Sunday, July 21, 2019

புதிய பார்வை ....புதிய கோணம்...

*புதிய பார்வை... புரிய கோணம்...

 இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி,   வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி
நண்பர்களே
நாமும்
மற்றவர்கள்
பொருள் மீது
ஆசைபடாமல்
வாழ்வோம்
வளமாக..

இனிய
காலை
வணக்கம்...

Friday, July 19, 2019

டம்..டம்..டம்...மழலைக் கதை

*டம்டம்டம் – விழியன்*

_மழலைக் கதை நேரம் – 034_

காடே உருகும் படியான அழுகுரல் கேட்டது. அது ஒரு மரத்தின் அழுகுரல் தான். அந்த மரம் காட்டின் நடுப்பகுதியில் இருந்தது. அழுகுரல் அதிகமாகிக்கொண்டே போனது. ஒவ்வொரு மிருகமாக ஒவ்வொரு பறவையாக அந்த மரத்தின் அருகே வந்தன. எல்லோரும் மரத்தை சுற்றி நின்றனர். மரத்தில் ஒரு இலை கூட இல்லை. மரத்தில் ஒரு பூவோ பழமோ இல்லை. வெறும் கிளைகள் மட்டுமே இருந்தன. அதுவும் காய்ந்து போய் இருந்தது. மரம் ஒரு சோகப்பாடலை பாடிக்கொண்டிருந்தது. அந்தப்பாடல் இது தான்

“ஊருக்கெல்லாம் வசிப்பிடமாய் நான் இருந்தேன் டம்டம்டம் டம்டம்டம்
வருவோர்க்கெல்லாம் நிழல் தந்து உதவினேனே டம்டம்டம் டம்டம்டம்
பசிக்கையிலே பழங்களையும் நான் கொடுத்தேன் டம்டம்டம் டம்டம்டம்
பூச்சிக்கெல்லாம் இலைகளையும் நான் பகிர்ந்தேன் டம்டம்டம் டம்டம்டம்
பறவையெல்லாம் தத்தி தத்தி நடக்க நானும் கிளை கொடுத்தேன் டம்டம்டம் டம்டம்டம்
எல்லாம் தந்தேன் எல்லாம் தந்தேன் டம்டம்டம் டம்டம்டம்
நான் போறேன் நான் போறேன் டம்டம்டம் டம்டம்டம்”

மரத்திற்கு வயதாகிவிட்டதால் இலைகள் குறைந்தது. தண்ணீர் குறைந்துவிட்டதால் இன்னும் இன்னும் அதன் பழங்கள், பூக்கள் குறைந்துவிட்டன.
“மரமே, என்னாச்சு. ஏன் இப்படி பாடுற” என ஆறுதலாக கேட்டது பறவை ஒன்று. “தண்ணி… தாகம் எடுக்குது பறவையாரே. பூமிக்கு அடியில் வேர் மூலமும் தண்ணீர் வரவில்லை, வானத்தில் இருந்தும் தண்ணீர் வரவில்லை. ரொம்ப தாகமா இருக்கு. தண்ணி இல்லாததால கிளைகளும் வாடுகின்றன. என் முடிவுக்காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன்” என்றது. மரத்தில் குரல் தழுதழுத்தது.

இதனைக்கேட்ட கூடி இருந்த பறவைகளும் மிருகங்களும் வருத்தம் கொண்டன. இந்த மரத்தோடு ஒவ்வொருவருக்கும் உறவு இருந்தது. ஏதோ ஒரு காலத்தில் ஒவ்வொருவருக்கும் இந்த மரம் உதவி இருக்கின்றது.

“அப்படி தனியாக விட்டுவிடமாட்டோம்” என்று சொல்லியபடி மேலே பறந்தது குருவி. தன் சின்ன அலகில் எவ்வளவு தண்ணீர் முடியுமோ அவ்வளவு தண்ணீரை பக்கத்தில் இருந்த குட்டையில் இருந்து எடுத்து வந்து மரத்தின் மீது கொட்டியது. அது மூன்று சொட்டு தான் இருக்கும். இதனைப் பார்த்த மிருகங்களும் பறவைகளும் களத்தில் குதித்தன. ஒவ்வொருவரும் தண்ணீர் எடுத்து வர ஆரம்பித்தனர். சில மிருகங்கள் கூடை போல தயாரித்து அதில் தண்ணீர் எடுத்து வர ஆரம்பித்தனர். மரத்தின் மீது கொட்டினர். மரத்தை சுற்றி தண்ணீர். புஸ்ஸ்ஸ் என திடீரென தண்ணீர். அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறியதற்காக யானை ஒன்றி தண்ணீரை தன் தும்பிக்கையில் எடுத்து வந்து பீச்சி அடித்தது. மரம் சொட்டச் சொட்ட நனைந்தது.

இருட்டத்துவங்கியது. வீட்டில் இருந்து கொண்டு வந்த பழங்களை எல்லோரும் பகிர்ந்து மரத்தை சுற்றி அமர்ந்து உண்டனர். அந்த இரவினை அங்கேயே கழிக்க திட்டமிட்டனர். ஒன்றாகவே மரத்தைச்சுற்றி உறங்கினார்கள்.

காலையில் “ஏய் இங்க பாருங்க இங்க பாருங்க” என கிளி எல்லோரையும் எழுப்பியது. மரம் பூத்துக்குலுங்கி இருந்தது. பச்சை நிறத்தில் மட்டும் இல்லாமல் பல வண்ணங்களில் இருந்தது. வெள்ளை நிறத்தில் மரமெங்கும் பூக்கள். இதற்கு காரணம் எல்லோரின் பரிவும் அக்கரையும் தான்.

ஆனால் ஆனால் மரம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்தது. “என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. என் காலம் முடிந்துவிட்டது நண்பர்களே. நீங்கள் செய்தது காலம் தாழுத்திய உதவி என நினைக்கிறேன். காட்டில் உள்ள மரங்களை காப்பாற்றுங்கள். அதுவே நீங்கள் எனக்கு செய்யப்போகும் பேருதவி” என சொல்லியபடி டமால் என மரம் விழுந்தது. எல்லோரும் அமைதியாக சுற்றி நின்றனர்.

“டம்டம்டம் டம்டம்டம்” என இசை ஒலித்தது. அதன் பின்னர் அந்த பகுதிக்கு சென்றாலே அந்த குரல் கேட்கும். அங்கே வேறு மரம் வந்துவிட்டது. காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரத்தையும் கனிவாக பார்க்க ஆரம்பித்துவிட்டன மிருகங்களும் பறவைகளும். எந்த மரத்தின் அழுகுரலும் இதுவரை கேட்கவே இல்லை.

நன்றி

விழியன்

(ஓவியம் - ப்ரவீன் துளசி)

Sunday, July 07, 2019

புதிய பார்வை...

16
வயதிலேயே
விமானம்
ஓட்ட
உரிமத்தை
வாங்கியவர்
நீல் ஆம்ஸ்ட்ராங்.

குழந்தை
பருவத்திலேயே
பறவைகள்
பறப்பதை
பார்த்து
அதிசய பட்டவர்
பிற்காலத்தில்
நம்நாட்டில்
தயாரிக்கப்பட்ட
ராக்கெட்டுகளை
வானில்
அனுப்பி
உலகையே
அதிரடித்தவர்
அப்துல்
கலாம்...

சிறு வயதிலேயே
கிரிக்கெட்டில்
பல
சாதனைகளை
செய்து
சரித்திரத்தில்
இடம்
பிடித்தவர்
லிட்டில் மாஸ்டர்
சச்சின்...

இவைகள்
கூறும்
கருத்துகள்
என்ன...

நாம்
எதனை
நினைக்கிறோமோ...

அதனை
அடைந்தே
தீருவோம்
என்பதே...

அதற்கு
தேவை...

தொடர்
முயற்சி...

உறுதியான
நம்பிக்கை...

உண்மையான
உழைப்பு...

வாங்க...

நம்ம
கனவுகளை
நனவாக்க
காரியத்தை
தொடங்குவோம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

புதிய பார்வை....

🍁🍁புதிய பார்வை🍁🍁

பண்புகளே
நமது
ஆணிவேர்...

தம் வாழ்நாளில் புன்னகைக்க மறந்த,
அதி கோவக்கார
பணக்காரர் ஒருவர்...

தான் இறந்து
போவதாகவும்,
அதற்கு பிறகு
சொர்க்கத்திற்கு
செல்வதாகவும்,
கனவு கண்டார்...

அந்த கனவில்
ஓர் அழகான வீதியில்,
அவர் நடந்து போய்
கொண்டிருந்தார்..

அந்த வீதியில்
ஒவ்வொரு வீடும்
மாளிகையாக
இருந்தது.

குறிப்பாக
ஒருவீடு மிகவும்
அழகாகவும்,
நேர்த்தியாகவும்
இருந்தது...

அவர் "அந்த வீடு யாருடையது?"
என்று கேட்டார்...

அது அவருடைய வேலைக்காரர் ஒருவருடையது என்று பதில் தரப்பட்டது...

அவர் "என்னுடைய வேலைக்காரரின் வீடே இப்படி அற்புதமாக இருக்கும் போது
என்னுடைய வீடு
இதைவிட நன்றாக
இருக்கும்" என்னும் இறுமாப்புடன்
சென்றார்...

அடுத்ததாக
ஒரு சின்ன வீடு
வந்தது...

அதற்கடுத்து
இன்னமும்
சிறிய வீடு
வந்தது...

தொடர்ந்து வந்தவை
சின்ன சின்ன வீடுகளாகவே
இருந்தது...

"நீ இந்த சிறிய வீட்டில்
தான் வசிக்க போகிறாய்"
என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது...

மிகுந்த கோபம் அடைந்த அவர் "இந்த பொந்திலா
நான்  வசிக்க போகிறேன்?" என ஆத்திரப்பட்டார்...

" நாங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் பூமியில்
இருக்கும் போது
எப்படி இருந்தீர்களோ,
என்ன பொருட்களை அனுப்பினீர்களோ அவற்றை கொண்டுதான்,
தங்களுக்கு வீடு கட்டியுள்ளோம்"
என்று சொர்கத்தின்
நிர்வாகஸ்தர்கள்
அவரிடம் சொன்னார்கள்...

கனவில் இருந்து அவர், திடுக்கென்று விழித்து கொண்டார்...

அன்றில் இருந்து பணத்தை அவர் மதிக்கவில்லை...

மனிதர்களின் குணத்திற்கு மரியாதை செய்தார்...

அவரிடம் இருந்து புறப்பட்ட புன்னகை மற்றவர்களுக்கு
தொற்றி கொண்டது...

"அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..

வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு",..

வரிகளுக்கு ஏற்ப
வாழ்ந்து பார்க்கலாம்
வாங்க...

அன்புடன்
காலை
வணக்கம்.

Saturday, July 06, 2019

அளத்தல்...ஒரு அசத்தல்...

அளவிடுதல் அறிமுகம்
------------------- ----------------
|     |
||   ||
||| |||
||   ||
|     |

ஆசிரியர் மதி புன்னகைத்தபடியே வகுப்பறைக்குள் நுழைந்தார். குழந்தைகளும் அவரைப் பார்த்து அதே புன்னகை பூத்தனர்.
“வகுப்பை ஆரம்பிக்கலாமா பசங்களா?”
“ஓ....” என்று தலையாட்டினார்கள்.

மணிகண்டனையும் கீதாவையும் வகுப்பின் மேடைக்கு வரவழைத்தார்.
“இவங்க ரெண்டு பேரில் யார் உயரம் சொல்லுங்க”
“மணி...மணி...மணி...” என்று கத்தினார்கள்
”எப்படி சொல்றீங்க்?” என்று கேட்டதற்கு பல விடைகள் கொடுத்தாங்க மாணவர்கள்.

“சரி, மணி உயரமா இல்லை எங்க வீட்ல இருக்க ராஜா உயரமா?”
ராஜா யார் என்றே மாணவர்களுக்கு தெரியாது. அப்புறம் எப்படி அவர் உயரம் தெரியும்.

“ராஜா எவ்வளவு உயரம் ?” என்று கேட்டார்கள் அனைவரும்.

“அவன் நல்ல உயரம்” என்று கூறினார் மதி.
அமைதி நிலவியது.

“இப்ப நான் ராஜாவை பார்த்திருக்கேன் அதனால் அவன் மணியைவிட உயரம்னு சொல்றேன் ஆனால் மணியையும் ராஜாவையும் பார்க்காதவங்களுக்கு அவங்க உயரத்தை எப்படி சொல்றது??”

...

“அதுக்கு தான் அளக்கனும். இப்படி நாம அளந்து அதனை செண்டி மீட்டரில் சொல்வோம். சரி ஒவ்வொருவரா வந்து நீங்க என்ன உயரத்தில் இருக்கீங்கன்னு அளவெடுப்போமா?”
“மிஸ், டெய்லர் சட்டைக்கு அளவெடுப்பாங்களே அந்த மாதிரியா?”
“அதே தான்”

ஒவ்வொருவராக வந்து அளவெடுத்துக்கொண்டார்கள். பலகையில் எல்லோருடைய உயரத்தையும் கீதா எழுதினாள். “இப்ப நம்ம வகுப்பிலேயே யார் உயரம் சொல்லுங்க?. எல்லாரும் ஒருவர் பின்னாடி ஒருவரா நிக்கனுமா?”
“இல்லை, நாங்க பலகையை பார்த்தே சொல்றோம்” என்று கரும்பலகையில் இருந்த அதிகமான எண்ணை கூறினார்கள். யார் குறைவான உயரம் என்பதற்கு இருவர் அதே உயரத்தில் இருக்கின்றார்கள் என்றும் மாணவர்கள் கூறினார்கள்.

“சரி, நம்ம வகுப்பில சாராசரி உயரம் என்ன சொல்லுங்க?”
“அப்படின்னா என்ன மிஸ்?” என்றான் மணி
“ஓ, அப்படின்னா அதை தனியா கவனிப்போம். இப்ப நாம அளவிடுவதில் கவனம் செலுத்துவோம்”

ஒரு கை வகுப்பில் உயர்ந்தது. “மிஸ், நான் ஸ்கேல் வாங்க போனப்ப கடைக்காரர், உனக்கு ஒரு அடி ஸ்கேல் வேணுமா அரை அடி ஸ்கேல் வேணும்னான்னு கேட்டார், அப்படின்னா என்ன மிஸ்”

“எல்லோரும் இவனுக்கு கைத்தட்டுங்க” கைத்தட்டப்பட்டது.

“நான் கூட கேக்கனும்னு இருந்தேன் மிஸ்” என்று எழுந்தான் சங்கர்.

“கேள்வி இருந்தா கேட்டுடனும். உள்ளே வெச்சிருந்தா ஒழுங்கா கத்துக்கமுடியாது. சரி அரை அடின்னா என்னா ஒரு அடின்னா என்ன? இந்த அளவிடுதல் எல்லாம் ஒரு மொழி போல. உங்களுக்கும் எனக்கும் தமிழ் புரியிற மாதிரி எல்லாத்துக்கும் புரியிற மொழி. எங்க போய் 10 செண்டிமீட்டர்ன்னு சொன்னாலும் அதே அளவில தான் இருக்கும். அதே போல அடி என்பதும் ஒரு மொழி. செண்டிமீட்டரை தமிழ்ன்னு வெச்சிகிட்டா அடியை ஆங்கிலம்னு வெச்சிப்போம். அடியையும் செண்டிமீட்டர் கணக்கில் மாத்தலாம்.

30 cm = 1 அடி.

“ஆமாம் மிஸ், இந்தப்பக்கம் 15 செண்டிமீட்டர் இருக்கு அப்ப இது அரை அடி ஸ்கேல்” என்று தன் அரை அடி ஸ்கேலை எல்லோருக்கும் காட்டினான்.

“மிகச்சரியா சொன்ன. இப்ப இன்னும் குட்டியா இருக்க பொருட்களை எல்லாம் மீல்லி மீட்டரில் அளப்பாங்க. பெருசா இருக்க அளவுகளை மீட்டரில் அளப்பாங்க. நம்ம வகுப்பறையில் நீளம் எவ்வளவுன்னு கேட்டா நீங்க எந்த அளவில் சொல்லுவீங்க?”
“மீட்டர்...”

நன்றி...

- விழியன்
#நான்_ஒரு_கணக்குப்_பைத்தியம்

Tuesday, July 02, 2019

புதிய பார்வை...

🍁🍁புதிய பார்வை🍁🍁

நமது வீட்டில் தினமும் அழுகும்   காய்கறிகள்,கனிகள், பொருட்களை, போட்டு
வைக்க ஒரு குப்பை கூடையை பயன்படுத்தி வருகிறோம்.

அப்படியே
விட்டுவைத்தால், வீடு நாற்றமடித்து விடும் என்பதால், அதனை 
அகற்றியும் விடுகிறோம்.

நம் எல்லோரிடமும்,
மனதில் அப்படியொரு
குப்பை கூடை இருக்கிறது.

அதனுள்
விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை...
என பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்,
நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சி தென்றலை, நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய மனதில் யார் மீதோ இருக்கும் தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்று
கொண்டு, ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள், நிரம்பி இருக்கின்றன.

அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.

வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றி
குடித்தனம்
நடத்துபவர்களும்
இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால்...

அவற்றின் அழுகல் நாற்றம்...

உதடுகளின் வழியே சொற்களாகவும்,
கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு...

நம் மன நிம்மதியை தொலைக்க, நாமே காரணமாக அமைந்து விடுகிறோம்.

வீட்டில் இருக்கும் குப்பைகளை தினசரி வெளியே கொட்டுவதை போல...

நம்
மன குப்பைகளை,
தினமும்
அகற்றும் போது...

நம் மனமும்
மணம் வீச
தொடங்கும்...

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்.