Friday, May 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁 புதிய பார்வை  🍁🍁

அமெரிக்க நாட்டில்
மிசிசிபி பகுதியில்
தனியாக வாழ்ந்த
அன்னைக்கு பிறந்தவர்.

தன் ஒன்பது வயதில்
பாலின வன்முறைக்கு பலியானவர்.

பதினான்கு வயதில்
திருமணம் ஆகுமுன்பே
தாய்மை அடைந்தவர்.

குறைபிரசவத்தில்
தன் குழந்தையை
இழந்தவர்.

பத்தொன்பது வயதில்
உள்ளூர் வானொலியில்
செய்திகளை தொகுத்து
தரும் பணியில் சேர்ந்தார்.

திறமையின் காரணமாக
பகல் நேர அரட்டை நிகழ்ச்சிகளை நடத்தும்
பொறுப்பினை ஏற்றார்.

இவரின் அபார
பேச்சு திறனால்
அந்த நிகழ்ச்சியின்
தயாரிக்கும் பொறுப்பு
இவரை தேடி வந்தது.

மூன்றாம் தரத்திலிருந்து,
முதல் தர நிகழ்ச்சி தயாரிப்பாளராக
உருவெடுத்தார்.

இவர் நடத்தும் 'ஓப்ரா
வின்ஃப்ரே ஷோ' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி...

உலக தொலை காட்சி வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளை
பெற்று பல விருதுகளை
வென்று சாதனை படைத்தது.

இவரின் இந்த வளர்ச்சி
மிக பெரிய செல்வந்தராக
இவரை உருமாற்றியது.

உலக கறுப்பின மக்களில்
'முதல் பணக்காரர்' இவர்.

அதே நேரத்தில்
கறுப்பின மக்கள்
பிரிவில் 'மிக பெரிய
வள்ளலாகவும்' இவர் அறியப்படுகிறார்.

இவர் செய்து வருகின்ற
தர்ம காரியங்கள் உலகம் புகழும் வகையில் இன்றுவரை
தொடர்கிறது.

'இருபதாம் நூற்றாண்டின்  இணையற்ற பெண்களில்  இவரும் ஒருவர்' என
பிரபல பத்திரிக்கை இவரை
அங்கீகரித்துள்ளது.

'யேல்'பல்கலை கழகம்
இவரது நிகழ்ச்சிகளை
ஆராய்ச்சி செய்து...

'பாதிக்க பட்ட மக்களின்
தயக்க உணர்வுகளை
தூக்கியெறிய முன்நின்றவர்' என்னும் பெருமையை இவருக்கு வழங்கியுள்ளது.

இவர்
'ஓப்ரா கைல் வின்ஃப்ரே'.

வாங்க...

நமக்கும் நமது வாழ்வில் துன்பங்கள் துயரங்கள்
இருக்கலாம்.

அவைகளை நினைத்து நினைத்து வருந்துவதை
விட..

அவைகளை புறந்தள்ளி
வெற்றி காணுவது தான் புத்திசாலித்தனம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: