ஜோக்ஸ்!
1.
அந்த நடிகை ஏன் திடீர்னு
தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க?
‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்!
2.
இன்கம்டாக்ஸ் ரெய்ட்
வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப பயந்து போயிட்டார்?
அப்படியா?
ஆமாம்! ‘டிஸ்கவரி சேனல் கூட பார்க்கறதில்லேன்னா
பார்த்துக்கோயேன்!
3.
தலைவர் நிறைய
வாக்குறுதிகளை அள்ளி வீசறாரே! எந்த தைரியத்துல வீசறார்?
ஜெயிக்கமாட்டோங்கிற தைரியத்துலதான்!
4.
ஓட்டுப்போடப் போன தலைவர்
ஏன் போடாமேயே திரும்பிட்டார்!
அவர் கையில கறை படறத விரும்ப மாட்டாராம்!
5.
என்னது மன்னர்
தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டாரா?
ஆம் தன் கையாலேயே பதுங்குகுழி தோண்டிக்கொண்டார் என்று சொன்னேன்!
6.
அந்த டாக்டர்
விவரமானவருன்னு எப்படி சொல்றே?
பல்ஸ் பிடிச்சு பார்க்கிறதுக்கு முன்னாடி பர்ஸை பிடிச்சு
பார்க்கிறாரே!
7.
மக்களின் இதயங்களில் நான்
குடியிருக்கிறேன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சா ஏன்?
மக்கள் வாடகை கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க!
8.
அந்த ஆள் முகத்துலேயே
முழிக்க கூடாதுன்னு உங்க தொகுதிக்காரங்க சொன்னாங்களே என்ன பண்ணாங்க?
தொகுதி வேட்பாளரா நிக்க வைச்சு ஜெயிக்க வச்சிட்டாங்க!
9.
எதிரி நாட்டு மன்னன்
அறைக்கூவல் விடுத்தும் மன்னர் சும்மா இருந்துவிட்டாரா ஏன்?
மன்னருக்கு எந்த ஒரு விசயமும் முழுசாய் இருக்க வேண்டுமாம்!
முழுகூவல் விடட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்துவிட்டார்!
10. ஐ.பி. எல் பார்த்ததுலே இருந்து தலைவர் அதே ஞாபகமா இருக்கார்?
ஏன்?
ப்ளேயர்களை ஏலத்தில எடுக்கிறமாதிரி தொகுதிகளையும் ஏலத்திலே
எடுத்தா என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்கார்.
11. டீ.வி பார்க்கறதுல எனக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் சண்டையே
வந்துருச்சு?
அப்புறம்?
அவரு சமைக்கறப்ப நான் பாக்கிறதுன்னும் நான் சாப்பிடறப்ப அவரு
பாக்கிறதுன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம்!
12. ஏடிஎம் மிசின் மேலே ஏன் ஏறி நிக்கறீங்க!
அதுதாங்க பேலன்ஸ் சரியா இருக்கான்னு பாக்க சொல்லுச்சு!
13. நம்ம தலைவர் தன்மான சிங்கம்!
எப்படி சொல்ற?
எந்த கட்சியும் ஆதரவு கேட்டு வராததாலே தன்னோட ஆதரவை
நோட்டாவுக்கு கொடுக்கிறதா அறிக்கை விட்டிருக்காரே!
14. அந்த நடிகைக்கும் டைரக்டருக்கும் லவ் பத்திக்கிச்சாமே!
கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அதை அணைச்சி வச்சிருக்காங்க!
15. மகளிர் அணித்தலைவி எதுக்கு தலைவரோட கோச்சுக்கிட்டு போறாங்க?
தலைவரோட வீட்டுல 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டாங்களாம்!
16. செயினை அறுத்துட்டு ஓடினவனை இன்ஸ்பெக்டர் விடாம துரத்திக்கிட்டு
போய்…
மடக்கி பிடிச்சு செயினை வாங்கிட்டாரா?
ஊகும்.. மாமூலை வாங்கிட்டார்!
17. அந்த ஜெயிலிலே
பணப்புழக்கம் அதிகம்னு எப்படி சொல்றீங்க!
எல்லா செல்லிலேயும் ‘செல்லு’ சுத்திவருதே!
18. தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு சொன்னதும் வருத்தப்படாம
ஏன் சிரிக்கிறீங்க?
தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் இல்லாத இடம் எது? இன்னும்
எத்தனைநாளைக்கு இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டிருப்பீங்க!
19. அந்த பேச்சாளர் ஏன்
இன்னிக்கு பேச மறுக்கிறார்?
இன்னோவா வரும்னு பேசி பேசி இன்னிக்கு வாயெல்லாம் நோவா
ஆயிருச்சாம்!
20. மன்னருக்கு படை என்றாலே அலர்ஜிதான்!
ஓகோ! அதனால் அடிக்கடி முதுகை சொறிஞ்சிக்கிறாரோ!
21.மன்னர் வாரிக் வாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறாறா?
யாருக்கு!
வேறு யாருக்கு ராணியாருக்குத்தான் தலைவாரிக்கொடுத்துவிட்டு
இளைப்பாறுகிறார்!
22. எலக்ஷன் ட்ரெண்ட் மாறிப்போச்சா எப்படி?
அப்போ வாக்குறுதியை வாரி இறைப்பாங்க! இப்ப நோட்டை வாரி இறைக்கிறாங்க...நன்றி
அன்பன்
சிவா...
No comments:
Post a Comment