Thursday, May 21, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁புதிய பார்வை🍁

ஒரு கிராமத்தில்
அண்ணன் தம்பி
இருவரும்
ஒற்றுமையாக
விவசாயம் செய்து
வந்தனர்.

அண்ணனுக்கு
திருமணம் ஆகி
ஒரு குழந்தையுடனும்

தம்பிக்கு
இன்னமும்
திருமணம்
முடியாமலும்

தனித்தனி வீட்டில்
வசித்து வந்தனர்.

இந்நிலையில்
தந்தை இறந்தார்.

சகோதரர்கள்
நிலத்தை பாகம்
பிரிக்காமல்
சாகுபடி செய்து
வந்தனர்.

அறுவடைகாலம்
முடிந்து இருபது
மூட்டைகள்
வந்தது.

அண்ணன் தம்பி
இருவரும்
மூட்டைகளை
சமமாக பிரித்து
வீட்டிற்கு எடுத்து
சென்றனர்.

இரவு
பதினோரு மணி...

தம்பிக்கு தூக்கம்
வரவில்லை.

'நான் ஒருவன்
மட்டும் தான்.

அண்ணனுக்கு
மனைவி குழந்தை
என இருவர் கூட
உள்ளனர்.

சமமாக பாகம்
பிரித்தது  தவறு'
என்னும்
எண்ணத்தில்...

ஐந்து மூட்டைகளை
யாருக்கும்
தெரியாமல்
அண்ணன் வீட்டு
திண்ணையில்...

போட்டு விட்டு வந்து
நிம்மதியாய் தூங்கி
போனான்.

இரவு
பனிரெண்டு மணி.

அண்ணனுக்கு
புரண்டு புரண்டு
படுத்தாலும்
தூக்கம்
வரவில்லை.

'நாமோ
திருமணமாகி
மனைவி குழந்தை
என இருக்கிறோம்.

தம்பிக்கு இன்னும்
திருமணம் கூட
நடக்க வில்லை.

அவன்
திருமணத்திற்கு
பணம் தேவைப்படும்'
என்னும் நினைப்பில்...

ஐந்து மூட்டைகள்
எடுத்து கொண்டு
சந்தடியில்லாமல்...

தம்பி வீட்டு
திண்ணையில்
போட்டுவிட்டு
வந்து...

நிம்மதியாக
தூங்கி போனான்
அண்ணன்.

விடிந்ததும்
அவரவர் வீட்டு
திண்ணையில்
இருக்கும்
மூட்டைகளை
பார்த்து அதிர்ச்சி
அடைந்தனர்.

நடந்தது என்ன
என ஊகம்
கொண்டனர்.

மகிழ்ச்சி
அடைந்தனர்.

இது
கதையல்ல.

நடந்த
நிகழ்வுகள் தான்.

உண்மையான
அன்பு...

மேடு பள்ளம்
பார்ப்பதில்லை.

லாப நட்டம்
காண்பதில்லை.

'அதெல்லாம்
அந்த காலம்.

இந்த
காலத்திற்கு
இதெல்லாம்
சரிப்பட்டு வராது'

என்று பலர்
சொல்லுவார்கள்.

Water pollution
Air pollution
போல...

இன்று
மக்களுக்கு
Mind pollution
ஆகி விட்டது
என்பதே
நிஜம்.

உன்னதமான
அன்பை விட
உண்மையான
பாசத்தை விட...

உலகத்தில்
பெரியது
ஏதுமில்லை.

ஆனால்
அன்பை
இழந்து...

நல்ல
பண்புகளை
மறந்து...

நாம்
வாழும் வாழ்வு...

பார்க்கும்
போது
பூத்து
குலுங்குவது
போல
இருந்தாலும்...

உண்மையில்
அது
வறண்ட
பாலை நிலமே.

வாங்க...

சுற்றியுள்ள
மக்களிடம்
அன்பு
செலுத்துவோம்.

நற்பண்புகள்
விளைந்து
நாடு நலம் பெற
விதை போட
தொடங்குவோம்.

அன்புடன்
இனிய
மாலை
வணக்கம்.

2 comments:

KILLERGEE Devakottai said...

நல்ல கருத்து ரசித்தேன்.
கருத்துரையை திறந்து விடும் பழக்கம் இல்லை என்றால் கருத்துப்பெட்டி எதற்கு ?

Unknown said...

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்து பிஞ்சு மனதில் விதைத்தால் அறுவடை நன்றாக இருக்கும் நன்றி🙏