1891 ம் ஆண்டு இதே நாளில்தான் புதுவையில் பாரதி தாசன் பிறந்தார்.
புரட்சிக் கவி என்றும் அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் கனக சுப்பு ரத்தினம். பாரதியார் பேரில் கொண்ட பற்றின் காரணமாக தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதியார் போலவே தீண்டாமைக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் பல புரட்சி புத்தகங்களை எழுதி புரட்சிக் கவிஞர் என்று பெயர் பெற்றார்.
இவரின் நினைவாக தமிழ்நாடு அரசு இவரது பெயரில் வருடத்துக்கு ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருது வழங்கி கவுரவித்து வருவது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது. எண்ணற்ற பரிசுகளை பெற்றுக் குவித்த இவருக்கு, மறைவிற்குப் பின்னர் சாகித்ய அகடமி பரிசும் வழங்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத் தக்கது
நன்றி
அன்புடன்
சிவா....
No comments:
Post a Comment