Saturday, April 25, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁 புதிய பார்வை 🍁

மிகவும் கந்தல்
துணியுடன்
அந்த ஞானி
காணப்பட்டார்.

அவரை
சுற்றியிலும்
கூட்டம்,
நாளுக்கு நாள்
அதிகரித்து
கொண்டே
இருந்தது.

இந்த தகவல்
மன்னரின்
காதுகளுக்கு
எட்டியது.

தம்மை
பார்க்க வரும்
கூட்டத்தை விட,
அவரை பார்க்க
வரும் கூட்டம்
அதிகமானதை,
பொறுத்து
கொள்ளாத
மன்னர்...

இது குறித்து
தெளிவடைய
அவரிடமே சென்று
'காரணம்' கேட்டார்.

ஞானி மன்னரிடம்,
"அடுத்து வரும்
பௌர்ணமியில்
இரவு பத்து மணிக்கு
என்னை வந்து பார்"
என சொல்லி
அனுப்பினார்.

அந்த நாளும்
வந்தது.

மன்னர்
ஞானியிடம்
சென்று
விளக்கம்
கேட்டார்.

ஞானி தம்
பூந்தோட்டத்திற்கு
மன்னரை
அழைத்து சென்று,
பௌர்ணமி நிலவை
பார்க்க சொன்னார்.

சில நொடிகள்
கழித்து...

அருகில் இருந்த
ரோசா மலரை
பார்க்க சொன்னார்.

பின்னர், "அந்த
நிலா போல் தாம்
ஒளிவீசுவதில்லை
என்று, ரோசா மலர்
நினைப்பது இல்லை...

அதை போலவே,
ரோசா மலரை
போல் தாம் வாசம்
அளிப்பதில்லை
என, அந்த நிலாவும்
நினைப்பது இல்லை...

அது போலத்தான்
நம் வாழ்க்கையும்,"
என்று ஞானி
கூறினார்.

மன்னர்
தெளிவடைந்தார்.

மன்னிப்பு கேட்டதுடன்
அரண்மணைக்கு
திரும்பினார்.

வாங்க...

இயற்கையின்
படைப்பில் நாம்
அனைவருமே,
தனித்துவம்
மிக்கவர்கள்தான்.

நமக்கு
யார் மீதும்,
எந்த விஷயத்திலும்,
ஒப்பீடு தேவை இல்லை.

அப்படி
இருப்பின்...

அது நம்
'மன அமைதியை'
அழிப்பதுடன்,
நம் 'வளர்ச்சியையும்'
தடுக்கும்.

இதனை
புரிந்து கொள்வோம்.

இனி
வரும் நாட்களில்...

நம் வாழ்வை
நாம் இனிமை
ஆக்குவோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

1 comment:

Unknown said...

Super sir. அருமையான கதை . அனைவரும் அறிந்து தெளிவடைய வேண்டிய ஒன்று.. நன்றி