Monday, April 05, 2021

துணிந்தவனுக்கு தோல்வி இல்லை..

ஏப்ரல் 3, 1680
இன்று மராட்டிய மன்னன் மாவீரன் சத்ரபதி சிவாஜியின் நினைவு நாள் - கோடிக் கணக்கானவர்கள் இவ்வுலகில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே சரித்திரப் புத்தகத்தில் இடம்பிடிக்கிறார்கள். இவ்விதம் சரித்திரத்தில் தனக்கெனெத் தனியிடத்தைப் பிடித்தவர்தான் சத்ரபதி சிவாஜி. ‘ மராட்டிய மக்களை ஒன்றுபடுத்தி மொகலாயப் படைகளை வென்று ஒருமராட்டிய பேரரசினை உருவாக்கிய பெருமை சிவாஜிக்கே உரியதாகும். பல போர்களில் வெற்றி பெற்றுப் பல கோட்டைகளையும் ராஜ்ஜியங்களையும் கைப்பற்றினார். சிவாஜி இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பெற்றிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தக்கள் கிடையாது. 1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’என்கிற அவரது தாரக மந்திரம்தான்.