'ராவியதுல் பஸரியா' என்று ஈராக் நாட்டில், ஒரு பெண் ஞானி இருந்தார்.
அவர் ஒரு நாள், தெருவில் போய் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் காலத்திலேயே வாழ்ந்த, இன்னொரு ஞானி ஒருவர்,
கைகளை ஏந்தி, இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
"இறைவா! எனக்கு வெற்றியின் கதவுகளை திறந்து விடுவாயாக. உன் கருணையின் கதவுகளை திறப்பாயாக" என்று.
அதை கேட்ட 'ராவியதுல் பஸரியா' பிரார்த்தித்து கொண்டிருந்த அந்த ஞானியின் தலையில்,
ஓங்கி குட்டினார்.
வலியோடும் கோபத்தோடும், 'யார் அப்படிச் செய்தது' என்று திரும்பிய அந்த ஞானியை, பார்த்து...
"இன்னும் எவ்வளவு காலத்துக்கு, இப்படி முட்டாள்தனமாக, பிரார்த்தித்து கொண்டிருப்பாய்?
வெற்றியின் கதவுகளும், கருணையின் கதவுகளும், என்றைக்கு மூடியிருந்தன?
அவை எப்போதுமே திறந்தேதான் உள்ளன "
என்று ராபியா கூறினார்.
ஆம்.
அவர் சொன்னது சரிதான். அவை என்றைக்குமே மூடியிருந்ததில்லை.
ஆனால்...
நாம்தான், நமது தவறுகளாலும், முட்டாள் தனங்களாலும், அவை
நம்மை வந்து சேர்ந்துவிடாமல்,
நம்முடைய கதவுகளை, மூடி வைத்து கொள்கிறோம்.
பானையை கவிழ்த்து வைத்திருந்தாலோ,
ஓட்டை பானையை வைத்திருந்தாலோ,
எவ்வளவுதான் மழை
பெய்தாலும், பானை நிறையுமா? என்ன??
- நாகூர் ரூமி -
அன்புடன்
காலை
வணக்கம்.
No comments:
Post a Comment