Monday, May 12, 2014

போட்டோக்களை சுழற்றுவது எப்படி



போட்டோக்களைச் சுழற்றி நாம் விரும்பும் வகையில் அமைக்க எண்ணினால், மவுஸ் மற்றும் போட்டோ வியூவர் அப்ளிகேஷனில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துவோம். இதற்குப் பதிலாக, நாம் கீ போர்ட் ஷார்ட்கட் கீகளையும் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 7 தொகுப்பில், கேமரா அல்லது மெமரி ஸ்டிக்கிலிருந்து, போட்டோக்களைக் கம்ப்யூட்டருக்கு காப்பி செய்கிறோம். செய்த பின்னர், சில போட்டோக்களை, திரையில் சரியாகப் பார்க்க வேண்டி, சற்று சுழற்ற வேண்டியதிருக்கும். ஏனென்றால், அவை போர்ட்ரெய்ட், லேண்ட்ஸ்கேப் என எந்த கோணத்திலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.இதனை எக்ஸ்ப்ளோரர் விண்டோவில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். போட்டோக்களை காப்பி செய்த பின்னர், எக்ஸ்புளோரர் விண்டோவில், அவை இருக்கும் போல்டரைத் திறக்கவும். பின்னர், மாற்றம் செய்யப்பட வேண்டிய போட்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். போட்டோவின் சிறிய பிரிவியூ, டாஸ்க்பாரில் இடது ஓரம் காட்டப்படும். இனி, பைல் மீதாக ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "Rotate clockwise” அல்லது "Rotate counterclockwise” என்பதில், உங்கள் தேவைக்கேற்ப கிளிக் செய்திடவும். போட்டோக்கள் திசை மாறுவதனை, டாஸ்க்பாரில் காட்டப்படும் பிரிவியூவில் பார்க்கலாம்.
கீ போர்ட் மூலம் இதனை மேற்கொள்ள வேண்டும் எனில், கண்ட்ரோல் + . (Ctrl + .) அழுத்தவும். கடிகாரச் சுழற்சியின் திசையில், போட்டோ மாற்றப்படும். கண்ட்ரோல் + கமா (Ctrl + ,) அழுத்தினால், எதிர்த் திசையில் சுழற்றப்படும்.
 
நன்றியுடன் 
சிவா...
 
 
 

No comments: