தோழமைகளுக்கு இனிய காலை வணக்கங்கள் வகுப்பறை நுட்பத்தில் மிகச்சிறந்த LMS பற்றி அறிவோம் . LMS எனப்படும் Learning management system தற்பொழுது உலகின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட கற்றல் சூழல் ஆகும் . சுருக்கமாக சொன்னால் LMS என்பது நமது வகுப்பறை போன்று இணையவெளியில் மெய்ம்மையாக கட்டமைக்கப்படும் Online classroom ஆகும் இவை பொதுவாக ஜாவா அல்லது PHP போன்ற நிரல்மொழிகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படுகிறது தரவுதளத்திற்காக MySQL மற்றும் Oracle போன்றவை பயன்படுத்தப்படுகிறது .
LMS கல்விச்செயல்பாடுகளில் மட்டுமல்ல பல்வேறு வகையான நிருவனங்களிலும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் நிர்வக பணிகளை கையாளுதல், அறிக்கைகள் பெறுதல் , டாக்குமென்டேஷன் போன்றவற்றை கையாள முடியும் . LMS இல் பங்கேற்பவர்களின் திறன்கள் பட்டைதீட்டி மெருகேற்றப்படுகிறது . தோழமைகளே LMS வகுப்பறை செயல்பாடுகளில் எங்கனம் பயன்படுகிறது என்பதை மட்டும் அறிவோம்.
தற்பொழுது உலகளாவிய வகுப்பறைச்சூழல்களில் வேறு வேறு LMS வகைகள் பயன்பட்டாலும் அதன் அடிப்படை நுட்பம் ஒன்றே . மாணாவர்களுக்கு வகுப்பறை போன்றே ஆன்லைனில் விர்ச்சுவலாக வகுப்பறை செயல்பாடுகளை கொடுப்பதே ஆகும் . LMS நுட்பங்களை பயன்படுத்தி பள்ளி , கல்லூரி போல ஆன்லைனில் பல்வேறு Course அளிக்க முடிவதோடு பயன்மிக்க மதிப்பீட்டு உத்திகளை பெற முடியும் . உதாரணமாக ஒரு மாணாவன் ஆன்லைன் வகுப்பறையில் தேர்வு எழுதுகிறான் என்றால் அதன் மதிப்பீட்டினை மாணவன், ஆசிரியர், தலைமையாசிரியர் , மாணவனது பெற்றோர் ஆகியோர் அனைவரும் உடனடியாக அறிய முடியும் .
LMS நுட்பத்தின் ஒரு பகுதியான SCORM ( Sharable content object reference Model ) எனும் நுட்பத்தின் மூலம் அனிமேஷன் வடிவிலோ, வீடியோ வடிவிலோ , மென்பொருள் வடிவிலோ இ.கன்டென்டுகளை பகிர்ந்தளிக்க முடியும் . மாணவர்களுக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட கற்றல் சூழல் கிடைக்கும் .
[7/17, 10:02 AM] Guru.new: LMS இல் சிறப்பாக கையாளப்படும் ஒரு ஓபன்சோர்ஸ் நுட்பம் மூடுள் ஆகும் இதைப்பற்றியும் அறிந்து கொள்வோம் இன்னும் ஐந்து வருடங்களில் நம் கேட்கப்போகும் தவிர்க்க முடியாத வார்த்தை மூடுள் ஆகும் வாருங்கள் தோழமைகளே இதையும் அறிந்து கொள்வோம் . Moodle என்பது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள் வகையை சார்ந்த இணைய வழி கற்றல் நிர்வாக தொகுதியாகும் . இதை பயன்படுத்தி கற்பித்தல் செயல்பாட்டை மிகவும் எளிமையாகவும் திறன்மிக்கதாகவும் மாற்றியமைக்கலாம் . வொப் கான்பரன்ஸ் மூலம் இணையவழி வகுப்பறையை உலகின் எந்த பகுதியில் இருந்தும் அணுகலாம் . மாணவர்களுக்கு Audio , video, animation e content , PDF , பவர்பாயின்ட் உள்ளிட்ட Documents, போன்ற பல்வேறு வகைப்பட்ட பைல்களை மாணாவர்களுக்கு கொடுக்கலாம் . மாணாவர்களும் முழுமையான கற்றல் அடைவினை சுயமாகவே கற்று தேறமுடியும் மேலும் இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடக்குறிப்புகளை பகிரலாம். அதோடு மாணவர்களுக்கான ஒப்படைவுகள் , தேர்வுகள் போன்றவற்றை கொடுக்கலாம் அதன் முடிவுகளை உடனுக்குடன் அறியலாம் . மூடுள் என்பது சமூக உருவக்கத்தை அடிப்படையாக கொண்ட ( Social constructional pedagogy) கல்வி முறையாக கட்டமைக்கப்பட்டுள்ளது இதனால் கற்பவர்கள் தமது சகாக்களுடன் சேர்ந்து குழு கற்றல் மூலம் அறிவை வளர்த்து கொள்ள முடியும் . குழுவாக உரையாட முடியும் , சாட் செய்ய முடியும் என பல்வேறு வசதிகள் உள்ளன மூடுள் 100 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூடுள் நமது தாய்மொழியான தமிழுக்கு முழு ஆதரவு கொடுப்பதினால் மூடுளை தமிழ் மொழியிலே முழுமையாக பயன்படுத்த முடியும் . Martin Dougiamas என்பவர்தான் மூடுளை உருவாக்கினார் . இது ஓபன்சோர்ஸ் வகையை சேர்ந்தது என்பவதால் பல்லாயிரக்கணக்கான தன்னார்வ கணினி நிபுணர்களால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது . மூடுளில் நிர்வாகி,ஆசிரியர், மாணாவர், விருந்தினர் என பல வகைப்பட்ட நுழைவுகள் உள்ளன ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன . மூடுளுக்கு துணை செய்ய பல்வேறு இ லேர்னிங் மென்பொருட்கள் இலவசமாகவே கிடைகின்றன அதன் மூலம் இ கன்டென்ட்டுகள் உருவாக்கி மூடுளுக்கு ஒரு பதிவேற்றிக்கொண்டால் போதும் சிறப்பன மின் வழி கற்றலை கட்டமைக்க முடியும் .
நன்றி குருஜி....
அன்புடன் சிவா....
No comments:
Post a Comment