Saturday, July 23, 2016

கடிகார முள்கள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது?*

*கடிகார முள்கள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது?*

கடிகாரம் எப்போதும் ஒரே மாதிரி அதாவது வலப்புறமாக சுற்றிவரும், இதனை கடிகார திசை என்று கூறுகிறார்கள்.

இதற்கு காரணம் பூமியின் சுழற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி துளியும், ஒவ்வொரு நிமிடமும் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தாகவே கருதப்படுகிறதுது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற அளவு பலருக்கும் போதாது என்ற நிலையும் ஏற்படுவதாக கூறிவருகின்றனர்.

கடிகார சுழற்சி குறித்து எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. அதாவது வலப்புறமாக தான் சுற்றிவரும், இதனை கடிகார திசை(Clockwise) என்று கூறுவது உண்டு.

முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தைச் சீனர்கள்தான் தயாரித்தார்கள். சீனா நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ளது.

வட துருவத்தில், தெற்கே பார்த்து நின்றீர்கள் என்றால் உங்கள் இடப் புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும். எனவே, அவர்கள் உருவாக்கிய கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது. சூரியனை, பூமி 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் வலப்புறமாக சுற்றுகிறது.

அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இடதுபுறத்தில் இருந்து(கிழக்கு) சூரியன் வலதுபுறமாக(மேற்கு), அதாவது கடிகார திசையில் சுழலுவது போல் தோன்றும்.

இடது புறத்தில் இருந்து வலதுபுறமாக சூரியனின் நிழல் நகர்வதை அடிப்படையாக கொண்டு கடிகார முள்களும் அந்த திசையிலேயே சுற்று வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

*என்றும் அன்புடன்,*

சிவா...

லேப் டாப் வாங்கும் போது....

*லேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...*

தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வர  முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். 
*Laptop Configuration & Processor*

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும். எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

*RAM*

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

*HARD DISK*

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது. எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம். பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

*DVD DRIVE*

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

*GRAPHIC CARD*

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும். நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று.2 அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது. இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள். போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

*Operating System ( OS)*

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும். இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது. 

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள். இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

Friday, July 22, 2016

Learning Management System.. LMS

தோழமைகளுக்கு இனிய காலை வணக்கங்கள் வகுப்பறை நுட்பத்தில் மிகச்சிறந்த LMS பற்றி அறிவோம் . LMS எனப்படும் Learning management system தற்பொழுது உலகின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட கற்றல் சூழல் ஆகும் . சுருக்கமாக சொன்னால் LMS  என்பது நமது வகுப்பறை போன்று இணையவெளியில் மெய்ம்மையாக கட்டமைக்கப்படும் Online classroom ஆகும் இவை பொதுவாக ஜாவா அல்லது PHP போன்ற நிரல்மொழிகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படுகிறது தரவுதளத்திற்காக MySQL மற்றும் Oracle போன்றவை பயன்படுத்தப்படுகிறது .
LMS கல்விச்செயல்பாடுகளில் மட்டுமல்ல பல்வேறு வகையான நிருவனங்களிலும்  சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் நிர்வக பணிகளை கையாளுதல், அறிக்கைகள் பெறுதல் , டாக்குமென்டேஷன் போன்றவற்றை கையாள முடியும் . LMS இல் பங்கேற்பவர்களின் திறன்கள் பட்டைதீட்டி மெருகேற்றப்படுகிறது . தோழமைகளே LMS வகுப்பறை செயல்பாடுகளில் எங்கனம் பயன்படுகிறது என்பதை மட்டும் அறிவோம்.
தற்பொழுது உலகளாவிய வகுப்பறைச்சூழல்களில் வேறு வேறு LMS வகைகள் பயன்பட்டாலும் அதன் அடிப்படை நுட்பம் ஒன்றே . மாணாவர்களுக்கு வகுப்பறை போன்றே ஆன்லைனில் விர்ச்சுவலாக வகுப்பறை செயல்பாடுகளை கொடுப்பதே ஆகும் . LMS நுட்பங்களை பயன்படுத்தி பள்ளி , கல்லூரி போல ஆன்லைனில் பல்வேறு Course அளிக்க முடிவதோடு பயன்மிக்க மதிப்பீட்டு உத்திகளை பெற முடியும் . உதாரணமாக ஒரு மாணாவன் ஆன்லைன் வகுப்பறையில் தேர்வு எழுதுகிறான் என்றால் அதன் மதிப்பீட்டினை மாணவன், ஆசிரியர், தலைமையாசிரியர் , மாணவனது பெற்றோர் ஆகியோர் அனைவரும் உடனடியாக அறிய முடியும் .
LMS நுட்பத்தின்  ஒரு பகுதியான SCORM ( Sharable content object reference Model ) எனும் நுட்பத்தின் மூலம் அனிமேஷன் வடிவிலோ, வீடியோ வடிவிலோ , மென்பொருள் வடிவிலோ இ.கன்டென்டுகளை பகிர்ந்தளிக்க முடியும் . மாணவர்களுக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட கற்றல் சூழல் கிடைக்கும் .
[7/17, 10:02 AM] Guru.new: LMS இல் சிறப்பாக கையாளப்படும் ஒரு ஓபன்சோர்ஸ் நுட்பம் மூடுள் ஆகும் இதைப்பற்றியும் அறிந்து கொள்வோம் இன்னும் ஐந்து வருடங்களில் நம் கேட்கப்போகும் தவிர்க்க முடியாத வார்த்தை மூடுள் ஆகும் வாருங்கள் தோழமைகளே இதையும் அறிந்து கொள்வோம் . Moodle என்பது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள் வகையை சார்ந்த இணைய வழி கற்றல் நிர்வாக தொகுதியாகும் . இதை பயன்படுத்தி கற்பித்தல் செயல்பாட்டை மிகவும் எளிமையாகவும்  திறன்மிக்கதாகவும் மாற்றியமைக்கலாம் . வொப் கான்பரன்ஸ் மூலம் இணையவழி வகுப்பறையை உலகின் எந்த பகுதியில் இருந்தும் அணுகலாம் . மாணவர்களுக்கு Audio , video, animation e content , PDF , பவர்பாயின்ட் உள்ளிட்ட Documents, போன்ற பல்வேறு வகைப்பட்ட பைல்களை மாணாவர்களுக்கு கொடுக்கலாம் . மாணாவர்களும் முழுமையான கற்றல் அடைவினை சுயமாகவே கற்று தேறமுடியும் மேலும்  இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடக்குறிப்புகளை பகிரலாம். அதோடு மாணவர்களுக்கான ஒப்படைவுகள் , தேர்வுகள் போன்றவற்றை கொடுக்கலாம் அதன் முடிவுகளை உடனுக்குடன் அறியலாம் . மூடுள் என்பது சமூக உருவக்கத்தை அடிப்படையாக கொண்ட  ( Social constructional pedagogy) கல்வி முறையாக கட்டமைக்கப்பட்டுள்ளது இதனால் கற்பவர்கள் தமது சகாக்களுடன் சேர்ந்து குழு கற்றல் மூலம்  அறிவை வளர்த்து கொள்ள முடியும் . குழுவாக உரையாட முடியும் , சாட் செய்ய முடியும் என பல்வேறு வசதிகள் உள்ளன  மூடுள் 100 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூடுள் நமது தாய்மொழியான தமிழுக்கு முழு ஆதரவு கொடுப்பதினால்  மூடுளை தமிழ் மொழியிலே முழுமையாக பயன்படுத்த முடியும் . Martin Dougiamas என்பவர்தான் மூடுளை உருவாக்கினார் . இது ஓபன்சோர்ஸ் வகையை சேர்ந்தது என்பவதால் பல்லாயிரக்கணக்கான தன்னார்வ கணினி நிபுணர்களால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது . மூடுளில் நிர்வாகி,ஆசிரியர், மாணாவர், விருந்தினர் என பல வகைப்பட்ட நுழைவுகள் உள்ளன ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன . மூடுளுக்கு துணை செய்ய பல்வேறு இ லேர்னிங் மென்பொருட்கள் இலவசமாகவே கிடைகின்றன அதன் மூலம் இ கன்டென்ட்டுகள் உருவாக்கி மூடுளுக்கு ஒரு பதிவேற்றிக்கொண்டால் போதும் சிறப்பன மின் வழி கற்றலை கட்டமைக்க முடியும் .

நன்றி குருஜி....

அன்புடன் சிவா....

டிஜிடல் நூலகம் அமைப்பது எப்படி?


நமது பள்ளியில் எளிய முறையில் டிஜிட்டல் நூலகம் அமைப்பது எப்படி ?
இணையத்தில் பிரிட்டானிக்க போன்ற பல்வேறு என்சைக்ளோபீடியாக்கள் கிடைக்கின்றன. மேலும் அவை ஐ எஸ் ஒ கோப்பாக கிடைக்கின்றன அவற்றை நாம் மவுண்ட் செய்து கணியில் நிறுவி பயன்படுத்தலாம். மேலும் பாடப்பொருள் சார்ந்த அனிமேஷன் தொகுப்புகள் கிடைக்கிறது அதை வாங்கி கணினியில் பயன்படுத்தலாம். மேலும் பல்வேறு கலைக்களஞ்சியங்கள் பி டி எப் வடிவில் இபுக்ஸ் ஆக இருக்கின்றன அவற்றை எல்லாம் தொகுத்தால் அட்டகாசமான டிஜிட்டல் நூலகம் தயார். நீங்கள் இணையத்தில் DK BOOKS Encyclopaedia என தேடி பதிவிறக்கி பாருங்கள் அதில் காணப்படும் கருத்துசெறிவை கண்டு தாங்களே ஆச்சர்யப்படுவீர்கள். டிகே புக்ஸில் விசுவல் டிக்ஸ்னரி, மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள்அறிவியல் அதிசங்கள், வானவியல், அறிவியல் உபகரணங்கள், விளையாட்டு, என   நூற்றுக்கனக்கான என்ஸைக்ளோ பீடியாக்கள் உள்ளன.

ஓபன் சோர்ஸ் என்றால் என்ன ?

வணக்கம் தோழமைகளே .....

ஓபன் சோர்ஸ் என்றால்
என்ன ?
ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு . ஆனால் , நாம் காண இருப்பது சாப்ட்வேர் அல்லது மென்பொருள் சார்ந்ததையே ஆகும். பயப்படவேண்டாம் , நான் மிக எளிய பாணியில் உங்களுக்கு ஓபன் சோர்ஸ் பற்றி விளக்குகிறேன்.
ஓபன் சோர்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயரோ , அவைகளின் தயாரிப்போ அல்ல…! ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தை பெரும்பாலும் கூட்டு மென்பொருள் உருவாக்க முறையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் , மென்பொருளின் மூலக் குறியீடுகள் (கட்டமைப்புகள்) வெளிப்படையாக போடப்படுவதால் , நம்மால் இதனை பார்க்க , மாற்ற , பகிர மற்றும் பயன்படுத்தவும் முடியும்.

இந்தியாவில் நாம் உபயோகிக்கும் பல மென்பொருள்கள் திருட்டுதனமானவை. ஏன் நீங்கள் உபயோகப்படுத்தும் ஆபரேடிங் சிஸ்டம் (operating system windows xp, vista , windows 7,8,10) மற்றும் உங்கள் கணினியில் இருக்கும் Microsoft நிருவனத்தின் microsoft office கூட முறைப்படி வாங்கததாக இருக்கலாம். ஆனால் ஓபன் சோர்ஸ் உபயோகிப்பதில் இந்த சிக்கல் இல்லை மேலும் இதில் நிறைய பயன்களும் உண்டு .
தனியுரிம மென்பொருள்களில் , மொத்த மென்பொருளும் ஒரே ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவ
ையாகும்.ஓபன் சோர்ஸ் மென்பொருள் பெரும்பாலும் தன்னார்வ சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள புரோகிராமர்களால் பங்களிக்கப்பட்டவையே ஆகும். பிரபலமான ஓபன் சோர்ஸ் உபாயங்கள் : மொசில்லா பையர்பாக்ஸ் உலவி (Browser) , Ubuntu , Linux  fedora போன்ற இயங்குதளங்கள்  குறிப்பிடத்தக்கது.

இது எங்கு தொடங்கியது ?

ஓபன் சோர்ஸ் தொடர்புடைய விஷயங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டவை.
ஐபிஎம் நிறுவனம் தான் முதல் தலைமுறை கணினிகளை செய்து, அதனை இயக்க மென்பொருள் தொகுப்பை உருவாக்கியது.இவ
ை அணைத்தும் இலவசம் மட்டுமின்றி பயனர்களின் மத்தியில் மறுவிநியோகம் செய்யத்தக்கவை.அதன் மூல குறியீடுகளையும் நம் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால் , 1970 ஆம் ஆண்டு ஐபிம் தனது மென்பொருள் படைப்புகளை தனியுரிமை மென்பொருளாக மாற்றியதால் , மக்களால் முன்பே பதிவு செய்யப்பட்ட மென்பொருள்களை மாற்றி அமைக்க இயலவில்லை.
அச்சமயத்திலேயே உண்மையான இலவச மென்பொருள் இயக்கம் தொடங்கியது. 1980 ஆம் ஆண்டு , ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரே ஓபன் சோர்ஸ் மென்பொருள் பயன்பாட்டினை, தனது GNU திட்டத்தின் மூலம் பிரபலமாக்கினர். அதன் குறிக்கோள் கணினியை இயக்க பயன்படும் மூலப்பொருளான இயக்கு தளத்தையும் , கணினி சார்ந்த மென்பொருள் தொகுப்புகளையும் இலவசமாக உபயோகிக்கவும் , மாற்றுவதற்கும் கிடைக்க செய்வதே ஆகும். ” மென்பொருள் தொகுப்புகளை அனைவராலும் இலவசமாக மாற்றம் செய்ய கிடைப்பது ஒரு அடிப்படை உரிமையாகும்” என்பது அவரின் கருத்து.
ஓபன் சோர்ஸ் நமக்குத் தேவையா ?
இன்று நாம் உபயோகிக்கும் பல மென்பொருட்கள் , உடைமையாளர்களின் படைப்பாகும். எனவே , இந்த மென்பொருள்களை நாம் பணம் செலுத்தி பெற வேண்டியுள்ளது. பலர் தங்கள் தேவைக்கேற்ற மென்பொருள் சாதனங்களை பணப்பற்றாக்குறையினால் வாங்க முடியவில்லை. ஏழை நாடுகளில் உள்ள அறிவியலாளர்களும் மாணவர்களுமே மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இக்குறைபாடு அந்த நாடுகளின் வளர்ச்சியையே பாதிக்கும். இதனால் , அறிவியல் சமூகம் அதனுடைய ஆற்றலை உணராமலேயே போய்விடுகின்றது.
ஆனால் , ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் , எப்போதும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இதன் உருவாக்கத்தில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பும் இருப்பதனால் இம்முறையில் தயாரிக்கப்படும் மென்பொருட்களில் புதுமை காணப்படும். முக்கியமாக ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் முற்றிலும் இலவசம் !
ஆகவே , ஓபன் சோர்ஸ் திட்டமானது மக்கள் , சமுதாயம் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
கல்வி செயல்பாடுகளில் பயன்பெறும் சில ஓபன் சோர்ஸ் மென்பொருள்களை பற்றி பார்ப்போம். முதலில் 1.free mind
free mind மென்பொருளானது மனவரைபடம் வரைய உதவும் மென்பொருள்
2.Geogebra
Geogebra என்பது கணிதம் கற்பித்தலுக்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருள்
3.stellarium
stellarium என்பது வானத்தையும் நட்சத்திரக்கூட்டங்களையும்  அறிய உதவும் மென்பொருள்
4. celestia
celestia என்பது கோள்களின் இயக்கங்கள் பற்றி அறிய உதவும் மென்பொருள்
5.child play
child play என்பது பல்வேறு கல்விச் செயல்பாடுகள் விளையாட்டு மூலமாக கற்க உதவும் மென்பொருள்.
6.Gcompris
Gcompris என்பது ஒலியுடன் கூடிய கணித செயல்பாடுகளை கற்க உதவும் மென்பொருள்
7.tuxmath
tuxmath என்பது கணித செயல்களை கற்க உதவும் மென்பொருள்
8.physiogame
physiogame என்பது விளையாட்டு வழி ஆங்கிலம் கற்க உதவும் மென்பொருள்
9.pencil
pencil எனும் பெயரில் இரு மென்பொருட்கள் உள்ளன ஒன்று அனிமேஷன் செய்ய உதவுவது மற்றொன்று கணித வடிவங்களை வரைய உதவும் மென்பொருள்.
10.gimp
gimp என்பது போட்டோஷாப்பிற்கு இணையான மென்பொருள் இதன் மூலம் நமது புகைப்படங்களை அழகாக்கி கொள்ளலாம்
11.inkscape
வெக்ட்டர் இமேஜ்களை கையாள உதவும் மிகச்சிறந்த மென்பொருள்
12.scribus
கடிதம் தட்டசிட , நாளிதழ்கள் புத்தகம் உருவாக்க பக்க வடிவமைப்பிற்கு மைக்ரோசாப்ட் வேர்டை விட சிறப்பான மென்பொருள்
13.Scratch
குழந்தைகள் அழகிய புகைப்படங்கள் வழி எளிதாக கணினிப்நிரலை கற்க உதவும் மென்பொருள்
14.Avogadro
Avogadro என்பது
தனிம வரிசை அட்டவனை கற்பது போன்ற வேதியியல் செயல்பாடுகள் நிரம்புயது
15.word web
ஆங்கிலம் கற்க மிகச்சிறந்த மென்பொருள் இது இதன் மூலம் வார்த்தைகளுக்கான விளக்கம் , தொடர்புடைய வார்த்தைகள் அவற்றிற்குரிய synonyms , types போன்றவற்றை அறிய முடியும்.  நல்லது தோழமைகளே நூற்றுக்கணக்கான ஓபன்ஸோர்ஸ் மென்பொருட்களில் 15 மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்  பிறிதொரு சந்தர்பத்தில் மேலும் சில மென்பொருட்களை கூறுகிறேன்.

மாணவர்கள், ஆசிரியர்கள்
நலன் கருதி......

நன்றி குருஜி....

அன்புடன் சிவா...