ஆண்டுதோறும் பூமியில் கொட்டப்படும்சிகரெட் பில்டர்களின் எடை….!வருடத்திற்கு 4 டிரில்லியன் கிலோ சிகரெட் பில்டர்களின் குப்பை உலகம் முழுவதும் சேர்க்கப்படுவதாகவும், பூமியின் மிக அதிகமான குப்பையே இதுதான் என்றும் உலக சுற்றுப்புற சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் அனைத்து நாடுகளும் உடனடியாக சிகரெட்டுக்களை தடை செய்ய வேண்டிய நேரம் இதுதான் என்றும் அது தெரிவித்துள்ளது.
பூமியில் மிக அதிகமாக போடப்படும் குப்பை சிகரெட் பில்டர்கள்தான் என சமீபத்தில் உலக சுற்றுப்புற சுகாதார அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எனவே சிகரெட் நிறுவனங்கள் உடனடியாக இதுகுறித்து உரிய மாற்று வழி ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், அல்லது அனைத்து நாடுகளும் சிகரெட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள San Diego State University மாணவர்கள் சமீபத்தில் எடுத்த சுற்றுப்புற சுகாதாரம் குறித்த ஆய்வில் சிகரெட் பில்டர்களின் ஆபத்து குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டினால் மனிதர்களுக்கு உண்டாகும் தீமையைவிட கீழே எறியப்படும் சிகரெட் பில்டர்களின் குப்பைகளால் மனிதர்களுக்கு மாபெரும் பேரழிவு ஏற்படும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
சிகரெட் நிறுவனங்கள் பில்டர்களில் கண்ணாடி அல்லது மெட்டல் பில்டர்களை பயன்படுத்தும்படி அந்த அமைப்பு ஆலோசனை செய்துள்ளது. மேலும் சிகரெட் பில்டர்களை அப்புறப்படுத்த சிகரெட் நிறுவனங்களே அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தவேண்டும் என்றும் அது பரிந்துரை செய்துள்ளது.
நட்புடன்
..சிவா....
No comments:
Post a Comment