Wednesday, April 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁 புதிய பூமி 🍁🍁

கலீல் கிப்ரான்
கவிதை ஒன்று...

சோளகாட்டு
பொம்மையிடம்
ஒரு கேள்வி.

"நீ மகிழ்ச்சியாய்
இருக்கிறாயா?"

"அடுத்தவர்களை
பயமுறுத்துகிறேன்
அல்லவா.
அந்த மகிழ்ச்சியே
எனக்கு போதும்."

இது தான்
அதன் பதில்.

இப்படித்தான்
தன்னை
'வைக்கோலால்'
திணித்து கொண்டு,
மற்றவர்களை
பயமுறுத்தி,
அதை பெருமை
என நினைத்து
கொண்டிருப்பர்
பலர்.

அவர்களுக்கு
அது இன்பத்தை
கொடுக்கும்.

ஆனால்
அவர்களை சுற்றி
உள்ளவர்களுக்கு,
அது துன்பம்
தருவதாகவே
அமையும்.

பயமுறுத்தும்
பார்வைகளில்,
வார்த்தைகளில்...

அன்பு
மலராது...

மகிழ்ச்சி
வளராது...

நட்பு
கிடைக்காது...

உறவுகள்
நிலைக்காது...

அன்பிற்கு என
சில பண்புகள்
உண்டு.

அது...

ஏழை
பணக்காரன்,
படித்தவன்
படிக்காதவன்,
மேல்சாதிகாரன்
கீழ்சாதிகாரன்,
என்னும்
நிலைகளை
பார்க்காது.

பார்வையில்
பாசம் தெரியும்.

வார்த்தைகளில்
அன்பின் அக்கறை
புரியும்.

எல்லோரையும்
ஒன்றாகவே
மதிக்கும்.

ஒரு
மனதாகவே
நினைக்கும்.

"ஆசை கோபம்
களவு
கொள்பவன்
பேசத்தெரிந்த
மிருகம்..

அன்பு நன்றி
கருணை
கொண்டவன்
மனித வடிவில்
தெய்வம்"...

இது
கவியரசரின்
கூற்று...

இதன்படி,
வாங்க...

எல்லோரிடமும்
புன்னகையுடன்
பழக
தொடங்கலாம்...

புதிய பூமியை
புதிதாக
படைக்க
செய்யலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

நன்றி
திரு. முனைவர்.சுந்தரமூர்த்தி

Tuesday, April 28, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

சிறிய வயது மகனை
அழைத்துக்கொண்டு,
மலை உச்சிக்கு
சென்றார் தந்தை.

செல்லும் வழியில்,
தவறி விழுந்த சிறுவன்,
'அம்மா' என்று
அலறினான்...

அந்த வார்த்தை
அப்படியே, மலையில்
எதிரொலித்தது...

குதுகலமடைந்த
சிறுவன்...

மேலும் சில
வார்த்தைகளை
சொல்லி,
எதிரொலிகளை
கேட்டு மகிழ்ந்தான்...

திடீரென
'நீ ஒரு முட்டாள் '
என்றான்...

மலையும் அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

சிறுவன் கடுப்பாகி
போனான்...

இதை பார்த்த
தந்தை...

"நீ ஒரு அறிவாளி,"
என்று கத்த
சொன்னார்...

சிறுவனும்
அதே போல்
கத்தினான்...

மலையும் அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

மனம் மகிழ்ந்த
மகனை பார்த்து...

"இதுதான் வாழ்க்கை.
நம் செயல்கள்
அனைத்தும்,
நம்முடைய
மனதை
போலவே,
பிரதிபலிக்கும்
தன்மை
கொண்டது...

நல்லவைகளுக்கு
நல்லவையாகவும்,
தீயனவைக்கு
தீயதாகவும்,
அமைவது
இப்படியே,"
என்று தந்தை
கூறினார்...

'எண்ணம் போல்
வாழ்வு' என்பது
இதுதானே...

வாங்க...

நாமும்,
நேர்மறை
சிந்தனைகளை,
விதைக்க
தொடங்குவோம்...

எதிர்மறை
எண்ணங்களை
குறைக்க
தொடங்குவோம்...

அன்புடன்
காலை
வணக்கம்...

- Dr.Sundar Murthy -

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பாதை 🍁🍁

குருவிடம்
அவரது சீடர்கள்,
"நல்லவர் யார் ?
கெட்டவர் யார் ??
என்னும் குழப்பம்...

அடிக்கடி
எங்கள் மனதில்
தோன்றுகிறது...

அதை எவ்வாறு
சீரமைத்து கொள்வது ?"
என்று கேட்டனர்.

அதற்கு
குரு...

"செருப்பு
நம் காலை கடித்து
கொண்டிருக்கும் வரை,
நம் கவனம்
அங்கேயேதான்
இருக்கும்.

அது சரியாக
பொருந்தி விட்டால்,
அதை பற்றிய
சிந்தனை நமக்கு
ஏற்படாது.

அது
போலத்தான்...

நல்ல எண்ணங்கள்
நம் மனதில்
படியாத வரை,
நமக்கு குழப்பங்கள்
ஏற்படத்தான் செய்யும்.

மாறாக...

நல்ல
எண்ணங்கள்
மட்டுமே,
நம் மனதில்
நிரந்தரமாக
படிந்து விட்டால்,
இந்த மாதிரி
பிரச்சனைகள் எழாது"
என்று கூறினார்.

அவரின் கூற்று
உண்மைதான்.

அதன்படி...

நம்மை சுற்றி
உள்ளவர்கள்,
'நம்மை நல்லவர்கள்
என்று கூறுவதற்காக,
நாம் நல்லவர்களாக
இருப்பதை விட ...

எந்த
சூழ்நிலையிலும்,
நமக்கு நாமே
நல்லவர்களாக
மாறும் சூழ்நிலையில்...

எல்லோருமே
நம் கண்களுக்கு
நல்லவராக தெரிய
தொடங்குவர்'.

கொஞ்சம்
கஷ்டம் தான்
இருந்தாலும்,

வாங்க...

பார்வைகளை
மாற்றலாம்...

புதிய பாதையை
போட தொடங்கலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Sunday, April 26, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁🍁புதியபார்வை 🍁🍁

உலகில் பல
மனிதர்களை,
வருத்தத்தில்
உள்ளாக்குவது,
மனித
உறவுகளிடம்,
சமரசம்
காணாமையே.

நம்மை சுற்றி உள்ள
மனிதர்கள் மீதும்
உறவுகள் மீதும்
நமக்கிருக்கும்
கசப்பான
நினைவுகளை...

தன் வாழ்நாளின்
கடைசிநாள் வரை
சுமந்து கொண்டே
இறப்பவர்கள்
நிறைய பேர்
உள்ளனர்.

நம்
கோபத்தை
பேச்சுக்களில்
வெளிபடுத்தி,
ஜெயிக்கிறோம்
அல்லது
தோற்கிறோம்.

தொடர்ந்து
அவர்களை
எப்படியாவது
வெல்லும்
எண்ணங்களிலும்
செயல்களிலும்
ஈடுபடுகிறோம்.

இதன்
விளைவுகள்...

வருத்தங்கள்,
வேதனைகள்,
பகை உணர்வுகள்
தான்.

இந்த
வாழ்வு முறை,
அடுத்த
தலைமுறை வரை
தொடர்தல்,
அதை விட
கொடுமையானது.

மனித உறவுகள்
என்பது
மகத்தானது !
உயர்வானது !!
உன்னதமானது !!!

"தன்னைப்போல
பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே

அந்த தன்மை வர
உள்ளத்திலே
கருணை வேண்டுமே

பொன்னைப்போல
மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை

இதை புரிந்துகொண்ட
ஒருவனை போல்
மனிதன் வேறில்லை"

என்னும்
வைர வரிகள்
நினைவு
கூறத்தக்கது.

வாங்க...

கசப்பான
நினைவுகளை
களை எடுப்போம்.

மக்கள் விரும்பும்
மனிதனாக வாழ
முயற்சிகள் செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Maths Quizze

https://quizizz.com/admin/quiz/5ea56fc8f685f7001d47a9ed?studentShare=true

தமிழ் வினாடி வினா

https://quizizz.com/admin/quiz/5ea567c220a746001bf145a2?studentShare=true

Saturday, April 25, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁 புதிய பார்வை 🍁

மிகவும் கந்தல்
துணியுடன்
அந்த ஞானி
காணப்பட்டார்.

அவரை
சுற்றியிலும்
கூட்டம்,
நாளுக்கு நாள்
அதிகரித்து
கொண்டே
இருந்தது.

இந்த தகவல்
மன்னரின்
காதுகளுக்கு
எட்டியது.

தம்மை
பார்க்க வரும்
கூட்டத்தை விட,
அவரை பார்க்க
வரும் கூட்டம்
அதிகமானதை,
பொறுத்து
கொள்ளாத
மன்னர்...

இது குறித்து
தெளிவடைய
அவரிடமே சென்று
'காரணம்' கேட்டார்.

ஞானி மன்னரிடம்,
"அடுத்து வரும்
பௌர்ணமியில்
இரவு பத்து மணிக்கு
என்னை வந்து பார்"
என சொல்லி
அனுப்பினார்.

அந்த நாளும்
வந்தது.

மன்னர்
ஞானியிடம்
சென்று
விளக்கம்
கேட்டார்.

ஞானி தம்
பூந்தோட்டத்திற்கு
மன்னரை
அழைத்து சென்று,
பௌர்ணமி நிலவை
பார்க்க சொன்னார்.

சில நொடிகள்
கழித்து...

அருகில் இருந்த
ரோசா மலரை
பார்க்க சொன்னார்.

பின்னர், "அந்த
நிலா போல் தாம்
ஒளிவீசுவதில்லை
என்று, ரோசா மலர்
நினைப்பது இல்லை...

அதை போலவே,
ரோசா மலரை
போல் தாம் வாசம்
அளிப்பதில்லை
என, அந்த நிலாவும்
நினைப்பது இல்லை...

அது போலத்தான்
நம் வாழ்க்கையும்,"
என்று ஞானி
கூறினார்.

மன்னர்
தெளிவடைந்தார்.

மன்னிப்பு கேட்டதுடன்
அரண்மணைக்கு
திரும்பினார்.

வாங்க...

இயற்கையின்
படைப்பில் நாம்
அனைவருமே,
தனித்துவம்
மிக்கவர்கள்தான்.

நமக்கு
யார் மீதும்,
எந்த விஷயத்திலும்,
ஒப்பீடு தேவை இல்லை.

அப்படி
இருப்பின்...

அது நம்
'மன அமைதியை'
அழிப்பதுடன்,
நம் 'வளர்ச்சியையும்'
தடுக்கும்.

இதனை
புரிந்து கொள்வோம்.

இனி
வரும் நாட்களில்...

நம் வாழ்வை
நாம் இனிமை
ஆக்குவோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Friday, April 24, 2020

புதிய பார்வை.....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

'தங்க
புத்தர்'

தாய்லாந்து நாட்டில்
களிமண்ணால் ஆன
புத்தர் சிலை ஒன்றை,
சில காரணங்களுக்காக
ஒரு கிராமத்தில்
இருந்து மற்றொரு
கிராமத்திற்கு
இடம் பெயர்த்தனர்.

சிலை
பயணப்பட்டிருந்த
நேரத்தில்...

திடீரென
காற்று வீச
தொடங்கியது.

மழை வரும்
சூழ்நிலையும்
உருவானது.

'மழையில் சிலை
கரைந்து விடுமே',
என்னும் அச்சத்தில்
மக்கள் சிறு பந்தல்
அமைக்க தொடங்கினர்.

ஆனாலும்...

காற்று மற்றும்
மழையின்
வேகத்தில்,
கொஞ்சம்
கொஞ்சமாக,
சிலை கரைய
ஆரம்பித்தது.

மக்கள்
செய்வதறியாது
தவித்தனர்.

அப்போது ஓர்
அதிசயம் நிகழ்ந்தது.

புத்தரின் தலை
பகுதியில் இருந்து,
களிமண் கரைய கரைய...

புத்தர்
தங்கமாக
ஜொலித்தார்.

ஆம்...

தங்கத்தால் அமைக்க
பட்டிருந்த புத்தர் சிலை
'களவாடப்படும்'
என்னும் அச்சத்தில்...

களிமண்னால்
முழுவதும்
மறைக்கபட்டு,
உருவாக்கியிருந்த
'ரகசியம்' அன்று
வெளிப்பட்டது.

தாய்லாந்து நாட்டில்,
இன்றும் அந்த
'தங்க புத்தரை'
நாம் காண முடியும்.

நாமும்
அது போலத்தான்...

நல்
குணங்களையும்,
நன்னெறிகளையும்,
கலாச்சாரத்தையும்
மறந்து...

தீய
சிந்தனைகளையும்,
செயல்களையும்,
குணங்களையும்...

'களிமண் பூச்சு'
என்னும் போர்வையில்,
நம் மீது நாமே
சில சமயங்களில்
பூசி கொள்கிறோம்.

'தன்னை அறிதல்'
மற்றும்
'விழிப்புணர்வு'
என்னும்...

காற்று, மழை
மூலமாக,
அவை கரைய
தொடங்கினால்...

நாமும்
தங்க புத்தரை போல்
ஜொலிக்க முடியும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Thursday, April 23, 2020

நாட்டின் வளர்ச்சி...வீழ்ச்சியில்...ஆசிரியர்கள்

ஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில்.

இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும்.

பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது.

ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும்; எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும்.

ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும்.

அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள்.

பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள்.

மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு "உயிரின் வாழ்வியலுக்கு" அவசியமானவர்.

பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான்.

இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும், போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும்" அதிகரித்துக் காணப்படுவார்கள்.

அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும்.

''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி" "சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.

பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.

எனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.

- முக நூல் பதிவு -

அன்புடன்
காலை
வணக்கம்.

Wednesday, April 22, 2020

வாசிப்பு...வாழ்வின்....நேசிப்பு....

📚📚📚✍✍
வாசிப்பு மனநிலை!
📚📚✍✍✍

- எஸ். இராமகிருஷ்ணன்

ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது புத்தகம் படிக்க வைப்பது.

மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக்கிறார்கள் என புரிந்துகொள்ளவே முடியவில்லை.

எதற்கு படிக்க வேண்டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

எனது நண்பர் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தானே 100 புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் இலவசமாக புத்தகம் கொடுத்து படிக்க வைக்க முயன்றார்.

அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்குப் போய் அவர் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார். கதவை திறந்த ஆள், ‘யார் என்ன..’ என எதையுமே கவனிக்காமல் ‘வேண்டாம் போ’ எனச் சொல்லி கதவை மூடிவிட்டார்.

அடுத்த வீட்டில், ‘இதை வெச்சிட்டு என்ன செய்றது? யாரும் படிக்க மாட்டாங்க; வேற ஏதாவது கிஃப்ட் இருந்தா குடுங்க…’ என ஒரு பெண் கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வீட்டில், ‘புக்ஸ் எல்லாம் வேஸ்ட் சார். நாங்க நியூஸ் பேப்பர் கூட வாங்குறதில்லை…’ எனச் சொல்லி துரத்தியிருக்கிறார்கள்.

இப்படியாக 5 மணி நேரம் பல்வேறு குடியிருப்புகளில் ஏறி, இறங்கியும் அவரால் 10 புத்தகங்களைக் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும்போது அதன் காவலாளி அவரை அழைத்து, தனது பேத்தி படிக்க ஒரு புத்தகம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருக்கிறார்.

அவர் ஒருவரை தவிர வேறு யாரும் புத்தகத்தை கேட்டு வாங்கவே இல்லை.

நண்பர் விரக்தியோடு சொன்னார்: ‘‘அப்பா அம்மா புக்ஸ் படிச்சாதான் பிள்ளைகள் படிப்பாங்கன்னு நினைச் சேன். பெரியவங்களை படிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். எதையும் படிச்சிரக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க.

அப்படியே பிள்ளை களையும் வளர்க்குறாங்க, இப்படி இருந்தா இந்த நாடு உருப்படவே உருப்படாது!”

இதுதான் நிதர்சனம். புத்தகம் படிக்க வைக்க நாடு தழுவிய ஓர் இயக்கம் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

மழலையர் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். நிறைய பெற்றோர்கள் வந்திருந்தார்கள்.

அதில் ஒருவர் கூட எந்த எழுத்தாளரையும் பற்றி அறிந்திருக்கவில்லை.

எதைப் படிப்பது? எப்படி புத்தகங்களை தேர்வு செய்வது என்பதை பற்றியதாக அன்றைய கலந்துரையாடல் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் ‘மார்டிமர் ஜே அட்லர்’ எழுதிய ’ஹவ் டு ரீட் எ புக்’ (How to Read a Book) என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துப் பேசினேன். 1940-ம் ஆண்டு வெளியான புத்தகம் அது.

‘புத்தகம் படிப்பது எப்படி?’ என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டது

அந்த புத்தகம். நாம் ஏன் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் எவை? அதை எப்படி அகற்ற முடியும் என்பதற்கான கையேடு போல இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மேலோட்டமாக வாசிப்பது, ஆழ்ந்து வாசிப்பது என இரண்டுவிதமான வாசிப்பு முறைகள் உள்ளன.

பொதுவாக செய்திகளை, தகவல்களை மேலோட்டமாக வாசிக்கிறோம்.

தீவிரமான கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், அறிவியல் சிந்தனைகளை ஆழ்ந்து வாசிக்கிறோம்.

பொழுது போவதற்காக வாசிப் பது ஒருவிதம். அறிவையும், அனுப வத்தையும், ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வாசிப்பது இன்னொரு விதம்.

வாசிப்பின் குறிக்கோள்தான் எதை வாசிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

எந்த ஒன்றையும் கற்றுக்கொள் வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன.

ஒன்று, ஆசான் வழியாக கற்றுக்கொள்வது. மற்றது, நாமாக கற்றுக் கொள்வது.

இந்த இரண்டும் சிலவேளைகளில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும்.

நாமாக ஒன்றை கற்றுக்கொள்வதுதான் வாசிப்பின் முதல் செயல்.

புத்தகம் ஓர் அரூப ஆசிரியன். அதில், குரல் மட்டுமே ஒலிக்கும்; ஆளைக் காண முடியாது.

ஆரம்ப நிலை வாசிப்பு, தேர்ந்த வாசிப்பு, பகுத்தாயும் வாசிப்பு, முழுமையான ஆழ்ந்த வாசிப்பு என வாசிப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

அறிவியல் புத்தகங்களை எப்படி படிப்பது? தத்துவப் புத்தகங்களைப் பயில்வது எப்படி? புனைக் கதைகள், நாவல்கள் மட்டும் ஏன் விரும்பிப் படிக்கப்படுகின்றன?

கவிதைகள் ஏன் எளிதில் புரிவதில்லை? வரலாற்று நூல்களை வாசிக்க ஏன் சிரமமாக உள்ளது…

என்பதை குறித்து, தனித் தனி கட்டுரைகளாக விரிவாக எழுதி யிருக்கிறார் மார்டிமர்.

எந்தப் புத்தகம் குறித்தும் முன்முடிவுகள் தேவையற்றவை.

புத்தகத்தைத் தேர்வு செய்வதற்கு அது குறித்த அறிமுகமும் பரிந்துரைகளும் மிகவும் அவசியம்.

ஆரம்ப நிலை வாசகர்கள் 50 பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் ஒன்றை தேர்வு செய்து படிக்கப் பழகினால், அதை முழுதும் படித்து முடித்து விடுவார்கள்.

அதை விடுத்து 1,000 பக்க புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்க முடியாததோடு புத்தகம் படிப்பதன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஜப்பானியர்கள் எதையும் படக் கதை வடிவில் படிக்கிறார்கள்.

இதனால் படிப்பது எளிமையாவதோடு வேகமாக வும் படிக்க முடிகிறது.

கோட்பாடுகள் சார்ந்த புத்தகங்களை படிக்கும் முன்பு கோட்பாடுகள் யாரால், எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

வரலாற்று நூலை வாசிக்கும் முன்பாக வரைபடங்களைத் துணைக்கு கொள்ள வேண்டும்.

அறிவியல் சிந்தனை களை புரிந்துகொள்ள ஆதார விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

கவிதையை ரசிக்க கற்பனை வேண்டும்...

என படிப்பதற்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மார்டிமர் வலியுறுத்துகிறார்

ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் நினைவில் நிற்கும்? படித்த விஷயங் களை எப்படி குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பதற்கும் உதவிக் குறிப்புகள் கொடுக்கிறார் இவர்.

மகாபாரதம், ராமாயணம், ஒடிஸி போன்ற இதிகாசங்களை வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம்.

ஒரு நாவல் அல்லது கவிதை புத்தகம் வாசிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக் கூடியது.

இதிகாசங்களை வாசிப்பது எளிதான தில்லை.
ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டது.

ஆகவே பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். இதி காசத்தின் கட்டமைப்பு மிக முக்கியமானது.

அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது.

அதே நேரம் ஒன்று சேரும்போது விரிந்த அனுபவம் தரக் கூடியது. ஆகவே, அந்தக் கட்டமைப்பின் ஆதாரப் புள்ளியை அறிந்துகொள்வது அவசியமானது.

இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோற்றம் கொண் டது.

அதற்கு நிறைய உள்அடுக்குகளும், குறியீட்டு தளங்களும், உபகதைகளும், தத்துவ விசாரங்களும் இருக்கின்றன.

அதைப் புரிந்துகொண்டு படிக்கும்போது தான் முழுமையான வாசிப்பு சாத்தியப்படும்

வாரம் ஒரு புத்தகம்.
மாதம் நான்கு புத்தகம்…
என்ற இலக்கோடு தொடங்குங்கள்.

நிச்சயம் அது வளர்ச்சியடையும் என்கிறார் மார்டிமர். எனது சிபாரிசும் அதுவே!

- எஸ். இராமகிருஷ்ணன்,
எழுத்தாளர் -

- உலக புத்தக தினம் இன்று -

Monday, April 20, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும்.  இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும்.
தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும். அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும். இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும். அப்போது அது ஒரு புதிதாய்ப் பிறந்த கழுகின் அளவுக்கு உருமாறியிருக்கும்.
எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும். நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில் சக்கரவா்த்தியாய் வலம் வரும்.
மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு. கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும். தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல், புதிய வழிகளை உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.

*தனித்திருப்பது*   *சாபம் அல்ல .. வரம்..*