Tuesday, October 25, 2022

கணிதம் கற்கண்டு...1

Std.6
Subject.  Maths
Term. 2
Unit.1
எண்கள்.பாகம்.1 காணொளி
மாணவர்கள் மற்றும் ஆசிரிய நண்பர்கள் இதனை பயன்படுத்தி மறக்காமல் Subscribe செய்ய அன்போடு வேண்டுபவன்....

உங்கள் கனவு ஆசிரியர்
சேலம் ஆ.சிவா...

வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
https://youtu.be/jmQUoHV8AC0

Wednesday, October 12, 2022

உன் வாழ்க்கை ..உன் கையில்..

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், "மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார்....

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்...

அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...

தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...

" உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."
" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவழிக்காதீர்கள்....


படித்ததில் பிடித்தது
நன்றி
பகிர்வு பதிவு


Friday, October 07, 2022

வாழ்க்கை வாழ்வதற்கு...

*இறுதி விசில்*

நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன்.


நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன்.

அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான்.


நீ சோர்வடைய வேண்டாம் தம்பி என்று நான் சொன்னேன்.

சிறுவன் குழப்பமான பார்வையுடன்,
என்னை, என் 
மன உறுதியை சந்தேகிப்பவன் போல ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு,

*நடுவர் இறுதி விசில் அடிக்காத போது, நான் ஏன் மனம் தளர வேண்டும் அங்கிள் ?* என தீர்க்கமான  கேள்வி ஒன்றை கேட்டான். 

*எங்கள் அணி மற்றும்  பயிற்சியாளர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.*

 *நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு ஆட்டதை கவனித்தான்*.

உண்மையாகவே, போட்டி 5 - 4 என சிறுவன் அணிக்கு சாதகமாக முடிந்தது.

வெற்றியை அறிவித்ததும்,
அவன் என்னை நோக்கி உற்சாகமாக கை அசைத்தான்.

பின் ஒரு அழகான புன்னகையுடன் விடைபெற்றான்.

 நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் போனேன். 

 அவனது நம்பிக்கை அவ்வளவு அழகான, ஆழமான நம்பிக்கை. என்னை யோசிக்க வைத்தது.

அன்று இரவு வீடு திரும்பியதும், அவன் என்னை கேட்ட கேள்வி எனக்குள் வந்து கொண்டே இருந்தது.

*நடுவர் இறுதி விசில் அடிக்காத போது நான் ஏன் மனம் தளர வேண்டும்*?
என்ற அவன் கேள்வி என்னை உறங்க விடவிலை.


வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது....

வாழ்ந்து கொண்டு இருக்கும் போது,  நாம் ஏன் பல சமயம் சோர்வடைகிறோம்?.

நமக்கான  இறுதி விசில் ஒலிக்காதபோது நாம் ஏன் சோர்வடைய வேண்டும்?.

*உண்மை என்னவென்றால், நம்மில் பலர் இறுதி விசிலை தாங்களாகவே ஊதிக்கொள்கிறோம்.*
*ஆட்டம் முடியும் முன், மைதானத்தை விட்டு வெளியேறுகிறோம்.*

ஆனால், வாழ்க்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவும் சாத்தியம் இல்லாமல் இல்லை., 

நம்மிடம் இருக்கும் காலம் பாதியாகவோ, முக்கால் வாசியாகவோ முழுதாகவோ இருக்கலாம்.... அது முக்கியம் அல்ல.... 

*ஆனால், காலம் முடியும் முன்,நாமே விசில் அடிக்க கூடாது..*

*நம் ஆட்டதின் நடுவர் கடவுள்..*

*அவர் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள்.....*

*எனவே, இன்னும், நடுவர் இறுதி விசிலை அடிக்கவில்லை என்பதைஉணர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமான விளையாட்டை போல ரசிப்போம்...*

படித்ததில் பிடித்தது.
நன்றி...!

பகிர்வு பதிவு

Tuesday, October 04, 2022

வீரம்...சிறுகதை

ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.

அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.

அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.

அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.

மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.

இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.

அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.

அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.

புரியவில்லை” என்றார் அரசர்.

எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.

அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.

மனதை கவர்ந்தது.
நன்றி!
பகிர்வு பதிவு