ஒரு
கதை
ஒரு
கவிதை
ஒரு
கருத்து
ஒருவன்
குருவை தேடி
அடர்ந்த வனத்திற்கு
உள்ளே சென்றான்.
குருவை
கண்டான்
பேசினான்
பேசிக்கொண்டே
இருந்தான்.
நேரம்
போனதே
தெரியவில்லை.
மாலை
மங்கியது
இருள் சூழ
தொடங்கியது.
" இரவு
இங்கேயே
தங்கி விட்டு செல் "
என்றார்
குரு.
" இல்லை குருவே.
முக்கிய வேலை
நான் போயாக
வேண்டும் "
என்றான்
இவன்.
இருள்
இதற்குள்
அடர்த்தியாக
ஆனது.
இவன்
இருட்டில் செல்ல
அச்சம் அடைந்து
அதே நேரத்தில்
போகவும்
எத்தனித்தான்.
இவன் மனதை
அறிந்த குரு
கைவிளக்கு
ஒன்றினை
ஏற்றி கொடுத்து...
" இதன்
ஒளியால்
நீ நடந்து செல் "
என்று
கூறினார்.
விளக்கை
பெற்று நடக்க
தொடங்கியவனை
பின் தொடர்ந்து
வந்த குரு...
அவன்
கையிலிருந்த
விளக்கினை
வாங்கி ஊதி
அணைத்து விட்டு...
" இரவல் வெளிச்சம்
துணைக்கு வராது
உன் விளக்கு
உன் இதயத்தில்.
நெஞ்சில்
துணிவிருந்தால்
விளக்கு உனக்கு
தேவையில்லை
உள்ளத்தில்
பயமிருந்தால்
உயர்வு
உனக்கில்லை
ஒளியும்
இருளும்
பாதையும்
பயணமும்
மாறி மாறி
வரும் போகும்.
தைரியமாக நீ
தொடர்ந்து செல்
பயம் நீங்கும்
பயணம் தொடரும்
பாதையும் முடியும் "
என்று
வாழ்த்தி
அனுப்பினார்
குரு.
அவரின்
வாழ்த்துகளில்
வார்த்தைகளில்
நம்பிக்கையும்
மகிழ்ச்சியும்
அடைந்த
நம்மவர்...
தொடர்ந்து
சென்றார்
பயணத்தை
முடித்தார்.
அவரின்
வார்த்தைகளை
சிரமேற்
கொண்டார்
வாழ்விலும்
வென்றார்.
ஒரு
கவிதை :::
' ஒளி
குறைந்த
வீதியில்
நடக்கும்
போதும்...
உன்
விழிகளுக்கு
வழி தெரியும்.
உன்
இதயத்தில்
தீபம்
எரிந்து
கொண்டிருந்தால் '
புது
கவிதை
நாயகன்
கவிஞர்
மு.மேத்தா
ஒரு
கருத்து :::
விதைக்கான
வெற்றி
அதன்
வீர்யத்தில்
நம்
வாழ்விற்கான
வெற்றி
நம்
நெஞ்சுறுதியில்
வாங்க.
நாம்
நம்மை
நம்புவோம்
நம்
வாழ்வில்
ஜெயித்து
காட்டுவோம்.
_*அச்சம்*_
_*என்பது*_
_*மடமையடா*_
_*அஞ்சாமை*_
_*திராவிடர்*_
_*உடமையடா*_
புதிய
நம்பிக்கைகளுடன்...
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.
நன்றி
முனை.சுந்தரமூர்த்தி.
1 comment:
கவி வரிகளும் அருமை...
Post a Comment