Sunday, May 31, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

ஒரு
சொல்
மற்றவர்
வாழ்க்கையை
புரட்டி போடும்
தன்மையை
உடையது.

நாம்
உதிர்க்கும்
சொல்...

ஆளை
கொல்லும்
விஷமாக
இல்லாமல்...

அன்பை
பரப்பும்
விதையாக
இருக்கட்டும்.

மனதை
குத்தும்
முள்ளாக
இல்லாமல்...

மனதை
மயக்கும்
மலராக
மணக்கட்டும்.

அடுத்தவர்
வாழ்வு அழிய
கூடியதாக
இல்லாமல்...

அவர் 
குடும்பம்
ஜொலிக்கும்
ஒளியாக
அமையட்டும்.

அகன்அமர்ந்து 
ஈதலின் நன்றே 
முகனமர்ந்து
இன்சொலன் 
ஆகப் பெறின்.

உள்ளம் 
மகிழ்ந்து 
கொடுக்கும் 
பொருளுதவியை
விடவும்...

முகம் 
மலர்ந்து 
சொல்லும்... 

இனிமையான 
வார்த்தை 
சிறந்தது.

இது
ஐயன்
வள்ளுவனின்
வாக்கு.

வாய்ப்புகளும்
வார்த்தைகளும்
நம் வசமே.

வாங்க...

நல்லதை
நினைப்போம்.

நல்லதையே
பேசுவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


நன்றி...
- Dr.Sundar Murthy -

💫💫💫💫💫💫💫

Thursday, May 28, 2020

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு...

ஏற்காடு சென்றால் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்....

1.சேர்வராயன் கோவில்
2. கரடியூர் வீயூவ் பாயிண்ட்
3. பக்கோடா பாயிண்ட்
4. லேடீஸ் சீட்
5. ரோஜா தோட்டம்
6. அண்ணா பார்க்
7. போட் ஹவுஸ்
8. ராஜராஜேஸ்வரி கோவில்
9. கிளீயூர் நீர் வீழ்ச்சி.. ( தண்ணி இல்ல)

மிக்க அன்புடன்
ஆ.சிவா..சேலம்

Wednesday, May 27, 2020

புதிய பார்வ...புதிய கோணம்..

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு 
விமான 
பயணம்.

எகனாமிக் 
கிளாஸ்
இருக்கை 
பகுதியில்...

பயணிகள்
அவரவர் 
இருக்கையை
பார்த்து அமர 
தொடங்கினர்.

டிப் டாப் ஆசாமி
ஒருவர் வந்தார்.

முகத்தை 
சீரியஸ் ஆக 
வைத்து 
கொண்டு... 

கடுகடு என்று 
முனுமுனுத்தபடி...

ஒருவழியாக
இருக்கையை
கண்டு பிடித்து
அமர்ந்தார்.

ஜன்னல் 
இருக்கைக்கு
பக்கத்து 
இருக்கை...

அவருக்கு
ஒதுக்க
பட்டிருந்தது.

ஜன்னல் 
இருக்கையில் 
அமர்ந்தவரிடம்...

நான் உங்கள் 
இருக்கைக்கு
வருகிறேன்.

நீங்கள் என் 
இருக்கைக்கு
வருகிறீர்களா?
என்று கேட்டார்.

அவரும் 
சரி என்று கூறி 
இருக்கையை
மாற்றி கொண்டார்.

பின்னர் 
டிப் டாப் ஆசாமி 
தான் ஒரு பெரிய 
பிசினஸ் மேன் 
என்றும் அது 
விஷயமாக 
பயணம்
மேற்கொள்வதாக
தெரிவித்தார்.

நீங்கள் யார் என்று
இவரை கேட்டார்.

என் பெயர் 
நாராயண மூர்த்தி
இன்போசிஸ் 
நிறுவன தலைவர்
என்று கூறினார்
இவர்.

இதை 
கேட்டவுடன்
நம் ஆசாமி...

சாரி சார்.
மன்னிச்சிக்குங்க 
சார்...

நீங்க 
பிசினஸ் கிளாஸ் 
பகுதியில் 
வரலாமே சார்...

இந்த
எகனாமிக் 
கிளாசில் என்
வந்தீர்கள்?
என கேட்டார்.

நாராயண 
மூர்த்தி...

பணம் இன்று 
வரும் நாளை 
போகும்...

அதே போல் தான்
அந்தஸ்தும்...

நாம் 
போக வேண்டிய 
இடத்திற்கு 
எந்த கிளாசில் 
போனால் 
என்ன?...

சேருமிடம் தான்
முக்கியம்
என்று பதில் 
கூறினார்.

நம்ம 
டிப் டாப் ஆசாமி
அப்புறம் 
வாயையே 
திறக்கவில்லை.

நிலை 
உயரும் 
போது...

பணிவு 
கொண்டால்...

உலகம் 
உன்னை 
வணங்கும்...

என்னும்
வரிகள்
உண்மைதானே.

வாங்க...

எந்த நிலையில்
இருந்தாலும்
நாம்...

எளிமையாய்
வாழ
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Tuesday, May 26, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு 
விமான 
பயணம்.

எகனாமிக் 
கிளாஸ்
இருக்கை 
பகுதியில்...

பயணிகள்
அவரவர் 
இருக்கையை
பார்த்து அமர 
தொடங்கினர்.

டிப் டாப் ஆசாமி
ஒருவர் வந்தார்.

முகத்தை 
சீரியஸ் ஆக 
வைத்து 
கொண்டு... 

கடுகடு என்று 
முனுமுனுத்தபடி...

ஒருவழியாக
இருக்கையை
கண்டு பிடித்து
அமர்ந்தார்.

ஜன்னல் 
இருக்கைக்கு
பக்கத்து 
இருக்கை...

அவருக்கு
ஒதுக்க
பட்டிருந்தது.

ஜன்னல் 
இருக்கையில் 
அமர்ந்தவரிடம்...

நான் உங்கள் 
இருக்கைக்கு
வருகிறேன்.

நீங்கள் என் 
இருக்கைக்கு
வருகிறீர்களா?
என்று கேட்டார்.

அவரும் 
சரி என்று கூறி 
இருக்கையை
மாற்றி கொண்டார்.

பின்னர் 
டிப் டாப் ஆசாமி 
தான் ஒரு பெரிய 
பிசினஸ் மேன் 
என்றும் அது 
விஷயமாக 
பயணம்
மேற்கொள்வதாக
தெரிவித்தார்.

நீங்கள் யார் என்று
இவரை கேட்டார்.

என் பெயர் 
நாராயண மூர்த்தி
இன்போசிஸ் 
நிறுவன தலைவர்
என்று கூறினார்
இவர்.

இதை 
கேட்டவுடன்
நம் ஆசாமி...

சாரி சார்.
மன்னிச்சிக்குங்க 
சார்...

நீங்க 
பிசினஸ் கிளாஸ் 
பகுதியில் 
வரலாமே சார்...

இந்த
எகனாமிக் 
கிளாசில் என்
வந்தீர்கள்?
என கேட்டார்.

நாராயண 
மூர்த்தி...

பணம் இன்று 
வரும் நாளை 
போகும்...

அதே போல் தான்
அந்தஸ்தும்...

நாம் 
போக வேண்டிய 
இடத்திற்கு 
எந்த கிளாசில் 
போனால் 
என்ன?...

சேருமிடம் தான்
முக்கியம்
என்று பதில் 
கூறினார்.

நம்ம 
டிப் டாப் ஆசாமி
அப்புறம் 
வாயையே 
திறக்கவில்லை.

நிலை 
உயரும் 
போது...

பணிவு 
கொண்டால்...

உலகம் 
உன்னை 
வணங்கும்...

என்னும்
வரிகள்
உண்மைதானே.

வாங்க...

எந்த நிலையில்
இருந்தாலும்
நாம்...

எளிமையாய்
வாழ
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Monday, May 25, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பாதை🍁🍁

அசோகர்
காலத்தில் 
அவருடைய
தலைநகரான
பாடலிபுத்திரத்தில்
ஒரு சிறைச்சாலை
இருந்தது.

அதன் பெயர்
*அசோகர்* *நரகம்*

அந்த 
சிறைச்சாலையில்
உள்ளே சென்றவர்
யாரும் உயிருடன்
வெளியே 
வந்ததில்லை.

புத்த துறவி
ஒருவர் செய்யாத 
குற்றத்திற்காக
உள்ளே அடைக்க
பட்டார்.

அங்கே 
மிக கொடூர
தண்டனைகள் 
அவருக்கு 
விதிக்க பட்டன.

ஆனால் 
எந்த தண்டனையும்
அவருக்கு பாதிப்பு
ஏற்படுத்தவில்லை

சிறை அதிகாரிகள்
ஆச்சரியப்பட்டு
அவரை கொதிக்கும்
கலனில் போட்டனர்.

அவர் சர்வ 
சாதாரணமாக
எழுந்து வெளியில்
வந்தார்.

இதை பார்த்த 
அதிகாரிகள்
பயந்து போய்
அசோகரிடம்
முறையிட்டனர்.

அசோகர் வந்தார்
இவரை கண்டு 
அதிசயப்பட்டு
அமைதியாக 
வெளியே செல்ல
எத்தனித்தார்.

மூத்த சிறை
அதிகாரி 
அசோகரிடம்...

'உள்ளே 
வந்தவர்கள் 
வெளியே செல்ல 
கூடாது"
என்றதுடன்...

"புத்த துறவியை 
என்ன செய்வது?" 
என்று கேட்டார்.

இதை கேட்டு 
ஆத்திரப்பட்ட 
அசோகர்...

துறவியை
விடுதலை
செய்ததோடு...

அந்த மூத்த 
அதிகாரியை 
தூக்கி... 

கொதிக்கும் 
கலனில் போட 
உத்தரவு 
பிறப்பித்தார்.

தவறு செய்யாத 
துறவிக்கு தண்டனை 
தந்ததை எண்ணி 
எண்ணி மனம் 
நொந்தார்

வெளியே வந்த 
அசோகர் அந்த
புத்த துறவியின் 
முகத்தை மறக்க 
முடியாமல் 
அவதிப்பட்டார்..

அடுத்த சில
நாட்களில் 
அந்த சிறை
சாலையையே 
இடித்து 
தரைமட்டமாக்க 
உத்தரவு 
பிறப்பித்தார்.

இடிந்தது 
சிறைச்சாலை 
மட்டுமல்ல...

அவரின் 
செருக்கு ஆணவம் 
வெறுப்பு அதிகாரம் அத்தனையும் தான்.

அன்றிலிருந்து
அசோகர் 
மனதளவில்
மாறிபோனார்.

அதன்  
தொடர்ச்சியாக
நடைபெற்ற
கலிங்க போர்
அவரை 
முற்றிலுமாக
புரட்டி போட்டது.

வன்முறையை
வேருடன் அழிக்க
ஒரே வழி...

*அ* *ன்* *பு*

என்பதை 
நிரூபிக்க,
புத்த மதத்தை
தழுவினார்...

இது 
கதையல்ல
நிஜம்.

நெருப்பை
நெருப்பால்
அணைக்க
முடியாது...

அது
நீரினால் தான்
அணையும்.

வெறுப்பை
வெறுப்பால்
அழிக்க 
முடியாது.

அது
அன்பினால் தான்
அழியும்.

உலகில்
மென்மையானது
அன்பு...

உலகில்
வலிமையானது
அன்பு...

ஆதலினால்
அன்பு செய்வோம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

ஹைகூ கவிதைகள்...

ஹைகூ கவிதைகள்...

ஆக்கம்.
கனவு ஆசிரியர்
கவிஞர் ஆ.சிவா...
சேலம்.


மனைவி
₹₹₹₹₹₹₹₹
1.அடி உதை குத்து
உடம்பு வலிக்கிறது உள்ளம்
இனிக்குது மனைவியால்...


2.குடும்ப பஞ்சாயத்து தேர்தலில்
போட்டியின்றி வெற்றி பெற்ற
வேட்பாளர் மனைவி...

3. மின் இணைப்பு இல்லாமல்
மின்னுகிறது  எங்க வீட்டு
நட்சத்திர மனைவி...

4. தாய்க்கு பின் வந்த
சேய்க்கு வழி சொன்ன
மந்திரவாதி மனைவி...

5.நின்றால் பெருங்கூட்டம் தெருவில்/
நடந்தால் ஆரூர் தேரின்
அச்சாணியாய் மனைவி....!

Friday, May 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁 புதிய பார்வை  🍁🍁

அமெரிக்க நாட்டில்
மிசிசிபி பகுதியில்
தனியாக வாழ்ந்த
அன்னைக்கு பிறந்தவர்.

தன் ஒன்பது வயதில்
பாலின வன்முறைக்கு பலியானவர்.

பதினான்கு வயதில்
திருமணம் ஆகுமுன்பே
தாய்மை அடைந்தவர்.

குறைபிரசவத்தில்
தன் குழந்தையை
இழந்தவர்.

பத்தொன்பது வயதில்
உள்ளூர் வானொலியில்
செய்திகளை தொகுத்து
தரும் பணியில் சேர்ந்தார்.

திறமையின் காரணமாக
பகல் நேர அரட்டை நிகழ்ச்சிகளை நடத்தும்
பொறுப்பினை ஏற்றார்.

இவரின் அபார
பேச்சு திறனால்
அந்த நிகழ்ச்சியின்
தயாரிக்கும் பொறுப்பு
இவரை தேடி வந்தது.

மூன்றாம் தரத்திலிருந்து,
முதல் தர நிகழ்ச்சி தயாரிப்பாளராக
உருவெடுத்தார்.

இவர் நடத்தும் 'ஓப்ரா
வின்ஃப்ரே ஷோ' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி...

உலக தொலை காட்சி வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளை
பெற்று பல விருதுகளை
வென்று சாதனை படைத்தது.

இவரின் இந்த வளர்ச்சி
மிக பெரிய செல்வந்தராக
இவரை உருமாற்றியது.

உலக கறுப்பின மக்களில்
'முதல் பணக்காரர்' இவர்.

அதே நேரத்தில்
கறுப்பின மக்கள்
பிரிவில் 'மிக பெரிய
வள்ளலாகவும்' இவர் அறியப்படுகிறார்.

இவர் செய்து வருகின்ற
தர்ம காரியங்கள் உலகம் புகழும் வகையில் இன்றுவரை
தொடர்கிறது.

'இருபதாம் நூற்றாண்டின்  இணையற்ற பெண்களில்  இவரும் ஒருவர்' என
பிரபல பத்திரிக்கை இவரை
அங்கீகரித்துள்ளது.

'யேல்'பல்கலை கழகம்
இவரது நிகழ்ச்சிகளை
ஆராய்ச்சி செய்து...

'பாதிக்க பட்ட மக்களின்
தயக்க உணர்வுகளை
தூக்கியெறிய முன்நின்றவர்' என்னும் பெருமையை இவருக்கு வழங்கியுள்ளது.

இவர்
'ஓப்ரா கைல் வின்ஃப்ரே'.

வாங்க...

நமக்கும் நமது வாழ்வில் துன்பங்கள் துயரங்கள்
இருக்கலாம்.

அவைகளை நினைத்து நினைத்து வருந்துவதை
விட..

அவைகளை புறந்தள்ளி
வெற்றி காணுவது தான் புத்திசாலித்தனம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Thursday, May 21, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁புதிய பார்வை🍁

ஒரு கிராமத்தில்
அண்ணன் தம்பி
இருவரும்
ஒற்றுமையாக
விவசாயம் செய்து
வந்தனர்.

அண்ணனுக்கு
திருமணம் ஆகி
ஒரு குழந்தையுடனும்

தம்பிக்கு
இன்னமும்
திருமணம்
முடியாமலும்

தனித்தனி வீட்டில்
வசித்து வந்தனர்.

இந்நிலையில்
தந்தை இறந்தார்.

சகோதரர்கள்
நிலத்தை பாகம்
பிரிக்காமல்
சாகுபடி செய்து
வந்தனர்.

அறுவடைகாலம்
முடிந்து இருபது
மூட்டைகள்
வந்தது.

அண்ணன் தம்பி
இருவரும்
மூட்டைகளை
சமமாக பிரித்து
வீட்டிற்கு எடுத்து
சென்றனர்.

இரவு
பதினோரு மணி...

தம்பிக்கு தூக்கம்
வரவில்லை.

'நான் ஒருவன்
மட்டும் தான்.

அண்ணனுக்கு
மனைவி குழந்தை
என இருவர் கூட
உள்ளனர்.

சமமாக பாகம்
பிரித்தது  தவறு'
என்னும்
எண்ணத்தில்...

ஐந்து மூட்டைகளை
யாருக்கும்
தெரியாமல்
அண்ணன் வீட்டு
திண்ணையில்...

போட்டு விட்டு வந்து
நிம்மதியாய் தூங்கி
போனான்.

இரவு
பனிரெண்டு மணி.

அண்ணனுக்கு
புரண்டு புரண்டு
படுத்தாலும்
தூக்கம்
வரவில்லை.

'நாமோ
திருமணமாகி
மனைவி குழந்தை
என இருக்கிறோம்.

தம்பிக்கு இன்னும்
திருமணம் கூட
நடக்க வில்லை.

அவன்
திருமணத்திற்கு
பணம் தேவைப்படும்'
என்னும் நினைப்பில்...

ஐந்து மூட்டைகள்
எடுத்து கொண்டு
சந்தடியில்லாமல்...

தம்பி வீட்டு
திண்ணையில்
போட்டுவிட்டு
வந்து...

நிம்மதியாக
தூங்கி போனான்
அண்ணன்.

விடிந்ததும்
அவரவர் வீட்டு
திண்ணையில்
இருக்கும்
மூட்டைகளை
பார்த்து அதிர்ச்சி
அடைந்தனர்.

நடந்தது என்ன
என ஊகம்
கொண்டனர்.

மகிழ்ச்சி
அடைந்தனர்.

இது
கதையல்ல.

நடந்த
நிகழ்வுகள் தான்.

உண்மையான
அன்பு...

மேடு பள்ளம்
பார்ப்பதில்லை.

லாப நட்டம்
காண்பதில்லை.

'அதெல்லாம்
அந்த காலம்.

இந்த
காலத்திற்கு
இதெல்லாம்
சரிப்பட்டு வராது'

என்று பலர்
சொல்லுவார்கள்.

Water pollution
Air pollution
போல...

இன்று
மக்களுக்கு
Mind pollution
ஆகி விட்டது
என்பதே
நிஜம்.

உன்னதமான
அன்பை விட
உண்மையான
பாசத்தை விட...

உலகத்தில்
பெரியது
ஏதுமில்லை.

ஆனால்
அன்பை
இழந்து...

நல்ல
பண்புகளை
மறந்து...

நாம்
வாழும் வாழ்வு...

பார்க்கும்
போது
பூத்து
குலுங்குவது
போல
இருந்தாலும்...

உண்மையில்
அது
வறண்ட
பாலை நிலமே.

வாங்க...

சுற்றியுள்ள
மக்களிடம்
அன்பு
செலுத்துவோம்.

நற்பண்புகள்
விளைந்து
நாடு நலம் பெற
விதை போட
தொடங்குவோம்.

அன்புடன்
இனிய
மாலை
வணக்கம்.

Friday, May 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
அழகான
கடற்கரை.

புதிய
காலை
பொழுது.

ஒரு பெரியவர்
அலைகளை
ரசித்தபடி
நடந்து கொண்டு
இருந்தார்.

தூரத்தில் ஒருவர்
கைகளை வீசியும்
கடல் பக்கம்
நீட்டியும் ஏதோ
நாட்டியம் போல
அபிநயம் செய்து
கொண்டிருந்தார்.

பெரியவர் அருகே
சென்று பார்த்தார்.

தூரத்தில் பார்த்த
அந்த மனிதர் ஓர்
இளைஞர்.

கடல் அலைகளில்
தெறித்து விழுந்த
சிறிய மீன்களை
குனிந்து எடுத்து
மீண்டும் கடலில்
போட்டு கொண்டு
இருந்தார்.

இதுதான்
பெரியவருக்கு
தூரத்தில்
பார்க்கும் போது
நாட்டியம் போல்
தெரிந்திருக்கிறது.

அந்த
இளைஞனின்
அருகில் சென்று
"நீங்கள் என்ன
செய்து கொண்டு
இருக்கிறீர்கள்?"
என்று கேட்டார்.

அந்த இளைஞன்
"இந்த சிறு மீன்கள்
அலையில் பட்டு
தெறித்து சற்று
நிமிடங்களில்
இறக்க
நேரிடுகிறது

எனவே அதனை
பிடித்து மீண்டும்
கடலில் விடுகிறேன்"
என்று கூறினான்.

அதற்கு பெரியவர்
"இந்த கடற்கரை
மிக நீளமானது.
உங்களால் எவ்வளவு
மீன்களை காப்பாற்ற
முடியும்?" என்று
கேட்டார்.

பேசி
கொண்டிருக்கும்
அந்த நிமிடத்திலும்
ஒரு சிறு மீனை
கடலில் சேர்த்த
இளைஞன்...

"இந்த
ஒரு நிமிடத்தில்
இந்த மீன் குஞ்சு
பிழைத்தது
இல்லையா.
இதுவே மகிழ்ச்சி"
என்று கூறினார்.

இளைஞனின்
இந்த பதிலில்
மிகுந்த
ஆச்சர்யமும்
மகிழ்ச்சியும்
அடைந்த
பெரியவர்...

அவரும் குனிந்து
ஒரு மீனை எடுத்து
கடல்நீரில் போட்டார்.

"என்னால்
இந்த மீன்
உயிர் பெற்றது"
என்று கூறி
மனம் மகிழ்ந்து
அந்த இடத்தை
விட்டு சென்றார்.

நாம் மட்டும்
சிறப்பாக
வாழ்வது
சாதாரண
வாழ்க்கை.

நம்மை
சுற்றியுள்ள
மக்களையும்
உயர்த்தி...

நாமும்
சிறப்பாக
வாழ்வதுதான்
உயர்ந்த
வாழ்க்கை.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Thursday, May 14, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

'தன் மீது யாருக்கும்
பிரியம் இல்லை,
தன்னை சுற்றி
இருப்பவர்கள்
யாரும் சரியில்லை,
கடவுளுக்கும் கூட
கண் இல்லை' என்று
புலம்பிக்கொண்டு,
தற்கொலை செய்யும் எண்ணத்தில்
ஒரு பெண்...

தான்
குடியிருக்கும்
8 வது மாடியில்
இருந்து  குதிக்க
தயாரானாள்.

கடவுள் அவளுக்கு
ஒரு 'வாய்ப்பை'
வழங்கினார்.

அதாவது
விழும் நேரத்தை
அதிகப்படுத்தி
'மெதுவாக
விழுமாறு'
ஏற்பாடு செய்தார்.

மேலும்
விழும்போது
ஒவ்வொரு மாடி
ஜன்னலில் நடக்கும்
நிகழ்வினை 'சில
நொடிகள் பார்க்கும்
வகையில்' அந்த
ஏற்பாடு இருந்தது.

பெண் மாடியில்
இருந்து குதித்தாள்.

7 வது மாடியில்
இரண்டு கைகளும்
இல்லாத ஒரு நபர்,
தன் கால்களால்
படம் வரைந்து
கொண்டிருந்தார்.

6 வது மாடியில்
ஒரு பெண்,
கண்கள் இல்லாத
தன் குழந்தைக்கு,
இன்முகத்துடன்
சோறு ஊட்டி
கொண்டிருந்தாள்.

5 வது மாடியில்
ஒரு புருஷன்
தன் மனைவிக்கு,
சமையலில்
உதவி செய்து
கொண்டிருந்தார்.

இப்படி
ஒவ்வொரு மாடி
ஜன்னலிலும்
மனிதர்கள்
மகிழ்ச்சியாய்
இருந்ததை
இவள் பார்த்தாள்.

'வாழ்க்கையில்
எத்தனையோ
'இல்லை'
என்றாலும்...

'மகிழ்ச்சி' என்று
ஒன்றை வைத்து,
இன்பமாய்
வாழ்பவர்கள்,
இருக்கத்தான்
செய்கிறார்கள்.

நான் தான்
அவசரப்பட்டு,
யாரையும் புரிந்து
கொள்ளாமல், இந்த
தற்கொலையை
செய்து விட்டோமோ'
என எண்ணி
வருத்தம்
அடைந்தாள்.

இதற்குள் அவள் உடல்
தரை தளம் அருகில்
வந்தது.

மிக சரியாக
அந்த நேரம் பார்த்து,
இலவம்பஞ்சினால்
செய்யப்பட்ட
மெத்தைகள் தாங்கிய,
விற்பனை செய்யும்
வாகனம் ஒன்று,
அந்த கட்டிடம் முன்பு
வந்து நின்றது.

வண்டி வந்து
நிற்பதற்கும்,
அந்த பெண் உடல்,
அந்த மெத்தைகள்
மேல் விழுவதற்கும்,
மிக சரியாக இருந்தது.

அந்த பெண் சிறு
அடிகூட படாமல்,
'தெய்வாதீனமாக'
பிழைத்து கொண்டாள்.

இது ஒரு கற்பனை
கதையாக கூட
இருக்கட்டும்.

இதில் ஒரு கருத்து
உள்ளது.

சோதனைகள்
வேதனைகள்
இல்லாத மனிதன்
இந்த பூமியில்
இல்லை.

இவைகள்
ஒரு மனிதனின்
மதிப்பை உயர்த்துமே
தவிர தாழ்த்தாது.

மேலும்...

அவமானங்கள்
தோல்விகள்
காரணமாக...

தற்கொலை
என்னும் முடிவு
எடுக்கப்படும்
சூழ்நிலையில்...

அதை இந்த
தரணி தாங்காது...

'யாரிடம்
குறை இல்லை

யாரிடம்
தவறில்லை

வாழ்வது
ஒரு முறை

வாழ்த்தட்டும்
தலைமுறை

வா...நீ... வா...'

என்னும்
வரிகளுக்கு
ஏற்ப...

வாங்க...

ஜாலியா
ஒருமுறை

வாழ்ந்து
பார்க்கலாம்.

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

Wednesday, May 13, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

மனிதர்களில்
சில வகை உண்டு.

ஏதாவது ஒரு
காரியத்தை
செய்ய வேண்டிய சூழ்நிலையில்...

'அப்புறமா
செஞ்சிக்கலாம்'

'நாளைக்கி
பண்ணிடலாம்'

'மெதுவா
பாத்துக்கலாம்'

என்று சொல்லி
தள்ளி போடுவர்.

அதே
வேளையில்...

வாழ்க்கையில்
வெற்றி
பெற்றவர்கள்...

அவர்கள் வெற்றி
பெற்றதற்கான
காரணத்தை
பார்க்கும் போது...

'ஒன்றே செய்
நன்றே செய்
இன்றே செய்
இப்போதே செய்'

என்னும் தாரக
மந்திரத்தை
அவர்கள்
செயலில்
காட்டியமை
தெரிய வரும்...

உண்மையில்
'தள்ளி போடுதல்'
என்பது...

ஒருவகை
'மன நோய்'
என்று
அறிவியல்
அறிஞர்கள்
கூறுகின்றனர்.

ஓடி
கொண்டிருந்தால்
தான் நதி...

அலை அடித்து
கொண்டிருந்தால்
தான் கடல்...

இயங்கி கொண்டு
இருந்தால் தான்
மனிதன்...

வாங்க...

'தள்ளி போடும்
குணத்தை'
தள்ளி போடுவோம்.

'செய்ய வேண்டிய
காரியங்களை'
உடனே செய்ய
பழகுவோம்.

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

Tuesday, May 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

'வீரத்தின் வழியே
வெற்றி காண்பவர்
சாதாரன வீரர்.

வீரத்தை தாண்டிய
வெற்றி ஒன்று
இருக்கிறது.

அது
'கருணை'.

இதனால்
நாமும்
வாழ்கிறோம்.

எதிரியும்
வாழ்கிறான்.

நாம்
உயர்கிறோம்.

அவனும்
உயர்கிறான்.

நாம் மகிழ்ச்சியாக
இருக்கிறோம்.

அவனும்
மகிழ்ச்சியாக
இருக்கிறான்.

வாழ்க்கையிலேயே
உயர்ந்த வெற்றி
இதுவே'.

இந்த கருத்தை
கூறியவர்...

சீனாவில் ஐந்து
மன்னர்களுக்கு
ஆலோசகராக
இருந்தவர்...

என்பது வயதுக்கு
மேலும் மிக சிறந்த
மனிதர் என உலகில்
போற்றப்படுபவர்...

அவர்
'லாட்சு'.

அவர் கூற்று
உண்மைதான்.

காந்தி, கலாம்,
அன்னை தெரசா
இவர்கள்...

'கருணை'
குணத்தால்...

காலத்தை
தாண்டியும்,
மக்கள் மனதில்
வாழ்கிறார்கள்.

வாங்க...

'பாசமுள்ள
பார்வையிலே
கடவுள்
வாழ்கிறான்.

அவன்
கருணை
கொண்ட
நெஞ்சினிலே
கோவில்
கொள்கிறான்'

வரிகளுக்கு ஏற்ப
நாமும் வாழ,
முயற்சிகள்
செய்யலாம்.

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி

Monday, May 11, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

'பொறுமை
கடலினும் பெரிது'.

'பொறுத்தாரே
பூமியாள்வார்'.

என்பதெல்லாம்
நமக்கு தெரிந்த
பழமொழிகளே...

‘A man
who is a
master of
Patience
is the
master of
everything else’

என்கிறார்,
முன்னாள் அமெரிக்க
அரசியல் தலைவர்
'ஜியோர்ஜ் சேவில்'.

"யாரிடம் அன்பு
அதிகமாக
இருக்கிறதோ,
யார் ஒருவர்
அறிவாளியோ,
எவர் ஒருவர்
ஞானியோ...

அவர்கள்தான்
முதலில் விட்டு
கொடுப்பார்கள்.

அவர்கள் தான்
அனுசரித்து
செல்வார்கள்.

அவர்கள்தான்
பொறுத்து
போவார்கள்"
என்கிறார்
மகரிஷி...

வாங்க...

பழமொழிகளின்
அனுபவங்கள்
படியும்,

'ஜியோர்ஜ்
சேவில்'
அவர்களின்
கூற்றுபடியும்,

மகரிஷியின்
வார்த்தைகளின்
படியும்,

பொறுமையை நம்
வளமாக்குவோம்.

பொற்கால
வாழ்வை நம்
வசமாக்குவோம்.

*அன்புடன்*
*காலை*
*வணக்கம்.*

Friday, May 08, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

குரு தம் சீடர்களை
அழைத்து அதில்
மூன்று பேரை
தேர்ந்தெடுத்தார்.

"நீங்கள்
தேவையான
தகுதிகளை
பெற்று
விட்டீர்கள்...

இனி நீங்கள்
உங்கள் வழியில்
செல்லலாம்...

மக்களுக்கு
எந்நாளும்
நல்லது
செய்யுங்கள்"
என வாழ்த்தி
அனுப்பினார்.

அந்த மூன்று
சீடர்களும்
ஒன்றன் பின்
ஒருவராக
குடிலை விட்டு
கிளம்பினர்.

சில மைல்
தொலைவில்
ஒரு  கிராமத்திற்கு
செல்லும் வழியில்
முட்கள் அடங்கிய
சிறு சிறு கிளைகள்
சாலை முழுவதும்
இறைந்து கிடந்தன.

முதலில் வந்த சீடன்
கிளைகளை தாண்டி
தாண்டி சென்று
கொண்டிருந்தான்...

இரண்டாவது வந்த
சீடன் தான் செல்ல
கூடிய பாதையை
அடைத்து
கொண்டிருந்த
கிளைகளை
சற்று ஒதுக்கி
அதன் பின்
சென்றான்...

மூன்றாவது சீடன்
பாதையில் இருந்த
முட்கள் அடங்கிய
கிளைகளை தன்
கையினால் ரத்தம்
சொட்ட சொட்ட
சாலை ஓரமாக
முழுவதுமாக
அப்புறப்படுத்தி
அதன் பிறகு
சென்றான்...

அந்த மூன்று
சீடர்களும்
'வெளியில்
எவ்வாறு நடந்து
கொள்கிறார்கள்'
என்பதை
கவனிக்கும்
பொருட்டு...

குரு
அவர்களை
பின் தொடர்ந்து
சென்று இவைகளை
கண்டார்...

சற்று நேரத்தில்
அவர்களை
முந்தி சென்று...

"நீங்கள் மூவரும்
இன்று மாலை
நம் குடிலுக்கு
திரும்புங்கள் "
என்று கட்டளையிட்டு 
சென்றார்...

அவர் கூறியது
போலவே சீடர்கள்
குடிலுக்கு திரும்பினர்.

மாலை
பொழுது வந்தது.

முதல் இரு
சீடர்களையும்
அழைத்த குரு...

"இன்று காலை
நீங்கள் செல்லும்
வழியில் இருந்த
முட்களை எவ்வாறு
கையாண்டீர்கள்
என்று பார்த்தேன்...

மக்கள் நடந்து
செல்லும் பாதையில்
இருந்த முட்களை
அப்புறப்படுத்தாமல்...

'நீங்கள் மட்டும்
போனால் போதும்'
என்னும் சுயநல
போக்கில்
செயல்பட்டீர்கள்...

நம்மை சுற்றியுள்ள
மக்களுக்கு நல்லது
செய்ய வேண்டும்
என்னும் எண்ணம்...

உங்களுக்கு
இன்னமும்
வரவில்லை...

அந்த நற்குணங்கள்
உங்கள் இதயத்தில்
படியும் வரை...

இன்னும்
கொஞ்சநாள்
இங்கேயே இருங்கள்"
என்று கட்டளை இட்டார்.

அடுத்து...

மூன்றாம் சீடரை
அழைத்து...

"சமூகத்தின் பால்
உனக்கு அக்கறை
அதிகம் உள்ளது..

உன்னை போன்ற
மனிதர்களால் தான்
இந்த உலகம்
செழுமை பெரும்...

இதை போலவே
என்றும் மக்களை
நேசித்து வாழ்வாயாக"...

என்று
ஆசிகள் கூறி
அனுப்பி வைத்தார்.

'உள்ளம்
தெளிவாக வை...

எண்ணம்
உயர்வாக வை...

வாழும் காலம்
எல்லாம்...

மண்ணில்
மரியாதை வை'...

என்னும்
வரிகளுக்கு
ஏற்ப...

வாங்க...

நம்மை
சுற்றி உள்ள
சமுதாயத்திற்கு,
நல்லது செய்ய
தொடங்கலாம்...

மக்கள் நலம்பெற
நாடு வளம் பெற
புதிய பூமியை
படைக்கவும்
செய்யலாம்...

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம*்.

நன்றி
முனைவர்.சுந்தரமூர்த்தி

Wednesday, May 06, 2020

கணிதத்தின் கதை....

புத்தகம்: கணிதத்தின் கதை.
ஆசிரியர்: இரா.நடராசன்.
        கணிதம் ஒரு ஏட்டுச்சுரைக்காய். பள்ளிக்கூடத்தில படிக்கிற இந்த கணிதத்தை வைச்சு நாம என்ன பண்ண போறோம் ? கணக்கு பிணக்கு ஆமணக்கு ; யார்ய்யா இந்த மேக்ஸ கண்டுபிடிச்சாங்க ? பொதுவா நிறைய பேர் இப்படி பொலம்பறத கேட்டு இருப்போம்.
     ஆனால் நாம் வாழும் வீடு , வீதி , நகர் என்று எல்லாமே கணிதவியல் அடிப்படைதான். அடிப்படை கணிதமும் வடிவ கணிதமும் ( Geometry) இல்லாமல் இது சாத்தியமல்ல. நுகர்வுப் பொருட்களுக்கான கட்டணம்  , இன்னாருக்கு இவ்வளவு என்று அறிவிக்க இயற்கணித சூத்திரங்கள் பயன்படுகின்றன. நிகழ்தகவு இன்றி காப்பீட்டுத்துறை இல்லை..இன்று இருக்குற பொருட்கள் எல்லாமே கணிதம் என்ற ஒற்றைத்தாயின் பிள்ளைகள்தான்.
       இந்த புத்தகம் கணிதத்தின் வரலாற்றை மிக எளிமையாக சொல்கிறது. எண்களின் தோற்றத்திலிருந்து ஆரம்பிக்கிறது. எண்களின் ராஜாக்களை கண்டறிய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும்.      செவ்விந்தியர்கள், பாபிலோனியர்கள், மாயன்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோம் மக்கள் என ஒவ்வொரு இனக்குழு மக்களும், ஒவ்வொரு விதமான எண்களையும் ,பொருள்களையும் எண்ணும் முறையையும் வைத்திருந்தனர். அதாவது ஆரம்ப காலங்களில்  கால்நடைகள், தங்களிடம் இருந்த பொருள்களை எண்ணுவதற்காக எண்கள் என்ற விஷயம் தேவைப்பட்டது. சிறிய கற்களைக் கொண்டும், சில உருவங்களைக் கொண்டும் எண்ணிக்கையை கணக்கிட்டனர்.முதலில் இரண்டு எண்கள் மட்டுமே கணக்கிட பயன்பட்டு இருக்கிறது. பாபிலோனியர்கள் எண்களை வடிவங்களாக்கி எழுதி வைத்தனர். சிங்கத்தலை வரைந்தால் ஒன்று , கழுகு என்றால் இரண்டு , பூ வரைந்தால் மூன்று , புலி வரைந்தால் நான்கு என்று பயன்படுத்தினர்.  ஹைராடிக் எண் முறை என்கின்ற கோடுகள் மற்றும் வளைவுகளால் ஆன எண்முறை எகிப்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மாயன் கள் கூழாங்கற்களையும் கோடுகளையும் பயன்படுத்தி எண்ணிக்கை செய்தனர். அதன் வளர்ச்சி தான் இன்றைய அபாகஸ்.
ஆனால் யாரிடமும் எண்களைப் பற்றிய மிகச் சரிதான புரிதல் இருக்கவில்லை. அதை  முதலில் உருவாக்கியவர்கள் இந்தியர்கள். இந்தியர்கள் உருவாக்கி பயன்படுத்திய எண்கள் தான் இன்றுவரை பயன்பாட்டில் இருக்கின்றன. எனவே எண்களின் ராஜா என இந்தியர்களை அழைக்கலாம். கிபி. 628 ல் தான் பிரம்மகுப்தர் சூன்யா என்ற எண்ணை அறிமுகப்படுத்துகிறார். சூன்யா என்றால் ஒன்றுமில்லை என்பது பொருள்.
             அதற்கடுத்து கிரேக்கர்களின் பங்களிப்பு அபரிதமானது. கிரேக்கர்கள் தான் இரண்டு முக்கிய ஆய்வு சொற்களை கொண்டு வந்தார்கள் . தொகுத்துரைத்தல் ( abstraction ),மற்றும் நிருபணம் (Proof).அதற்கு பிறகு தேற்றங்கள் உருவாகின. அந்த ஈர்ப்பின் மூலம் பிறந்தது தான் வடிவக் கணிதம். (Geometry). வடிவக்கணிதத்தின் முதல் மந்திரக்குழந்தை தாலஸ் என்ற தத்துவஞானி மறறும் வானியல் நிபுணர். வட்டத்தின் மிகச்சரியாக வரையப்படும் விட்டம் , வட்டத்தை இரு சம அளவாக பிரிக்கும் என்பதிலிருந்து , ஒரு அரைவட்டத்திற்குள் அமையும் எந்த கோணமும் 90 டிகிரி , இரண்டு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டும்போது எதிர் எதிர் கோணங்கள் சமம் என்ற கோட்பாடுகளைத் தந்தவர் தாலஸ். தாலஸ் என்பவர் பிதாகரஸின் வகுப்புத் தோழர். பிதாகரஸ் தேற்றம் கண்டிப்பாக நம்நினைவில் இருக்கும் தானே..கிரேக்கர்கள் தான் கணிதத்தின் ஆரம்பக் கால வளர்ச்சியில் முக்கியமான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். சாக்ரட்டீஸ் தூண்டிய அறிவுத்தீ அவர்களை அப்படிச் சிந்திக்க வைத்தது. எதையும் கேள்வி கேட்டு, விளக்கிக் கொள்ளும் பழக்கம் கிரேக்கர்களிடம் இயல்பாகவே இருந்தது. அதனால், அவர்கள் கணிதத்தை ஆழமாக செம்மைப் படுத்தியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வடிவக் கணிதத்தை உருவாக்கிய தாலஸ், பிதாகரஸ்,யூக்லிட், ஆர்க்கிமிடிஸ் என ஏகப்பட்ட கணித ஜாம்பவான்கள் கிரேக்கர்களாகவே இருந்தனர். கணிதத்தில் மட்டுமல்லாது இயற்பியலிலும் ஆர்க்கிமிடிசின் கண்டுபிடிப்புகள் ஆகச் சிறந்தவை. முக்கியமாக  நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கும் ‘யுரேகா யுரேகா..
         வெறும் எண்களோ , வடிவங்களோ மட்டுமல்ல எழுத்துக்களும் கணிதத்தின் ஒரு அங்கமாக்கியது தான் இயற்கணிதம்.நமக்கு தெரியாத , விடை கண்டுபிடிக்கப்பட வேண்டிய எண்ணுக்கு X எனப் பெயரிட்டு அதன் மதிப்பைக் கண்டுபிடிப்பதுதான் இயற்கணிதம். முதன்முதலில் அஹ்ஹா என்ற தான் முதலில் தெரியாத எண்ணைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பிறகு X அடுக்குகள் 2,3,4 என்று அதிகரித்துக் கொண்டே போனது.அதைக்கண்டறிந்தவர் இத்தாலியைச் சேர்ந்த fibannoci.
            இன்று கணிதத்தில் சுலபமாக நமக்கு முழு மதிப்பெண் பெற்றுத்தரும் வரைப்படத்தாள் கணித வரலாற்றில் வந்தது. அதைக்க்டறிந்தவர் ரெனே டெஸ்கார்ட்ஸ் .ஜான் நேப்பியர் உருவாக்கிய மடக்கை கணித முறை என்று ஒவ்வொரு கண்டுபிடிப்பின் வரலாறும் எளிமையாக தரப்பட்டுள்ளது  . திரிகோணமிதி , வகை காணுதல் , ( differentiation), தொகை காணுதல் (integration ), நுண்கணிதம் ( integral calculas), பகுதி வகைப்பாடு ( Partial differentiation) ஆகியவற்றைக் கண்டறிந்த வரலாறுகள் மிக சுவாரசியமாக சொல்லப்பட்டது இந்நூலில். இறுதியில் கணிதமேதை ராமனுஜம் , அவர்தம் கண்டுபிடிப்புகள், 1729 எண் வரலாறு என்று நம்மைக் கட்டிப்போடுகிறது.
       கணிதத்தை ஒரே முறையில் கற்றுக் கொளவது கடினம் தான். ஆர்வமும் , சிறிது கற்பனைத்திறமும் இருந்தால் கணிதம் மிக எளிதானதே..2500 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டர் மனேச்மஸ் என்ற கணிதவியலாளரை அழைத்து எளிமையாக கணிதத்தை கற்றுத்ர உத்தரவிட்டார்." கணிதத்தைக் கற்றுக் கொள்ள ராஜவீதி எனும் குறுக்குப் பாதையே கிடையாது” என்று அவர் சொன்ன பதிலே கணிதத்தை கற்றுகொள்ளவிருக்கும் அனைவருக்குமான பதில்..

நன்றி

வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுமம்.