Monday, November 09, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

துறவி ஒருவரிடம் 
ஒருவன் வந்தான் 
ஐயா நான் 
கடுமையாக உழைத்து பொருள் ஈட்டுகிறேன் 
வீண் செலவு 
எதுவும் செய்யாமல் 
என் தாயிடம் 
தருகிறேன் என் 
தம்பிகளும் சரியான சோம்பேறிகள் எந்த வேலைக்கும் செல்ல மாட்டார்கள் ..

ஆனால் 
என் குடும்பத்தில் 
உள்ள எல்லோரும் 
என்னை குறை சொல்கிறார்கள் எல்லோருடைய தேவைகளையும் என் தலையில் சுமத்துகிறார்கள் அவர்கள் என்னை 
பற்றி குறை 
சொல்வதை கேட்கும் 
போது வாழ்க்கையே
வெறுத்து போகிறது..

 நான் என்ன 
செய்வது சொல்லுங்கள் என்றார் 
அன்பானவனே 
என்னுடன் வா 
என்று அவனை 
அழைத்துச் சென்றார் 
அங்கிருக்கும் மரங்களை
காட்டினார்..
அதில் ஒரு மரத்தடியில்
கற்களும் குச்சிகளும் 
நிரம்ப கிடந்தன
அவற்றை காட்டிய
குரு கேட்டார்
 ஏன் மற்ற 
மரங்களின் 
அடியில் அப்படி 
எதுவும் கற்கள் 
குச்சிகள் ஏதும்
கிடக்கவில்லை 
ஏன் இந்த 
மரத்தை மட்டும் 
இப்படி கிடைக்கின்றன 
என கேட்டார் ..

எனக்கு தெரியவில்லை என்றான் ..
அன்பானவனே இங்கு 
உள்ள மரங்களில் 
இந்த மரம் 
மட்டும் தான் 
கனிகளைத் தருகின்ற 
அதைப் பெறுவதற்காக 
கல்லடியும் குச்சியடியும்
பெற்று வாழ்ந்து
கொண்டிருக்கிறது..

யார் எப்போதும் 
செயல்பட்டுக் கொண்டே பயனுள்ள வாழ்வை வாழ்கிறார்களோ அவர்களை மற்றவர்கள் குறை 
சொல்வது  புறக்கணிப்பு
செய்வார்கள் 
அதை 
பொருட்படுத்தாமல் 
நீங்கள் உங்கள் 
வாழ்க்கையை பாதையில்
பயணிங்கள்..
ஒருநாள் நீங்கள்
மற்றவர்களால்
போற்றப்படுவீர்கள்...
என்றார் குரு.. 


வாங்க 
நாம்
நம்ம
கடமைய
செய்வோம்
மகிழ்வாய்
வாழ்வோம்..

இனிய 
வணக்கம்.

1 comment:

நீரோடை மகேஷ் said...

அருமையான கதை மற்றும் விளக்கம்