சுவையான விளையாட்டு
நண்பர்களே பள்ளி நாட்களில் நாம் விளையாடிய மிகவும் சுவையான கணித விளையாட்டு நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் விளையாட்டு இந்த விளையாட்டை விளையாட பல வகை முறைகள் இருப்பினும் 99 ஐ தவிர அனைத்து எண்களுக்கும் பொருந்தும் எளிய முறையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
விளையாடும் முறை
உங்களின் நண்பர்களையோ உறவினர்களையோ ஏதாவது ( 99 தவிர ) ஒரு எண்ணினை மனதில் நினைத்துக்கொள்ளச்சொல்லுங்கள் பின்பு கீழே கொடுக்கப்பட்ட விதிகளை மனதிலேயே பின்பற்ற சொல்லுங்கள் கடைசியில் கிடைக்கும் விடையை மட்டும் சொல்லச்சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங்களை நீக்கி விட்டால் கிடைக்கும் எண்தான் மனதில் நினைத்த எண் ஆகும்
விதிமுறைகள்
1 . மனதில் நினைத்த எண்ணினை இருமடங்கு ஆக்குக
2 . 4 ஐ கூட்டுக
3 . 5 ஆல் பெருக்குக
4 . 12 ஐ கூட்டுக
5 . 10 ஆல் பெருக்குக
6 . 320 ஐ கழிக்க
கிடைக்கும் விடையை சொல்லச்சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங்களை நீக்கி விட்டால் மனதில் நினைத்த எண் கிடைக்கும்
எடுத்துக்காட்டு
மனதில் நினைத்த எண் 63 எனில் அதை இரு மடங்காக்கினால் கிடைப்பது 126 அதனுடன் 4 ஐ கூட்டினால் கிடைப்பது 130 அதை 5 ஆல் பெருக்க கிடைப்பது 650 அதன்னுடன் 12 ஐ கூட்ட கிடைப்பது 662 அதை 10 ஆல் பெருக்கினால் கிடைப்பது 6620 அதிலிருந்து 320 ஐ கழித்தால் கிடைப்பது 6300 ஆகும் இதில் உள்ள பூச்சியங்களை நீக்க கிடைப்பது 63 இதுதான் மனதில் நினைத்த எண்.
நன்றி குரு
அன்புடன்
சிவா...