🍁🍁புதிய பார்வை🍁🍁
'நோயுடன் தான்'
போரே தவிர
'நோயாளி யார்'
என்பதுடன்
அல்ல.
'யாரால் வந்தது'
என்பதை விட,
'எப்படி ஒழிக்கலாம்'
என்பதே முக்கியம்.
மத
துவேஷங்களை
மறந்து,
மனங்களை
ஒன்றினைத்து...
மாற்றத்தை
கொண்டு வர
வேண்டிய
தருணமிது.
'அவர்கள்
அப்படி
செய்தார்கள்'
'இவர்கள்
இப்படி
செய்தார்கள்'
என...
ஒருவரை பற்றி
ஒருவர் பரப்பும்,
'பொய்யான
தகவல்கள்'
மற்றும்...
'மாற்றம்
செய்யபட்ட
காணொளிகள்'
பல
உலா வருகின்றன.
இது
'கொரானா'வை
விட கொடியது.
'எது பொய்'
'எது உண்மை'
என கண்டறிய
முடியாத நிலை.
இவை
எவையும்,
நம்முடைய
'மத
நல்லிணக்கத்தையும்
ஒற்றுமை
பாட்டையையும்',
கூறு போட
தக்கவை.
'நல்ல ஆத்மாக்கள்'
இடையே சில
'துர் தேவதைகள்'
துவேஷத்தை
உண்டு பண்ணவே
செய்யும்.
நல்ல
மனிதர்களுக்கு
மத்தியில்,
ஒரு சில
நயவஞ்சக
நரிகள்,
நட(ன)மாடுவது
இயற்கையே.
இதை போன்ற
உணர்வுப்பூர்வமான
நேரங்களில்...
அவைகளை
'புறந்தள்ளி'
நாம் வாழ்ந்தால்
மட்டுமே...
நாம் உயிருடன்
வாழும் நிலை
ஏற்படும்.
இல்லையேல்
மிக பெரிய
'பேரழிவு'
வந்தே தீரும்.
'ஒன்று பட்டால்
உண்டு வாழ்வு
இல்லையேல்
அனைவர்க்கும்
இல்லை வாழ்வு'
விழிப்புடன்
இருப்போம்.
கொரானாவை
ஒழிப்போம்.
அன்புடன்
காலை
வணக்கம்.
No comments:
Post a Comment