Monday, April 07, 2014

இணையம் பயன்படுத்துபவரா நீங்கள் எச்சரிக்கை…!

Share This
Tags
hacker-green-blackஇன்றைக்கு நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.
நம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம். ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள்.
இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் செயல்படுபவை. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன.
இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன. அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே.
மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை.
ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன. இணையக் கண்காணிப்பு புரோகிராம்கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை.
ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது. நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.


No comments: