Friday, May 08, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

குரு தம் சீடர்களை
அழைத்து அதில்
மூன்று பேரை
தேர்ந்தெடுத்தார்.

"நீங்கள்
தேவையான
தகுதிகளை
பெற்று
விட்டீர்கள்...

இனி நீங்கள்
உங்கள் வழியில்
செல்லலாம்...

மக்களுக்கு
எந்நாளும்
நல்லது
செய்யுங்கள்"
என வாழ்த்தி
அனுப்பினார்.

அந்த மூன்று
சீடர்களும்
ஒன்றன் பின்
ஒருவராக
குடிலை விட்டு
கிளம்பினர்.

சில மைல்
தொலைவில்
ஒரு  கிராமத்திற்கு
செல்லும் வழியில்
முட்கள் அடங்கிய
சிறு சிறு கிளைகள்
சாலை முழுவதும்
இறைந்து கிடந்தன.

முதலில் வந்த சீடன்
கிளைகளை தாண்டி
தாண்டி சென்று
கொண்டிருந்தான்...

இரண்டாவது வந்த
சீடன் தான் செல்ல
கூடிய பாதையை
அடைத்து
கொண்டிருந்த
கிளைகளை
சற்று ஒதுக்கி
அதன் பின்
சென்றான்...

மூன்றாவது சீடன்
பாதையில் இருந்த
முட்கள் அடங்கிய
கிளைகளை தன்
கையினால் ரத்தம்
சொட்ட சொட்ட
சாலை ஓரமாக
முழுவதுமாக
அப்புறப்படுத்தி
அதன் பிறகு
சென்றான்...

அந்த மூன்று
சீடர்களும்
'வெளியில்
எவ்வாறு நடந்து
கொள்கிறார்கள்'
என்பதை
கவனிக்கும்
பொருட்டு...

குரு
அவர்களை
பின் தொடர்ந்து
சென்று இவைகளை
கண்டார்...

சற்று நேரத்தில்
அவர்களை
முந்தி சென்று...

"நீங்கள் மூவரும்
இன்று மாலை
நம் குடிலுக்கு
திரும்புங்கள் "
என்று கட்டளையிட்டு 
சென்றார்...

அவர் கூறியது
போலவே சீடர்கள்
குடிலுக்கு திரும்பினர்.

மாலை
பொழுது வந்தது.

முதல் இரு
சீடர்களையும்
அழைத்த குரு...

"இன்று காலை
நீங்கள் செல்லும்
வழியில் இருந்த
முட்களை எவ்வாறு
கையாண்டீர்கள்
என்று பார்த்தேன்...

மக்கள் நடந்து
செல்லும் பாதையில்
இருந்த முட்களை
அப்புறப்படுத்தாமல்...

'நீங்கள் மட்டும்
போனால் போதும்'
என்னும் சுயநல
போக்கில்
செயல்பட்டீர்கள்...

நம்மை சுற்றியுள்ள
மக்களுக்கு நல்லது
செய்ய வேண்டும்
என்னும் எண்ணம்...

உங்களுக்கு
இன்னமும்
வரவில்லை...

அந்த நற்குணங்கள்
உங்கள் இதயத்தில்
படியும் வரை...

இன்னும்
கொஞ்சநாள்
இங்கேயே இருங்கள்"
என்று கட்டளை இட்டார்.

அடுத்து...

மூன்றாம் சீடரை
அழைத்து...

"சமூகத்தின் பால்
உனக்கு அக்கறை
அதிகம் உள்ளது..

உன்னை போன்ற
மனிதர்களால் தான்
இந்த உலகம்
செழுமை பெரும்...

இதை போலவே
என்றும் மக்களை
நேசித்து வாழ்வாயாக"...

என்று
ஆசிகள் கூறி
அனுப்பி வைத்தார்.

'உள்ளம்
தெளிவாக வை...

எண்ணம்
உயர்வாக வை...

வாழும் காலம்
எல்லாம்...

மண்ணில்
மரியாதை வை'...

என்னும்
வரிகளுக்கு
ஏற்ப...

வாங்க...

நம்மை
சுற்றி உள்ள
சமுதாயத்திற்கு,
நல்லது செய்ய
தொடங்கலாம்...

மக்கள் நலம்பெற
நாடு வளம் பெற
புதிய பூமியை
படைக்கவும்
செய்யலாம்...

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம*்.

நன்றி
முனைவர்.சுந்தரமூர்த்தி

3 comments:

Unknown said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா. நன்றி

Unknown said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா. நன்றி

KILLERGEE Devakottai said...

அருமையான வாழ்வியல் தத்துவத்தை குரு-சிஷ்யர்கள் கதை மூலம் அழகாக உணர்த்தி விட்டீர்கள் நன்றி ஐயா.
-கில்லர்ஜி