Tuesday, March 29, 2016

அப்பா என்ற அபூர்வம்....


                       --------------------

                  அப்பாக்கள்  :
                  -------------------------
 
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.

வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ ,  யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

அப்பாக்கள் :

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்

அப்பா:
தூய்மையான
அன்பு,

போலியற்ற
அக்கறை,

நேர்மையான வழிகாட்டல், 

நியாயமான
சிந்தனை, 

நேசிக்கத்தக்க உபசரிப்பு, 

மாறுதலில்லா நம்பிக்கை, 

காயங்களற்ற
வார்த்தை,  

கம்பீரமான
அறிவுரை,

கலங்கமில்லா
சிரிப்பு,

உண்மையான
அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து 

செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய் 
தோள் கொடுப்பவர் அப்பா.

அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள  அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர்.
இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே  தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர்.

வாழ்த்துக்கள் தந்தையர்களே.
-----------------------------------------

மணி போல"!.

Siva03. /29.3.16
" மணி போல"!.

ஒரு ஜென் மாஸ்டர். அவரிடம் பல மாணவர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.
சில மாதங்கள் கழித்து, ஒரு மூதாட்டி அவருடைய ஆசிரமத்துக்குள் கோபமாக நுழைந்தார். ‘யோவ் வாத்யாரே, நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா?’ என்று கூச்சல் போட ஆரம்பித்தாள்.
‘அம்மா, கோபப்படாதீங்க, என்ன விஷயம்? நிதானமாச் சொல்லுங்க!’ என்றார் ஜென் மாஸ்டர்.
’என் மகனும், அவனோட சிநேகிதனும் ஒரே நாள்லதான் உங்க ஆசிரமத்துல சிஷ்யர்களாச் சேர்ந்தாங்க’ என்றார் அந்த மூதாட்டி. ‘ஆறு மாசமா ரெண்டு பேரும் ஒரேமாதிரிதான் படிக்கறாங்க. ஆனா இன்னிக்கு, என் மகனைவிட அவனோட சிநேகிதன் அதிக புத்திசாலியா இருக்கான், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுவெச்சிருக்கான், இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’
‘என்ன அர்த்தம்? நீங்களே சொல்லுங்களேன்!’
’நீங்க உங்க மாணவர்கள் மத்தியில பாரபட்சம் காட்டறீங்க, ஒரு பையனுக்கு நல்லாச் சொல்லிக்கொடுத்துட்டு இன்னொரு பையனை ஒதுக்கறீங்க!’
ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘அம்மா, கோயில்ல ஒரு மணியைக் கட்டியிருக்கோம், அதை நீங்க மெதுவா அடிச்சா கொஞ்சமா சத்தம் கேட்கும், பலமா அடிச்சா ரொம்ப தூரத்துக்குக் கேட்கும். இல்லையா?’
‘ஆமா, அதுக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்?’
‘குரு-ங்கறவர் அந்த மணியைப்போலதான், மாணவன் எந்த அளவு சிரத்தை எடுத்துகிட்டுப் படிக்கறானோ, அந்த அளவு அவனால அந்த குருவைப் பயன்படுத்திக்கமுடியும், அவர்கிட்டேயிருந்து விஷயங்களைக் கிரகிச்சுக்கமுடியும், இதையெல்லாம் செய்யாம சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியும். புரியுதா?’....

Monday, March 28, 2016

மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம்  இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

1.
ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

2.
ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக்
கொண்டே இருக்கவேண்டும்.

3.
வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல்,மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

4.
வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.

5.
மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல்,
கலை,
இலக்கிய ,
சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.

6.
மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு  என்பது வகுப்பறையைத்
தாண்டி  நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும், காலத்தோடு தேவையான நல்ல  வழி காட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.

8.
ஓவியம்,
கலை,
பேச்சு,
பாட்டு ,
நடனம்,
பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

9.
தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள்,
அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும்.(கட்டாயம் இல்லை)

10.
எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ!
அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

11.
எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும்,ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது

12.
கணிணி,
குறுந்தகடு(CD),
அடர்தகடு(DVD),
வலைத்தளம்,
கட்செவி,
சுட்டுரை,  மின்னஞ்சல்,
செய்தித்தாள்கள் ,
காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு
கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.

13.
நாம் பணியாற்றும் பள்ளியும்,
நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.

14.
நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம். எனபதை அம்மாணவனால் அடையாளப்படுத்தும் போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??

15.
விதைத்தவன் உறங்கினாலும்,  விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர்களாகவே இருப்போம்....

நன்றி
அன்புடன்
சிவா....

மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம்  இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

1.
ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

2.
ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக்
கொண்டே இருக்கவேண்டும்.

3.
வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல்,மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

4.
வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.

5.
மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல்,
கலை,
இலக்கிய ,
சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.

6.
மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு  என்பது வகுப்பறையைத்
தாண்டி  நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும், காலத்தோடு தேவையான நல்ல  வழி காட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.

8.
ஓவியம்,
கலை,
பேச்சு,
பாட்டு ,
நடனம்,
பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

9.
தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள்,
அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும்.(கட்டாயம் இல்லை)

10.
எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ!
அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

11.
எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும்,ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது

12.
கணிணி,
குறுந்தகடு(CD),
அடர்தகடு(DVD),
வலைத்தளம்,
கட்செவி,
சுட்டுரை,  மின்னஞ்சல்,
செய்தித்தாள்கள் ,
காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு
கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.

13.
நாம் பணியாற்றும் பள்ளியும்,
நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.

14.
நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம். எனபதை அம்மாணவனால் அடையாளப்படுத்தும் போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??

15.
விதைத்தவன் உறங்கினாலும்,  விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர்களாகவே இருப்போம்....

நன்றி
அன்புடன்
சிவா....

Thursday, March 24, 2016

ஒரு ரூபாயில் லேப் டாப்,.......

ஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம்

 laptop

டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. 

இந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது. 

டெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.டெல் இன்ஸ்பைரான் 15 3551 

இதன் விலை ரூ.19,399 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 4 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ் 

டெல் இன்ஸ்பைரான் 15 3541 

இதன் விலை ரூ.19,417 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஏஎம்டி கோர் ஏ6 பிராசஸர் 4 ஜிபி ரேம் 2 ஜிபி கிராஃபிக்ஸ் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்.

Tuesday, March 22, 2016

FA (a) activities . 8th std.

10 Standard English paper-1 Answer key

SSLC English first paper key:
1. Interest, victim, struggle, difficult task, private.
2. Clean, visible, rare, internal, fast.
3. Local area network
4. Mission
5.neighbor
6. Waterfall
7. Strata
8. Hyperactive
9. Give up
10. Ar- ti- cu- late
       Bit- ter
       Sym- pa_ thise
11. Listened
12.it is migrant bird
13. My decision is to join the arts college
14. We barely have enough water. 15.he would help the needy
16. Svoc
17.can she,?
18. As strong as
19. A fish cannot survive on land
20. Because of
21. Learn
22.of being
23. The
24. On
25. The lid of the bottle is too tight to open it.
26. The portions were completed by the teacher and a test was conducted by him.
27. The blind lady said to the student, " please help me to cross the road ".
28. If it rains, I will get wet.
29. James is elder than Siva
30. "An amazing model?"shouted Trevor at the top of his voice.
40.Dull and Grey
41. Hard work
42.being in dream world without action
43. Poet
44.migrant Bird
45. Minute- in it
Run- son
46. Betray- back- belong
47. Simile
48. Abab
49. Onomatopoeic

Monday, March 14, 2016

10 ஆம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு...

🌺🌺�நாளை பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவக் கண்மணிகளுக்காக
ஒரு கவிதை:
து.ராமராஜ்👍�💪🙏

🌺💪தம்பி ...
பாடங்களை பயின்றிடு....🖋

🌺💪உன்னை நம்பி
தமிழ் என்றும் தாய்மொழி என்றும்
தள்ளி விடாதே ...
தனி கவனம் கொடுத்து விட
மறந்து விடாதே...!!👍�

🌺💪ஆங்கிலத்தை அயல் மொழி என்று
ஒதுக்கி விடாதே...
அதுவும் ஓர் பாடம் என்று
மறந்து விடாதே...👍�

🌺💪கணிதத்தைக் கஷ்டம் என்று
கருதி விடாதே....
அது ஒரு கண் என்பதை
மறந்து விடாதே ...👍�

🌺💪அறிவியலை அறுவை என்று
நினைத்து விடாதே....
நாலும் அறிவதற்கு அதுவோர்
பாலமென மறந்துவிடாதே...👍�

🌺💪வரலாறு புவியலை
வெறுத்து விடாதே...
வரலாறு உனைப்புகழ அதைநீ
பயில மறந்துவிடாதே...👍�

🌺👍💪பாடம் எல்லாம் பயின்றுவிட்டால்
நீ ஓர் பல்கலைக்கழகம்...👍�

👉பாடத்தை வெறுத்து விட்டால் அது
உனக்கே நீ தோண்டிக்கொள்ளும்
பள்ளம்..👍�

⏩⏩⏩⏩நாளை (15.3.16)
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து இயக்க உறவுகள் மற்றும் அனைத்துவகை ஆசிரிய சொந்தங்களின் வாரீசுதாரர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி 
மாநிலம்
மாவட்டம்
பள்ளியில்
முதல் மாணவ மாணவிகளாக திகழ
இதயப்பூர்வ வாழ்த்துக்கள்
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
அன்புடன்
சிவா...

Wednesday, March 09, 2016

தமிழரின் கணக்கதிகாரம்......

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
தமிழரின் கணக்கதிகாரம்......

ஓர் பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால்
கூற முடியுமா ?

ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்

கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்

ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.

அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்

அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்...

திருக்குறள் உலகப்பொது மறை...

திருக்குறள்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி
ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை
நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்ககால
நிலத்திணைகள்
சங்க காலப் புலவர்கள் சங்ககாலப் பெண் புலவர்கள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் பா உ தொ
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ்
மொழி இலக்கியமாகும் . உலகபொதுமறை, பொய்யாமொழி,
வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம்,
தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள்
அழைக்கப்படுகிறது. [1] இதனை இயற்றியவர்
கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும்
இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும்
திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார். [2] திருக்குறள் சங்க
இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு
எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில்
இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.
மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும்
இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும்
தேவையான அடிப்படைப் பண்புகளை
விளக்குகிறது. எதுவிதத்திலும்,
திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது
பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன்
இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
இதில் ‘தேவர் குறள்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும்,
குறள், திரு நான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்‘
எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள்
தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத
நிலை தொடர்கிறது.
திருக்குறள் நூலானது வடமொழியில் எழுதப்பட்டவைகளின்
அடிப்படையில் இயற்றப்பட்டது என ஒரு சாராரராலும்,அது
திருவள்ளுவனின் சுய சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில்
இயற்றப்பட்டது என மற்றொரு சாராராலும் கருதப்படுகிறது.
மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள் உலகின் பல்வேறு
சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு,
அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப்
பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.
வரலாறு
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக
வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000
ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது.
மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில்
ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும்
பயன்படுத்தப் படுகின்றது. இதன் அடிப்படையில்,
”திருவள்ளுவர் ஆண்டு” என்பது பொது
ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
[3]
பெயர்க்காரணம்
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும்
வெண்பா வகையைச் சேர்ந்தவை.
அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய
முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள்
வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் அதன் உயர்வு
கருதி "திரு" என்ற அடைமொழியுடன்
"திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது.
எதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள்
(meaning) எவை என்பதை இன்றுவரை தமிழ்
வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம்,
முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன்
உரியிலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய
சூத்திரத்தையும், அதற்கு
நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த
உரைகளையும் சரியாக விளங்கி, ஒர தமி்ச் சொல்
எக்கடிப் பொருள் உணர்த்துகிறது
என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.
குறளானது ஈரடிகளில் உலகத்
தத்துவங்களை சொன்னதால், இது
‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும்
முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும்
அழைக்கப்படுகிறது.
பிற பெயர்கள்
1. உத்தரவேதம்
2. பொய்யாமொழி
3. வாயூரை வாழ்த்து
4. தெய்வநூல்
5. பொதுமறை
6. முப்பால்
7. தமிழ் மறை
8. ஈரடி நூல்
9. வான்மறை
நூலின் அமைப்பு
இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய்
(முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும்,
கோர்த்தும் விளக்குகிறது.
நூற் பிரிவுகள்
திருக்குறள் அறம், பொருள் , இன்பம் ஆகிய மூன்று பால்களும்
கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய
இவை ஒவ்வொன்றும் " இயல்" என்னும் பகுதிகளாக மேலும்
பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட
எண்ணிக்கையான அதிகாரங்களைக்
கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும்
பத்து பாடல்களைத் தன்னுள்
அடக்கியது.ஆனால், குறளின் அதிகாரங்கள் ஊன் 10
குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான
விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.
திருக்குறளில் "பாயிரம்" என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள்
வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது , "கடவுள்
வாழ்த்து" என்னும் அதிகாரம்.
அதைத்தொடர்ந்து, "வான் சிறப்பு",
"நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய
அதிகாரங்கள்.
அறத்துப்பால்
திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத்
தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன்
"இல்லறவியல்" அடுத்து 13 அதிகாரங்ள் கொண்ட
துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம்
கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப்
பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம்
உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. முதற்பாலாகிய
அறத்துப்பாலில் மொத்தம் 34 அதிகாரங்கள்.
பொருட்பால்
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல்,
அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன.
அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில்
32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக
மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
காமத்துப்பால்
கடைசிப்பாலாகிய "காமத்துப்பால்" அல்லது
"காமத்துப்பாலி"ல் களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7
அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக
மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம்
9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில்
திருவள்ளுவர் பாடியுள்ளார்.
திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில்,
அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள்
கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார்
பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு
உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு
கட்டுப்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டதாகவும் உள்ளது.
திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்
திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற
எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக
அமைக்கப்பட்டு, அந்த எண்களின்
இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண்
வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133
இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண்
7ஆக வரும் விதத்திலேயே நூல்
அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு
மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது
7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம்
கொடுக்கும் விதத்தில்தான்
அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்,
திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற
எண்களுக்கும் முக்கியத்துவம்
கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது.
இவை தற்செயலாக நடைபெற்றதா?
இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும்
தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா?
இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு
குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம்
பெறுவதாக இருந்தால், அது எது
என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து,
எதனையும் கூறவில்லை.
மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில்
வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில்
வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது
போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா,
இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு
வரப்படவில்லை.
திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை
திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அறத்துப்பால்
(1-38)
பாயிரம்
1. கடவுள்
வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார்
பெருமை
4. அறன்
வலியுறுத்தல்
இல்லறவியல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத்
துணைநலம்
7. மக்கட்பேறு
8.
அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை
கூறல்
11. செய்ந்நன்றி
அறிதல்
12.
நடுவுநிலைமை
13. அடக்கம்
உடைமை
14. ஒழுக்கம்
உடைமை
15. பிறன் இல்
விழையாமை
16. பொறை
உடைமை
17. அழுக்காறாமை
18.
வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை
அச்சம்
22. ஒப்புரவு
அறிதல்
23. ஈகை
24. புகழ்
துறவறவியல்
25. அருள்
உடைமை
26. புலால்
மறுத்தல்
27. தவம்
28. கூடா
ஒழுக்கம்
29. கள்ளாமை :
30. வாய்மை
31.
வெகுளாமை
32. இன்னா
செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய்
உணர்தல்
37. அவா
அறுத்தல்
ஊழியல்
38. ஊழ்
பொருட்பால் (39-108)
அரசியல்
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத்
துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து
செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து
தெளிதல்
52. தெரிந்து
வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56.
கொடுங்கோன்மை
57. வெருவந்த
செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம்
உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை
உடைமை
63. இடுக்கண்
அழியாமை
அமைச்சியல்
64. அமைச்சு
65. சொல்வன்மை
66.
வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை
செயல்வகை
69. தூது
70. மன்னரைச்
சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை
அஞ்சாமை
அரணியல்
74. நாடு
75. அரண்
கூழியல்
76. பொருள் செயல்வகை
படையியல்
77. படைமாட்சி
78.
படைச்செருக்கு
நட்பியல்
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84.
பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம்
தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப்
பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து
குடியியல்
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண்
உடைமை
103. குடி
செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை
காம
உள்ளடக்கம்
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால்,
அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்:
திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல்,
பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்
மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம்
கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல்
"உலகப் பொது மறை" என்றும்
அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுக் குறள்கள்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." (திருக்குறள் - 423)
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு." (திருக்குறள் -
392)
"உடுக்கை இழந்தவன் கைபோல
ஆங்கே
இடுக்கண் களைவதாம்
நட்பு." (திருக்குறள் - 788)
உரைகள்
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில்
புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப்
பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.
தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.
திருக்குறளுக்குப் மு. கருணாநிதி , சாலமன் பாப்பையா
உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள்
சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார்
அவர்களது நூலாகும்.
உலக மொழிகளில் திருக்குறள்
ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730ல்
திருக்குறளை அறிமுகப்படுத்தியவர்
தந்தை பேஸ்ச்சி (Father Beschi) ஆவார். [4]
திருக்குறள் கருத்துக்களை (Extracts

தமிழ் அன்புடன்
சிவா...