Friday, May 01, 2020

மே தினம் ..புதிய பார்வை...புதிய கோணம்...

* உழைப்பு
உடலை
பலப்படுத்தும்.

கஷ்டங்கள்
மனதை
பலப்படுத்தும்.
- பிளமிங்

* பத்து
விரல்களும்
பதறாது
உழைத்தால்...

அஞ்சு விரலால்
அஞ்சாது
தின்னலாம்.
- டாலிராண்ட்

* அளவற்ற
உழைப்பைத்தான்
மேன்மை
என்கிறோம்.
- லாங்பெல்லோ

* கடுமையான
உழைப்பைத் தவிர,
வெற்றிக்கு ரகசியம்
வேறு இல்லை.
- டர்னர்

* ஏழ்மை என்ற
நோய் அகல
வேண்டுமானால்,
உழைப்பு என்ற
மருந்தைக் கொடு.
- எமர்சன்

* உழைக்கும்
மனிதனின்
உறக்கம்
இனிமையானது.
- ராபர்ட் சப்ரிசா

* உழைப்பு
இல்லாமல்
வெற்றி
கிடைக்காது.
- ஜேம்ஸ் ஆலன்

* கடினமான
உழைப்பு,
தெய்வ
வழிபாட்டுக்கு
சமம்.
- லால் பகதூர் சாஸ்திரி

* சோம்பல்,
தீய பழக்கம்,
வறுமை
ஆகிய மூன்று
தீமைகளை
உழைப்பு
களைகிறது.
- வால்டேர்

* அடிமையை போல
உழைப்பவன்,
அரசனை போல
உண்பான்.
- கதே

* உழைப்பு
வறுமையை
மட்டுமல்லாமல்,
தீமையையும்
விரட்டுகிறது.
- வால்டேர்

* செல்வத்தை
உண்டாக்குவது
உழைப்பு.

உலகத்தை
இயக்குவதும்
அதுவே.
- வெப்ஸ்டர்.

உழைப்பாளர்
தின
வாழ்த்துக்கள்.

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: