர் பட்டதுக்கும் மேலான D.Sc. (Doctor of Science) கவுரவத்தைச் சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகக் கணிதத் துறையின் முதல் ஆய்வு மாணவர் இராமானுஜன் என்றால், அதன் ஆகச் சிறந்த கணித ஆய்வு பட்டத்தை முதலில் பெற்றவர் எஸ். எஸ். பிள்ளை.

1770-ல் இங்கிலாந்து கணித அறிஞர் எட்வார்ட் வேரிங் யாரும் விடை கண்டுபிடிக்க முடியாத “வேரிங்ஸ் புதிர்” எண் கணிதப் புதிரை உருவாக்கினார். பல்வேறு ஐரோப்பியக் கணித மேதைகளே தடுமாறிய அந்தப் புதிருக்கு எஸ். எஸ். பிள்ளை பொதுவான தீர்வு கண்டார்.

குறிப்பாக ஒர் இயல் எண்ணை அதிகப் பட்சமாக எவ்வளவு எண்களைக் கொண்டு இருபடி, முப்படி, நாற்படி, ஐந்து படி, ஆறு படி, போன்ற படிகளின் கூடுதலாக எழுதலாம் என்ற கேள்விக்கு, எஸ். எஸ். பிள்ளை எனும் பொழுது எண்ணிக்கையில் உள்ளபடி எண்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி எழுதலாம் என 1935-ல் நிரூபித்தார்.

இதன்மூலம் 165 ஆண்டுகள் நீடித்த புதிருக்கு விடை கிடைத்தது. இதற்காக அவருக்குப் பிரெஞ்சு குடியரசின் மகத்தான கவுரவ விருது 2003-ல் வழங்கப்பட்டது.

எண்ணியலில் 76 அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எஸ். எஸ். பிள்ளையை அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு புரிய ஐன்ஸ்டைன், ஓபன்ஹைமர் உள்ளிட்ட மாமேதைகள் அழைப்பு விடுத்தனர். இதற்கு எஸ். எஸ். பிள்ளை, “எனது கணித ஆய்வுக்கு என் தாய்நாடே போதும்” எனப் பதிலளித்தார்.

பின்னர்த் தொடர் கோரிக்கைக்கு இணங்கி 1950-ல் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கணித மாநாட்டில் (ICM) சிறப்புரை ஆற்ற ஆகஸ்ட் 30, 1950 ‘Star of Maryland’ விமானத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டார். ஆனால் அடுத்த நாள் படுகோரமான விமான விபத்தில் காலமானார்.

இராமானுஜன் கணிதக் கழகம் சார்பில் 2009-ல் எஸ். எஸ். பிள்ளையின் கணித ஆய்வுகள், கடிதங்கள் போன்றவற்றை இரு புத்தகங்களாகத் தொகுத்து ஆர். பாலசுப்ரமணியன் மற்றும் ஆர். தங்கதுரை வெளியிட்டுள்ளனர்.

இராமானுஜன், எஸ். எஸ். பிள்ளை போன்ற தலைசிறந்த கணித மேதைகளை உலகுக்கு வழங்கிய தமிழகத்திலிருந்து மேலும் பல கணித மேதைகள் உருவாக வேண்டும். அதற்கு முதல்படியாக, கணிதத்தின் மீது, நம் முன்னோர்களுக்கு இருந்த ஆளுமையை இக்கால மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு பெருமித உணர்வை வளர்க்க வேண்டும்.

Tuesday, August 30, 2016

ஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி?*

*ஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி?*

நேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது. புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம்.

மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. காய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.

கோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.

சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.

அரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.

அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

சிறுதானியம் ‘பளீர் வெள்ளை’யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.

அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி. சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.

அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.

தேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், தற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.
நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.

கருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது.

ஆசிரியர் - மாணவர், பெற்றோர் - குழந்தைகள் உறவுகள் மேம்பட...

ஆசிரியர் - மாணவர், பெற்றோர் - குழந்தைகள் உறவுகள் மேம்பட...
முனைவர், சி. சேதுராமன்

நல்ல சமூகம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்பவர்கள் ஆசிரியரும், பெற்றோரும் ஆவர். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான் நிர்ணயிக்கப்படுகிறது. என்கிறது கோத்தாரிக் கல்விக் குழு...

ஒரு நல்ல ஞானாசிரிய னால்தான் நல்ல சமூதாயத்தை உருவாக்க முடியும் என்பார் சுவாமி விவேகானந்தர், நிறைமொழி மாந்தராக ஆசிரியர்கள் விளங்குதல் வேண்டும்.

நன்னூலார் கூறும் நல்லாசிரியர்க்குரிய பண்புகள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாக அமைந்திலங்குகின்றன.

கற்கும் சூழல்

வளர்ச்சியும் நடத்தையும் புறம்பேயிருந்து கட்டுப்படுத்தும் பலவித காரணிகளே சூழ்நிலை என்படும். நமது பண்பாட்டின் மீது பலவகைத் தாக்கங்கள் நிகழ்வதால் பள்ளிச் சூழலும் குடும்பச் சூழலும் நலிவடைந்து வருகின்றன. ஒரு குழந்தைக்கு நற்பண்புகளை வளர்க்கும் பொறுப்பில் குடும்பச் சூழலும், கற்கும் பள்ளச் சூழலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இச்சூழல்கள் சீர்கெட்டால் குழந்தையின் வளர்ச்சியும் வாய்ப்பும் தடைப்படுகின்றன. அதனால் மாணவர்கள் நற்பண்புகளைப் பெற்று உயர்வடையும் நற்சூழலுகளை பள்ளிகளே அமைத்துத் தரவேண்டும்.

சூழ்நிலைக்களம்

குடும்பம், சுற்றுப்புறம், சமுதாயம், பள்ளி, அரசு முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் வளர்ச்சி நிலைகள் அமைகிறது. மாணவர்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவக் கூடிய திட்டமிடப்பட்ட சூழ்நிலைக்களமாகப் பள்ளிகள் செயல்படுகின்றன.

குடும்பம்- பள்ளி

குடும்பமும் பள்ளியும் மாணவர்களுக்குத் தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் போதுதான் மாணவர்கள் கல்வியில் நல்ல அடைவினைப் பெற இயலும். இவை இரண்டும் மாணாக்கரது வளர்ச்சிக்கு உதவும் இன்றியமையாத காரணிகளாகும். ஒரு குழந்தையின் பண்பு அதன் குடும்பத்தின் பண்பு. அதன் சமூகத்தின் பண்பு. சமூகம் காலம் காலமாகச் சேகரம் செய்த பண்பை குழந்தைக்கு அளிப்பது குடும்பம், குடும்பம் இல்லாவிட்டால் குழந்தைகள் நற்பண்புகளைப் பெறமுடியாது என்பர் அறிஞர்.

அசிரியர்

ஒருநாட்டின் பெருமை அதன் பரப்பு, மலைகள், காடுகள், கழகங்கள், ஆயுதச் சாலைகள், கட்டடங்கள் ஆகியவற்றைப் பொறுத்ததன்று. ஆனால் அது,

அந்நாட்டின் பள்ளிகளின் நிலையையும் ஆசிரியர்களின் தன்மையையும் பொறுத்ததாகும் என்று ஜே.எப்.பிரெளன் கூறுகிறார்.

ஆசிரியர்- மாணவர் உறவு

ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர் மாணவர் உறவு எனப்படும்.

பண்டைக்காலத்தில் கல்வி வாழ்வோடு கற்பிக்கப்பட்டு வந்தது. செய்து கற்றல், செய்யக்கற்றல், வாழ்ந்து கற்றல், வாழக்கற்றல் என்பதற்கிணங்க கல்வி கற்றல் என்பது வாழ்வோடு இரண்டறக் கலந்ததாக இருந்ததே தவிர தனித்துக் காணப்படவில்லை.

குருகுல முறைக்கல்வியில் ஆசிரியரும் மாணாக்கனும் தந்தை மகன் உறவு என்ற நிரைலயில் நடந்து கொண்டனர். மாணவனாக ஒரு சிறுவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஆசிரியர் தமது குடும்பத்துள் ஒருவனாகக் கருதி தன்மகனிடம் அன்பு செலுத்துவது போன்று இவனிடமும் அன்பு செலுத்த வேண்டும் இதே போன்று மாணாக்கனும் ஆசிரியருக்குக் கீழ்படிந்து அவருக்கான பணிவிடைகள் பலவற்றைச் செய்ய வேண்டும்.

இன்றையச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பட பின்வரும் வழிகளை மேற்கொள்ளலாம்.

1. அன்பு காட்டுக,

அன்பே உலகில் வலிமையானதாகும். இந்திரகதியில் இயங்கும் இன்றையச் சூழலில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையான அன்புக்காக ஏங்குகின்றனர். தாயும், தந்தையும் பணிபுரிபவர்களாயின் அக்குழந்தைக்கு இருவரது அன்பும் கிட்டாது போய்விட வாய்ப்புள்ளது. பள்ளிக்கு வரும் மாணவனிடத்தில் ஆசிரியர் பாசமுடன் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் தவறுகள் செய்கின்ற போது அவை மனதில் படும் வண்ணம் சுட்டிக்காட்டி அன்பு வழியில் திருத்த வேண்டும். ஆசிரியர் தம்மீது அன்புகாட்டுகிறார் என்று உணரும் மாணவன் நல்வழியில் செல்ல ஆரம்பிக்கின்றான். ஆசிரியர் தாய்போன்று அன்பு காட்டி, தந்தை போன்று அனைத்துப் பேசி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை கூறுகிறார்.

2. அறிவுத்திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல் வேண்டும்,

அறிவுத் திறன் மிகுந்த மாணவர்களைப் பாராட்டி அவர்கள் மீது மட்டும் தனிக்கவனத்தை செலுத்துதல் கூடாது. அறவுத்திறன் மிகுந்த குழந்தைகளுக்குக் கற்பித்து அவர்களை மேலும் உயர்த்துவது சிறந்ததாகாது. அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்வடையச் செய்வதே சாலச்சிறந்தது.

அறிவுத் திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்பு தரக்குறைவாக நடத்துதல் கூடாது. அவர்களை அவ்வாறு நடத்தினால் அம்மாணவர்களின் கவனம் கல்வியில் செல்லாது. ஆசிரியர் மாணவர் உறவு பாதிப்படையும். மாறாக அறிவுத்திறன் குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும் போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அம்மாணவர்கள் கற்க ஊக்கமுடன் முயலுவதோடு, ஆசிரியர் மீது மிகுந்த மதிப்புடன் இருப்பர்.

3. மாணவர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குபெறல்,

ஆசிரியர் மாணவர் இருவரும் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளைமாடுகளைப் போன்றவர்களாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் தோல்வியுறும் போது வருந்துவர். அவர்களுக்கு உடல்சோர்வோ மனச்சோர்வோ ஏற்பட்டு அவர்கள் வருந்தும் போது அதனைத் தன்னுடையதாகக் கருதி அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர்களுடைய வருத்தத்தைத் தம்முடையதாகவும் கொண்டு அவர்களது துன்பத்திற்கு ஓர் ஊன்றுகோலாக அமைந்து அவர்களது நலம் நாடவேண்டும், அவ்வாறு செய்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு உன்னதநிலையை அடையும்.

மாணவர்கள் வெற்றி பெறும்போது அவர்களது வெற்றியைத் தம்முடைய வெற்றியைப் போல் கருதி மகிழ்ச்சிடையதல் ‘ரிqனிu. மாணவர்களைப் பாராட்ட வேண்டும்.

அவ்வாறு செய்தோமெனில் ஆசிரியர் கூறுகின்றவண்ணம் மாணவர்கள் மனமுவந்து நடப்பர்.

இருவரது உறவும் மேம்பாடடையும். அவர்களது வெற்றியும் அலட்சியப்படுத்துதல் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களது வெற்றியில் பங்கு கொண்டு மகிழவேண்டும்.

5. மாணவர்களை ஊக்கப்படுத்துதல்;

அகல்விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பவர் பெரியோர். ஒவ்வொரு மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பைக் கொடுத்து ஊக்கமூட்டினால் அவர்கள் திறன்கள் வெளிப்படும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அவர்களது திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது. திறமைகளைக் கண்டறிந்து அதனை வளர்த்தல் வேண்டும். “ஊக்கமே ஆக்கத்திற்குச் சிறந்த வழி” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

திறமைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் அதிகம் விரும்புவர்.

6. மாணவர்களின் தவறுகளைக் களைதல்;

தவறு செய்வது மனித இயல்பு பல்வேறு சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும் பள்ளி வளாகத்திலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் மாணவர்கள் செய்யும்போது அவர்கள் அதை உணரும் வண்ணம் செய்து திருத்துதல் வேண்டும். அதற்கு மாறாக சிறிய குற்றங்களையே பெரிதாகக் காட்டி அதனை விமர்சித்தல் கூடாது. தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துதல் வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருத்தல் கூடாது. அது இருவரது உறவிலும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ளல் நலம் பயக்கும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களைப் பெரிதும் மதிப்பார்கள்.

மேம்பட்ட கற்பித்தல் திறம்:

நாள்தோறும் புதிய செய்திகளையும் கருத்துக்களையும் கூறும் ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் விரும்புவர், தாம் உணர்ந்ததை மாணவருக்கும் கற்பிக்கும் கற்பித்தல் திறமுடையவராக ஆசிரியர்கள் விளங்குதல் வேண்டும். இவ்வாறான மேம்பட்ட கற்பித்தல் திறம் ஆசிரியர் மாணவர் நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும் ஆசிரியர் மாணவர்களிடையே சாதி, மத, இன, மொழி வேறுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்துதல் வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் உறவு:

மாணவர்களிடத்தில் நற்பண்புகள் மேலோங்க பெற்றோர். ஆசிரியரிடையேயும் நல்ல உறவு வேண்டும். இவர்களின் நல்லுறவு மாணவர் கல்விச் சூழ்நிலைச் சீர்கேடுகளை அகற்றும் அருமருந்தாக அமைகிறது. மேலும் ஆசிரியர், மாணவரிடையே உள்ள அந்நியத்தன்மை போக்க உதவுகிறது. பெற்றோர் - ஆசிரியர் நல்லுறவு ஆசிரியர்- மாணவர் உறவை மேம்பட வைக்கிறது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவை மேம்படுத்தும் காரணிகள் எவையென செய்யப்பட்ட ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, அவற்றுள் சில:

1. ஆதாரக் கல்வி மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.

2. மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் உறவு மேலோங்கி உள்ளது.

3. எல்லோராலும் விரும்பப்படும் ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்த முடிகிறது.

4. ஆசிரியர் மாணவர் விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உறவு சிறந்து விளங்குகிறது.

பெற்றோரும் குழந்தைகளும்:

ஒரு குழந்தைக்கு சிறந்த முதல் ஆசிரியர்கள் பெற்றோர்களே ஆவர். பெற்றோர்களைப் பார்த்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். இன்றைய சூழலில் பெற்றோர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

Monday, August 15, 2016

அரவிந்தர்

அரவிந்தர் 10

* விடுதலை இயக்க வீரரும், ஆன்மிக ஞானியுமான ஸ்ரீஅரவிந்தர் (Sri Aurobindo) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கல்கத்தாவில் (1872) பிறந்தவர். முழு பெயர் அரவிந்தகோஷ். டார்ஜிலிங்கில் ஒரு கான்வென்ட்டில் பயின்றார். பள்ளிப்படிப்பை முடித்து இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் இந்தியன் சிவில் சர்வீஸ் பணிக்கான உயர் கல்வி பயின்றார்.
* வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், லத்தீன், பிரெஞ்ச், கிரேக்கம், ஜெர்மன் உட்பட பல மொழிகளைக் கற்றார். கல்வி கற்கும்போதே புரட்சிகர சிந்தனைகள் இவருக்குள் கிளை விரித்தன. 1893-ல் நாடு திரும்பினார். அப்போது கப்பல் விபத்தில் இவர் இறந்ததாக கிடைத்த தவறான தகவலால் தந்தை இறந்தார்; தாய் மனநோய்க்கு ஆளானார்.
* பரோடா சமஸ்தானத்திலும், அரசுப் பணியிலும் இருந்தார். ‘இந்து பிரகாஷ்’ என்ற இதழில் கட்டுரைகள் எழுதினார். கல்கத்தா சென்று, வங்க தேசியக் கல்லூரி முதல்வரானார். 1904-ல் பிரணாயாமம் பயின்றது, இவரது சிந்தனைப் போக்கை மறுவடிவம் பெறச்செய்தது. யோகநெறியில் நாட்டம் கொண்டார்.
* வங்கப் பிரிவினை இவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் களமிறங்க வைத்தது. வங்காளம், மத்தியப் பிரதேசத்தில் செயல்பட்ட அரசியல் குழுக்களை ஒன்றிணைத்தார். திலகர், சகோதரி நிவேதிதையுடன் ஆழமான நட்பு கொண்டிருந்தார். ஜதீந்திரநாத் பானர்ஜிக்கு பரோடா ராணுவத்தில் ராணுவப் பயிற்சி பெறவைத்து புரட்சி இயக்கத்தில் இணைத்தார். திலகருடன் இணைந்து, புரட்சிப் படையினரை வழிநடத்தினார்.
* பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தேசிய விழிப்புணர்வு, சுதேசி இயக்கம், ஒத்துழையாமை, தேசியக் கல்வி இயக்கங்களுக்கு ஆதரவு திரட்டினார். 1907, 1908-ல் இருமுறை சிறை சென்றார். வெளியே வந்ததும், ‘கர்மயோகின்’ (ஆங்கிலம்), ‘தர்மா’ (பெங்காலி) இதழ்களைத் தொடங்கினார்.
* விடுதலையை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன் மிகக் கண்ணோட்டத்திலும் பார்த்தார். பின்னர், அரசியல் செயல் பாடுகளைத் தவிர்த்து யோக நெறியில் கவனம் செலுத்தினார். ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் 1910-ல் இவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
* கைதாவதில் இருந்து தப்பிக்க, பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு மாறுவேடத்தில் வந்தார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானம், யோகத்தில் ஈடுபட்டார். இவர்போலவே தப்பித்து அங்கு வந்த மகாகவி பாரதியுடன் நட்புகொண்டார்.
‘ஆர்யா’ என்ற ஆன்மிக மாத இதழை 1914-ல் தொடங்கினார். அதே ஆண்டில் பாண்டிச்சேரி வந்த மிர்ரா அல்ஃபாஸா (மதர்), இவரது ஆசிரமத்தில் இணைந்தார். 1943, 1950-ல் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.
* ‘சாவித்திரி: ஏ லெஜண்ட் அண்ட் எ சிம்பல்’ என்ற காவியத்தைப் படைத்தார். மேலும் பல நூல்களை எழுதினார். சீடர்களுக்கு இவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், குறிப்புகள், இவரது ஆன்மிகப் பயிற்சிகள், போதனைகள் ஆகியவை திரட்டப்பட்டு 3 தொகுதிகளாக ‘லெட்டர்ஸ் ஆன் யோகா’ என்ற நூலாக வெளியிடப்பட்டது.
* சிறந்த கவிஞர், சரித்திரப் பேராசிரியர், விடுதலை வீரர், தேசபக்தர், ஆன்மிகவாதி, தத்துவஞானி, அரசியல்ஞானி, எழுத்தாளர் என்ற பன்முகப் பரிணாமம் கொண்டவரும், யோக தத்துவத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான அரவிந்தர் 78-வது வயதில் (1950) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம் 

THANKS TO  THE TAMIL HINDU


Tuesday, August 09, 2016

உங்கள் பெயர் ரகசியம் அறிய...

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம்!
a - உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.

b - உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

c - உங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

d - உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

e - உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

f - உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

g - உங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

h - உங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

i - உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

j - J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

k - உங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

l - உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.

m - M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

n - N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

o - அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

p - உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

q - Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.

r - உங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.

s - S என்பது கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

t - உங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

u - உங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.

v - உங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

w - உங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

x - உங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

y - சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

z - உங்கள் பெயர் Z என்ற எழுத்தில் தொடங்கினால், இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி  புரிந்து கொள்வார்கள்